Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 34

போதையடி நீ எனக்கு CH 34

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 34 

இத்தனை சீக்கிரமாக ரிஷிக்கும் புதிதாக வந்த இந்த பெண்ணுக்கும் நடுவில் இப்படியான ஒரு நெருக்கம் வரும் என எதிர்பார்த்து இருக்காத நிரஞ்சனாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் “ஒருவேளை இந்த பொண்ணு நார்மல் ஆகி எனக்கு இங்க இருக்க பிடிக்கல. 

நீங்க என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்கன்னு சொல்லி நம்ம ரிஷி சார் மேல கோபப்பட்டா என்ன பண்றது? அவர் இவளை நல்லா தான் பாத்துக்குவாரு. அதுல எந்த டவுட்டும் இல்ல.

ஆனா அத இந்த பொண்ணும் அவளோட குடும்பமும் புரிஞ்சுக்கணுமே! அதானே பெரிய விஷயம்…!!” என்று நினைத்து ரிஷிக்காக வருத்தப்பட்டாள். 

“அது சரி, நிரஞ்சனா கிட்ட எதுக்கு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்க நீ? பாவம் அவங்க வீட்டுக்கு போய் அவங்களோட குட்டி பையனை கூட பாக்காம நைட் ஃபுல்லா உன் கூடயே இருந்து அவங்க உன்ன பாத்துக்கிட்டாங்க இல்ல.. 

நீ இப்படித் தான் அவங்கள டார்ச்சர் பண்ணுவியா? சாப்பிடுறதுல உனக்கு என்ன பிராப்ளம்?” என்று ரிஷி கேட்க, ஏதோ டீச்சரிடம் தப்பு செய்து மாட்டிக் கொண்ட குழந்தை போல அவனைப் பார்த்து திருதிருவென்று விழித்த நித்திலா தன் உதட்டை பிதுக்கி கொண்டு, 

“எனக்கு அந்த சாப்பாடு தான் பிராப்ளம் ரிஷி. அது நல்லாவே இல்ல வுளாக்.. அவங்க கிட்ட எனக்கு டேஸ்டியா ஏதாச்சு பண்ணி குடுக்க சொல்லு.. அது ஒயிட் கலர்ல பார்க்கவே நல்லா இல்ல. 

எனக்கு அதை பாத்தாலே வாமிட் வர்ற மாதிரி இருக்கு. சாப்பிட்டு பாரேன்.. நான் பொய் சொல்லலை..!!” என்ற நித்திலா அவனிடம் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு வேண்டுமென்றே தனக்கு வாந்தி வருவதைப் போல செய்து காட்டினாள். 

அவளைப் பார்த்து சிரித்த ரிஷி நிரஞ்சனாவிடம் “இவளுக்கு தான் பிடிக்கலைன்னு சொல்றாளே.. நீங்க வேற ஏதாச்சு ட்ரை பண்ணி பாக்கலாம்ல! உங்களுக்கு குக் பண்ண கஷ்டமா இருந்துச்சுன்னா யாராவது உங்களுக்கு தெரிஞ்ச chef-ஜ hire பண்ணிடுங்க. எவ்ளோன்னாளும் சேலரி குடுத்துடலாம்.” என்று கேட்க, 

“இவ ஒருத்திக்கு சமைக்கிறதுல எனக்கு என்ன பிராப்ளம் இருக்க போகுது ரிஷி சார்? டாக்டர் தான் ஈசியா டைஜஸ்ட் ஆகிற மாதிரி food-ஆ குடுக்க சொன்னாங்க. அதான் கஞ்சி செஞ்சு குடுத்தேன்.” என்றாள் நிரஞ்சனா. 

உடனே ரிஷி டாக்டரை பார்க்க, ஆர்வமாக ரிஷியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனாவும் அவன் பார்த்த பக்கம் திரும்பி பார்த்தாள். “இவங்களோட ஹெல்த் கண்டிஷனுக்கு எது கரெக்டா இருக்குமோ அதை நான் சார் கொடுக்கணும். இந்த டைம்ல நம்ம டேஸ்ட் பார்க்க முடியாது. 

வேணும்னா அவங்க சாப்பிடறேன்னு சொன்னா இட்லி குடுங்க. நடுவுல நடுவுல கொஞ்சம் ஃப்ரூட்ஸ் எடுத்துக்கிட்டா போதும்.” என்ற டாக்டர் சொல்ல, 

“இட்லி!” என்று முணுமுணுத்த நித்திலா “ஆமா இந்த இட்லி எப்படி இருக்கும்?” என அவள் பாட்டிற்கு விட்டத்தை பார்த்து தனது கன்னத்தில் ஆள்காட்டி விரலை வைத்து லேசாக தட்டியவாறு யோசிக்க தொடங்கினாள். 

அந்த பாலா போன இட்லியின் உருவம் அவள் எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவளுக்கு ஞாபகம் வரவே இல்லை. அதனால் சிணுங்கிய நித்திலா மீண்டும் ரிஷியின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இட்லி எப்படி இருக்கும் ரிசி?” என்று அப்பாவியாக கேட்க, 

“இட்லியா.. இட்லி எப்படி இருக்குன்னு கூட உனக்கு தெரியாதா? ஒயிட் கலர்ல ரவுண்டா இருக்குமே.. 

நீ அதை சாப்பிட்டது இல்லையா?” என்று ஆச்சரியமாக கேட்டான் ரிஷி. உடனே தன் தலையை சொரிந்தபடி ஒரு யோசனையுடன் அவனைப் பார்த்த நித்திலா, “நான் அத சாப்பிட்டு இருக்கனான்னு எனக்கு தெரியலையே!” என்றாள். 

“ஓகே ஓகே ரிலாக்ஸ், உனக்கு நிரஞ்சனா கொடுத்த கஞ்சியை விட இட்லி பெட்டரா தான் இருக்கும். நான் நம்ம சர்வன்ட் கிட்ட சொல்லி நல்ல ஹோட்டலா பாத்து உனக்கு வாங்கிட்டு வர சொல்றேன்.” என்ற ரிசி அவனது மொபைல் போனை எடுக்க,

“சாப்பாடு ஹோட்டல்ல வாங்க போறீங்களா.. அப்ப எனக்கு பிரியாணி வேணும்.” என்று கண்களில் உற்சாகம் மின்ன சொன்னாள் நித்திலா.  

உடனே வந்த சிரிப்பை அடக்கி கொண்டு தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை பார்த்த ரிசி “ஏண்டி உனக்கு இட்லி எப்படி இருக்கும்ன்னு தெரியாது.. ஆனா பிரியாணி வேணும்னு மட்டும் தெரியுமா?” என்று கேட்க, 

உடனே தன் தலையை குனிந்து கொண்ட நித்திலா “எனக்கு என்ன தெரியும்? எனக்கு பிரியாணி பிடிக்கும். அதான் நான் உன்னை வாங்கி தர சொன்னேன். ஏன் நீ எனக்கு வாங்கி தரமாட்டியா?” என்று கேட்டபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

டாக்டர் வேண்டாம் என்று கண்ணை காட்ட, அவள் அருகில் சென்று அவளது தோள்களில் கை போட்ட ரிசி “பிரியாணி தானே.. கண்டிப்பா நான் வாங்கி தரேன். பட் இப்போ இல்ல. 

முதல்ல என் ஏஞ்சலுக்கு சீக்கிரம் சரியாகனும்ல.. உன்னை இப்படி தலையில கட்டோட பாக்குறதுக்கு நல்லாவா இருக்கு? 

நீ டேப்லட்ஸ் எல்லாம் சாப்பிட்டு எவ்வளவு சீக்கிரம் ரெக்கவர் ஆகுறியோ அவ்ளோ சீக்கிரம் உனக்கு பிடிச்சது எல்லாத்தையும் ஹாப்பியா சாப்பிடலாம். 

யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. என்ன ஓகேவா? டீல்?” என்று கேட்டுவிட்டு தனது சுண்டு விரலை அவள் முன்னே அந்த டீலை லாக் செய்வதற்காக நீட்டினான். 

– தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured