அத்தியாயம்: 62 விஷ்ணுவையும், ஷாலினியையும் பிரிக்க நினைக்கும் லாவண்யா (பார்ட் 1)
ஆராதனா வழக்கமாக தங்கும் வரை ஸ்டோர் ரூம் ஆக மாற்ற பட்டு இருந்தது. அதை பார்த்த ஆராதனாவின் கண்கள் கலங்கியது. 🥺 அந்த அறையில் ஹரியுடனும், இந்த குடும்பத்தினரிடமும், அவளுக்கு நிறைய நல்ல நினைவுகள் இருந்தன. அவை அனைத்தும் இப்போது காணாமல் போய்விட்டது என்று நினைத்த ஆராதனாவின் மனம் கலங்கியது. 😣 💔
அவளுடைய மனதில் இருப்பதை அவள் சொல்லாமலே புரிந்து கொண்ட ஹரி, “உன்னோட ஓல்ட் மெமரி எல்லாமே இப்போ இல்லாம போயிருச்சுன்னு நினைச்சு கவலைப்படாத. இனிமே நம்ம லைஃபோட ஒவ்வொரு செகண்ட்லயும் புதுசு புதுசா நம்ப நிறைய குட் மெமரிஸ் கிரியேட் பண்ணலாம். ஓகே வா..???” என்று அவன் பாசமாக அவளுடைய தலை முடியை வருடிய படி சொன்னான்.🥰
பின் ஆராதனாவை அழைத்துச் சென்ற ஹரி, அவனுடைய அறைக்கு அருகில் இருந்த ஒரு அறையில் அவளை தங்க சொன்னான். அந்த அறை முழுவதும் பிங்க் வண்ண பொருட்களால் நிறைந்து இருந்தது. அந்த அறையின் சுவர்களில் பார்பி, சிண்டரெல்லா, போன்ற பெண்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களின் ஓவியங்கள் வரைய பட்டு இருந்தன. ஆராதனா தங்களுடைய வீட்டில் வந்து தங்கப் போகிறாள் என்று விஷ்வா சொன்ன உடனே தன்னுடைய அறைக்கு அருகில் இருந்த இந்த அறையை அவளுக்கு பிடித்த மாதிரி தயார் செய்து விட்டான் ஹரி.
அந்த அறையை பார்த்த மகிழ்ச்சியில் குழந்தையாய் துள்ளி குதித்த ஆராதனா அங்கு இருந்த ஒவ்வொரு பொருட்களையும் தன் கையில் எடுத்து பார்த்து அதைப்பற்றி ஹரியிடம் பேசி மகிழ்ந்தாள். 😍 🥰 இன்னும் வளர்ந்த குழந்தையாய் இருக்கும் தன் காதலியை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் ஹரி. 🥰❤️
உன்னுடைய இந்த குழந்தை தனத்தை பார்க்கும் போது… 🤩
உன் மீது காதல் கொண்ட நானும் ஆண்களுகான முரட்டு தன்மையை இழந்து குழந்தையாகிவிடுகிறேன். 😍
நான் குழந்தை தனமாக நடந்து கொள்வது உன்னிடம் மட்டும் தானடி..!!
நீ என் தாயாக சில நேரம், என் சேயாக சில நேரம் என்னை தாலாட்ட…. 🥰
சிறு குழந்தையாய் உன் அன்பிற்கு முன்னே நானும் விரும்பியே தோற்று போகிறேன்.
லக்ஷனாவின் வீட்டில்….
ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த சௌபர்ணிகா அழுது கொண்டு இருந்தாள். 😭 அவளை பார்த்து முறைத்த அவளுடைய அம்மா மங்கை, அவளை தன் வாய்க்கு வந்த படி எல்லாம் கோபமாக திட்டி கொண்டு இருந்தாள். 😡 🔥
மங்கை: “அவன் யாரையோ லவ் பண்றேன்னு சொன்னா -னாம் இவ உடனே அத கேட்டுட்டு அழுதுட்டு வந்துட்டாலும். உன்ன இத்தன வருஷம் சோறு போட்டு வளத்துனதுக்கு ஏதாச்சும் பிரயோஜனம் இருக்கா..?? லுக் அட் யுவர் செல்ப் இப்படி தான் குர்த்தா போட்டுட்டு யாராவது டேட்டிங்க்கு போவாங்களா…?? நீ போனது ரெஸ்டாரன்ட் தானே.. கோயில் ஒன்றும் இல்லை. அட்ராக்டிவா எப்படி டிரஸ் பண்றதுன்னு கூட உனக்கு தெரியாதா..??
இதுல உனக்கு பர்சனல் ஸ்டைலிஸ்ட் வேற…!!! அவன் உண்மையாவே வேற எவளையாச்சும் லவ் பண்ணி இருந்தா கூட.. நீ அவன் முன்னாடி அழகா போய் நின்னு இருந்தீங்கன்னா அவன் உன்ன பாத்து இம்ப்ரஸ் ஆகி உனக்கு ஓகே சொல்லி இருப்பான்ல..?? இப்படி போய் நின்னா யாருக்கு உன்ன பிடிக்கும்..?? நானும் இருந்த டென்ஷன்ல உன்ன கவனிக்காம விட்டுட்டேன். எனக்கு பொறந்துட்டு நீ எப்படி தான் இப்படி இருக்கேன்னு எனக்கு தெரியல. கொஞ்சமாவது லக்ஷனாவ பாத்து ஏதாவது கத்துக்கோ.” என்றவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தடவிய அம்புகளாய் சௌபர்ணிகாவின் நெஞ்சை துலைத்து காயப்படுத்திக் கொண்டு இருந்தது.
தனக்கு கிடைக்காத ஹரி தன்னுடைய தங்கைக்கு கிடைக்கவில்லை என்று நினைத்து மகிழ்ந்த லக்ஷனா, புன்னகை நிறைந்த கண்களுடன் அழுது கொண்டு இருந்த சௌபரணிகாவையும், அவளை திட்டி கொண்டு இருந்த மங்கையையும் பார்த்து கொண்டு இருந்தாள். 😍
சௌபர்ணிகா: “அவரு நான் அழகா இருக்கேன்னு தான் சொன்னாரு. ஆனா அவரு அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்ட ரொம்ப லவ் பண்றாரு. ஹீ இஸ் எ ஜெம் மாம். ஏன் என்ன விட, அவரோட கேர்ள் பிரண்டை விட, அவர் லைஃப்ல வேற எந்த அழகான பொண்ணையும் அவரு பாத்து இருக்க மாட்டாரா என்ன..?? அவர் அந்த பொண்ண ட்ருவா லவ் பண்றாரு. சீ இஸ் வெரி லக்கி. அவர பாக்குறதுக்கு முன்னாடியே எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். இப்ப அவர மீட் பண்ண உடனே அவரோட கேரக்டர் எனக்கு இன்னும் புடிச்சிருக்கு. எப்பயுமே அவர் எனக்கு ஹீரோ தான். நான் லாஸ்ட் வரைக்கும் அவரோட பேன் கேர்ளாவே இருந்துக்கறேன். அவங்க நல்லா இருந்தா சரி.” என்று தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்த படியே வரவழைக்க பட்ட புன்னகையுடன் அவளுடைய அம்மாவிடம் பேசினாள். 😁
ஏற்கனவே சௌபர்ணிகாவின் மீது கோபமாக இருந்த மங்கை, இப்போது அவள் பேசியதை கேட்டு இன்னும் அதிகமாக அவள் மீது கோபப்பட்டவள், “நீ இப்படியே இன்னசென்ட்டாவே இரு. உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல.” என்று சௌபர்ணிகாவை பார்த்து சொன்னவள்; பின் லக்ஷனாவை பார்த்து, “அவள மாதிரி நீயும் போய் சொதப்பி வச்சிட்டு வந்துறாத. சித்தார்த் இஸ் ஜஸ்ட் எ ஃபைவ் இயர்ஸ் ஓல்ட் கிட். அவன இம்ப்ரஸ் பண்றது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல. நான் உனக்கு கொஞ்சம் இம்பார்டண்டான ட்ரிக்ஸ் எல்லாம் சொல்லி தரேன். என் கூட வா…!!” என்று சொல்லி லக்ஷனாவை அழைத்துக் கொண்டு அவளுடைய அறைக்கு சென்றாள்.
பிராத்தனாவின் கல்லூரியில்…
அது ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பிராத்தனாவுக்கும் தன்னுடைய அண்ணன்களை போல் எம். பி. ஏ. படித்து முடித்துவிட்டு தங்களுடைய குடும்ப பிசினஸை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவளே விரும்பி பி. பி.ஏ. படிப்பதற்காக அந்த ஊரில் நம்பர் ஒன் காலேஜ் ஆன இந்த கல்லூரியில் சேர்ந்து படித்து கொண்டு இருக்கிறாள். இந்த கல்லூரியும் நாராயணன் குரூப்ஸ் -க்கு சொந்தமானது தான். ஆனால் நாராயணன் குரூப்ஸ் உடன் வர்த்தக ரீதியாக டையப் செய்து இருந்த சில பெரிய பிசினஸ் மேன்களும் கூட நாராயணன் எஜுகேஷனல் டிரஸ்டில் சேர்ந்து கொண்டு டைரக்டர்களாக இருந்தனர். இப்போது தான் பிராத்தனா முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.
உணவு இடைவேளை…
ஜீன்ஸ் பேண்டும், கிராப் டாப்பும், அணிந்து இருந்த பிராத்தனா தன்னுடைய நீண்ட கூந்தலை அவளுடைய ஸ்டைலிஸ்ட் இன் உதவியால் கர்ள்ஸ் செய்து அழகாக ப்ரீ ஹேர் இல் காற்றில் பறக்க விட்டு இருந்தாள். நேர்த்தியான மேக்கப், தோளில் மாட்ட பட்டு இருந்த உயர்தர சிலிங் பேக், அவள் அங்கே வருவதற்கு முன்பே வேகமாக வரும் அவள் பயன்படுத்தும் வெளி நாட்டில் இருந்து வரவழைக்க பட்ட பிரத்தியோகமான பெர்ஃப்யூம் இன் வாசனை என.. “நான் பணக்காரியாக்கும்” என்று அவள் தன் வாய் விட்டு அதை சொல்ல தேவை இல்லாமல் அவளுடைய தோற்றமே அதை வெளிப்படுத்தின.
பிராத்தனா தன்னுடைய தோழிகள் லில்லி மற்றும் ஜோதிகாவுடன் பேசிய படியே கேண்டின் ஐ நோக்கி சென்று கொண்டு இருந்தாள். அப்போது கல்லூரி வளாகத்தின் உள்ளே இருந்த மினி ஃபுட்பால் கிரவுண்டில் சில இளைஞர்கள் புட்பால் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்த படியே வந்து கொண்டு இருந்த லில்லி, திடீரென்று எதையோ கவனித்தவள், தன் அருகில் நடந்து வந்து கொண்டு இருந்த பிராத்தனாவை அவசரமான குரலில் அழைத்தாள்.
லில்லி: “ஓய்..!! பிராத்தனா அங்க பாரு.” என்றவள், அவர்களுக்கு சைடில் இருந்த கிரவுண்டை காட்டினாள்.
அவள் காட்டிய திசையில் பார்த்த பிராத்தனா, “எனக்கு இப்ப புட்பால் மேட்ச் பாக்கிற மூட் இல்ல. பசிக்குது டி முதல்ல வா..!! கேண்டின் போய் சாப்பிடலாம்.” என்றவள், லில்லியின் கையை பிடித்து தன்னுடன் வரும் படி இழுத்தாள்.
லில்லி: “முதல்ல அங்க விளையாடிட்டு இருக்கிறது யாருன்னு பாரு. அவன பாத்துட்டா நீ இங்க இருந்து நகரவே மாட்ட.” என்றாள், கிண்டலாக. 😂
அவள் சொன்னதை கேட்டு சிரித்த பிராத்தனா, “எனக்கு மத்த பசங்கள என் பின்னாடி சுத்த விடுறது தான் புடிக்கும். நான் பாத்து அப்படியே ஸ்டன்னாகி நிக்கிற அளவுக்கு எல்லாம் இந்த காலேஜ்ல எந்த பையனும் இல்ல.” என்றாள் திமிராக. 😎
“ஓ..!! அப்படிங்களா பிராத்தனா மேடம்.. இதே டயலாக்ஸ்ச அவன பாத்ததுக்கு அப்புறமும் நீங்க சொல்றீங்களான்னு பாக்கலாம்.” என்றவள், பிராத்தனாவின் முகத்தை தன்னுடைய கையால் பிடித்து அந்த கிரவுண்டின் பக்கம் திருப்பி அங்கு விளையாடி கொண்டு இருந்தவனை சுட்டி காட்டி அவனை பார்க்கும் படி சொன்னாள். அவனை பார்த்த பிராத்தனாவின் கண்கள் அதிர்ச்சியலும், ஆச்சரியத்திலும், விரிந்தது. 😍 அவர்களோடு வந்து இருந்த ஜோதிகாவும் அவனை கவனித்தாள்.
சற்று நேரத்திற்கு முன் என்னை ஈர்க்கும் படி இந்த கல்லூரியில் எவனுமே இல்லை என்று சொன்ன பிராத்தனா, இப்போது அவனை விலுங்கிவிடுபவளை போல் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த லில்லி, “என்னங்க மேடம் இப்ப உங்க ஆள பாத்த உடனே ஸ்டண் ஆயிட்டீங்க போல..???” என்று சிரித்து கொண்டே நக்கலாக கேட்டாள். 🤣🤣
“பிராத்தனாவோட ஆளா அது யாரு நமக்கு தெரியாம.??” என்று நினைத்து குழம்பிய ஜோதிகா லில்லியை பார்த்து, “எனக்கு தெரியாம இவ எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சா…?? இவன் யாரு புதுசா இருக்கான்..??” என்றாள் குழப்பமாக. 🙄 அவளை பார்த்து சிரித்த லில்லி, “நான் நேத்து உனக்கு கால் பண்ணும் போது சொன்னேன்ல்ல ஜோ.. ரெண்டு நாளா இவ ஒருத்தன பாக்குறதுக்காகவே அந்த புட்பால் டோர்னமெண்ட் வீடியோவ லூப்ல போட்டு பாத்துட்டு சுத்திட்டு இருக்கான்னு..!! அவன் தான் இவன்.” என்றாள்.
லில்லி ஜோதிகாவிடம் பேசிக் கொண்டு இருந்ததை கேட்டு வெட்கப்பட்ட பிராத்தனா ☺️ அவனிடம் இருந்து தன்னுடைய பார்வையை விளக்காமல், “லில்ஸ் ஆர் யூ சூர்..?? இது நிஜமாகவே அவன் தானா..!! இல்ல என் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா…??” 😳 என்றாள். “அவன் தான் டி இவன். நல்லா பாரு. உனக்கு இன்னும் டவுட்டா இருக்குன்னா சொல்லு… நான் வேணா அவன் கிட்ட போய் பேசி அது அவன் தானன்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்து உனக்கு சொல்றேன் ஓகே வா..???” என்றாள். 😂
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)