Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 48

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 48

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 48: சித்தார்த் இதுக்கு ஒத்துப்பானா?

மெயின் கேட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த விஷ்வாவை அவன் பின்னே வேகமாக வந்த கௌத்தம், அவன் அருகே சென்று.. “தேங்க்ஸ் சீனியர்” என்றான். அவனை பார்த்த விஷ்வா, உணர்ச்சியற்ற குரலில்.. “எதுக்கு..??” என்றான்.

 கௌத்தம்: எல்லாத்துக்கும் நான் சீனியர். 

அவன் சொன்னதை கேட்ட விஷ்வா, அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அங்கு இருந்து வெளியே சென்று விட்டான். விஷ்வா தன்னுடைய கண்களில் இருந்து மறையும் வரை செல்பவனின் முதுகையே பார்த்து கொண்டு நின்றிருந்தான் கௌத்தம்.

கார் பார்க்கிங் வரை வந்து விட்ட வருண், தன்னுடைய கோட் பாக்கட்டில் கையை விட்டு அவனுடைய கார் கீயை தேடினான். அவன் கையை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்கும் போது, கார் கீயுடன் அவன் தங்கி இருந்த அறைக்கான கீ கார்ட்டையையும் சேர்த்து வெளியில் எடுத்தான். அந்த கீ கார்டை பார்த்தவன், இதை ராகவியின் குடும்பத்தினரிடம் கொடுத்தால் அவர்களுக்கு இங்கு தங்க உதவியாக இருக்கும் என்று நினைத்து அதை எடுத்து கொண்டு மீண்டும் வி.ஐ.பி ஏரியாவிற்கு வந்தான்.

வெளியில் சென்ற விஷ்வா மீண்டும் ரித்திகாவின் அறையை நோக்கி வருவதை கவனித்த கௌத்தம், அவன் அருகே சென்றான். விஷ்வாவின் அருகே வந்த கௌத்தம், எதுவும் பேசாமல் அமைதியாக நின்று   அவனையே பார்த்து கொண்டு இருக்க.. தன் கையில் இருந்த கி கார்ட்டை கௌத்தமிடம் நீட்டிய விஷ்வா, “இந்தா… இந்த ரூமை யூஸ் பண்ணிக்கோங்க.” என்றான்.  விஷ்வாவிடம் இருந்து அந்த கீ கார்ட்டை கௌத்தம் வாங்கிய பின் அங்கு இருந்து அவனை திரும்பி பார்க்காமல் வேகமாக அங்கு இருந்து சென்று விட்டான் விஷ்வா.

செல்லும் விஷ்வாவை பார்த்து தனக்குள் லேசாக சிரித்து கொண்ட கௌத்தம், “நீங்க ரொம்ப மாறிட்ட மாதிரி வெளியில காமிச்சுக்கிறீங்க. ஆனா உள்ளுக்குள்ள நீங்க இன்னும் அப்படியே தான் இருக்கீங்க சீனியர்.” என்று நினைத்தான். இப்படியே அவன் தனக்கு தெரிந்த விஷ்வாவை பற்றி யோசித்து கொண்டு இருக்க, அப்போது தான் கேன்டீனில் இருந்து திரும்பி வந்த சுதாகரும், ரேவதியும், அவனை அழைத்து ராகவியை பற்றி டாக்டர்கள் ஏதேனும் சொன்னார்களா..?? என்று விசாரித்தனர்.

ரித்திகாவிற்க்கு மூச்சு திணறல் வந்ததை பற்றி அவர்களிடம் சொல்லாமல் மறைத்த கௌத்தம், டாக்டர் அவளுக்கு சளி அதிகமாக இருப்பதால் அதை வெளியில் எடுக்க வேண்டும் என்று சொல்லியதை பற்றி மட்டும் சொன்னான். தங்கள் மகளுக்கு தாங்கள் கவலைப்படும் அளவிற்கு எதுவும் சீரியஸாக இல்லை என்று நினைத்து சந்தோஷ பட்ட சுதாகரும், ரேவதியும், கௌத்தமை சென்று ஏதாவது சாப்பிட்டு விட்டு வரும்படி சொன்னார்கள்.

கௌத்தமிற்க்கும் லேசாக பசி எடுத்ததால் தானும் கேன்டீனுக்கு சென்று ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்தவன், அவர்களிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினான். அவன் கிளம்புவதற்கு முன் விஷ்வா கொடுத்த கீ கார்டை பற்றி அவனுக்கு ஞாபகம் வர, அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு… தேவைப்பட்டால் அந்த அறையை பயன்படுத்தி கொள்ளுமாறு சொல்லி விட்டு சென்றான். 

ரேவதி: தன் கையில் இருந்த அந்த கீ கார்ட்டை முன்னும் பின்னும் திரும்பி பார்த்தவள், “நம்ப சாப்பிடுறதுக்கு போனோம்ல அந்த ரூம்மோட சாவி தான் இது. விஷ்வா தம்பி இத வச்சி தான் அந்த ரூமை தொரந்தாரு. அந்த தம்பி எவ்வளோ நல்ல பையனா இருந்தா.. அந்த ரூம் இருந்தா நமக்கு யூஸ் ஆகும்னு போகும் போது மறக்காம சாவிய குடுத்துட்டு போய் இருப்பாரு..” என்று சுதாகரிடம் சொன்னாள்.

சுதாகர்: ஆமா.. மா. அந்த தப்பிய பாத்தா நல்ல பையனா தான் தெரியுது. ஆனா இப்ப நம்ம இந்த ரூமை யூஸ் பண்ணி.. அதுக்கு நம்ம கிட்ட காசு கேட்டா என்ன பண்றது..?? அந்த ரூமில தங்குறதுக்கு லாம் நிறைய செலவாகும். அவ்ளோ காசுக்கு நம்ம எங்க போறது..??

ரேவதி: அந்த தம்பியே காசு கட்டி தான் அந்த ரூம வாடகைக்கு எடுத்து இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ நம்ம கிட்ட தனியா காசு கேக்க மாட்டாங்கல்ல..??

சுதாகர்: என்னனு தெரியல. விஷ்வா தம்பி கிளம்பும் போது இத கௌத்தம் கிட்ட என்ன சொல்லி கொடுத்துட்டு போனாரு -ன்னு அவனுக்கு தானே தெரியும். இத எப்படி யூஸ் பண்ணலாமா, வேணாமான்னு கௌத்தம் கிட்டையே கேட்டுக்கலாம்.

ரேவதி: ம்ம்.. அதுவும் சரி தான். 

நாராயணன் பேலஸில்…

ஷாலினியுடன் அந்த பெரிய கேட்டின் வாசலில் வந்து இறங்கினான் விஷ்ணு. ராகவி முதல் நாள் இங்கு வரும் போது செய்தது போலவே ஷாலினியை கூட்டி கொண்டு செக்யூரிட்டி ஆபீஸ் இன் உள்ளே சென்ற விஷ்ணு, அவளுடன் இனைந்து தேவையான அனைத்து ஃபார்மாலிட்டீஸ்களையும் செய்து முடித்தான். அனைத்து ப்ரொசிஜர்களும் முடிந்த பின் ஷாலினி உடைய வீட்டின் சாவி அவளுடைய கைகளில் கொடுக்க பட்டது.

தானே சம்பாதித்து முதன் முதலில் ஒரு வீடு கட்டி அதனுடைய சாவியை தன்னுடைய கையில் வாங்கும் போது ஒருவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதே மகிழ்ச்சி இப்போது ஷாலினிக்கும் இருந்தது. அதனால் ஆனந்த கண்ணீருடன் அந்த சாவியை பெற்று கொண்டாள் ஷாலினி. ரித்திகாவோடு இங்கு அவள் வருவதற்கு முன் எத்தனையோ நாள் ஒரு முறையாவது நாராயணன் பேலஸுற்க்குள் சென்று அது எப்படி தான் இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்று ஷாலினி பல முறை ஆசைப்பட்டு இருக்கிறாள்.

ஏன் ரித்திகாவின் வீட்டை பார்க்கும்போது கூட நாமும் இப்படி ஒரு வீட்டில் நிம்மதியாக வசித்தால் நன்றாக தான் இருக்கும் என்று கூட அவளுக்கு தோன்றியது. அதனால் மொத்தத்தில் இது அவளுக்கு ட்டிரீம் கேம் ட்ரூ மொமன்ட் ஆக இருந்தது. அவள் முதன் முதலில் ராகவியோடு இங்கே வந்ததை பற்றி யோசித்து பார்க்கும் போது… ரித்திகா வந்து சொல்லாமல் செக்யூரிட்டி ஆபீஸர்கள் அவளையும், லாவண்யாவையும், உள்ளே விட மாட்டேன் என்று சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.

அதனால் எங்கே தான் வந்து சொல்லவில்லை என்றால் இனி விஷ்ணு அவளை பார்க்க வந்தால் கூட அவனை உள்ளே விட மாட்டார்களோ என்று நினைத்த ஷாலினி, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபீஸர் இடம் விஷ்ணுவை கை காட்டி.. “இவர் என்னோட பிரண்ட் விஷ்ணு. இவர் எப்பவாவது என்ன பாக்க வந்தாருன்னா டைரக்டா உள்ள விட்டுருங்க. இவர தவிர வேற யாராவது என் பேர சொல்லி என்ன பாக்கணும்ன்னு சொன்னா என் கிட்ட கேக்காம உள்ள விட்டுறாதீங்க. எனக்கு ஆகாதவங்க நிறைய பேர் இருக்காங்க.” என்றாள். 

ஷாலினி சொன்னதை கேட்ட அந்த செக்யூரிட்டி விஷ்ணுவை கேள்வியாக பார்த்தார். விஷ்ணு அவரை பார்த்து அழகாக புன்னகைத்தான். விஷ்ணு ஏற்கனவே செக்யூரிட்டி டீம் ஹெட் ஆஃபிசர் இடம் சொல்லி இருந்த அனைத்து இன்ஸ்டரக்சன்களும் எல்லா செக்யூரிட்டிகளுக்கும் சொல்ல பட்டு இருந்ததால்.. விஷ்ணுவின் புன்னகைக்கு பின் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்ட அந்த செக்யூரிட்டி, ஷாலினியை பார்த்து மரியாதையாக “ஓகே மேடம்.” என்றான். பின் விஷ்ணுவுடன் அந்த ஆபீஸில் இருந்து வெளியே வந்த ஷாலினி தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள்.

விஷ்ணு: ஷாலினியின் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தவன், “ஆமா..!!! அவரு உன் கிட்ட சாவிய குடுக்கும் போது நீ எதுக்கு கண்கலங்கி அத வாங்குன..?? நியாயமா நீ இப்ப புது வீட்டுக்கு போறதுக்கு சந்தோஷமா தானே இருக்கனும்..?? எதுக்கு அழுத..??” என்றான். 

ஷாலினி: நான் இங்க வரணும்னு எத்தனையோ நாள் ஆசைப்பட்டு இருக்கேன். இப்போ இங்க எனக்கே எனக்குன்னு ஒரு வீடு இருக்குன்னு  யோசிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு விஷ்ணு. அந்த சந்தோஷத்துல தான் கண்ணுல இருந்து தண்ணி வந்துருச்சு.

விஷ்ணு: ஓ…!! இது தான் அப்ப ஹேப்பி டீயர்ஸ்ஸா..??

ஷாலினி: ஆமா…!!! என்று சிரித்து  கொண்டே சொன்னாள்.😁

விஷ்ணு: நான் உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போது நீ ரொம்ப போல்டான பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு தான் தெரிஞ்சுச்சு. நீ எந்த அளவுக்கு போல்டோ.. அந்த அளவுக்கு ரொம்ப எமோஷனலாவும் இருக்க.

ஷாலினி: “நான் அப்டி தான்.” என்றவள், வானில் தெரிந்த பௌர்ணமி நிலவை எதிர்ச்சியாக பார்த்தாள். அந்த நிலவை பார்த்தவுடன், அவர்கள் பைக்கில் வரும் போது… விஷ்ணு அவளிடம், “நீ, நான், நிலா.. நல்லா இருக்குல..??” என்று கேட்டது ஞாபகம் வந்தது. அதை நினைத்து பார்த்தவள், சிறு வெட்கத்துடன் புன்னகைத்தாள். ☺️😁

விஷ்ணு: “எதுக்கு நீ இப்ப திடீர்னு சிரிக்கிற..??” என்றான். அவள் புன்னகையின் அர்த்தம் புரியாமல் குழப்பமாக. 🙄

ஷாலினி: அவனை பார்த்து பெரிதாக புன்னகைத்த ஷாலினி, “ஒன்னும் இல்ல. சும்மா தான்.” என்று சொல்லி சமாளித்தாள்.

இப்படியே இவர்கள் இருவரும் பேசி கொண்டே ஷாலினியின் வீடு இருந்த ஃப்ளோருக்கு லிஃப்டில் வந்து சேர்ந்தனர். ராகவியின் வீடு இருக்கும் அதே ஃப்லோர் இல் தான் ஷாலினிக்கும் வீடு ஒதுக்க பட்டு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கட்டுமே என்று நினைத்த விஷ்ணுவின் ஏற்பாடுகளில் ஒன்று தான் இது. தன் கையில் இருந்த கீ கார்ட்டை பயன்படுத்தி அவளுடைய வீட்டின் கதவை திறந்தாள் ஷாலினி.

தன்னுடைய மொபைல் பிளாஷ் லைட் இன் உதவியால் விஷ்ணுவுடன் உள்ளே சென்றவள், லைட் சுவிட்சை கண்டு பிடித்து அதை ஆன் செய்தாள். அந்த வீடு நன்கு சுத்தம்  செய்ய பட்டு பல பல வென்று உபயோகிப்பதற்கு ஏதுவாக இருந்தது. ராகவி இங்கே குடியேறும் போது கஷ்டப்பட்டு பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்த கதை எல்லாம் அறிந்திராத ஷாலினி, அனைவருக்கும் வீடு இப்படி தான் வழங்கப்படும் போல என்று நினைத்து கொண்டாள்.

பின் மதனும், அவன் உடன் வந்திருந்த விஷ்ணுவின் இரண்டு நண்பர்களின் உதவியால் விஷ்ணு, ஷாலினியின் அனைத்து பொருட்களையும் அது அது இருக்க வேண்டிய இடத்தில் அழகாக எடுத்து வைத்தான். விஷ்ணுவிற்கும், ஷாலினிக்கும், ப்ரைவசி கொடுக்க நினைத்த மதன்; தன்னுடைய வேலை முடிந்த பின், அவனுடன் வந்தவர்களை அழைத்து கொண்டு சிறிதும் தாமதிக்காமல் அங்கு இருந்து கிளம்பி விட்டான்.

அசதியாக ஷாலினியின் அருகே கட்டிலில் அமர்ந்தான் விஷ்ணு. “உனக்காக நான் இருக்கிறேன்.” என்று வெறும் வாய் வார்த்தையில் யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அதை செயலில் காட்டுபவர்கள் சிலர் மட்டுமே. அந்த சிலரில் விஷ்ணுவும் ஒருவன். தனக்காக விஷ்ணு இத்தனை எல்லாம் செய்ததை நினைத்து மனம் மகிழ்ந்த ஷாலினி, அவனை நன்றியுடன் பார்த்தாள். அப்போது டைம் பார்ப்பதற்காக தன்னுடைய மொபைல் போனை எடுத்த ஷாலினியின் கண்களில் ஒரு தெரியாத எண்ணில் இருந்து தனக்கு நிறைய தவறிய அழைப்புகள் வந்து இருப்பது பட்டது.

இது யாராக இருக்கும் என்று நினைத்த ஷாலினி அந்த நம்பருக்கு கால் செய்தாள். அப்போது… 

“நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை…

நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை…

இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை..

கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை..

வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு

வாழ்க்கை இன்னா கணிதமா..

எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு

எதுவும் இல்லை புனிதமாய்…

நெஞ்சில் இல்லை பயம் பயம்

நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்…” 

என்ற பாடல் வரிகள் விஷ்ணுவின் போனில் ரிங்டோனாக ஒலித்தது. தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபை போனை எடுத்துப் பார்த்தான் விஷ்ணு. காலர் ஐ.டி இல் “ஷாலு மா” என்று போடப்பட்டு அதற்கு பக்கத்தில் ஒரு இதய வடிவ ❤️ எமோஜியும் இருந்தது. முதன் முதலில் அவன் ஷாலினியின் ப்ரோபைலை பார்க்கும் போதே அவளுடைய தொலைபேசி எண்ணை தன்னுடைய மொபைலில் இவ்வாறு  சேவ் செய்து வைத்திருந்தான்.

நாம் யாருக்கோ கால் செய்தால் இங்கு விஷ்ணுவின் மொபைல் போன் ஒலிக்கிறதே என்று நினைத்து குழப்பமாக அவனை திரும்பி பார்த்தாள் ஷாலினி. அப்போது விஷ்ணுவின் மொபைலில் தெரிந்த தன்னுடைய நம்பரையும், அதில் அவளுடைய பெயரை அவன் ஷேவ் செய்திருந்த விதத்தையும் கவனித்தாள் ஷாலினி. நாம் கொடுக்காமல் தன்னுடைய நம்பர் அவனிடம் எப்படி இருக்கிறது என்று நினைத்த ஷாலினிக்கு… அப்போது தான் அவன் தன் வீடு எங்கே இருக்கிறது என்று தான் அவனிடம் சொல்லாத போதும் சரியாக அவன் எப்படி அங்கே வந்து நின்றான் என்ற யோசனையும் வந்தது. அதை அனைத்தையும் நினைத்து பார்த்தாவள், ஸ்க்ரீனில் தெரிந்த தன்னுடைய பெயரை பார்த்து விட்டு விஷ்ணு முறைத்தாள். 🤨😒

விஷ்ணு ஷாலினி தன்னை பார்த்து முறைத்து கொண்டு இருப்பதை கவனிக்காதவன், கேஷுவலாக… “அடியே.. நான் உன் பக்கத்துல தானே இருக்கேன்.. பேசுறதுன்னா டைரக்டரா பேச வேண்டியது தானே.. இப்ப எதுக்கு டி கால் பண்ற…” என்றான். இதற்கு முன் அவன் செய்த வேலைகள் அனைத்தையும் மறந்துவிட்டு. அவன் கேள்வி கேட்டும் ஷாலினியிடம் இருந்து எந்த பதிலும் வராததால்.. ஷாலினியின் முகத்தை அப்போது தான் உற்று கவனித்தான்.

இன்னமும் ஷாலினி அவனை பார்த்து தான் முறைத்து கொண்டு இருந்தாள்.😒🤨 “அம்மாடி..!!! இப்ப இவ ஏன் நம்மள பாத்து இப்படி மறைக்கிறா..??” என்று நினைத்தவனுக்கு அப்போது தான் அவன் ஷாலினியிடம் நன்கு உளறி வைத்து மாட்டி கொண்டது புரிந்தது. இப்போது அதை என்ன சொல்லி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியாததால் வெக்கம் இன்றி சிரித்து வைத்தான். 😅😂

ஷாலினி: அடேய்..!!! உண்மைய சொல்லு… என்னோட நம்பர் உனக்கு எப்படி கிடைச்சுது…?? 🤨 உன் கூட நான் வீட்டுக்கு வரும்போது கூட தெரு முனையிலயே இறங்கி வந்துட்டேன். சோ உனக்கு என்னோட வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. அப்புறம் எப்படி நீ கரெக்டா அங்க வந்த..??

ஷாலினி இப்படி சட்டென்று இதை பற்றி கேட்பாள் என்று எதிர்பார்த்திருக்காத விஷ்ணு, அவளுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். ஆனால் ஷாலினி அவனை விடுவதாக இல்லை. அவன் அமைதியாகவே இருந்ததால் கடுப்பான ஷாலினி அவனுடைய தோள்பட்டையில் ஒரு அடி அடித்தவள், “ஒழுங்கா சொல்லு. நீ மட்டும் இப்ப உண்மைய சொல்லலன்னா உன் கூட பேசவே மாட்டேன் பாத்துக்கோ.” என்று மிரட்டினாள். ☹️

விஷ்ணு: அவள் அடித்த இடத்தில் தன்னுடைய ஒரு கையை வைத்து தேய்த்தவன், “ஆ..!!! சொல்றேன் டி ராட்சசி. அடிக்காத.. வலிக்குதுல்ல… நான் பாவம்.” என்றான். 😞😣

ஷாலினி: போதும்..!!! ரொம்ப வலிக்கிற மாதிரி நடிக்காத. என் நம்பர உனக்கு யார் குடுத்தது…??

விஷ்ணு: நான் சொல்றேன். ஆனா நீ அத கேட்டுட்டு என் கிட்ட கோச்சுக்க கூடாது. ஓகே வா…??

ஷாலினி: அத நான் முடிவு பண்ணிக்கிறேன் நீ சொல்லு.

விஷ்ணு: “நம்ப ஏதாவது பன்னி மாட்டிக்கிட்டா விஷ்வா அண்ணா சொல்ற மாதிரியே இவளும் சொல்றாலே… ஏற்கனவே நம்மள மிரட்டுறதுக்கு நிறைய பேர் அந்த வீட்ல இருக்காங்க. கல்யாணம் பண்ணி இவளையும் அங்க கூட்டிட்டு போனா… இவளும் அந்த லிஸ்ட்ல ஆட் ஆகி நம்மள நல்லா வச்சு செய்ய போறா… நல்லா மாட்டி கிட்ட டா விஷ்ணு.. போச்சு போ..” என்று நினைத்தவன், “நான் உன்ன ட்ராப் பண்ணிட்டு வந்தப்ப ஒருத்தன் என்ன குறு… குறுன்னு… கொலை வெறியில பாத்துட்டு இருந்தான். யாரோ உனக்கு தெரிஞ்சவன் தான் நம்மள பார்த்துட்டான் போலன்னு நினைச்சு நான் ரொம்ப பயந்துட்டேன். நீ வேற கிளம்பறப்ப.. எங்க அப்பா இதெல்லாம் தெரிஞ்சா என்ன செருப்பால அடிப்பாரு ன்னு சொல்லிட்டு போனியா… அதான் என் மைண்ட்ல ஓடிட்டே இருந்துச்சு.

உங்க வீட்ல உனக்கு ஏதாவது பிரச்சனையான்னு கால் பண்ணி கேட்கலாம்னு பாத்தா….. உன் நம்பர் என் கிட்ட இல்ல. அப்புறம் நம்ம ஸ்கூல் செக்யூரிட்டி டீம் ஹெட் இருக்கார்ல்ல.. அவரோட பையன் என்னோட ஃபிரண்டு. எமர்ஜென்சின்னு சொல்லி அவன்  அப்பா கிட்ட உன் நம்பரை எடுத்து தர சொல்லி கேட்டேன். கேட்ட நான் ரொம்ப நல்ல பையன்றதுனால அவரும் எடுத்து குடுத்துட்டாரு. 

நான் உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கல. அதனால எனக்கு இன்னும் பயமா இருந்துச்சு அங்க ஏதோ என்னால ஒரு ப்ராப்ளம் நடந்துட்டு இருக்குமோன்னு.. அதான் மனசு கேட்காம உடனே கிளம்பி வந்தேன். போதுமா…?? ” என்று விஷ்வா சொன்னதை வைத்து உடனடியாக ஒரு பொய் ஐ தயாரித்து அதை உண்மை போல் அவளிடம் சொன்னான்.

ஷாலினி: நம்பர் அவர் குடுத்தாரு ஓகே. என் வீட்டை எப்படி கண்டுபிடிச்ச…?? 

விஷ்ணு: இது என்ன கேள்வி ஷாலினி! நீ என்ன ரெசிடென்சியல் ஏரியாலயா குடி இருந்த..?? யார் கிட்டயும் கேட்டு அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம்ன்னு சொல்றதுக்கு… உன் வீடு இருந்த தெருவில சிசிடிவி கேமரா மாதிரி  அங்கங்க வீட்டு வாசல்ல இரண்டு பேர் உட்கார்ந்து இருக்காங்கல்ல.. அவங்க கிட்ட எல்லாம் கேட்டு விசார்ச்சு தான் வந்தேன்.

ஷாலினி: அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையாக கேட்டவள், “ஓ..!! ஓகே.” என்று இரண்டே வார்த்தையில் பதில் சொன்னாள்.

விஷ்ணு: அவ்ளோ தானா..???

ஷாலினி: என்ன அவ்ளோ தானா..???

விஷ்ணு: ஒரு மனுஷன் உனக்காக இவ்ளோ பண்ணிருக்கனே… அதுக்காக எதுவும் சொல்ல மாட்டியா..??

ஷாலினி: தேங்க்ஸ். ஓகே..??

விஷ்ணு: வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா..??

ஷாலினி: இப்ப வேற என்ன சொல்ல சொல்ற..??

விஷ்ணு: “ஒரு ஐ லவ் யூ இல்லேன்னாலும் என்று இழுத்தவன்… ஐ லைக் யூ ஆவது சொல்லலாம்ல..” என்றான்.

ஷாலினி: எனக்கு ஹெல்ப் பண்ணதுக்காக உனக்கு இதெல்லாம் சொல்லனும்னா.. உன் பிரெண்ட்ஸ் மூணு பேரு வந்தாங்கல்ல அப்ப அவங்களுக்கும் தான் நான் சொல்லணும். என்ன பாத்த உனக்கு எப்டி தெரியுது..?? 😒 ☹️

விஷ்ணு: அதெல்லாம் என்ன தவிர வேற யாருக்கும் நீ சொல்ல கூடாது.

ஷாலினி: அதெல்லாம் நீ ஏன் சொல்ற…??? எனக்கு யார பாத்தாச்சு சொல்லனும்ன்னு தொனுச்சுன்னா நான் சொல்லுவேன். அதெல்லாம் என் இஷ்டம். 

விஷ்ணு: “அட போ.. ஷாலினி.” என்றவன், தன் உதட்டை சுலித்தான். 😒

ஷாலினி: குழந்தைபோல் க்யூட்டாக அவன் செய்த எக்ஸ்பிரஸ்சனை பார்த்தவள், தன் அனைத்து கவலைகளையும் மரந்து மனம் விட்டு சிரித்தாள். 😂 

அவள் சிரிப்பதை பார்த்த விஷ்ணுவும் அவளோடு இணைந்து சிரித்தான். அந்த வீடு முழுவதும் அவர்களுடைய சிரிப்பு சத்தத்தால் நிறைந்து இருந்தது😂🤣

நாராயணன் பேலஸில்…

ஹாலுக்கு வந்த செண்பகம், பிராத்தனாவிடம் தன்னுடைய மொபைல் போனை கொடுத்து வாட்ஸ்ஆப்பில் ப்ரோக்கர் தனக்கு அனுப்பி இருந்த பெண்ணுடைய டீடெயில்ஸ் ஐ பார்த்து சொல்லுமாறு சொன்னாள். தனக்கு வரப்போகும் புது அண்ணி யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த பிராத்தனா, அந்த மொபைல் போனை வாங்கி புரோக்கர் அனுப்பியிருந்த இமேஜை டவுன்லோட் செய்தாள். முதலில் கேரளா சாரி கட்டி இருந்த ஒரு அழகான இளம் பெண்ணின் புகைப்படம் அதில் இருந்தது.

பிராத்தனா: “அட நம்ம லக்ஷனா சிஸ்டர். இவங்கள தான் விஷ்வா அண்ணனுக்கு பாத்து இருக்கீங்களா..???” என்றாள், ஆச்சரியமாக. 😳

பிராத்னாவின் கையிலிருந்து தன் மொபைல் போனை வாங்கி பார்த்தாள் செண்பகம். பார்த்தவுடன் அந்த பெண்ணை அவளுக்கு பிடித்திருந்தது. பிராத்தனா அந்த பெண்ணின் பெயரை சொன்னதால்.. “இந்த பொண்ண உனக்கு தெரியுமா..??” என்றாள், செண்பகம்.

பிராத்தனா: தெரியும் மா. ஆனா ரொம்ப பழக்கம் இல்ல. நான் ஒரு லேடிஸ் கிளப் -க்கு போவன்ல… அங்க இவங்களும் வருவாங்க. அங்க தான் இவங்கள பாத்தேன்.

செண்பகம்: கிளப்புக்கு எல்லாம் போய் சுத்தர பொண்ண நம்ம எப்படி கட்ட முடியும்..??

பிராத்தனா: அது ரொம்ப டீசண்டான கிளப் தான். நானும் தான் அங்க போறேன். அப்ப நான் என்ன கெட்ட பொண்ணா..??

செண்பகம்: நீ கெட்ட பொண்ணு இல்ல டி. பொறுப்பு இல்லாத பொண்ணு. உன்ன மாதிரி பொறுப்பில்லாத பொண்ண எல்லாம் என் வீட்டு மூத்த மருமகள் -ஆ வச்சுக்க முடியாது.

பிராத்தனா: “அட போங்க மா. நான் இதுக்கு தான் உங்க கிட்ட லாம் அதிகமா பேசறதே இல்லை. என்னமோ பண்ணுங்க.” என்றவள், ஹாலில் இருந்து எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.

பிராத்தனா சோபாவில் தூக்கி எறிந்து சென்று இருந்த தன்னுடைய மொபைல் போனை எடுத்து பார்த்தாள் செண்பகம். அதில் புரோக்கர் சொன்னது போல் லக்ஷனாவின் புகைப்படமும் அவளுடைய டீடைல்ஸும், அவளுடைய தங்கை சௌபர்ணிகாவின் புகைப்படமும் அவளுடைய டீடைல்ஸ் -ம் இருந்தது. பிராத்தனாவிடம் செண்பகம் அப்படி பேசி இருந்தாலும் அந்த இரு பெண்களையும் பார்த்த உடனே அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

முதலில் இதை பற்றி விஷ்வாவிடம் பேச வேண்டும் என்று அவள் நினைத்து கொண்டு இருக்க.. சரியாக அப்போது விஷ்வா வீட்டிற்குள் நுழைந்தான். அவனை கவனித்த செண்பகம், அவனை அழைத்து.. தன் அருகில் அமர செய்து.. லக்ஷனாவின் புகைப்படத்தை காட்டி அவனிடம் திருமணத்தை பற்றி பேசியவள், உனக்கு இந்த பெண்ணை திருமணம் செய்தால் அவளுடைய தங்கை சௌபர்ணிகாவை ஹரி -க்கு திருமணம் செய்து வைப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொன்னாள்.

வருண்: அதை கேட்டு கடுப்பானவன், “இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அப்புறம் ஏன் இப்படி பண்ணி என்னோட லைஃப்-ஐ மட்டும் இல்லாம இன்னொரு பொண்ணோட லைஃப்-ஐயும் சேத்து எதுக்கு கெடுக்குறீங்க..?? ஒன்னு தெளிவா புரிஞ்சுக்கோங்க அம்மா… இந்த ஜென்மத்தில எனக்கு பொண்டாட்டின்னா அது என் ஜான்வி  மட்டும் தான்.” என்றான் காட்டமாக. 😒

செண்பகம்: உனக்கு பொண்டாட்டி வேணாம் சரி. ஆனா சித்தார்த்த பாத்துகிறதுக்கு அவனுக்கு ஒரு அம்மா வேணும்ல..??

வருண்: அவன புதுசா யாரோ ஒருத்தர் வந்து அம்மாவா தான் பாத்துக்கணும்ன்னு இல்ல. நீங்க கூட பாத்துக்கலாமே…

செண்பகம்: எனக்கு இப்பவே ரொம்ப வயசு ஆகுது. இன்னும் எத்தன நாளைக்கு நான் உயிரோட இருந்து அவன பாத்துக்க முடியும்…??? நான் இருக்கும்போதே என் குடும்பத்துல இருக்குற எல்லாரோட வாழ்க்கைக்கும் ஒரு வழி செஞ்சுட்டு போயிரனும்ன்னு நினைக்கிறேன். அது ஒரு தப்பா விஷ்வா…???

வருண்: அது தப்பில்ல மா. ஆனா நீங்க என்னையும், சித்தார்த்தையும், நினைச்சு கவலை பட தேவையில்லை. எனக்கு அவன் இருக்கான். அவனுக்கு நான் இருக்கேன் அது போதும்.

செண்பகம்: அவனுக்கு நீ மட்டும் போதும்ன்னு.. நீ சொல்ல முடியாது விஷ்வா. அவன் அம்மா பாசத்துக்கு ஏங்குறான்.அத ஒரு அப்பாவா உன்னால புரிஞ்சுக்க முடியலையா வருண்..?? உன் அப்பா இடத்தில இருந்து இந்த குடும்பத்துல இருக்குற எல்லாருக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செய்ற. ஆனா உனக்கும், உன் பையனுக்கும், என்ன வேணும்னு உனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது..??

வருண்: ஒரு பெருமூச்சை விட்டவன், “சரி மா. நான் நீங்க சொல்ற பாயிண்ட்டுக்கே வரேன். சித்தார்த்துக்கு ஒரு நல்ல அம்மா வேணும்னு நான் ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னே வைங்க… அவளுக்கும் எனக்கும் செட் ஆகுதா, ஆகலையான்றது இரண்டாவது விஷயம். முதல்ல அவளுக்கும், சித்தார்த்துக்கும் செட் ஆகனும்ல..?? சித்தார்த் நம்ப கூடயே இன்னும் முழுசா கிளோஸ் ஆகல. நீங்க திடீர்னு ஒரு பொண்ண காட்டி இது தான் உன் அம்மான்னு சொன்னா அந்த பொண்ண மட்டும் அவன் அம்மான்னு ஏத்துப்பானா..??? நீங்களே சொல்லுங்க.” என்றான். 

– நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured