அத்தியாயம் 39
இரவு நேரத்தில் தனது அறையில் தனியாக இருந்த ரிஷி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனது ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற திலீப் “ஹாய் பாஸ்.. நீங்க எப்படியும் தூங்கி இருக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். அதே மாதிரி முழிச்சுட்டு இருக்கீங்க. நான் உள்ள வரவா?” என்று கேட்க, “அதான் வந்துட்டியே.. அப்புறம் என்ன? உள்ள வா.” என்றாள் ரிஷி.
அவனுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்த திலீப் “நெஜமாவே நாளைக்கு நம்ம அந்த பொண்ணையும் நம்ம கூட உங்க ஃபேமிலிய மீட் பண்றதுக்கு கூட்டிட்டு போக போறோமா பாஸ்?” என்று கேட்க, “நமக்கு வேற ஆப்ஷன் இருக்கா திலீப்?” என வெறுமையான குரலில் கேட்டான் ரிஷி.
“இல்லை தான், பட் அந்த அப்பாவி பொண்ண அவங்களை மாதிரி மோசமான ஆளுங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்துறதை நினைச்சா எனக்கு பயமா இருக்கு.
பாவம் அந்த பொண்ணு.. இன்னிக்கு நீங்களே பார்த்தீங்கள்ல.. ஃபோன்ல நீங்க சும்மா கோபமா பேசினதுக்கே அவ பயந்து அழுகிறா.
இப்படி இருக்கிறவள எப்படி பாஸ் அங்க கூட்டிட்டு போக முடியும்? அவங்க யாருக்கும் தெரியாம இந்த பொண்ண ஏதாச்சு பண்ண ட்ரை பண்ணா கூட, அவளுக்கு அவளை காப்பாத்திக்க தெரியாது.
எனக்கு இந்த பொண்ணை அங்க கூட்டிட்டு போறது ரிஸ்க்ன்னு தோணுது. முன்னாடி உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னோம்ல.. அந்த மாதிரி இப்ப உங்க கேர்ள் ஃபிரண்டுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி கொஞ்ச நாள் இந்த பொண்ணை அவங்க பாக்குறது நம்ம டிலே பண்ணலாமா?” என்று திலிப் கேட்க,
“நம்ம சொன்னா உடனே அவங்க கேட்டுட்டு ஓகேன்னு உடனே நமக்கு டைம் கொடுப்பாங்க நினைக்கிறியா? அவங்களைப் பொறுத்த வரைக்கும் போர்டு மெம்பர்ஸ் முன்னாடி நான் யூஸ்லஸ்னு அவங்க ப்ரூவ் பண்ணனும். அப்ப தானே என்னை ஈசியா ஆபீஸ்ல இருந்து துரத்திட்டு என் இடத்துக்கு தீரஜை வர வைக்க முடியும்..
அம்முவை நம்ம அங்க கூட்டிட்டு போறதை தவிர வேற ஆப்ஷன் இல்ல. நீ சொன்ன மாதிரி அவளை நம்ம அங்க தனியா விடவும் முடியாது. நீ லாஸ்ட்டா எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு திலீப்..
எப்படியும் அவளை நம்ம நிரஞ்சனாவோட சிஸ்டர்னு தான் சொல்ல போறோம். இப்ப அவளுக்கு நிஜமாவே தலையில அடிபட்டு உடம்பு சரி இல்லாம தான் இருக்கா.. சோ அவளுக்கு சரியாகிற வரைக்கும் நிரஞ்சனா அவளைப் பார்த்துக்கறதுக்காக நம்ம கூடவே இருக்காங்கன்னு குளிக்கலாம்.
அவளை யாரும் எதுவும் பண்ணாம நிரஞ்சனா தான் அவ கூட இருந்து அவள பாத்துக்கணும். அவளுக்கு தலையில இருக்கிற காயம் சரியாகறதுக்குள்ள நான் அவங்களுக்கு எதிரான எவிடன்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி அவங்களை என் வீட்ல இருந்து துரத்திடுவேன். அப்புறம் நமக்கு எந்த பிராப்ளமும் இருக்காது.” என்றான் ரிஷி.
அவனது நலம் விரும்பியான திலீப் எப்போதும் போல எப்போதும் ரிஷிக்காக “ஓகே பாஸ், நான் நிரஞ்சனா கிட்ட பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.
ரிஷியின் வீட்டில் அவனது அம்முவை அவன் குடும்பத்தினர்கள் என்னென்ன கொடுமைப்படுத்த காத்திருக்கிறார்களோ..
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)