அத்தியாயம் 21
என்ன தான் அவர்கள் அனைவரும் தங்கள் போட்டுக் கொண்டிருக்கும் நாடகத்தின் படி அவளை நித்திலா என்று அழைத்தாலும், இப்படி கேட்டால் அவள் தன்னுடைய உண்மையான அடையாளத்தை பற்றி ஏதேனும் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் ரிஷி அவளிடம் அப்படி கேட்டிருந்தான்.
ஆனால் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனது கன்னத்தைப் பிடித்து அழுத்தி விளையாடிய நித்திலா,
“உன் பேரு ரிஷியா? நல்லா இருக்கு. ரிஷி.. ரிஷி.. ரிஷி!” என்று மீண்டும் மீண்டும் அவன் பெயரை சொல்லிப் பார்த்தவள்,
“உன் பெயரை விட நீ சிரிக்கும்போது க்யூட்டா உன் கன்னத்துல வருதுல இந்த டிம்பிள்.. அது தான் இன்னும் அழகா இருக்கு.
அதனால நான் இனிமே உன்னை டெம்பிள்ன்னு கூப்பிடட்டுமா?” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு அப்பாவியாக கேட்டாள்.
“டிம்பிளா? அது பொண்ணுங்க பேரு. எனக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது.
நீ இப்படி என்னை கூப்பிடுறத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? நீ என்னை ரிசின்னு கூப்பிடு போதும்.” என்று உடனே அவசரமான குரலில் ரிஷி சொல்ல,
அப்போது அவன் கொஞ்சம் உரத்த குரலில் அதை சொன்னதால் அதைக் கேட்டு பயந்து போன நித்தில “போ.. நீயும் என்னை திட்டுற! எல்லாருமே இங்க bad-ஆ தான் இருக்காங்க.
யாருக்குமே என்ன புடிக்கல. அதான் எல்லாருமே என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க!” என்று சொல்லிவிட்டு குழந்தை போல தேம்பித் தேம்பி மீண்டும் அழத் தொடங்கி விட்டாள் நித்திலா.
“ஐயையோ.. இவ என்ன எல்லாத்துக்கும் அழுகுறா?” என நினைத்து பதறிய ரிஷி,
“Oh my god sweetie! நான் உன்னை திட்டவே இல்ல. எதுக்கு இப்படி அழுகிற?” ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான்.
அப்போது தான் இதுவரை அவன் ஸ்வீட்டி என்று அவனுடைய முன்னாள் காதலி தனுவை தவிர வேறு யாரையும் அழைத்தது இல்லை என்று அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்படி சொல்வதைவிட, வேறு யாரையும் அப்படி பர்சனல் ஆக செல்லப் பெயர் வைத்து கூப்பிட அவனுக்கு பிடிக்காது என்று கூட சொல்லலாம்.
அதனால் தனையும் அறியாமல் இவளை தான் ஏன் அப்படி செல்லமாக ஸ்வீட்டு என்று அழைத்தோம்? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்ட ரிஷி “இவ என்னை என்ன பண்ணிட்டு இருக்க?” என்று நினைத்தவாறு அவளை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்க்க,
எனது கண்ணீரை துடைத்துவிட்டு அவனைப் பார்த்த நித்திலா, “அப்ப நீ நெஜமாவே என்ன திட்டலையா? உனக்கு என்ன பிடிக்குமா?” என்று கேட்டாள்.
அவளை மீண்டும் அழ வைக்க வேண்டாம் என நினைத்த ரிசி “ம்ம்.. எனக்கு உன்ன பிடிக்கும்.
இனிமே நான் உன்னை திட்ட மாட்டேன். நீயும் அழவே கூடாது. ஓகேவா?” என்று கேட்க,
“ம்ம்.. டீல்!” என்று சொல்லிவிட்டு அவனது சுண்டுவிரளுடன் தனது சுண்டு விரலை கோர்த்துக் கொண்ட நித்திலா அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்து,
“நீ எப்பயுமே சிரிச்சுக்கிட்டே இருந்தா நானும் அழாம உன்ன பாத்து க்யூட்டா சிரிச்சுக்கிட்டே இருப்பேன் டிம்பிள்!” என்றாள்.
நடக்கும் அனைத்தையும் திலீப்பின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, “இவங்க ரெண்டு பேரையும் இப்படி ஒன்னா பாக்கவே கியூட்டா இருக்கு இல்ல! Nice pair.” என்றாள்.
இன்னும் இந்த மர்ம பெண்ணின் மீது திலீப்பிற்கு அவனது ஆழ்மனதில் ஒரு சில சந்தேகம் இருந்தது. அதனால் டாக்டர் வந்து இவளை சோதித்துப் பார்த்து இவளுக்கு என்ன ஆனது என்று சொல்லும் வரையிலும்,
இவள் யார்? அந்த பிராத்தல் கும்பலிடம் இவள் எப்படி சிக்கினாள்? என்று கண்டுபிடிக்கும் வரையிலும் இவளை முழுவதாக நம்ப கூடாது என்ற எண்ணத்தில் “நானும் அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு தான் நினைக்கிறேன்.” என்றான் திலீப்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)