Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 30

போதையடி நீ எனக்கு CH 30

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 30 

காலை 12 மணியனவில் தனது ஆட்களுடன் அந்த கெஸ்ட் ஹவுஸிற்க்குள் நுழைந்த திலீப் நிரஞ்சனாவை சந்தித்து இப்போது நித்திலா விஷயத்தில் ரிஷி எடுத்திருக்கும் முடிவைப் பற்றி தெரிந்து கொண்டான்.

அவன் கையில் இப்போது நித்திலாவின் உண்மையான அடையாளங்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய ஃபைல் இருந்தது. அதை ரிஷியிடம் கொடுப்பதற்காக அவனது ரூமிற்கு சென்றான் திலீப். 

தூக்கத்தில் இருந்த ரிஷியை எழுப்பி தன் கையில் இருந்த ஃபைலை அவனிடம் கொடுத்த திலீப், 

“நான் எதிர்பார்த்ததை விட இந்த பொண்ணோட பேக்ரவுண்ட் டீசண்டா தான் இருக்கு பாஸ். 

இவங்களோட உண்மையான ஐடென்டிட்டி என்னன்னு தெரிஞ்சதுனால இனிமே நித்திலா நேமை யூஸ் பண்ணி நடிக்க வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன். 

கிட்டதட்ட ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி இந்த பொண்ணு மிஸ்ஸிங்ன்னு அவங்க ஃபேமிலில இருக்கிறவங்க போலீஸ் கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணி இருக்காங்க. 

டாக்டர் ரிப்போர்ட்ஸ் படி இவங்க காணாம போனதுக்கு அப்புறம் தான் இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிருக்கு. 

சோ அந்த ஆக்சிடென்ட்ல நமக்கு தெரியாத ஏதோ ஒரு மிஸ்டரி இருக்கு. 

அந்த ஆக்சிடென்ட் எப்ப எங்க நடந்துச்சுன்னு நமக்கு எந்த க்ளுவும் கிடைக்கல. 

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, போலீஸ் சைடுலையும், இந்த பொண்ணை கடத்தி வச்சு பிராத்தல் பண்ண ட்ரை பண்ணவங்களும் இவங்கள காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ். 

இப்ப தான் நீங்க இந்த பொண்ண உங்க கேர்ள் ஃபிரண்டுன்னு எல்லாருக்கும் இண்ட்ரோ பண்ண டிசைட் பண்ணிட்டீங்கன்னு நிரஞ்சனா சொன்னா. .

அதுல எனக்கு சந்தோசம் தான். பட் நீங்க அப்படி பண்ணும் போது, அந்த பொண்ணோட ஃபேமிலி சைட்ல இந்தோ, அந்த பிராத்தல் கும்பலோ இவங்கள கண்டுபிடிச்சு ஏதாவது இஷ்யூஸ் வந்தா என்ன பண்றது?” என்று குழப்பமான கேட்டான். 

தன் கையில் இருந்த நித்திலாவின் உண்மையான அடையாளம் அடங்கிய ஃபைலில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் உன்னிப்பாக கவனித்து அனைத்தையும் படித்துக் கொண்டு இருந்த ரிஷி லாஸ்டாக அதில் இருந்த அவளுடைய ஃபோட்டோவை கையில் எடுத்துப் பார்த்தான்.

அவன் தனது அம்மாவின் சமாதியில் வேண்டிக் கொண்டு இருக்கும்போது அவனுடைய மனக்கண்களுக்கு அரைகுறையாக அவளது உருவம் எப்படி தெரிந்ததோ அதேபோலத் தான் அந்த ஃபோட்டோவில் அவள் இருந்தாள்.

அந்த ஒரு விஷயத்தை வைத்தே “ஒருவேளை நிரஞ்சனா சொன்ன மாதிரி அம்மாவும் இந்த பொண்ணு கூட இருந்தா என் லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சிருப்பாங்க போல. 

அதான் அப்ப இவளோட ஒரிஜினல் ஐடென்டிட்டிய‌ எனக்கு காட்டி இருக்காங்க. 

எனக்கு இவளை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போதே கண்டிப்பா இவ தப்பான வேலை செய்ற பொண்ணா இருக்க மாட்டான்னு தோணுச்சு.

இப்போ என்னோட டவுட்ஸ் எல்லாமே கிளியர் ஆயிடுச்சு.” என்று நினைத்தவன் சில நொடிகள் எதையோ தீவிரமாக யோசித்தான். 

“என்ன பாஸ் நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன் நீங்க சைலன்டாவே இருக்கீங்க? 

இந்த பொண்ணு நம்ம கூட தான் இருக்காங்கன்னு நம்ம பப்ளிக்கா எல்லாருக்கும் தெரியிற மாதிரி ஏதாவது பண்ணிட்டா, 

அவங்கள அட்டாக் பண்றதுக்கு வேறு யாராவது பிரச்சனை பண்ணா கூட நம்ம அதை ஈஸியா சால்வ் பண்ணிடலாம். 

பட் அவங்க ஃபேமிலில இருந்து வந்து அவங்கள அனுப்ப சொல்லி கேட்டா என்ன பண்றது? 

அப்புறம் அவங்கள வச்சு நம்ம போட்டு இருக்க பிளான் டோட்டலா ஸ்பாயில் ஆயிடுமே!” என்று திலீப் கவலையான முகத்துடன் அவனிடம் கேட்க,

சுடிதார் அணிந்து தனது நீண்ட கூந்தலை போனி டைலில் போட்டுக் கொண்டு அளவான ஓப்பனையுடன் அழகாக சிரித்தபடி அந்த ஃபோட்டோவில் நின்று போஸ் கொடுத்து கொண்டிருந்த நித்திலாவை அதுவரை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, 

“இவளை நான் எப்ப காப்பாத்தினனோ அந்த செகண்ட்ல இருந்து இவ எனக்கு மட்டும் தான் சொந்தம். 

யாரையும் இவள என் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போக நான் விட மாட்டேன். 

இவ யாருன்னு நமக்கு தெரியும். ஆனா அவளுக்கு தெரியாதே.. இவ நம்ம கூட தான் இருக்கிறதும் யாருக்கும் தெரியாது. 

சோ அவளுக்கா சரியாகுற வரைக்கும் இவளை பத்தி நம்ம யாருக்கும் சொல்ல போறது இல்ல.‌ 

இவள எனக்காகவே எங்க அம்மா அனுப்பி வச்சிருக்காங்கன்னு நான் நம்புறேன். 

லீகலா எனக்கும் இவளுக்கும் மேரேஜ் ஆகுற வரைக்கும், ஆல்ரெடி நமக்கு இருக்கிற எல்லா பிராப்ளம்ஸையும் நம்ம சால் பண்ற வரைக்கும் மத்தவங்கள பொறுத்த வரைக்கும் இவ நித்திலாவாகவே இருக்கட்டும். 

அந்த பொண்ணு அமெரிக்கால தானே இருக்கா.. so nothing to worry. இப்போதைக்கு அந்த பொண்ணு இந்தியா பக்கம் வராத வரைக்கும் நமக்கு எந்த பிராப்ளமும் இல்ல.” என்று உறுதியான குரலில் சொல்லி விட்டான்.‌ 

இந்த விஷயத்தில் நித்திலாவின் பெயரை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்த திலீப் இதனால் பிற்காலத்தில் என்ன பிரச்சனை வந்தாலும், ரிஷியடன் இருந்து அதை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அவன் சொன்ன அனைத்திற்கும் சரி என்றான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured