அத்தியாயம் 19
இவ்வளவு நேரம் அவள் பேசியதை வைத்து தலையில் அடிபட்டதால் இவளுக்கு மூளையில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது. அதனால் தான் இப்படி பைத்தியம் பிடித்தவளை போல நடந்து கொண்டிருக்கிறாள் என்று முடிவு செய்திருந்த நிரஞ்சனா,
“ஏய் நித்திலா.. உனக்கு என்னை யாருன்னு தெரியலையா? நான் தான் உன் அக்கா நிரஞ்சனா.
என முதல்ல நல்லா பாரு டி. எந்த ஆங்கில்ல என்னை பார்த்தா உனக்கு நீ சொல்ற குண்டு ஆன்ட்டி மாதிரி தெரியுது?
எனக்கு பேபி பொறந்ததுக்கப்புறமா நான் கொஞ்சம் குண்டாயிட்டேன் தான். அதுக்காக நீ குண்டு ஆண்டின்னு சொல்ற அளவுக்கு எல்லாம் நான் குண்டாக்கல.
இங்க பாரு.. முதல்ல என்ன நல்லா பாரு. நீ சொல்ற குண்டு ஆன்ட்டி இவ்வளவு அழகாவா இருப்பாங்க?” என்று தனது இனிமையான குரலில் ஏதோ தனது சொந்த தங்கச்சியிடம் உரிமையாக பேசுவதைப் போல அவளிடம் கேட்டாள்.
அதுவரை ரிஷியை பார்த்துக் கொண்டிருந்த நித்திலா நிரஞ்சனாவின் குரலை கேட்டு அவள் பக்கம் திரும்பி அவளை மேலும் கீழும் உற்றுப் பார்த்தாள்.
பின் தனது இரண்டு கைகளையும் எதோ பைனாகுலரில் பார்ப்பது போல வைத்துக் கொண்டு குறுகுறுவென்று நிரஞ்சனாவை பார்த்த நித்திலா, “ஆமா ஆண்டி.. நீங்க பாக்குறதுக்கு அந்த அசிங்கமான குண்டு ஆன்ட்டி மாதிரி இல்ல.
நீங்க கியூட்டா இருக்கீங்க! எனக்கு உங்கள பாத்தா பயமா இல்ல.” என்று சொல்லிவிட்டு அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்து அப்படியும் இப்படியுமாக ஆட்டி விளையாடினாள்.
“சப்பா.. அப்பயும் இவ அந்த ஆன்ட்டியை விட மாட்டா போல இருக்கு!” என்று நினைத்த நிரஞ்சனா பாவமாக அவள் கணவன் திலீப்பை பார்க்க,
அவளையும் நித்திலாவையும் பார்த்து சத்தமாக சிரித்த திலீப் “இதவே நான் சொல்லி இருந்தா நீ என்ன ரவுண்டு கட்டி அடிச்சி இருக்க மாட்ட..
என் மனசுல இத்தனை நாளா இருந்ததை இப்ப இந்த பொண்ணு சொல்லிட்டா.. உனக்கு வயசாயிடுச்சு நிரஞ்சனா..
நீ நெஜமாவே ஆன்ட்டி ஆயிட்ட.. இனிமே உன்ன எல்லாரும் ஆன்டி ஆன்ட்டின்னு தான் கூப்பிட போறாங்க.” என்றான்.
“நீ ஒன்னு சொல்ல வேண்டாம் வாய மூடு திலீப்.
இந்த பொண்ணு எங்க நான் உன்ன அடிக்கிறதை பார்த்து பயந்துருவாளோன்னு தான் உன்ன சும்மா விடுறேன்.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கோபமாக அவனை பார்த்து சொன்ன நிரஞ்சனா,
நித்திலா பக்கம் திரும்பி “நான் உனக்கு ஆன்ட்டி இல்லமா அக்கா. நீ என்ன இனிமே அக்கானு கூப்பிடு.
என் பேரு நிரஞ்சனா. உனக்கு ஆக்சிடென்ட் ஆனதுனால நான் யாருன்னு மறந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.” என்று அன்புடன் சொன்னாள்.
ஏதோ ஒரு புதிய விஷயத்தை தான் கண்டுபிடித்த சந்தோஷத்தில் ஆர்வமுடன் அவளைப் பார்த்த நித்திலா “ஓஓஓ.. அக்கா! நீங்க அக்காவா? இவங்க ரெண்டு பேருக்கும் நீங்க தான் அக்காவா?
இனிமே நான் உங்களை அக்கான்னு கூப்பிடுறேன் ஆன்ட்டி. நீங்க அந்த அண்ணா கிட்ட கோவப்படாதீங்க.” என்று சொல்லிவிட்டு லேசாக அவளை பார்த்து புன்னகைத்தாள்.
“ஐயோ கடவுளே.. இந்த பொண்ணு கிட்ட என்ன சொல்லி புரிய வைக்கிறது?” என்று நினைத்த நிரஞ்சனா மனசுகமாக தன் தலையில் அடித்துக் கொள்ள; ரிஷி, திலீப் இருவரும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)