Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 84

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 84

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 84: என் கதை முடியும் நேரம் இது (பார்ட் 2) 

விஷ்ணு: “புதுசா ஏன் அக்கா சார்ன்னு எல்லாம் சொல்றீங்க? நான் யாருன்னு தெரிஞ்ச உடனே நீங்க என்ன தேர்ட் பர்சனா பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று சோகமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு அவளிடம் கேட்டான். 😞

ரித்திகா: அச்சச்சோ..!!! அப்படிலாம் இல்ல. இது எல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு. நான் இன்னைக்கு ஸ்கூலுக்குள்ள வந்ததில இருந்து ஷாக்குக்கு மேல சாக்கா இருக்கு. இன்னும் என்னால எதையும் அக்செப்ட் பண்ணிக்க முடியல. 

விஷ்ணு: “புரியுது அக்கா. இங்க வந்து உட்காருங்க.  நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று சொன்னவன் மீண்டும் சாரதாவின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ராகவி.

ரித்திகா: இன்னும் அவளால் விஷ்ணு தான் தன்னுடைய முதலாளி என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பணக்காரர்கள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்று அவள் யோசித்து வைத்து இருந்த பிம்பத்துக்கு முற்றிலும் எதிரானவனாக இருந்தான் விஷ்ணு. இந்தியாவிலேயே டாப் 3 பணக்கார குடும்பங்களில் ஒரு குடும்பமாக இருக்கும் நாராயணன் குரூப்ஸ் குடும்பத்தில் பிறந்துவிட்டு, இவனால் எப்படி இத்தனை சாதாரணமாக இருக்க முடிகிறது என்று நினைத்து அவள் ஆச்சரியப்பட்டாள். 

இவற்றை எல்லாம் பற்றி அவள் யோசித்து கொண்டு இருக்கும் போது அவளுடைய மனதில் ஒரு கேள்வி தோன்றியது. அதை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்காமல்,, அவனிடமே நேரடியாக அதைக் கேட்கும் விட்டாள். “இந்த ஸ்கூல் உன்னோடதுனா உனக்கு அப்ப கல்யாணம் ஆயிடுச்சா..??? உன்னோட பயனுக்காக தான் இந்த ஸ்கூல கட்டினியா…???” என்று தயக்கத்துடன் பாதி வார்த்தைகளை மென்று.. முழுங்கி.. எப்படியோ அந்த கேள்வியை அவனிடம் கோட்டு விட்டாள். 

விஷ்ணு: அதை கேட்டவன், அதிர்ச்சி அடைந்து விட்டான். “யக்கா….!!! இது எல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா அக்கா….??? என்ன பாத்தா உங்களுக்கு ஒரு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது..????” 😒 

ரித்திகா: “அப்ப இல்லையா..!!!! வெளில பேசிக்கிற அந்த கதை எல்லாம் வெறும் ரூமரா…???” என்று குழப்பமாக அவனை பார்த்து கேட்டாள். 🙄

விஷ்ணு: அது ரூம்ர் இல்ல. உண்மை தான். நீங்க என்ன கேள்வி பட்டு இருப்பீங்க..?? இந்த ஸ்கூல்ல விஷ்வா நாராயணன், அவருரோட பயனுக்காக கட்டினார்ன்னு தானே…??? 

ரித்திகா: ஆமா.

விஷ்ணு: இப்ப புரியுதா.. உங்களுக்கு…??? அது விஷ்வா, நான் விஷ்ணு. அவரு என்னோட அண்ணா. அவரோட பையனுக்காக தான் அவரு ஆபீஸ் பக்கத்திலேயே இந்த ஸ்கூல்ல கட்டணும்னு நினைச்சாரு. நான் வெட்டியா ஊற சுத்திக்கிட்டு இருக்கேன்னு எனக்கு பொறுப்பு வரட்டும்னு நினைச்சு இந்த ஸ்கூல்லோட மேனேஜ்மென்ட்ட என்ன பாத்துக்க சொல்லிட்டாரு. அவரோட பையன் யாருன்னு மட்டும் கேற்றாதீங்க. சேஃப்டி ரீசன்ஸ்க்காக அத என்னால வெளில சொல்ல முடியாது.

ரித்திகா: “ஓ.. ஓகே…!!! இப்ப புரியுது. பட் நீ இங்க சேர்மனா இருக்கும் போது ஏன் சாதாரணமான டீச்சர் மாதிரி கிளாஸ் எடுத்துட்டு இருக்க..???” என்று குழப்பமாக கேட்டாள். 🙄

விஷ்ணு: “அது வந்து க்கா……!!” என்று இழுத்தவன், வெட்கத்துடன் ராகவியை பார்த்து சிரித்தான். 😁 😁 😁 😁

ரித்திகா: “என்னாச்சு..!!! இப்ப நான் என்ன கேட்டேன்னு இதுக்கு இப்படி சிரிக்கிற..???” என்று கேட்டவள், தனக்குள்.. “யார்றா..!! இவன்…??? ஒரு வேளை இவன் பைத்தியமா இருபானோ..??” என்று நினைத்துக் கொண்டாள். 🙄

விஷ்ணு: “நான் அப்பப்ப இங்க வந்து சும்மா சீட்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு கிளம்பிடலாம்னு தான் நினைச்சு இங்க வந்தேன்.  நான் இங்கயே இப்ப சுத்திட்டு இருக்கிறதுக்கு உங்க தங்கச்சி தான் காரணம்.” என்று இம்முறையும் வெட்கம் கலந்த புன்னகையுடன் சொன்னான். ☺️😁

ரித்திகா: “என் தங்கச்சியா… யாரு..!!! ஷாலினிவா சொல்ற…??? அப்ப அவளுக்கு நீ தான் சேர்மேன்னு ஆல்ரெடி தெரியுமா..??? தெரிஞ்சுக்கிட்டே தான் அவ இத்தன நாளா இத என் கிட்ட சொல்லாம இருக்காளா….???” என்று வருத்தம் கலந்த சிறு கோபத்துடன் கேட்டான்.

விஷ்ணு: “அய்யய்யோ அவளுக்கு தெரியாது அக்கா. நீங்களும் சொல்லிடாதீங்க. உங்க கிட்ட சொன்ன மாதிரி, நான் அன்னைக்கு இங்க கேஷுவலா தான் வந்தேன்.  அன்னைக்கு கீழ விழப்போன என்ன ஷாலினி தாங்கி பிடிச்சா. ஆனா நான் அவ கிட்ட மொத்தமா விழுந்துட்டேன். 

நான் அவள ட்ரூவா சின்சியரா லவ் பண்றேன் அக்கா. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு தான். ஆனா அவ சொல்ல மாட்டேங்குற. நான் அவளுக்கு இன்னும் டைம் தேவைப்படும் போலன்னு விட்டுட்டேன். ஐ திங்க் அவளுக்கு இன்ஃப்பிரியரிட்டி காம்ப்ளக்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

ஒரு நாள் போலீஸ் அரெஸ்ட் -ல இருந்து நான் அவள காப்பாத்துறதுக்காக அவ முன்னாடி என்னோட பிசினஸ் கார்ட எடுத்து போலீஸ் கிட்ட காமிச்சிட்டேன். அவளும் அத கரெக்டா நோட் பண்ணி அத பத்தி கேட்டா. என் அண்ணா சின்னதா ஒரு பிசினஸ் பண்றாரு, அவர் கிட்ட உனக்காக ஹெல்ப் கேட்டேன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.

இதுக்கே அவ எங்களுக்குள்ள செட் ஆகுமான்னு நினைச்சு என்ன அவாய்ட் பண்றா…!!! இதுல அவளுக்கு என்னோட ரியல் ஐடென்டிட்டி மட்டும் தெரிஞ்சுதுன்னு வைங்க அவ்ளோ தான்…. அப்புறம் என் கிட்ட சுத்தமா பேசவே மாட்டா. அதான் அக்கா அவ என் லவ்வ அக்செப்ட் பண்ற வரைக்கும் அவ கிட்ட என்ன பத்தி சொல்ல வேணாம்னு இருக்கேன். ப்ளீஸ்…!!!! க்கா. நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணி உங்க தம்பியையும், தங்கச்சியை, சேர்த்து வைக்கணும்.” என்றவன் வெளிப்படையாக ராகவியின் கையை பிடித்துக் கொண்டு அவளிடம் தன்னுடைய காதலை சேர்த்து வைக்குமாறு சொல்லி கெஞ்சிக் கொண்டு இருந்தான். 😣 🙏

ரித்திகா: நீ சொல்றது எல்லாம் சரி தான். உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒன்னு ஓடுதுன்னு எனக்கே தெரியும். நீ சொல்ற மாதிரி அவளுக்கும் உன்ன பிடிக்கும். பட் அவ பயத்துலையும் ஒரு நியாயம் இருக்குல்ல…??? நீ ரொம்ப சிம்பிளான, ஜோவியலா, எல்லார்கிட்டயும் பழகுற ஆளா இருக்கலாம். உன்னோட கேரக்டருக்கு உனக்கு ஷாலினிய பிடிச்சிருக்கு. ஆனா உன் பேமிலி அவள அக்செப்ட்ட் பண்ணிக்கணும்ல்ல….??? அவங்க ஷாலினிய வேணாம்னு சொல்லிட்டா… அப்பவும் அவ தானே இன்னும் ஹுர்ட் ஆவா…??? 

விஷ்ணு: “அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பனா….??? என் ஃபேமிலில அவ்ளோ பெரிய பிராப்ளம் எல்லாம் வராது அக்கா. எப்படியும் எங்க அம்மா மட்டும் தான் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்க. அவங்களையும் என் அண்ணா பாத்துக்குவாரு. என்னோட இரண்டாவது அண்ணா ஹரி, கூட சின்ன வயசுல இருந்து ஒரு பொண்ண லவ் பண்ணாரு. இப்ப அவங்கள கல்யாணம் பண்ணிக்க போறாரு. அந்த கல்யாணத்தையும் விஷ்வா அண்ணா தான் நடத்துறாரு. இன் ஃபேக்ட் நான் ஷாலினிய லவ் பண்றது கூட விஷ்வா அண்ணாவுக்கு தெரியும். நமக்கு விஷ்வா அண்ணா சப்போர்ட் இருக்கும் போது பயமேன்…????” என்று உறுதியாக சொன்னான் விஷ்வாவின் மீது அவனுக்கு இருக்கும் நம்பிக்கையில்….

ரித்திகா:  ஓகே…!!! டன். நானா போய் ஷாலினி கிட்ட இத பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். உனக்கு எப்ப தோணுதோ அப்ப நீயே அவ கிட்ட சொல்லு. பட் ரொம்ப லேட் பண்ணிடாத விஷ்ணு. என்னைக்கு அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சாலும், அவ உன் மேல ரொம்ப கோவப்படுவா பாத்துக்கோ. அப்போ அவளை சமாதானப்படுத்துறது உனக்கு தான் கஷ்டமா இருக்கும். 

விஷ்ணு: “அதுலாம் பாத்துக்கலாம் க்கா. அவ அவளோட மனசுல இருக்குற லவ்வ என் கிட்ட எப்ப சொல்றாளோ, அப்ப நானும் என்ன பத்தின உண்மையா அவ கிட்ட மறைக்காம சொல்லிடுவேன்.” என்று உறுதியாக சொன்னான்.

விஷ்ணுவை பற்றி ராகவி, ஏற்கனவே அறிந்து இருந்ததால், அவனுடைய சொல்லில் இருந்த உண்மையை அவளால் புரிந்துகொள்ளள முடிந்தது. எப்படியும் விஷ்ணு, ஷாலினியை கைவிட்டு விடமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதனால் எப்படியாவது ஷாலினியையும், விஷ்ணுவையும், சேர்த்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தாள் ராகவி.

இவர்கள் இருவரும் இப்படி பிரின்சிபல் ரூமில் கேஷுவலாக பேசிக் கொண்டு இருக்க, அந்தப் பள்ளி வளாகமே மானசாவின் அரஸ்டால் பரபரப்பாக இருந்தது. வழக்கம்போல் இந்த செய்தி பத்திரிகையாளர்களை கூட சென்றடைந்து விட்டது. அதனால் அவர்கள் பள்ளியை நோக்கி அவர்கள் படையெடுத்து வந்து கொண்டு இருந்தனர். அந்த அறைக்கு வெளியில் இருந்த சாரதா, விஷ்ணுவின் பர்சனல் மொபைலுக்கு கால் செய்து இதை பற்றி அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். 

அதனால் ராகவியை அங்கு இருந்து கிளம்பச் சொன்ன விஷ்ணு, பிரின்சிபல் சாரதாவை உள்ளே அழைத்து அவளிடம், மானசாவிற்கு ராகவியை கண்டாலே பிடிப்பதில்லை. இதில் ராகவியால் தனக்கு 15 நாட்கள் சஸ்பென்ஸ் கிடைத்துவிட்ட அவமானத்தில் அவளை பழிவாங்குவதற்காக தான் மானசா இதை செய்ததாகவும், இருதியில் மானசா சி. சி. டிவி. கேமராவில் பிடிபட்டதால், அவளை போலீசில் ஒப்படைத்து விட்டதாக, செய்தியாளர்களிடம் சொல்லி விடுங்கள். என்று சொன்ன விஷ்ணு, வழக்கம்போல் சாதாரண ஆசிரியராக மாறி தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டான். சாரதா, விஷ்ணு சொன்னதைப் போல் அப்படியே செய்து அந்த பிரச்சினையை முடித்து வைத்தாள். 

நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்…

விஷ்வா இப்போது தான் தன்னுடைய சென்னை பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் தன்னுடைய சொந்த ஊரான ஈரோட்டிற்கு வந்து சில மணி நேரங்கள் கடந்து இருக்கின்றன. வந்ததும் வராததுமாக தன்னுடைய அலுவலக வேலைகளை கவனிப்பதற்காக விஷ்வா, ஆபிசுக்கு வந்து விட்டான். விஷ்வா தன்னுடைய அறைக்குள் வந்து அமர்ந்தவுடன் அங்கே வந்த சிவா, சித்தார்த்தின் பள்ளியின் நடந்தவற்றை பற்றி அவனிடம் விளக்கமாக சொல்லிக் கொண்டு இருந்தான்.

அதைக் கேட்ட வருணின் கண்கள் கோபத்தால் சிவந்தன. 😡 🔥 தன்னுடைய பள்ளிக்குள் புகுந்து ஒருவன் அங்கு இருந்த சிலையை தூக்குவதன் மூலம் அவன் எதைச் சொல்ல முயற்சிக்கிறான்..??? என்னால் அந்த சிலையை தூக்க முடியும் என்றால், நாளை உன்னுடைய மகனையோ, அல்லது அந்த பள்ளியில் படிக்கும் வேறு யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டுகிறானா..?? என்று நினைத்த விஷ்வாவிற்கு, இதை மானசா கண்டிப்பாக தனியாக செய்திருக்க முடியாது என்று உறுதியாக தோன்றியது. 

இதை அவள் தனியாக செய்யவில்லை என்றால், அவளுக்கு உதவியது யார்..?? என்ற கேள்வி, இப்போது அவனுடைய மண்டையை போட்டு குடைந்து கொண்டு இருந்தது. அதனால் சிவாவிடம் அது பற்றி கேட்டான்.

சிவா: அந்த பொண்ண நல்லா விசாரிச்சு பாத்துட்டாங்க சார். எப்படி கேட்டாலும், எனக்கு ரித்திகாவ புடிக்கல. அவ மேல இருந்த கோவத்துல தான் இப்படி பண்ணேன்னு மட்டும் தான் திரும்ப… திரும்ப… சொல்றா…!!! 

வருண்: அவளால கண்டிப்பா இத தனியா பண்ணிருக்க்க முடியாது. 

சிவா: எனக்கும் அப்டி தான் சார் தோணுது. பட் அந்த பொண்ணு வாயவே திறக்க மாட்டேங்குதே..!!! 

(விஷ்வாவிடம் சிலையை திருடி மாட்டினால் கூட, தனக்கு ஜெயில் தண்டனை தான் கிடைக்கும். ஆனால்,  அவள் பிரவினை பற்றி சொல்லி அவனையும் இதில் இழித்து விட்டால், தன்னுடைய உயிரே பறிபோகி விடும் என்றே நினைத்த மானசா, அனைத்து பழியையும் தன் மீதே போட்டுக்  கொண்டாள். இந்த சிறிய வேலையை கூட சரியாக செய்ய தெரியாமல் மானசா மாட்டிக் கொண்டு விட்டதால், அவளை  பெயிலில் எடுப்பது கூட வீண் என்று நினைத்த பிரவீன், அதை முயற்சிக்கவில்லை.)

வருண்: அவ சொல்லலைன்னா என்ன நீங்க கண்டுபிடிங்க. அவ இதுக்கு முன்னாடி எங்க இருந்தா, என்ன பண்ணிட்டு இருந்தா, யார் கூட எல்லாம் காண்டாக்ட்ல இருந்தான்னு, எல்லாத்தையும ட்ரேச் பண்ணுங்க. எதாவது மாட்டும்.

சிவா: அந்த டீடைல்ஸ்ச தான் சார் கலெக்ட் பண்ணிட்டு இருக்கோம். ஆனா இது வரைக்கும் சஸ்பிசியஸ் -அ எதுவும் கிடைக்கல..

வருண்: ஓகே. கீப் ட்ரெயிங். அண்ட் ஸ்கூல்ல இன்னும்  செக்யூரிட்ட இன்க்ரீஸ் பண்ணுங்க. 

சிவா: சூர் சார். பட் நம்ம விஷ்ணு பொறுப்பா யோசிக்கிறது இல்லைன்னு நினைச்சோம். இப்ப பாருங்க விஷ்ணுவோட ஸ்மார்ட் ஐடியாவால தான் இப்ப மானசா பண்ண வேலை வெளில தெரிஞ்சிருக்கு. இப்போ அந்த ஹிட்டன் கேமராவோட ஃபுட்டேஜ் மட்டும் கிடைக்கலைன்னா, பாவம் அந்த பொண்ணு ரித்திகாவ தான் அரெஸ்ட் பண்ணிட்டு போயிருப்பாங்க. 

வருண்: எஸ். ஆக்சுவலி அது குட் ஐடியா தான். நம்ப ஆபீஸ்லயும் யாருக்கும் தெரியாம இம்பார்ட்டண்டான பிளேஸ்ல எல்லாம் அந்த மாதிரி ஹிடன் கேமரா வைங்க. அப்ப தான் இந்த மானசா மாதிரி இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு நமக்கு தெரியும்.

சிவா:  ஓகே சார். என்றவன், விஷ்வா தனக்கு சொன்ன அனைத்து வேலைகளையும் செய்வதற்காக அங்கு இருந்து சென்று விட்டான்.

வருண்; மானசாவை பற்றியும், அவள் செய்த செயலைப் பற்றியும், சித்தார்த்தின் பாதுகாப்பு பற்றியும் யோசித்து கொண்டு இருந்தான்.  அப்போது சிவா அவனிடம் இப்போது விஷ்ணு மற்றும் இதைப் பற்றி கண்டுபிடிக்கவில்லை என்றால், பாவம் ராகவி தான் இதில் மாட்டியிருப்பாள், என்று சொன்னது அவனுக்கு ஞாபகம் வர, ரித்திகாவின் அப்பாவி முகமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அதை எல்லாம் நினைத்து பார்த்த வருண், தன்னை அறியாமல் நல்ல வேளையாக ரித்திகா இது மாட்டிக்கொள்ளவில்லை என்று நினைத்து நிம்மதி அடைந்தான்.😌

– நேசம் தொடரும் ❤️ 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured