அத்தியாயம் 10
அந்த பெண்ணை அழைத்து வந்தவர்களை மீண்டும் தொடர்பு கொண்ட திலீப் “நான் சொன்னவருக்கு இந்த பொண்ண புடிக்கலையாம். சோ நீங்க இவள எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க.” என்றான்.
இவ்வளவு பணம் கொடுத்து ஃப்பிரஷ்ஷாக இருக்கும் அவளை விலைக்கு வாங்கிய ஒருவன் எதுவும் செய்யாமல் அவளை திருப்பிக் கொடுத்து விடுகிறான்.
அப்படி என்றால் மீண்டும் அவள் ஃப்பிரஷ்ஷாக இருக்கிறாள் என்று சொல்லி வேறு எவனுக்காவது அவனை விற்கலாம் என்று நினைத்து சந்தோஷப்பட்ட அந்த கும்பலும் உடனே வருவதாக சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தார்கள்.
தினேஷ் தன்னை விட்டு விட்டு சென்று அருகில் தனியாக இருந்த ரிஷி, “இவ்ளோ பிரச்சனைக்கு நடுவுல எல்லாத்தையும் சரி பண்றதுக்கு எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் அந்த பொண்ணு மட்டும் தான்.
இப்ப அவளையும் திருப்பி அனுப்ப சொல்லிட்டேன். அடுத்து என்ன பண்ண போறேன்?” என்று வழக்கம்போல தன் கண்களை மூடி சாய்ந்து யோசித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது சில நிமிடங்களுக்கு முன் அவன் கண்ட மயக்கத்தில் இருந்த அந்த அழகிய இளம்பெண்ணின் முகம் அவனுக்கு ஞாபகம் வந்தது.
அந்த சிறிய முகத்தையும், அவளுடைய கவர்ச்சியான வளைவு நெழிவுகளையும் நினைத்துப் பார்த்தாலே இப்போதும் தன் உடல் சூடாவதைப் போல உணர்ந்த ரிஷி சட்டென்று தன் கண்களை திறந்தான்.
“நான் இப்ப அவளை வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டதனால, அவளை இங்க இருந்து கூட்டிட்டு போய் வேற எவன் கிட்ட கொடுக்க போறாங்களோ தெரியல!” என்று மீண்டும் அவனுக்கு தோன்ற,
அப்படி ஒரு பெண்ணிற்கு இந்த மாதிரியான கொடுமை எல்லாம் நடக்கிறதே என்று நினைத்துப் பார்க்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் அவனுடைய நிலைமை அதைவிட கவலைக்கிடமாக இருந்ததால் வழக்கம்போல் அவளைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு தன்னைப் பற்றி யோசித்து தொடங்கினான் ரிஷி. அவளை யாரிடம் இருந்து வாங்கினானோ, அவர்களிடமே கொடுத்துவிட்ட திலீப் ரிஷியை காண அவனுடைய ரூமிற்கு வந்தான்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)