அத்தியாயம் 35
ரிஷி தனக்கு பிடித்த உணவுகளை எல்லாம் வாங்கிக் கொடுப்பதாக சொல்லி விட்டதால் உடனே குஷியான நித்திலா வேகமாக தனது சொந்த விரலை அவனது சொந்த விரலுடன் கோர்த்து “டீல்!” என்று சொல்லிவிட்டு அழகாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.
தானும் அவளை பார்த்து புன்னகைத்த ரிஷி “நானும் இன்னும் சாப்பிடல. உனக்கு நான் ஆர்டர் பண்ண இட்லி வரட்டும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு இட்லியே சாப்பிடலாம். உனக்கு சரியாகிற வரைக்கும் நீ என்ன சாப்பிடுறியா உன் கூட சேர்ந்து நானும் அதையே சாப்பிடுறேன். ஓகேவா, நீ இப்ப ஹேப்பியா?” என்று ஏதோ குழந்தையிடம் கேட்பதைப் போல கேட்க,
“ம்ம்.. நித்திலா இப்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி.” என்று உற்சாகமான குரலில் சொன்ன நித்திலா தன் கையை விரித்து காட்டி அவள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று அவனிடம் சொல்லும் போது தனது தலையையும் சேர்த்து அவள் வேகமாக ஆட்டியதால் அதில் திடீரென்று அவளுக்கு கூர்மையான வலி வரவே, “ஆஆஆ.. அம்மா வலிக்குது!” என கத்திவிட்டு தன் தலையை பிடித்துக் கொண்டாள்.
அதுவரை சிரிப்பலைகளில் சிவந்திருந்த அவளது சிறிய முகம் இப்போது அழுகையால் சிவந்து போக, “ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்.. எனக்கு வலிக்குது ரிஷி. ரொம்ப வலிக்குது.” என்று சிணுங்கியபடி தன் உதட்டை பிதுங்கினாள்.
அவளைப் பார்க்கவே பாவமாக இருந்ததால் சிரமப்பட்டு தனது வீல்சேரில் இருந்து நிரஞ்சனாவின் உதவியோடு கட்டிலில் அவள் அருகில் சென்று அமர்ந்த ரிஷி அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு “அழுகாத அழுகாத.. சாப்பிட்டு டேப்லட் போட்டா உனக்கு பெயின் இருக்காது. இதுக்கு தான் உன்னை அடம் பிடிக்காம சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னேன்.” என்றான்.
உடனே அவனை கட்டிப்பிடித்து “நான் உன் கூட தான் சாப்பிடுவேன். நீ சொன்னியே.. அந்த இட்லி… அதையே சாப்பிடுறேன். நீ என் தலை கிட்ட கொஞ்ச நேரம் வலிக்காம இருக்க சொல்றியா?” என்று நித்திலா பாவமாக கேட்க, முதலில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென்று விழித்த ரிஷி அவள் கன்னங்களை தனது கைகளில் ஏந்தி அவளது நெற்றியில் அழுத்தமாக தனது இதழ்களை பதிந்து “இந்த மாதிரி நான் உன்னை கிஸ் பண்ணா உனக்கு வலிக்கவே வலிக்காது.” என்றான்.
உடனே அழுவதை நிறுத்திவிட்டு அவனைக் கேள்வியாக பார்த்த நித்திலா “நெஜமாவே இப்படி பண்ணினா வலிக்காதா?” என்று சந்தேகமாக கேட்க, “ஆமா வலிக்காது. நீ நான் சொல்றத நம்புனா, நீ வலிக்காதுன்னு நினைச்சா கண்டிப்பா வலிக்காது.” என்று உறுதியாக சொன்னான் ரிஷி.
அவன் அவளை சமாதானப்படுத்துவதற்காக அப்படி சொல்லி இருந்தாலும் கூட, அவன் கொடுத்த அந்த ஒற்றை முத்தம் அவளது மனநிலையை சரிப்படுத்த போதுமானதாக இருந்ததால் உடனே அவனைப் பார்த்து நன்றி உணர்வுடன் புன்னகைத்த நித்திலா “ஏய் ஆமா ரிஷி.. எனக்கு இப்ப தல வலிக்கவே இல்ல. நீ சொன்னவுடனே வலி போயிருச்சு. என்ன மாதிரியே நீயும் ஏஞ்சலா? உன் கிட்டயும் பவர்ஸ் இருக்கா?” என ஆச்சரியமாக கேட்டாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)