Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 31

போதையடி நீ எனக்கு CH 31

by Thenaruvi Tamil Novels

 அத்தியாயம் 31 

திலீபிடம் நிதிலாவின் உண்மையான அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று ரிஷி சொல்ல,  அதற்கு அவன் சரி என்கிறான். “லஞ்ச் ரெடியா இருக்கு பாஸ். சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. 

இனிமே நமக்கு ரெஸ்ட் எடுக்குறதுக்கு எல்லாம் ‌ கொஞ்சம் கூட டைம் இருக்காது. நம்ம நிறைய பேரை ஹேண்டில் பண்ண வேண்டியது இருக்கு.” என்று திலீப் சொல்ல, 

அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த ரிஷி “இப்ப எனக்கு திடீர்னு ஏதோ ஒரு ஸ்ட்ரென்த் கிடைச்ச மாதிரி இருக்கு. இதுக்கு அப்புறம் என்ன நடந்தாலும் அத என்னால ஹேண்டில் பண்ண முடியும்னு நம்பிக்கை வந்துருச்சு. 

என் அம்மாவே இப்ப என் கூட இருக்கிற மாதிரி இருக்கு. எல்லாமே நல்லதா தான் நடக்கும் டோன்ட் வரி.” என்றான். 

“ம்ம்.. எனக்கும் இப்ப அந்த நம்பிக்கை வந்துருச்சு பாஸ்.” என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு ரிஷிக்கு உதவுவதற்காக சில வேலை ஆட்களை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு வெளியில் சென்றான் திலீப். 

அவர்களின் உதவியோடு குளித்து  தயாரான ரிஷி “அந்த பொண்ண பத்தி நானா சொல்ற வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியாம பார்த்துக்கணும். 

முக்கியமா அவளோட டீடைல்ஸ் இருக்கிற இந்த file யாருக்கும் கிடைக்கக் கூடாது.”   என்று நினைத்த அவனது ரூமில் இருந்த இரும்பு குப்பைத் தொட்டியில் திலீப் கொண்டு வந்த file-லை போட்டு வேலை ஆட்களிடம் கெரோசினை கொண்டு வரச் சொல்லி அதில் ஊற்றி ஒரு தீக்குச்சியில் நெருப்பை பத்தவைத்து அதற்குள் போட்டான். 

இப்போது நிதிலாவாக தன்னை மறந்து புத்தி பேதலித்து இருக்கும் பெண்ணின் உண்மையான அடையாளம் யார் கைகளுக்கும் கிடைக்காமல் அங்கே நெருப்பில் பஸ்பம் ஆக்கிக் கொண்டிருந்தது. இனி யாராலும் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என நினைத்து பெருமூச்சு விட்ட ரிஷி தனது வீல் சேரை அவனே இயக்கி வெளியில் சென்றான். 

நிதிலா தனக்கு போர் அடிக்கிறது அதனால் டிவி வேண்டும் என கேட்டிருந்ததால் நிரஞ்சனா அவளிடம் “நீ முதல்ல சாப்பிடு நித்தி மா.. அப்ப தான் அக்கா உனக்கு புதுசா டிவி வாங்கி கொடுப்பேன். நீ சீக்கிரம் சாப்பிட்டா தானே உனக்கு டேப்லட் கொடுக்க முடியும்.. டேப்லெட் சாப்பிட்டா தான் உனக்கு உடம்பு சீக்கிரம் சரியாகும். எங்க ஆ காட்டு பாக்கலாம்!” என்று கையில் ஒரு கப்பில் காஞ்சியையும் ஸ்பூனையும் வைத்துக் கொண்டு அவளை சாப்பிட வைக்க போராடிக் கொண்டு இருந்தாள். 

அந்த சத்தத்தை கேட்டபடி அந்த ரூமிற்குள் நுழைந்த ரிஷி ஏதோ ஒரு சிறிய குழந்தையை பார்க்க போகும் ஆர்வத்துடன் சிரித்த முகமாக தனது வீல் சாரில் உள்ளே சென்று “என்ன மேடம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிச்சிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க, 

இப்போதும் ரிஷி நடந்து வராமல் வீழ்ச் சாரில் வருவதால் அவனை சந்தேக கண்களுடன் பார்த்த நித்திலா  “உனக்கு என்ன ஆச்சு ரிஷி? ஏன் நீ நடந்து வராம இப்படி வீழ்ச்சார்ல வர்ற? என்ன மாதிரியே உனக்கு உடம்பு சரியில்லாம போயிருச்சா?” என்று சோகமாக கேட்டாள். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured