அத்தியாயம் 14
ரிஷி தனது உரத்த குரலில் கத்தியவுடன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் திலீப். உடனே தன் பக்கம் இருந்த கார் கதவை திறந்து வெளியில் எட்டிப் பார்த்த ரிஷி “டேய் அவ அந்த பொண்ணு தானே?
அவளுக்கு அடிபட்டிருக்குன்னு தெரிஞ்சும் ஏன் டா அவளை அப்படியே விட்டுட்டு வர்ற? உனக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா?
ஒழுங்கு மரியாதையா போய் அவளை தூக்கிட்டு வா. அவளுக்கு என்ன ஆச்சுன்னு நான் பாக்கணும்.” என்று பதட்டமான குரலில் சொல்ல,
“ஓகே ஓகே பாஸ் கோவப்படாதீங்க! நான் போய் அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறேன்.” என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த காரில் இருந்து கீழே இறங்கிய திலீப் வேகமாக சென்று அரைகுறை ஆடையில் தரையில் அடிபட்டு மயங்கி கிடந்த அந்த இளம் பெண்ணை தூக்கிக் கொண்டு வந்து பின் சீட்டில் ரிஷியின் அருகில் அமர வைத்தான்.
அந்த பெண்ணின் தலையில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறி கொண்டே இருக்க, தனது ஹேண்ட் கர்சிப்பை வைத்து அதை துடைத்த ரிஷிக்கு அவனையும் மீறி ஏனோ அவளை அப்படி பார்க்க கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
அந்தப் பெண்ணுக்காக ரிஷி வருத்தப்படுகிறான் என்று உணர்ந்தவுடன் “எப்படியாவது இந்த பொண்ண காப்பாத்திடனும். நம்ம பாஸுக்கு, இவ மேல ஏதோ ஒரு ஃபீலிங்ஸ் வந்துருச்சு போல இருக்கு!” என்று நினைத்து சந்தோஷப்பட்ட திலீப்,
அவள் கையைப் பிடித்து பல்சை செக் செய்து பார்த்துவிட்டு “பாஸ் இப்ப இந்த பொண்ணோட பல்ஸ் லோ ஆகிக்கிட்டே இருக்கு!
இவளுக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். உடனே இவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலைன்னா செத்துருவா.” என்றான்.
“You bloody a### hole.. இவ இந்த நிலைமையில இருக்கிறதை பார்த்துட்டு அப்படியே விட்டுட்டு போகலாம்னு எப்படிடா உனக்கு தோணிச்சு?
சீக்கிரம் போய் காரை ஸ்டார்ட் பண்ணு. பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு எவ்ளோ வேகமா போக முடியுமோ அவ்ளோ வேகமா போ.
இவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் ஆகவும் விடமாட்டேன்.” என்று ரிஷி திலிப்பை பார்த்து கத்த,
அவன் தன் மீது கோபப்படுகிறான் என்பதையெல்லாம் கூட பொருட்படுத்தாமல் தனு அவனை ஏமாற்றிய பிறகு ரிஷிக்கு இன்னொரு பெண்ணின் மீது இப்படியான soft corner வருவதே இந்த சூழ்நிலையில் பெரிய விஷயம் என நினைத்து மகிழ்ந்த திலீப் “டோன்ட் வரி பாஸ். இவளுக்கு எதுவும் ஆகாது.
இங்க பக்கத்துல ரெண்டு கிலோமீட்டர் போனா ஒரு ஹாஸ்பிடல் இருக்கு. இவள எப்படியாவது காப்பாத்திடலாம்.” என்று சொல்லிவிட்டு ஓடிச் சென்று காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்பினான்.
இன்னும் இருள் விலகாமல் இருந்த அந்த அதிகாலை வேளையில் அவர்களுடைய விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் காற்றை கிழித்துக் கொண்டு அசுர வேகத்தில் மருத்துவமனையை நோக்கி பறந்து கொண்டிருந்தது.
பார்ப்பதற்கு அப்பாவியைப் போல இருக்கும் தன் அருகில் சுயநினைவின்றி அரைகுறை ஆடையில் மயங்கி கிடந்த பெண்ணை வாஞ்சையுடன் பார்த்தான் ரிஷி. அவளுக்காக அவன் இதயம் படபடவென்று வேகமாக துடித்தது.
“Oh.. God please.. இவளுக்கு எதுவும் ஆகக்கூடாது.” என்று அந்த சூழ்நிலையில் அவன் இதழ்கள் அவனையும் மீறி உதிர்க்க, அவனது கண்கள் அவள் உடலில் எங்கெங்கே காயங்கள் பட்டிருக்கின்றன என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.
அந்நேரம் அவன் மூளை அவனிடம் “இவ இப்படி பக்கா ஐட்டம் மாதிரி டிரஸ் பண்ணிட்டு இருக்கும்போது, இவள நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனா நம்ம ஏதோ பண்ணி தான் இவளுக்கு இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு கண்டிப்பா எல்லாரும் நினைப்பாங்க.
முதல்ல இவளோட டிரெஸ்ஸ மாத்தணும். இப்படியே இவளை ஹாஸ்பிடலுக்கு எல்லாம் கொண்டு போக முடியாது.” என்று அவனிடம் வலியுறுத்த, “திலீப்.. பார்ட்டிசனை ஆன் பண்ணு!” என்று தனது கண்ணீர் குரலில் கட்டளையிட்டான் ரிஷி.
அவனும் “ஓகே பாஸ்!” என்று சொல்லிவிட்டு அந்த காரின் பார்ட்டிசனை ஆன் செய்தான். வீல்சேரில் அமர்ந்து இருந்த ரிஷி அவள் பக்கம் திரும்பினான்.
மயக்கமாக கிடந்த அவளது தலையில் இருந்து இன்னும் ரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டு இருந்தது. முதலில் அதை நிறுத்த வேண்டும் என்று நினைத்த ரிஷி சிரமப்பட்டு கீழே இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து அவளது தலையில் அவனுக்கு தெரிந்த மாதிரி கட்டுப்போட்டு விட்டான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)