அத்தியாயம் 37
ரிஷி நித்திலாவிற்கு ஊட்டி விட்டபடி சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அப்போது அவனுக்கு மிஸ்டர் ஆனந்தகுமார் என்ற பெயரில் இருந்து கால் வந்தது. அதைப் பார்த்தவுடன் ரிஷியின் முகம் இறுக்கமாக மாறிவிட, அவன் அந்த அழைப்பை ஏற்காமல் தனது மொபைல் ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்ததால் சில நொடிகளுக்குப் பிறகு அந்த அழைப்பு தானாக கட்டானது.
உடனே ஃபோனை ரிஷி தனது சட்டை பாக்கெட்டில் வைக்கப் போக, அதே எண்ணில் இருந்து மீண்டும் அவனுக்கு கால் வந்தது. அதனால் எரிச்சல் அடைந்த ரிஷி வேகமாக அந்த அழைப்பை அட்டென்ட் செய்து “இப்ப உங்களுக்கு என்ன வேணும்? என்ன கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? கால் மேல கால் பண்ணி எதுக்கு என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கீங்க?” என எரிந்து விழுந்தான்.
தன்னிடம் அன்பாக எப்போதும் மென்மையான குரலில் பேசும் ரிஷி திடீரென்று யாரோ ஒருவரிடம் கோபப்பட்டு கத்தவதை பார்க்க நித்திலாவிற்கு கொஞ்சம் பயமாக இருந்தது. இவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக அவள் சந்தித்த அனைவருமே கொடூரமானவர்கள் தான். அவர்களிடம் எல்லாம் அரும்பாடு பட்டு தப்பித்து இங்கே வந்து அவள் நிம்மதியாக உணரும்போது, இப்படியான ஒரு காட்சியை பார்க்கும் போது “என்ன ரிஷி இப்படி கோவப்படுறான்..!! இவன் சத்தமாக கத்துறதை பார்த்தாலே பயமா இருக்கே! நம்ம கிட்டயும் இவன் இப்படி எல்லாம் பேசுவானா? கோபம் வந்துச்சுன்னா நம்மளையும் திட்டி அடிப்பானா?” என யோசித்து கண்கள் குளமாக அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள் நித்திலா.
“உன் டாடி கிட்ட எப்ப இருந்து இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்ச ரிஷி? எனக்கு உன் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லைன்னு முடிவே பண்ணிட்டியா? திலீப் உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னான். அதான் இப்ப நீ எப்படி இருக்குறன்னு கேட்பதற்காக கால் பண்ணேன். ஒரு அப்பாவா எனக்கு இதுக்கு கூட உரிமை இல்லையா?” என்று ஆனந்த் கேட்க, “என் டாடியா.. நீங்களா?” என கேட்டுவிட்டு ஏதோ நகைச்சுவையை கேட்டதைப் போல சத்தமாக சிரித்த ரிஷி “நீங்க ஒரு காலத்துல என் அப்பாவா இருந்தீங்க மிஸ்டர் ஆனந்தகுமார். எப்ப எங்க அம்மா இறந்து போனாங்களோ அப்பவே உங்களுக்குள்ள இருந்த என் அப்பாவும் செத்து போயிட்டாரு. இப்ப நீங்க உங்க செகண்ட் wife-கு ஹஸ்பண்ட்டாகவும், அவங்களுக்கு பொறந்தவங்களுக்கு அப்பாவாகவும் இருக்கீங்க.” என குத்தலாக சொன்னான்.
“shut up Rishi! உனக்கு ஆக்சிடென்ட் ஆனதுல உன் பாடியோட சேர்ந்து உன் பிரைனும் பேரலைஸ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் நீ இப்படி லூசுத் தனமா உளறிட்டு இருக்க. இதுக்கு அப்புறம் நீ எதுக்கும் சரிப்பட்டு வர மாட்ட.
இனிமே நம்ம பிசினஸை உன்னால பாத்துக்க முடியாது. உனக்குன்னு ஒரு குழந்தை கூட பொறக்காது. வாரிசு இல்லாத ஒருத்தன் கையில இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை எப்படி குடுக்கிறதுன்னு எல்லாரும் கேட்கும் போது, நான் மட்டும் தான் உனக்காக யோசிச்சு உன்னை நீ ப்ருவ் பண்றதுக்கு உனக்கு ஒரு சான்ஸ் குடுக்கணும்னு சொன்னேன்.
உனக்கு மேரேஜ் ஆகி குழந்தை பிறந்தா நல்லது தானேன்னு நினைச்சு உனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி நம்ம கம்பெனி ஷேர் பர்சன்ஸ் கிட்ட உனக்காக ரிக்வெஸ்ட் பண்ணேன். நான் நினைச்சிருந்தா அப்பவே உன் பிளேஸ்ல நம்ம தீரஜை நான் ரிபிளேஸ் பண்ணி இருப்பேன்.” என ஆனந்த் பேசிக் கொண்டே போக,
வந்த கோபத்தில் “enough!” என்று கத்திய ரிஷி “யாருக்கு யார் ரிப்லேஸ்மெண்ட்? முதல்ல இதையெல்லாம் சொல்றதுக்கு நீங்க யாரு? இப்ப நீங்க எது எல்லாம் உங்களோடதுன்னு பேசிட்டு இருக்கீங்களோ அது எல்லாமே என் தாத்தா சொத்து. அத இவ்ளோ பெரிய பிசினஸ் சாம்ராஜ்யமா வளர்த்தது எங்கம்மா.
அவங்க உயிரோட இருக்கும்போதே அந்த லேடிய வெச்சிக்கிட்டு அவங்களுக்கு ஒரு பையனையும் பெத்துட்டு இப்ப அவனை எனக்கு ஈக்குவலா பேசுறீங்களா நீங்க? நீங்க எங்க அம்மாவுக்கு பண்ண துரோகத்தை தாங்க முடியாம தான் அந்த சோகத்திலயே அவங்க குஷி பொறந்து கொஞ்ச நாளிலையே இறந்துட்டாங்க. நாங்க அப்ப சின்ன பிள்ளைகளா இருந்ததுனால எங்கள பாத்துக்கிறேன்னு எங்க கூடயே வந்து ஒட்டிக்கிட்டு இருந்துட்டு அந்த லேடியும் கல்யாணம் பண்ணி பிசினஸை நான் டேக் ஓவர் பண்ற வரைக்கும் இத்தனை வருஷமா பார்த்துக்கிட்டீங்க.
அதுக்காக நீங்க ரியல் ஓனர் ஆயிட முடியுமா மிஸ்டர் ஆனந்தகுமார்? இந்த மாதிரி எல்லாம் நீங்க ஏதாவது பண்ணுவீங்கன்னு தான் எங்க அம்மா கிளியரா உயில் எழுதி வச்சுட்டு போயிருக்காங்க. அதான் எனக்கு உடம்பு சரியில்ல, நாளைக்கு வந்து ஆபீஸியலா எல்லாரையும் மீட் பண்ணி என்னோட முடிவு என்னன்னு சொல்றேன்னு திலீப் கிட்ட சொல்லி உங்க கிட்ட சொல்ல சொன்னேன்ல.. அப்புறம் என்ன சும்மா என் மேல பாசம் இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க?
எனக்கு உங்க வாய்ஸை கேட்டாலே இரிடேட் ஆகுது. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க.” என ஆத்திரம் பொங்க சொன்னான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)