அத்தியாயம் 54: உனக்காக நான் ❤️
விஷ்ணுவின் முகம் வேறு அவருக்கு நன்கு பரிச்சயமான முகமாக தோன்றியது. ஆனால் அவன் யாராக இருப்பான் என்று மட்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் ஷாலினியின் மீது எஃப்.ஐ.ஆர். ஏற்கனவே போட்டு விட்டதால் அவளை அவரால் அப்படியே விட்டு விட முடியவில்லை.
அதனால் பொறுமையான குரலில் மீண்டும் விஷ்ணுவிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார் அந்த போலீஸ். அதை கேட்ட விஷ்ணு, அவருக்கு அருகே சென்று தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் இருந்த அவனுடைய பிசினெஸ் கார்டை ஐ எடுத்து அவரிடம் நீட்டினான். ஷாலினி அமைதியாக அவன் என்ன செய்கிறான் என்று நின்று பார்த்து கொண்டு இருந்தாள். விஷ்ணு அந்த போலீஸ் காரர் இடம் காட்டியது ஏதோ ஒரு விசிட்டிங் கார்ட் போல இருப்பதை கவனித்தாள் ஷாலினி. ஆனால் அதில் என்ன எழுதி இருந்தது என்று தூரத்தில் நின்று கொண்டு இருந்ததால் அவளால் காண முடியவில்லை.
விஷ்ணு தன்னிடம் கொடுத்த கார்ட்டை விரிந்த விழிகளுடன் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தார் அந்த போலீஸ் காரர். அந்த பிசினஸ் கார்டில்…
மிஸ்டர். விஷ்ணு நாராயணன், சேர்மன் ஆஃ ஜே. வி. ஸ்கூல்ஸ் அண்ட் டைரக்டர் ஆப் நாராயணன் குரூப்ஸ் என்று எழுதி அதற்கு கீழ் அவனுடைய பேன்சியான மொபைல் நம்பரும், மின்னஞ்சல் முகவரியும் தெளிவாக எழுத பட்டு இருந்தது. அவனுடைய முகம் தனக்கு ஏன் பரிச்சயமாக இருந்தது என்று இப்போது அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய கார்ட்டை பார்த்தவுடன் அந்த போலீஸ் காரரின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை கூர்மையாக கவனித்து கொண்டு இருந்த விஷ்ணு, “இப்ப சொல்லுங்க சார். இந்த ப்ராப்ளமா நம்மளே பேசி சால்வ் பண்ணிக்கலாமா…?? இல்ல ஷாலினியும் இங்க இருந்து தான் ஆகணுமா..???” என்று தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு அவரை பார்த்து கேட்டான்.
“நம்மளே பேசிக்கலாம் சார். அவங்க போட்டும்.” என்றார் அந்த போலீஸ் பவ்வியமாக. போலீஸ் காரர் சொன்னதை கேட்ட ஷாலினி, ஆச்சரியமாக விஷ்ணுவையும் அவரையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள். ஷாலினியை பார்த்த விஷ்ணு, “ஒரு பிரச்சனையும் இல்ல. நீ போய் ரிலாக்ஸ்ட் ஆ இரு. நீ பிரின்சிபால் ரூமுக்கு எதுக்கு போனன்னு யாராவது கேட்டா, சாரதா மேடம் ராகவி அக்காவ பத்தி கேட்பதற்காக உன்ன கூப்டாங்க. அப்போ இங்கே போலீஸ் வந்துட்டாங்கன்னு சொல்லு. போலீஸ் ஏன் வந்தாங்கன்னு தெரியுமானு யாராவது கேட்டா… தெரியல. ஏதோ செக்யூரிட்டி ரீசன்ஸ்னு நினைக்கிறேன்னு சொல்லிடு.” என்றான். அவன் சொன்னது அனைத்தையும் கேட்ட ஷாலினி, குழப்பத்துடன் இருந்தாலும்.. சிறிது நிம்மதியுடன் தனக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்து கொண்டு அங்கு இருந்து கிளம்பினாள்.
அவள் அங்கு இருந்து அமைதியாக வெளியே வந்தாலும் தன்னுடைய பிரச்சனையில் தேவை இல்லாமல் தான் விஷ்ணுவை இழுத்து விடுகிறோமோ என்று நினைத்து வருத்தப்பட்டாள். ஷாலினி சென்றவுடன், அந்த போலீஸ் காரருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட விஷ்ணு, ஷாலினியின் மீது அவளுடைய குடும்பத்தினர் என்ன கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டான்.
விஷ்ணு: சார் இது ஃபேக் கம்ப்ளைன்ட். ஷாலினிய தான் அவங்க அடிச்சி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்க. நான் அப்பவே அவ கிட்ட அவங்க மேல கம்ப்ளைன்ட் குடுக்கலாம்ன்னு சொன்னேன். அவ தான் போலீஸ் ஸ்டேஷன் போய் என்னால அலைய முடியாது வேணாம்னு சொல்லிட்டா. அண்ட் ஷாலினி அந்த வீட்டில இருந்து வெளியே வரும் போது நானும் அவ கூட தான் வந்தேன். அவ அவளோட தாங்ஸ்ச தவிர வேறு எதையும் அந்த வீட்டில இருந்து எடுத்துட்டு வரல. அவங்க குடும்பம் சரியில்ல சார். அவங்க சொல்றத நம்பாதீங்க. அந்த ரவிய யாரோ ஷாலினி பேர சொல்லி அடிச்சா.. அதுக்கு ஷாலினி பொறுப்பாக முடியாது. அதுல யாரு இன்வால்வ் ஆகி இருக்காங்கன்னு நீங்க தான் கண்டு பிடிக்கணும். இந்த கேசில இருந்து ஷாலினி வெளியில வரணும் அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணுங்க.
போலீஸ் காரர்: நான் எஃப். ஐ. ஆர். போடாம இருந்தா பிரச்சனையே இல்ல சார். அவங்க கிட்ட பேசி ஏதாவது சொல்லி அனுப்பி இருக்கலாம். இப்ப ஷாலினி மேடம் இந்த கேசில இருந்து வெளியில வரணும்னா அதுக்கு ஒரே ஒரு ஆப்ஷன் கேஸ் குடுத்தங்களே இத வாபஸ் வாங்குறது மட்டும் தான்.
விஷ்ணு: “ஓகே சார். ஷாலினிய விட்ருங்க. நான் உங்க கூட போலீஸ் ஸ்டேஷன் வரேன். அவங்க கூட பேசி நான் இந்த கேச வாபஸ் வாங்க வக்கிறேன். அண்ட் மோஸ்ட் இம்பார்டன்ட் திங் இஸ்… எங்க ஸ்கூலுக்குன்னு வெளியில ஒரு நல்ல பேர் இருக்கு. இங்க போலீஸ் வந்துட்டு போறது சாதாரண விஷயம் இல்ல. இந்நேரம் இத எத்தன மீடியா நோட் பணி இருக்குன்னு தெரியல. சோ இங்க நீங்க வந்ததற்கான ரீசன்ன கிளியர் பண்ணனும். அட் எனி காஸ்ட் ஷாலினி பேர் வெளியில வர கூடாது.
எங்க ஸ்கூல் கேட்டுக்கு வெளியில இருக்கிற சி. சி. டிவி. கேமராவ யாரோ கல்லால அடிச்சு ஓடச்சி இருக்காங்க. அதனால எங்க ஸ்கூலோட செக்யூரிட்டி சிஸ்டம்ம டைட் பண்றதுக்கும், அந்த கேமராவை உடைச்சது யாருன்னு கண்டு பிடிக்கவும், எங்க பிரின்சிபால் மேடம் கம்ப்ளைன்ட் குடுத்துனால நீங்க இங்க அத பத்தி விசாரிக்க வந்து இருக்கீங்க.” என்றவன், சாரதாவை பார்த்து… “என்ன மேடம் சொல்றீங்க… இப்டி நடந்தா கண்டிப்பா நம்ம கம்ப்ளைன்ட் குடுத்து தானே ஆகணும். நமக்கு நம்ம ஸ்டூடண்ட்ஸ் -சேட சேப்டி தானே முக்கியம்.” என்றான் சாரதாவை பார்த்து.
சாரதா: “ஆமா சார் கண்டிப்பா. நீங்க சொன்னா கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்.” என்றவள், அந்த பள்ளியின் முதல்வராக அந்த பள்ளியின் சார்பாக ஒரு கம்ப்ளைன்ட் எழுதி அதை அங்கு வந்து இருந்த எஸ். ஐ. இடம் கொடுத்தாள்பின்
அதை பெற்று கொண்டு எஸ். ஐ. பின் விஷ்ணுவை பார்த்து… “நெஜமாவே கேமரா உடைஞ்சு இருக்கா சார்..??” என்றான் மெல்லிய குரலில்.
விஷ்ணு: “பின்ன நான் என்ன பொய்யா சார் சொல்றேன்..?? நீங்க உள்ள வரும் போது அத சரியா கவனிச்சு இருக்க மாட்டீங்க பரவால்ல. நீங்க ரிட்டன் வெளில போகும் போது பாருங்க. அங்க ஒரு கேமரா உடைஞ்சு இருக்கும். நாங்க இன்ஃபர்மேஷன் சொன்னவுடனே நீங்க இங்க சீக்கிரமா வந்ததுக்கு தேங்க்ஸ். நீங்க முன்னாடி கிளம்புங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நானே ஸ்டேஷனுக்கு வரேன்.” என்றவன், அங்கு இருந்து எழுந்து வெளியே வந்து தன்னுடைய பாடி கார்டுகளுக்கு கால் செய்து எதையோ சொன்னவன், அந்த அழைப்பை துண்டித்து விட்டு நேராக ஷாலினியை பார்க்க ஸ்டாப் ரூமுக்கு சென்று விட்டான்.
அந்த போலீஸ்காரர்கள் விஷ்ணுவிற்கு விசுவாசமாக நிஜமாகவே அங்கே செக்யூரிட்டி ரிஷான்களுக்காக வந்தவர்கள் போல சாரதாவிடம் சிறிது நேரம் செக்யூரிட்டி சிஸ்டமை பற்றி விசாரித்துவிட்டு அந்த பள்ளியில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் வெளியில் வந்து பார்க்கும் போது நிஜமாகவே அங்கு இருந்த கேமரா யாராலோ அடித்து உடைக்க பட்டு இருந்தது. அந்த கேமரா அவர்கள் இங்கே வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே உடைக்க பட்டதை போல் அந்த கேமரா ரெக்கார்ட் செய்து இருந்த அரை மணி நேர வீடியோ ஃபுல் டேஜ் ஐ கூட தடயம் இன்றி அளிக்க சொல்லி இருந்தான் விஷ்ணு.
விஷ்ணு எதிர்பார்த்தது போலவே அந்த போலீஸ்காரர்கள் அங்கு இருந்து கிளம்புவதற்கு முன் அவர்களை ரிப்போர்ட்டர்களின் குழு சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த எஸ். ஐ. இடம் “என்ன ஆச்சு சார்..?? இந்த ஸ்கூல்குள்ள போய் இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருகந்தீங்க..?? இங்க படிக்கிற ஸ்டூடெண்ட் யாருக்காவது ஏதாவது பிரச்சனையா…??” என்று சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தனர்.
அந்த பத்திரிகையாளர்களை பார்த்த போலீஸ் காரர் விஷ்ணு சொல்லி கொடுத்தது போலவே அப்படியே சொன்னவர், “இந்த ஸ்கூல் மேனேஜ்மென்ட்ட நான் அப்ரிசியேட் பண்ணியே ஆகணும். அவங்க ஸ்டுடென்ட்ஸ் பாதுகாப்பா இருக்கணும்னு ரொம்ப கவனமா இருக்காங்க. இது ஒரு சின்ன சம்பவமா இருந்தாலும் உடனே எங்களுக்கு இன்பார்ம் பண்ணி இருக்காங்க. இத யாராவது ஒரு சாதாரண நபர் சும்மா விளையாட்டுக்காக பண்ணாங்களா இல்ல இதுக்கு பின்னாடி வேற யாராவது பெரிய திட்டத்தோட இருக்காங்களான்னு எங்கள கண்டு பிடிக்க சொல்லி பிரின்சிபல் மேடம் கம்ப்ளைன்ட் குடுத்து இருக்காங்க.” என்றவன், சாரதா கொடுத்த கம்ப்ளைன்ட் பேப்பரையும் அந்த பத்திரிகையாளர்களிடம் காண்பித்தான்.
அதை பார்த்த பத்திரிகையாளர்கள், “பிரபல பள்ளியில் இருந்த சி. சிடி. வி. கேமரா உடைப்பு. இதன் பின்னணி பற்றி போலீசார் விசாரணை.” என்று அவர் அவர்கள் இஷ்டத்திற்கு மக்களை கவர்வதற்காக ஹாட் நியூஸ் என்று லைவாக டெலிகாஸ்ட் செய்தனர்.
நாராயணன் மருத்துவமனையில்….
தங்களுடைய உணவகத்தில் இருந்து வாங்கி வந்த உணவு பார்சல்களோடு ஆராதனா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறையின் கதவை ஒரு கையால் தில்லி திறந்த படி உள்ளே வந்தான் ஹரி. அவனை பார்த்தவுடன், கோபமாக அவன் அருகே எழுந்து வந்தாள் ஆராதனா. 😡🤬
தன் கையில் இருந்த உணவுகளை அங்கே ஓரமாக இருந்த டேபிளில் வைத்த ஹரி, ஆராதனவை காதலோடு பார்த்தான். 😍 அவன் மீது அதிக கோபத்தில் இருந்த ஆராதனா, அவனுடைய டீ-சர்ட்டை இருக்கமாக பிடித்து தன் பக்கம் இழுத்தாள். அதில் அவர்களுடைய உடல்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ள… ஆராதனாவின் கண்கள் கோபத்தில் கொழுந்து விட்டு எறிய, ஆராதனாவின் அருகாமையால் தூண்ட பட்ட ஹரி, ஆசையாக அவளை பார்த்தான். 🤩
ஆராதனா: “என்ன டா உன் ஃபினான்சி கூட ஜாலியா டேட்டிங் போயிட்டு வந்துட்டு அத செலிபிரேட் பண்றதுக்கு ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வந்து இருக்கியா…?? ஆண்டியே உன்ன அங்க போக சொன்னாலும் நீ போகமாட்டேன்னு நான் நம்பிட்டு இருந்தேன். ஆனா நீ… நான் உன் மேல கோவமா இருக்கேன்னு தெரிஞ்சும் என் கிட்டையே அவள பாக்க போறேன்னு சொல்லிட்டு போற… உனக்கு அவ்ளோ வந்துருச்சா..?? இங்க பாரு வழக்கம் போல என்ன அவாய்ட் பண்ணிட்டு வேற எவ பின்னாடி ஆச்சு போலாம்னு நினைச்சு கூட பாக்காத. நீ என்னை விட்டு போயிடுவியான்னு எனக்கு டவுட் வந்தா கூட உன்னையும் கொன்னுட்டு நானும் செத்துருவேன் புரிஞ்சுதா…???” என்றவளின் கண்கள் கோபத்தால் சிவந்து இருக்க, அவளுடைய கண்கள் கலங்கியது. 😡 🥺 ஹரியின் டி-ஷர்ட்டை இறுக்கி பிடித்து இருந்த தன் கைகளின் இருக்கத்தை கூடியவள், இத்தனை வருடங்கள் அவனுடைய பிரிவு தந்த வேதனையின் பாரத்தை தாங்க முடியாமல்… அவனை வலி நிறைந்த பார்வை பார்த்தாள். 😢😕
– நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)