Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு ‌ CH 11

போதையடி நீ எனக்கு ‌ CH 11

by Thenaruvi Tamil Novels

 அத்தியாயம் 11 

அவனைக் கண்டவுடன் ஆர்வம் தாங்காமல் “அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று ரிஷி கேட்க, “அவளா.. நீங்க தான் அவளை எதுவுமே பண்ணலையே பாஸ்..

அப்புறம் அவளுக்கு என்ன ஆகப்போகுது? பட் இனிமே அவளுக்கு என்ன வேணா ஆகலாம். யாருக்கு தெரியும்!” என்று கேஷுவலாக சொன்ன திலீப்,

“இப்ப நம்ம இருக்கிற நிலைமையில உங்களுக்கு பீலிங்ஸ் வருதா இல்லையான்னு செக் பண்றதுக்காக வர வெச்ச பொண்ணையும் திருப்பி அனுப்பிட்டீங்க.. 

மார்னிங்க்குள்ள என்ன தான் பண்ண போறீங்க பாஸ்? இன்னைக்கு வரப்போற பொண்ணு கூட உங்களுக்கு ஃபீலிங்ஸ் வந்துச்சுன்னா..

புரோக்கர் சொல்ற பொண்ணு யாரா இருந்தாலும் அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க! 

அதான் உங்க டேஸ்டுக்கு மேட்ச் ஆகுற மாதிரி இந்த நேரத்துல கஷ்டப்பட்டு அந்த பொண்ணை நான் ரெடி பண்ணேன்.

நமக்கு இருந்த லாஸ்ட் ஆப்ஷனும் இப்ப சொதப்பிடுச்சு. நீங்க எப்படி இருந்தாலும் பரவாயில்லன்னு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நித்யா ரெடியா இருக்காங்க தானே பாஸ்..  நீங்க ஏன் அவங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க கூடாது?  

இனிமே அவங்கள விட்டா நமக்கு வேற ஆப்ஷன் இல்ல. உங்களோட எனிமிஸ் கும்பல் அவங்க கிட்ட பேசி அவங்க மனச கலைக்குறதுக்குள்ள எப்படியாவது உங்களுக்கும் அவங்களுக்கும் மேரேஜ் ஆகணும். 

அப்ப தான் இன்னைக்கு விடிகிற பொழுது  நம்ம ரெண்டு பேருக்கும் நல்லா இருக்கும். 

இல்லைனா மறுபடியும் அந்த பணத்தாசை புடிச்ச கும்பல சமாளிக்கிறதுலையே நம்ம நிம்மதி எல்லாம் போயிடும்.” என்று சரிப்புடன் சொன்னான். 

திலீப் சொன்ன அனைத்தும் அவன் மண்டையில் ஏற்கனவே ஓடிக் கொண்டு தான் இருந்தது. இருப்பினும் நித்யா போன்ற தன் பணத்தின் மீது ஆசைப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ரிஷியின் மனம் அவனை அனுமதிக்கவில்லை. 

“நீ சொல்றது எல்லாம் கரெக்டு தான் டா. அது என் ப்ரெய்னுக்கு புரியுது.

என் லைஃப்ல லவ், மேரேஜ்க்கு எல்லாம் நான் எவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுத்து வச்சிருந்தேன்னு உனக்கு தெரியாது.. 

இப்ப திடீர்னு என்னோட மணி, பிராப்பர்ட்டிஸ், பிசினஸ் எல்லாத்தையும் தக்க வச்சிக்கிறதுக்காக  எவளோ ஒருத்திய பேருக்குன்னு கல்யாணம் பண்ணிக்கிறத என்னால நினைச்சு கூட பாக்க முடியல!” என்று ரிஷி சோர்வான குரலில் சொல்ல, 

“நீங்க சொல்றது எனக்கு புரியுது பாஸ். பட் நீங்க உங்கள பத்தி யோசிக்கலனாலும் பரவால்ல. 

உங்க சிஸ்டர் குஷி மேடமை பத்தி யோசிச்சு பாருங்க. நானும் இதே டயலாக் உங்க கிட்ட எத்தனை தடவை தான் சொல்றதுன்னு எனக்கு தெரியல..

உங்களையே இந்த நிலைமைக்கு அவங்க கொண்டு வந்து விட்டிருக்காங்க.. இதுல மொத்தமா உங்க கிட்ட இருக்கிற பவர் எல்லாம் போயிடுச்சுன்னா, குஷி மேடம் என்ன ஆவாங்கன்னு நீங்க யோசிச்சு பார்க்கணுமா இல்லையா?” என்று அவன் புத்திக்கு உரைக்கும்படி கேட்டான் திலீப்.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured