Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 74

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 74

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 74 ஜில்லுனு ஒரு காதல் (பார்ட்டு 2) 

பின் ஆராதனா; ஹரியின் அறை கதவை திறந்து கொண்டு அவளுடைய அறைக்கு செல்ல, அவள் இந்த நேரத்தில் ஹரியின் அறையில் இருந்து வெளியே செல்வதை கவனித்த செண்பகம், “கருமம்..!! கருமம்..!! இன்னும் நான் இந்த வீட்ல இருக்கறதுக்கு இன்னும் வேற என்னென்னத்தை எல்லாம் பாக்கணும்னு எழுதி இருக்கோ..!!! என்னோட எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரி பாசமா தானே வளத்தேன்…!! வளர்ந்ததுக்கு அப்புறம் ஏன் தான் எனக்கு எதிரா நிக்குதுன்னே தெரியல..!!!” என்று வாய்விட்டு சத்தமாக புழங்கியவள், லிப்டின் வழியாக மொட்டை மாடிக்கு சென்று விட்டாள். 

செண்பகம் பேசியதை கேட்டு கண் கலங்கிய ஆராதனா அமைதியாக தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். 🥺 செண்பகம் பேசியதை ஹரியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அதனால் அவளை சமாதானப்படுத்த நினைத்து அவனும் மொட்டை மாடிக்கு சென்றான். மாடிக்கு வந்து அங்கு இருந்த ரெஸ்டிங் ஏரியாவில் அமர்ந்த செண்பகம், விண்மீன்கள் இல்லாமல் வெறிச்சோடி போய்க் கிடந்த வானத்தை வெறுத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

அங்கே வந்த ஹரி, அவனுடைய அம்மாவிற்கு அருகே அமர்ந்தான். ஹரியை கவனித்த செண்பகம், அவனை பார்க்க பிடிக்காமல் தன்னுடைய முகத்தை வேறு புறமாக திருப்பி கொண்டார். செண்பகத்தின் தோளில் தன்னுடைய கையை வைத்த ஹரி, “அம்மா என் மேல நீங்க கோவமா இருக்கீங்களா..??” என்று கேட்டான்.

செண்பகம்: தன் மீது இருந்த அவனுடைய கையை தட்டி விட்டவள், “உங்க மேல கோவப்படுறதுக்கு நான் யாரு பா..??” என்றாள்.

ஹரி: ப்ளீஸ்..!! இப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

செண்பகம்: “ஆமா நான் தான் ராட்சசில.. எல்லாரையும் கஷ்டப்படுத்துறதுக்கு தான் நான் இங்க இருக்கேன். நானே கொஞ்ச நேரமாவது தனியா நிம்மதியா இருக்கலாம்னு தான் இங்க வந்தேன். இங்கயும் வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணாத ப்ளீஸ் ஹரி இங்க இருந்து போயிரு.” என்று அமைதியான குரலில் சொன்னாள்.

ஹரி: இல்ல மா. நான் உங்க கூட பேசியே ஆகணும். அப்போ விஷ்வா அவனே உங்க கிட்ட பேசிக்கிறேன்னு சொன்னதுனால தான் நான் எதுவும் பேசல. ஆனா இப்பயும் அமைதியா இருந்தா அது சரியா இருக்காது மா. இது என்னோட வாழ்க்கை. அதுக்காக நான் தான் பேசணும்.

செண்பகம்: ஆமா..!! புரியுது. நீங்க எல்லாம் வளந்துட்டீங்க. உங்க வாழ்க்கையில நீங்களே முடிவு பண்ணிக்கிற அளவுக்கு ரெம்ப பெருசா வளந்துட்டீங்க. அதனால உங்க வாழ்க்கைய நீங்களே பாத்துக்கோங்க. அத பத்தி கருத்து சொல்றதுக்கு நான் யாரு…??

ஹரி: நான் ஆராதனாவ தவிர வேற எந்த பொண்ண லவ் பண்ணி இருந்தாலும் நீங்க இந்த அளவுக்கு கோவப்பட்டு இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் மா. நீங்க கோவமா இருக்கிறது, யோசிக்குறது, பேசுறது, எதுவுமே நான் தப்புன்னு சொல்லல. ஆனா நீங்க ஆராதனா சைடுல இருந்து அவளை பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்கன்னு தான் சொல்றேன். அவளையும் சின்ன வயசுல நீங்க தானமா வளத்துனிங்க… அவள பத்தி உங்களுக்கு தெரியாதா..?? அவ மேல ஏன் மா உங்களுக்கு இவ்வளவு கோபம்..??

செண்பகம்: “ஓ..!! அவள நான் வளத்துனேன்.. சரி தான். அப்ப நீ யாரு..?? நீ என் பையன் தானே டா..!!! உன்ன நான் தானே பெத்து வளத்தேன்…?? நீயே என் வார்த்தைக்கு மதிப்பு குடுக்காம.. அவளுக்கு தானே சப்போர்ட் பண்ணிட்டு இருக்க..?? உங்களை பெத்த அம்மா நான் அவள வீட்டுக்குள்ள விட கூடாதுன்னு சொல்லியும்; நீயும், உன் அண்ணனும், என்ன மீறி இன்னைக்கு அவள கூட்டிட்டு வந்து என் வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்க.

அப்ப இந்த வீட்ல நான் யாரு? எனக்கு என்ன மரியாதை இருக்கு இங்க..?? நான் பெத்ததுங்களயே இப்ப என்னால நம்ப முடியல. எந்த நேரத்தில என்ன பண்ணுங்கன்னு எனக்கு தெரியல. இப்ப என் எதிரி வீட்டில இருந்து வந்த அவள நான் நம்பனுமா…??” என்று ஆவேசமாக கேட்டாள்.

ஹரி: இல்ல மா. ப்ளீஸ் நான் சொல்ல வரத கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க…!!

செண்பகம்: “போதும் ஹரி. நான் பிராத்தனாவையும், விஷ்ணுவையும், கூட திட்டி, அடிச்சு, வளர்த்து இருக்கேன். ஆனா உன்னயும், விஷ்வாவையும், நான் ஒரு வார்த்தை கூட கோவமா பேசுனது கிடையாது. இப்ப என்ன பேச வைச்சுராத.” என்றாள் காட்டமாக. 😡 😤

அதை கேட்ட ஹரி, இப்போது தான் என்ன சொன்னாலும் அதை புரிந்து கொள்ளும் மன நிலையில் தன்னுடைய அம்மா இல்லை என்று புரிந்து கொண்டு “சாரி மா.” என்று சொன்னவன், அங்கு இருந்து சென்று விட்டான்.

விஷ்வாவின் அறையில்…

குளித்துவிட்டு வந்த விஷ்வா, சிறிது நேரம் தன்னுடைய ஆபீஸ் சம்பந்தமான வேலைகளை பார்த்துவிட்டு பின் இன்றாவது நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவன், அந்த டாக்டர் தனக்கு எழுதி கொடுத்த மாத்திரையை எடுத்து போட்டு விடடு இழுத்து போர்த்தி கொண்டு நிம்மதியாக படுத்து உறங்கி விட்டான். 

நேரம் நள்ளிரவை கடந்து இருந்தும் நிம்மதியாக அந்த மாத்திரையின் உதவியால் நான்கு தூங்கி கொண்டு இருந்தான் விஷ்வா. அப்போது வெள்ளை நிற கவுன் அணிந்து இருந்த ஒரு இளம் பெண், அவனுடைய அருகில் அமர்ந்த படி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். அவளுடைய கூந்தல் அலை அலையாய் காற்றில் ஆடிக் கொண்டு இருந்தது. அவளுடைய முகத்தில் அழகான ஒரு விரிந்த புன்னகை இருந்தது. 😁 😁 😁

நேரம் இரவு 2: 30 மணி…

ஷாலினியின் வீட்டில்…

எத்தனை முறை புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. அப்போது அவள் மிகவும் சோர்வாகவும், அசைவுகரியமாகவும், உணர்ந்தாள். எதேச்சையாக அவளுடைய கையை அவள் தன்னுடைய முகத்தில் வைக்க அவள் உடல் முழுவதும் நெருப்பாய் கொதித்து கொண்டு இருப்பதை கவனித்த ஷாலினி பயந்து எழுந்து அமர்ந்தாள். 😥 ஒரு புறம் அவளுடைய உடல் அனலில் தகித்து கொண்டு இருக்க, இன்னொரு புறம் அவளுடைய உடல் குளுரில் நடுங்கி கொண்டு இருந்தது. 🥶

அந்தக் கட்டிலில் அமர்ந்து இருப்பது கூட ஷாலினிக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவளுடைய உடல் நிலை மோசமாக இருப்பதை புரிந்து கொண்ட ஷாலினிக்கு இப்படியே இருந்து தனக்கு ஏதாவது ஆகி தான் இறந்தால் கூட தன்னை வந்து பார்க்க யாரும் இல்லையே என்று நினைத்து வேதனையாக இருந்தது. 💔 இல்லை இந்த சிறிய வயதில் கண்டிப்பாக வாழ்க்கையின் எந்த சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் அவள் இறக்க விரும்பவில்லை.

தன் கையே தனக்கு உதவி என்று நினைத்தவள், பேசாமல் 108 ஆம்புலன்ஸ் இருக்கு அழைத்து விடலாம் என்று நினைத்து தன்னுடைய மொபைல் போனை எடுத்தாள். அதில் நேரம் மணி 2: 35 என்று காட்டியது. இந்த இரவு நேரத்தில் தான் தனியாக இருந்து கொண்டு ஆம்புலன்ஸே வரவைத்து அதில் இந்த நிலையில் செல்வது மட்டும் தனக்கு பாதுகாப்பாக இருக்குமா..?? என்று நினைத்த ஷாலினிக்கு அப்படி மருத்துவமனைக்கு செல்வதும் கூட பயமாக தான் இருந்தது. 😓

அதனால் தனக்கு நம்பிக்கை வாய்ந்த யாராயாவது ஒருத்தரை முதலில் கால் செய்து இங்கு வரவழைத்த பின் அவர்களோடு வேண்டுமானால் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று நினனைத்த ஷாலினி, அவளுடைய கான்டாக்ஸ் ஐ திறந்து அதில் இருந்த ஒவ்வொரு பெயராக பார்த்துக் கொண்டு இருந்தாள். ஷாலினி எளிதில் அனைவரிடமும் பழகக் கூடியவள் தான் ஆனால் அதிகமான நபர்களிடம் பழகக் கூடியவள் அல்ல என்பதால் அவளுக்கு நண்பர்கள் என்று அதிகம் யாரும் இல்லை. அவளுடைய உறவினர்களை பற்றியோ,  குடும்பத்தினரை பற்றியோ, இங்கு குறிப்பிடவே தேவையில்லை. 

இப்போது ஷாலினி யாருக்காவது கால் செய்ய வேண்டும் என்றால் லாவண்யாவிற்கு தான் கால் செய்ய வேண்டும். ஆனால் அவளை இந்த நேரத்தில் இப்படி மழை பெய்து கொண்டு இருக்கும் போது இங்கே வரச் சொல்வது சரியாக இருக்காது என்று நினைத்த ஷாலினி, அவளுடைய காண்டாக்ட்ஸ ஐ ச்கிரால் செய்து கொண்டு இருந்தாள். அதுவரை ச்கிரால் செய்து கொண்டு இருந்த ஷாலினியின் கை விஷ்ணு என்ற பெயரை பார்த்தவுடன் அப்படியே நின்று விட்டது.

அவளுடைய மனசாட்சிக்கு நன்றாக தெரியும் இப்போது அவள் கால் செய்ய கூட தேவை இல்லை.. ஒரே ஒரு மெசேஜ் இங்கே அவனை வர சொல்லி அவள் அனுப்பினால் கூட அதை பார்த்த அடுத்த கணமே விஷ்ணு இங்கே அவளுக்காக வந்து நிற்பான் என்று. ஆனால் அவளுக்கு அவள் கல்லூரியில் பயிலும் போது சில ஆண் நண்பர்கள் இருந்தார்கள் தான். ஆனால் அவர்களை இப்போது நம்பி தன் வீட்டிற்கு அவள் தனியாக இருக்கும்போது அழைப்பதற்கு அவளுக்கு அதுவும் தயக்கமாகவும், பயமாகவும், இருந்தது.

அதனால் அவள் விஷ்ணுவை இங்கே அழைத்தால் என்ன என்று யோசித்து பார்த்தாள். அவன் இங்கே வருவது குறித்து அவளுக்கு எந்த தயக்கமோ, பயமுமோ, இருக்கவில்லை. இப்படியே விஷ்ணுவை பற்றி யோசித்து கொண்டு இருந்தவளுக்கு, “கடவுளே என் வாழ்க்கையில என்ன தான் நடக்குது..?? எனக்கு யாராலயும் எந்த பிரச்சனையும் வேணாம். அதுக்கு தனியா இருக்கிறதே மேல் -ன்னு நினைச்சு தான் நான் இங்க வந்தேன். ஆனா நான் இங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு நீ இன்னும் அதிகமா பிரச்சினைய குடுக்கற. 

பிரச்சினைய குடுக்குற நீயே அதுக்கு சொல்யூஷனா என் கூட எல்லாமாவும் இருந்து என்ன பாத்துகிறதுக்கு பின்னாடியே விஷ்ணுவ அனுப்பி வைக்கிற. அவன் ரொம்ப நல்லவன் தான். எனக்காக அவன் என்ன வேணும்னாலும் செய்வான் தான். ஆனா நான் இப்படியே அவன் கிட்ட டிபன்ட்டண்டா இருந்துட்டு ஒரு நாள் அவன் என் கூட இல்லைனா நான் என்ன செய்வேன்..??? விஷ்ணு சொன்ன மாதிரி நான் அவனோட பொண்டாட்டியா இருந்தா நல்லா தான் இருக்கும்.

என் விஷ்ணு எனக்கு இந்த வேர்ல்டிலேயே பெஸ்ட் ஹஸ்பண்ட்டா இருப்பான். ஆனா என்னோட ராசிய பத்தி தான் எனக்கே தெரியுமே..!! நான் என்ன ஆசைப்பட்டாலும் எப்டியும் அது கிடைக்காது. அதான் நான் அவன விட்டு விலகி இருக்கலாம்ன்னு நினைச்சு விலகி போறேன். ஆனா நீ கடைசில நான் வேற வழியே இல்லாம அவன் கிட்ட போய் நிக்கிற மாதிரியான சிச்சுவேஷன்ன திருப்பி திருப்பி ஏன் கிரியேட் பண்றேன்னு எனக்கு புரியல கடவுளே.

 ஒருவேளை இது தான் விதியோட விளையாட்டா..?? என்னையும், அவனையும், சேத்து வைப்பதற்காக தான் இப்படி எல்லாம் நீ பண்றியான்னு எனக்கு தெரியல. என்னமோ..!! என் வாழ்க்கைக்கு நீ தான் பொறுப்பு. எனக்கு எதுவும் தெரியாது.” என்று நினைத்த ஷாலினி, விஷ்ணுவின் நம்பருக்கு கால் செய்தாள். ஃபுல் ரிங் போயும் கால் கட் ஆனது. விஷ்ணு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் அவளுடைய காலை அவன் அட்டென்ட் செய்யவில்லை. 

– நேசம் தொடரும் ❤️ 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured