Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 29

போதையடி நீ எனக்கு CH 29

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 29 

மீண்டும் ஒருமுறை அவனுக்கு நன்றி சொல்லி அவனை வழி அனுப்பி வைத்த ரிஷி வந்து நித்திலா இருந்த அறையில் அவளை பார்க்க, அவள் நிரஞ்சனாவை தன் அருகில் அமர வைத்து அவள் கையை குழந்தை போல இறுக்கிப் பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். 

ரிஷியை பார்த்தவுடன் எழுந்து நிற்க முயற்சி செய்த நிரஞ்சனா “இவ புதுசா யாராவது வந்தாங்கன்னா, அவங்க மறுபடியும் இவளை கடத்திக் கொண்டு போய் வச்சு டார்ச்சர் பண்ணுவாங்கன்னு நினைச்சு பயப்படுறா.

இப்ப வந்த டாக்டரை கூட பக்கத்துலயே விடல. தூங்கும்போது கூட பயமா இருக்குனு என்ன விடாம பிடிச்சு வச்சுக்கிட்டு தூங்கிட்டு இருக்கா. 

நெஜமாவே இவளை பாக்குறதுக்கு ஒரு நாலஞ்சு வயசு குழந்தை பாக்குற மாதிரி தான் இருக்கு சார்.” என்று மெல்லிய குரலில் சொல்ல, 

நிரஞ்சனா எழுந்து கொள்ள முயற்சி செய்தபோதிலும் அவளை விடாமல் பிடித்துக் கொண்டு க்யூட்டாக தனது கை கால்களை குறுக்கியபடி உறங்கிக் கொண்டிருந்த நித்திலாவை ஒரு பார்வை பார்த்த ரிஷி, 

“If you don’t mind, இவளுக்கு ஓரளவுக்கு சரியாகிற வரைக்கும் மட்டும் நீங்க இவ கூட இருந்து இவளை பார்த்தீர்களா? 

அந்த கேப்ல நான் மத்த இஸ்யூஸ் எல்லாத்தையும் சால்வ் பண்ணிடுவேன். 

என் ஃபேமிலி கிட்ட இவளை என் கேர்ள் ஃபிரண்டுன்னு இண்ட்ரடியூஸ் பண்ணனும்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

சோ இனிமே இந்த பொண்ணு என் ரெஸ்பான்சிபிலிட்டி. இவளுக்கு கடைசி வரைக்கும் சரியாகவே இல்லைன்னா கூட பரவால்ல. 

தனு மாதிரி fake-ஆ இருக்கிற பொண்ணுங்களுக்கு சின்ன குழந்தை மாதிரி இன்னசெண்டா இருக்கிற இவ எவ்வளவோ பரவாயில்லை. 

ஏன்னே தெரியல. எனக்கு இவ அப்படி ஆக்ஸிடெண்ட் ஆகி ரோட்ல கிடைக்கிறதை பார்த்ததுல இருந்து என்ன ஆனாலும் பரவால்ல.. இவள நல்லா பாத்துக்கணும்னு தோணுது நிரஞ்சனா.” என்றான். 

“உங்களுக்கான சரியான pair இந்த பொண்ணு தான்னு எனக்கும் தோணுது சார். 

கண்டிப்பா உங்க லைஃப் இதுக்கப்புறம் நல்லா இருக்கும். இவளுக்கு நடக்கிறது என்னன்னு புரியாம இருக்கலாம். 

ஆனா உண்மையா உங்க மேல அன்பு காட்டுவா. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்று நிரஞ்சனா சொல்ல, 

தனது தாய் மற்றும் தங்கையிடம் இருந்து தவிர அந்த மாதிரியான ஒரு அன்பை இதுவரை அனுபவித்து இருக்காத ரிஷி “அப்படி நடந்தா சந்தோஷம் தான்.” என்று தனக்குள் முனுமுனித்தவாறு,

“திலீப் இந்த பொண்ண பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சதுன்னா, நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவால்ல. 

என் ரூமுக்கு வந்து சொல்ல சொல்லுங்க. என் ஃபேமிலில இருந்து யாராவது கான்டக்ட் பண்ண ட்ரை பண்ணாங்கனா, எனக்கு உடம்பு சரியில்ல நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்னு சொல்லிடுங்க. 

Tomorrow மார்னிங் அவங்க கிட்ட நான் இங்க இருக்கிறத பத்தி inform பண்ணி அவங்கள இங்க வர சொன்னா போதும்.” என்று நிரஞ்சனாவிடம் ‌சொல்லிவிட்டு அந்த அறை இருந்து வெளியேறினான்.  

இப்போது தான் பொழுது விடிந்திருக்கிறது. ஆனால் தூக்கமின்றி கடந்த சில நாட்களாக அவன் தவித்துக் கொண்டு இருந்ததால், இப்போது என்னவோ அவன் அருகில் நித்திலா இருக்கும் மனநிறைவில் அவனது சோர்வான உடலும், கண்களும் தூக்கத்திற்காக ஏங்கியது.‌ 

தனக்கு கிடைத்திருக்கும் இந்த ஒருநாள் காலக்கெடுவிற்குள் தான் செய்து முடிக்க வேண்டியது ஏராளமாக இருக்கிறது என்பதால் அதற்குள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நினைத்த ரிஷி அவனது ரூமிற்கு சென்று படுத்தான். 

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured