அத்தியாயம் 25
“அந்த தனு மாதிரி இல்லாம நான் நினைக்கிற அளவுக்கு நீ இன்னசென்ட்டா இருந்தா கண்டிப்பா நான் உன்னை பத்திரமா பாத்துக்குவேன்.” என்று நினைத்த ரிஷி, “ம்ம்.. பாத்துக்குறேன்.” என்று சொல்ல,
“அப்ப முதல்ல எனக்கு சாப்பிட ஏதாவது குடு. எனக்கு ரொம்ப பசிக்குது டா.” என்று தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்ன நித்திலா அவளுடைய வயிற்றை பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
“இவ என்ன செஞ்சாலும் பாக்குறதுக்கு க்யூட்டா இருக்கே! இவ கூட பேசிக்கும்போது இப்படியே இவ பக்கத்துல உக்காந்து பேசிக்கிட்டே இருக்கலாம்னு தோணுது.” என்று நினைத்த ரிஷி திலீப்பை பார்க்க,
“நான் போய் இவங்களுக்கு சாப்பிடறதுக்கு என்ன கொடுக்கணும்னு கேட்டு செஞ்சு எடுத்துட்டு வரேன் சார்.” என்ற நிரஞ்சனா அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவளைப் பார்த்தவுடன் அங்கே இருந்த டாக்டரும் நர்சும் அவளை பிடித்துக் கொண்டு உள்ளே இருக்கும் நித்திலாவுக்கு என்ன ஆனது என்று விசாரிக்க,
“ஆக்சிடென்ட் ஆன ஷாக்ல தான் என் தங்கச்சி இப்படி wired-ஆ பிஹேவ் பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்.
ரிஷி சார் கௌதம் சார் கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தாரு. டாக்டர் வந்ததுக்கப்புறமா தான் அவளுக்கு என்ன ஆச்சுன்னு கிளியரா தெரியும்.
இப்ப அவ பசிக்குதுன்னு சொல்றா. அவளுக்கு சாப்பிட என்ன கொடுக்கிறதுன்னு சொல்லுங்க நான் போய் செஞ்சிட்டு வரேன்.” என்று சொல்லி சமாளித்தாள் நிரஞ்சனா.
“கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்துரும்.” என்ற ரிஷி சொல்ல, “ம்ம்.. சீக்கிரம் கொண்டு வர சொல்லு. எனக்கு சாப்பாடு, சாக்லேட், நிறைய ஐஸ்கிரீம் எல்லாம் வேணும்.” என்றால் நித்திலா ஆர்வமாக முகத்துடன்.
“நீ இப்ப பேஷன்ட். அந்த மாதிரி ஜங்க் ஃபுட் எல்லாம் இப்ப சாப்பிடக் கூடாது.
டாக்டர் உனக்கு என்ன குடுக்க சொல்றாங்களோ அதை மட்டும் தான் நீ சாப்பிடணும்.” என்று அவன் உறுதியாக சொல்லிவிட,
“என்னது பேஷண்டா? நானா? நீ ஏன் அப்படி சொல்ற? அப்ப டாக்டர் எனக்கு வந்து இன்ஜெக்ஷன் போடுவாங்களா?
அய்யோ இன்ஜெக்ஷன் போட்டா வலிக்குமே! நீ இப்ப தானே என்னோட ஃபிரண்டுன்னு சொன்ன!
அப்புறம் ஏன் என்ன நீ டாக்டர் கிட்ட புடிச்சு குடுத்த? போ ரிஷி, எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் நித்திலா.
அவள் தன் உதட்டை பிதுக்கிக் கொண்டு டாக்டர் வந்து தனக்கு டாக்டர் வந்து ஊசி போட்டால் என்ன செய்வது? என யோசித்து பயத்தில் மீண்டும் பீறிட்டு அழுவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தாள்.
அவளது காது மடல்களும், நேர்த்தியான வளைவுகளுடன் இருந்த அவளுடைய சங்கு கழுத்தும் சிவந்து போனதை வைத்து அதை புரிந்து கொண்ட ரிஷி,
அவளது கையைப் பிடித்து அவளுடைய தலையில் வைத்து “இங்க பாரு! உன் தலை மேல எவ்ளோ பெரிய கட்டு இருக்குன்னு!” என்றான்.
உடனே திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் தலையை இரு கைகளாலும் தொட்டுப் பார்த்த நிதிலா,
“அய்யய்யோ என் தலையில என்னமோ இருக்கு! எனக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டபடி பதட்டத்தில் அந்த கட்டை பிரித்து முயற்சி செய்தாள்.
உடனே அவளது கைகள் இரண்டையும் பிடித்து அவளை அதை செய்யப்படாமல் தடுத்த ரிஷி “நீ ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது கீழ விழுந்துட்ட.
அதனால தான் உனக்கு இப்படி கட்டு போட்டு விட்டு இருக்காங்க. நீ இதை எடுத்தா உனக்கு ரத்தம் வந்துரும்.
பரவாயில்லையா உனக்கு? அப்புறம் மறுபடி உனக்கு ஊசி போட்டு முதல்ல இருந்து உனக்கு ஸ்டிச்சஸ் போடுவாங்க.” என்று அவளை பயமுறுத்துவதைப் போல பேசினான்.
“அய்யய்யோ ஸ்டிச்சசா? அதுவும் மறுபடி போடுவாங்களா? இப்பவே எனக்கு வலிக்குதே!
எனக்கு இன்னொரு தடவை எல்லாம் டாக்டர் ட்ரீட்மென்ட் பண்ண வேண்டாம். நான் இப்பவே நல்லா தான் இருக்கேன்.
ப்ளீஸ் ரிஷி நீ டாக்டரை இனிமே வர சொல்லாத. நான் சரியாகிட்டேனு அவர் கிட்ட சொல்லி அவரை போ சொல்லு.” என்று நித்திலா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச,
அவளை மேலும் கீழும் பார்த்து ஒரு நொடி அவளை ரசித்த ரிசி “நீ குட் girl-ஆ நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டினா,
டாக்டர் உனக்கு ஊசி எல்லாம் போட மாட்டாங்க. நான் அவங்க கிட்ட கேட்டு உனக்கு டேப்லெட் வாங்கி கொடுக்கிறேன்.
நீ அதை மட்டும் சாப்பிட்டா போதும். என்ன ஓகேவா? நான் சொல்றத கேப்பியா?” என்று கேட்க, ம்ம். என்று தன் தலையை ஆட்டினாள் நித்திலா.
அப்படி லேசாக தன் தலையை ஆட்டும்போது கூட அவளுக்கு வலித்தது. அதனால் அவளது முகம் வாடி போய்விட்டது.
“சரி சொல்லு, உன் பேர் என்ன? நீ எந்த ஊர்ல இருந்து வர்ற?
உங்க வீடு எங்க இருக்கு? உன்னோட பேரன்ட்ஸ் யாரு என்னனு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று ரிஷி அவளிடம் கேட்க,
“என் பெயரா? என் பேரு என்ன?” என்று அதே கேள்வியை அவனிடம் கேட்ட நித்திலா அந்தக் கேள்விக்கு தனக்கு பதில் தெரியுமா என்று தானும் விட்டத்தை பார்த்து தனது கன்னத்தில் லேசாக ஒற்றை விரலால் தட்டியபடி யோசிக்க தொடங்கினாள்.
ஆர்வமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷிக்கு அவள் சொன்ன பதிலைக் கேட்டவுடன் புஷ் என்று போய்விட்டது. “நான் உன் கிட்ட உன் பேரு என்னனு கேட்டா நீ பதிலுக்கு அதே கொஸ்டினை என் கிட்ட கேக்குறியா?
உன் பேரு என்னன்னு தெரிஞ்சா நான் எதுக்கு டி அத உன் கிட்ட கேட்க போறேன்?” என்று அவன் பொறுமையின்றி கேட்க,
அதுவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்த நித்திலா “ம்ம்.. ஞாபகம் வந்திருச்சு!” என்று சத்தமாக சொன்னாள்.
அதுவரை நடக்கும் அனைத்தையும் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த திலிப் வேகமாக அவள் அருகில் சென்று, “ஞாபகம் வந்திருச்சா? உனக்கு என்ன ஞாபகம் வந்துச்சுன்னு சொல்லு.” என்று அவளிடம் ஆர்வமாக கேட்க,
“என் பேரு அம்முன்னு நினைக்கிறேன். எங்க அம்மா என்னை சின்ன வயசுல அப்படித்தான் கூப்பிடுவாங்க.” என்றாள் நித்திலா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)