அத்தியாயம் 20
என்ன தான் நித்திலா அவர்கள் அனைவருக்கும் அவள் தான் அக்கா என்று சொன்னது நிரஞ்சனா விற்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும்,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் ரிஷி சாரும் சரி, திலீப்பும் சரி நாளைக்கு என்ன நடக்குமோன்னு நெனச்சு ரொம்ப டென்ஷன் இருந்தாங்க.
இந்த பொண்ணு வந்ததுக்கு அப்புறமா ஒரே செகண்ட்ல எல்லாத்தையும் மாத்திட்டா. சோகத்துல இருந்த ரிஷி சாரையே சிரிக்க வச்சிட்டா!
நெஜமாவே இவகிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு. எனக்கு என்னமோ இவளால மட்டும் தான் ரிஷி சாரை பழையபடி மாத்த முடியும்னு தோணுது.
அதனால தான் அந்த கடவுள் தானா இந்த பொண்ண இவர் கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்காரு. இனிமேலாவது எல்லாம் நல்லபடியாக நடக்கணும்.” என நினைத்து சந்தோஷப்பட்டாள்.
ரிஷி நித்திலாவின் அருகில் சென்று “உனக்கு தலை வலிக்குதா?” என்று அக்கறையுடன் விசாரிக்க, சில நொடிகள் அவனை குறுகுறுவென்று பார்த்த நித்திலா,
“தெரியலையே.. எனக்கு வலிக்கிற மாதிரியும் இருக்கு. வலிக்காத மாதிரியும் இருக்கு.
இப்ப நான் எஸ் சொல்லனுமா இல்ல நோ சொல்லனுமா?” என்று அப்பாவியாக கேட்டாள்.
அவள் சொன்ன பதில் கடுப்பாகி பெருமூச்சு விட்ட ரிசி “உன் கிட்ட கேட்கிறதே வேஸ்ட். நான் கௌதமை வர சொல்லி மறுபடியும் உன்னை செக் பண்ணி ஏன் உனக்கு இப்படி ஆச்சுன்னு அவன் கிட்டையே கேட்டுக்குறேன்.” என நினைத்து,
சிறு தயக்கத்துடன் அவள் கையை ஆதரவாக பிடித்து “இப்பயும் உனக்கு எங்களை எல்லாம் பார்த்தா பயமா இருக்கா?
உனக்கு உடம்பு சரி இல்லாததுனால தான் நாங்க உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கோம்..
உன்ன செக் பண்றதுக்கு இங்க டாக்டர் வருவாங்க. உனக்கு ட்ரீட்மென்ட் குடுப்பாங்க.
நாங்க எல்லாரும் உன்ன நல்லா பாத்துக்குவோம். இங்க யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க.” என்று மென் குரலில் சொன்னான்.
தனது குட்டி கண்களை சிமிட்டி விட்டு அவனை ஒரு வித பயத்துடனே பார்த்த நித்திலா, “அப்ப நீங்க அந்த bad aunty மாதிரி என்னை அடிக்க மாட்டீங்களா?
நான் பசிக்குதுன்னு சொன்னா எனக்கு சாப்பிட வாங்கி குடுப்பீங்களா?
ம்ம்.. அப்புறம்.. அந்த குட்டி டிரஸ் போட்டா எனக்கு ரொம்ப குளிருது.
இந்த மாதிரி பெருசு பெருசா நிறைய டிரஸ் எனக்கு வாங்கி குடுக்குறீங்களா?” என்று அவனிடம் தனது பச்சை நிற ஹாஸ்பிடல் டிரெஸ்ஸை இழுத்துப் பிடித்துக் காட்டி கேட்டாள்.
“ச்சீ.. அந்த bas**** இவளை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தி இருக்காங்க.. அவங்க இவளுக்கு என்ன பண்ணிட்டு இருக்காங்க, அடுத்து இவளை வச்சு என்ன பண்ண போறாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு இவ இன்னசென்ட்டா இருக்கா.” என்று நினைத்து அவளுக்காக வருத்தப்பட்ட ரிஷி,
“இங்க உன்னை யாரும் அடிச்சு டார்ச்சர் பண்ண மாட்டாங்க. நீ என்ன கேட்டாலும் உனக்கு வாங்கி கொடுப்பாங்க.
நான் இங்க உன் கூட தான் இருக்கேன். உனக்கு எது வேணும்னாலும் நீ என் கிட்ட கேளு.
இந்த ஹாஸ்பிடல் டிரஸ் வேண்டாம். நான் உனக்கு வேற நல்ல நல்ல டிரஸா வாங்கித்தரேன் ஓகேவா?” என்று அன்புடன் கேட்டான்.
அவனது வார்த்தைகளில் கரைந்து போன நித்திலா இருந்த சந்தோஷத்தில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு “thank you cute boy!” என சொல்லிவிட்டு அவனது கைகளில் மென்மையாக முத்தமிட்டாள்.
அதை எதிர்பார்த்து இருக்காத ரிஷி அவளை ஆச்சரியத்துடன் பார்க்க, அவனை அதிகம் யோசிக்க விடாமல், “ஆமா உன் பேரு என்ன?
நீ ரொம்ப அழகா க்யூட்டா குட் பாயா இருக்க. எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு.” என்றாள் நித்திலா.
அவள் அதை சொன்ன விதத்தில் பார்ப்பதற்கு அவள்தான் அவன் கண்களுக்கு கியூட்டாக தெரிந்தாள். அதனால் லேசாக அவளை பார்த்து புன்னகைத்த ரிசி,
“என் பேரு ரிஷி. உன் பேர் என்ன?” என அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)