அத்தியாயம் 41
நித்திலா தன் குழந்தையை அழகாக தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவதை பார்த்து ஆச்சரியப்பட்ட திலீப் “உனக்கு குழந்தைகளை எல்லாம் பாத்துட்டு தெரியுமா மா?” என்று கேட்க, “ம்ம். தெரியும் மாமா.” என்று வேகமாக சொன்னாள் அவள்.
“தெரியுமா? அது எப்படி தெரியும் உனக்கு?” என உடனே அவன் வேகமாக கேட்க, பாவமாக இப்போது அவனைப் பார்த்த நித்திலா “அது தெரியலையே! எனக்கு இந்த குட்டி பயனை பாத்தவுடனே தூக்கணுன்னு தோணுச்சு.
அதான் நிரஞ்சனா அக்கா கிட்ட இருந்து இவனை நான் வாங்கிகிட்டேன். இனிமே நான் தினமும் இவன் கூட விளையாட போறேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
அவள் பேச பேச நித்திலாவின் பயோடேட்டாவை சேகரிக்கும் போது அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்ட ஒரு சில விஷயம் திலீப்பிற்கு ஞாபகம் வந்தது.. இவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என அவனுக்கு அப்போது புரிய,
“இவளுக்கு அவளையே யாருன்னு அடையாளம் தெரியல. ஆனா அவளுக்குள்ள இருக்கிற ஒரு சில விஷயங்கள் இன்னும் அப்படியே இருக்கு.
இதை எல்லாம் வச்சு பார்த்தா இவளுக்கு சீக்கிரம் சரியாக அதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. பட் இது நம்ம ரிஷி சாருக்கு நல்லதா இல்ல கெட்டதான்னு தான் தெரியல.” என நினைத்துக் கொண்டான்.
நித்திலாவின் கையில் இருந்த தன் மகனை சமாதானப்படுத்தி அவனுக்கு பாட்டிலில் தயாராக வைத்திருந்த பாலை கொடுத்து அவனை தூங்க வைத்த நிரஞ்சனா நட்ஸிடம் குழந்தையை கொடுத்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு நித்திலாவை கிளப்புவதற்காக அழைத்து சென்றாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு ரிஷி ஆஃபீஸ்க்கு செல்ல வேண்டும் என்பதால் கோட் சூட் அணிந்து தயாராகி வில் சாரில் அமர்ந்தபடி அதை தானே இயக்கி வெளியில் வந்தான். ரிஷி கையில் சில டாக்குமென்ட்களுடன் அவனை பின் தொடர்ந்து வர,
ரிஷி நித்திலாவிற்காக பார்த்து பார்த்து ஆர்டர் செய்து வரவழைத்து இருந்த புதிய ஆடைகளில் நேர்த்தியாக இருந்த ஒரு சுடிதாரை அவளுக்கு அணிவித்து அவள் முகத்தில் கொஞ்சம் மேக்கப் போட்டு அவளை தயார்படுத்தி குழந்தை போல அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தாள் நிரஞ்சனா.
அவர்களைப் பின் தொடர்ந்து ஒரு நர்ஸ் கையில் குழந்தை தருணை தூக்கிக் கொண்டு வந்தாள். அது காலை நேரம் என்பதால் ஜன்னல் வழியாக வந்த சூரிய கதிர்கள் அவர்கள் இருந்த பங்களா வீட்டின் லிவிங் ஏரியாவை பளிச்சென்று ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தது.
அதில் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் ஏதோ ஒரு குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சுத்தமான வைரம் போல அங்கே நடுவில் நிரஞ்சனாவிடம் பேசியபடி வந்தா நித்திலா ரிஷியின் கண்களுக்கு அப்சரஸ் போல பேரழகியாக சொல்லித்தாள்.
அவன் அவளையை பார்த்தபடி நின்று இருக்க, “நம்ம கிளம்பலாமா பாஸ்?” என்று திலிப் கேட்டவுடன் சுயநினைவிற்கு வந்த ரிஷி “எல்லாம் நல்லபடியா நடக்கணும் அம்மா. உங்கள நம்பித் தான் நான் என் அம்முவை அங்க கூட்டிட்டு போறேன்.
நீங்க தான் அவளை கூட இருந்து பத்திரமா பாத்துக்கணும். அவளுக்கு ஏதாவது ஆனா என்னால அதை தாங்க முடியாது.” என நினைத்து தன் அம்மாவை வேண்டிக் கொண்டு அவர்களுடன் காரில் ஏறி அமர்ந்தான்.
மடியில் தருணை வைத்துக் கொண்டு ரிஷியின் அருகில் அமர்ந்து இருந்த நித்திலா அவனுடன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த காட்சியை பார்த்த ரிசிக்கு ஒரு வளர்ந்த குழந்தை இன்னொரு சிறிய குழந்தையுடன் விளையாடுவதாக தோன்ற, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
இந்தப் பெண் தன்னை ஏதேதோ செய்கிறாள். நிச்சயமாக வேறு எந்த பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒன்று இவளிடம் இருக்கிறது.. அதுதான் தன்னை இவள் பக்கம் காந்தம் போல இழுத்து கொண்டே இருக்கிறது என நினைத்து கொஞ்சம் வெட்கப்பட்டான் ரிஷி.
“எனக்கு ஒரு டவுட் பாஸ்!” என திலிப் ஆரம்பிக்க, “நான் சந்தோஷமா இருந்தாலே உனக்கு பிடிக்காத டா? என்ன டவுட் கேட்டு தொலை.” என்று ரிஷி சலிப்புடன் கேட்டான்.
” பெருசா ஒன்னும் இல்ல பாஸ். நீங்க இந்த பொண்ண உங்க கேர்ள் ஃபிரண்டுன்னு இன்ட்ரடியூஸ் பண்ணா, உங்களை கொஸ்டின் பண்ணி டார்ச்சர் பண்றத விட இந்த பொண்ணு கிட்ட தான் நிறைய கிராஸ் கொஸ்டின் கேப்பாங்க.
இவ வாய தொறந்தாலே நம்ம மாட்டிக்குவோம். அதுக்கு என்ன பண்ண போறீங்க?” என்ற திலீப் கேட்டவுடன் தான் இப்போது நித்திலா இருக்கும் நிலைமையை பற்றியே யோசித்துப் பார்த்தான் ரிஷி.
முத்தங்கள் தொடரும் 💋
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)