அத்தியாயம் 20: ஹாஸ்பிடலில் வருண்..
டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில்…
ரித்திகாவும், கௌதமும் தங்களுடைய டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்ஐ முடித்தனர். அங்கே இருந்த மாணவர்கள் அனைவரும் அதை பார்த்து ரசித்து கை தட்டினார்கள். அப்போது சரியாக ஸ்கூல் ஓவர் பெல் அடித்தது.
அந்த சத்தத்தை கேட்ட உடன் அங்கு இருந்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் சிட்டாக தங்களுடைய வகுப்பு அறைகளுக்கு பறந்து விட்டனர். கௌதம் இடம் சொல்லி விட்டு ரித்திகாவும் அங்கு இருந்து கிளம்பினாள்.
பின் வழக்கம் போல ஆட்டோவில் ஏறி தன்னுடைய வீட்டிற்கு வந்தாள். நேற்றை போல் இன்றும் அவள் சோர்வாக இருந்ததால் உடனே சாப்பிட்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்று படுத்து கொண்டாள். இப்போது எல்லாம் ரித்திகா மிகவும் சோர்வாக இருப்பதை சுதாகரும், ரேவதியும் கவனித்து அவளை நினைத்து கவலை பட்டனர்.
சுதாகர்: “எனக்கு வர வர நம்ம பாப்பாவ நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு. முன்னாடி லாம் வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்ட் ஆ ஏதாச்சு பண்ணி கிட்டு ஜாலியா இருப்பா. ஆனா இப்போ லாம் வீட்டுக்கு வர்ரா, சாப்பிடுறா உடனே தூங்கிருறா. நம்ம இப்படி வீட்டில சும்மா ஒக்காந்து கிட்டு அவளை வேலைக்கு அனுப்பி இப்படி சாப்பிடறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம நானே எங்கேயாச்சும் வேலைக்கு போய்டட்டுமா? எப்படியும் அவள கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பிட்டா நாம்ப ஃபேமிலிய சமாளிக்கறதுக்கு யாராவது ஒருத்தர் வேலைக்கு போய் தானே ஆகணும். நான் இப்போல இருந்தே வேலைக்கு போறேன். அவ கல்யாணம் பண்ணி போற வரைக்கும் கொஞ்ச நாள் ஆச்சு இந்த வீட்டில அவ நிம்மதியா இருக்கட்டுமே…” என்று வருத்தமான குரலில் சொன்னார்.
ரேவதி: “ஸ்கூல்ன்னா அப்படி தானே இருக்கும். நமக்கு தெரியாதா…? நம்ம ரெண்டு பேருமே ஸ்கூல்ல தானே வொர்க் பண்ணோம். அவளுக்கு சின்ன வயசுல இருந்தே நம்மள மாதிரி டீச்சர் ஆ ஆகணும்ன்னு தானே ஆசை. இன்னைக்கு அவ நினைச்ச மாதிரியே டீச்சர் ஆ வொர்க் பன்றா. அவ ஆசைய நம்மளே போய் கெடுக்கணும் -ன்னு சொல்றீங்களா? அவளுக்கு நம்ப. நமக்கு அவ. அவ்வளவு தானே நம்ம வாழ்க்கை. இத்தன நாள் நம்ப அவளை பாத்து கிட்டோம். இனிமேயும் நாம்ம அவளை பாத்துபோம். அவ கூடவே இருந்து நம்மளால அவளுக்கு என்ன முடியுமோ அது எல்லாத்தையும் செய்வோம். முடிஞ்சா அவளுக்கு பிடிச்ச பையனா பாத்து கல்யாணம் பண்ணி வெச்சு எல்லாரும் ஒரே வீட்டுல கூட வாழ்வோம். நீங்க தேவை இல்லாம ஃபீல் பண்ணாதீங்க.” என்றாள்.
சுதாகர்: “இருந்தாலும் நான் இருக்கும் போதே என் பொண்ணு இவ்வளவு கஷ்ட படுறாளே -ன்னு நினைக்கும் போது இதை எல்லாம் என்னால சாதாரணமா எடுத்துக்க முடியல.”
ரேவதி: “நீங்க ஏன் அவ கஷ்டப்படுறான்னு நினைக்கிறீங்க? அவ வாழ்க்கையில முன்னேறி போயிட்டு இருக்கா. லைஃப்ன்னா இப்படி தானே இருக்கும். நம்ம அவளை ஒரு கூண்டு குள்ளேயே வைச்சு விளக்க முடியாது. நம்ம நாளைக்கு இருந்தாலும் இல்லைனாலும் இந்த உலகத்த தனியா எதிர்த்து போராடி அவ ரொம்ப தைரியமான பொண்ணா இருக்கனும். அவளுக்கு -ன்னு ஒரு கரியர் இருக்குறது நல்லது தானே…? விடுங்க ரொம்ப யோசிக்காதீங்க. அவ வயசுல நம்மளும் இப்படி தானே இருந்தோம். நான் அவள பாத்துக்குறேன்.” என்று பிராக்டிக்கலாக பேச,
சுதாகர்: “சரி மா.” என்றவர், ரேவதியின் தோள்களில் ஆதரவாக சாய்ந்து கொண்டார்.
ஹாஸ்டல் ரூமில்….
பூட்டி இருந்த பாத் ரூம் கதவை தட்டிய படி நின்று கொண்டு இருந்தாள் ஒரு இளம் வயது பெண். அவள் எவ்வளவு தட்டியும் பாத் ரூம் இன் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. அதனால் அவள் பதறினாள். அதனால் மீண்டும் மீண்டும் அவளால் முயன்ற அளவிற்க்கு வேகமாக கதவை தட்டினாள்.
அந்த பெண்: “கதவ தொற டி. ரொம்ப நேரமா நீ உள்ளேயே இருக்க. எனக்கு பயமா இருக்கு டி. கிறுக்கு தனமா ஏதாச்சு பண்ணிறாத ப்ளீஸ் கதவ தொற.” என்று பதட்டமான நிலையில் அழுது கொண்டே கதவை தட்டினாள். 😢
அவள் எவ்வளவு கதறினாலும் அந்த கதவு திறப்பது போல் தெரியவில்லை. அதனால் உள்ளே இருப்பவளுக்கு ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று பயத்தின் உச்சத்தில் இருந்தாள் அந்த இளம்பெண். இறுதியாக அவளிடம் ஒரு முறை பேசி பார்க்கலாம் என்று நினைத்தவள், மீண்டும் பேச தொடங்கினாள்.
அந்த இளம் பெண்: “ஆராதனா நான் கடைசியா சொல்றேன்… இப்ப மட்டும் நீ கதவ தொரக்கலை -ன்னா நான் உங்க அண்ணனுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லிருவேன். எனக்கு வேற வழி இல்ல ப்ளீஸ் கதவ தொற.” என்றவள், கதவை வேகமாக தட்டினாள்.
அந்த பெண் தன் அண்ணனிடம் சொல்ல போவதாக சொன்னதால் வேறு வழி இன்றி கதவை திறந்து வெளியே வந்தாள் ஆராதனா. அவள் வெளியே வரும் போது அவள் இருந்த கோலத்தை பார்த்து பயந்து விட்டாள் அந்த பெண்.
ஆரதனாவின் ஆடை முழுவதும் இரத்தத்தால் நினைந்து இருந்தது. தன் உடம்பில் இருந்த மொத்த சக்தியையும் இழந்தவளாய்… நடக்க முடியாமல் தள்ளாடிய படி நடந்து வந்து கொண்டு இருந்தாள் அவள். அவளுடைய மணிக்கட்டு வெட்ட பட்டு அதில் இருந்து ரத்தம் சொட்டி கொண்டு இருந்தது.
அவள் இருந்த கோலத்தை பார்த்த ஆராதனா வின் தோழி திவ்யா அதிர்ர்சி அடைந்தாள். ஆராதனா மயங்கி கீழே விழ போனாள். அதை பார்த்த திவ்யா, அவள் அருகே ஓடி சென்று அவளை தாங்கி பிடித்தாள்.
திவ்யா: “ஆரு… ஏண் டி இப்படி பண்ண..? இப்ப நான் என்ன பண்ணுவேன்…?” என்று கதறி அழுதாள். 😭 பின் “இரு நான் உங்க அண்ணனுக்கு கால் பண்றேன்.” என்றவள் ஆராதனா உடைய மொபைல் போனை தேடினாள்.
பாதி மயக்கத்தில் இருந்த ஆராதனா, திவ்யா சொன்னதை கேட்ட விட்டு கரகரத்த குரலில் மூச்சு வாங்க திவ்யாவை பார்த்து பேசினாள்.
ஆராதனா: “வேணா திவ்யா ப்ளீஸ்… அவன் கிட்ட எதையும் சொல்லாத. நான் அவன பாக்க விரும்பல. நான் செத்தா கூட அவன் கிட்ட சொல்லாத.” என்றவள், திவ்யாவின் மடியில் மயங்கி சரிந்தாள்.
திவ்யா உடைய இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டது என்ன செய்வது என்று அறியாமல் தவித்தாள். ஆராதனா தன்னுடைய அண்ணனுக்கு கால் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டதால் யாருக்கு கால் செய்யலாம் என்று யோசித்தாள் திவ்யா.
அவளுடைய மனதில் தோன்றிய ஒரே பெயர் “ஹரி” தான். அதனால் ஆராதனா உடைய மொபைல் போனில் இருந்து ஹரிக்கு கால் செய்தாள் திவ்யா.
ஆராதனா விடம் இருந்து தனக்கு அழைப்பு வருவதை பார்த்த ஹரி, வழக்கம் போல் அதை நிராகரித்து விட்டான்.
மீண்டும் மீண்டும் கால் செய்து பார்த்தாள் திவ்யா. ஆனால் அவன் அதை நிராகரித்து கொண்டே இருந்தான். இது சரி பட்டு வராது என்று நினைத்த திவ்யா, அவனுடைய நம்பரை பார்த்து தன்னுடைய மொபைலில் போட்டு கால் செய்தாள்.
இப்போது தான் ஆராதனா அவளுடைய நம்பரில் இருந்து கால் செய்து அவன் நிராகரித்து இருந்ததால்… வேறு நம்பரில் இருந்து அவள் தான் கூப்பிடுவாள் என்று நினைத்த ஹரி, தெரியாத நம்பரில் இருந்து வரும் கால் ஐ ஏன் அட்டென்ட் செய்ய வேண்டும்…? என்று நினைத்து அதையும் நிராகரித்தான்.
அதை புரிந்து கொண்ட திவ்யா, தன்னுடைய மொபைலில் இருந்து “ஐ அம் திவ்யா. எமர்ஜன்ஸி சார். ப்ளீஸ் ஹாஸ்டலுக்கு வாங்க. ஆராதனா அன் கான்சியஸ் ஆ இருக்கா. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.” என்று ஒரு மேசேஜ் அனுப்பினாள்.
தன்னுடைய வீட்டில் இருந்த ஹரி அந்த மேசேஜை சாதாரணமாக திறந்து பார்த்தான். அதில் இருந்ததை படித்தவன், அதிர்ச்சியிலும், பயத்திலும், திகைத்து நின்றான். பின் ஒரு நொடியும் தாமதிக்காதவன், அவன் போட்டு இருந்த நைட் டிரஸ் உடன் தன்னுடைய மொபைல் போனையும், வேலட்டையும், கார் சாவியையும் மட்டும் கையில் எடுத்து கொண்டு வேகமாக படியில் இறங்கி ஓடி வந்தவன் யாரையும் கவனிக்காமல் நேராக வெளியில் வந்து தன்னுடைய காரை எடுத்து கொண்டு அங்கு இருந்து கிளம்பி ஐந்து நிமிடத்தில் ஆராதனாவின் ஹாஸ்டல் இருக்கும் இடத்தை வந்து அடைந்தான்.
நேராக அவளுடைய அறைக்கு வந்தவன், கதவை திறந்து உள்ளே சென்றான். அங்கே இரத்த வெள்ளத்தில் ஆராதனா திவ்யாவின் மடியில் மயங்கி கிடந்ததை பார்த்தவனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவனை அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. 😢
“ஆராதனா” என்று சத்தமாக அலறியவன், நேராக அவள் அருகில் சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறி கதறி அழுதான்.
திவ்யா: “சார் இப்போ நம்ம டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். ஆல்ரெடி நிறைய ரத்தம் போயிடுச்சு இப்படியே விட்டா இவளுக்கு ஏதாவது ஆயிடும். முதல்ல ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.” என்று தேம்பி தேம்பி அழுதபடி சொன்னாள். 😭
அவள் சொல்வதும் சரி தான் என்று நினைத்த ஹரி, அவளை தூக்கி கொண்டு தன்னுடைய கார் இல் சென்று அவளை படுக்க வைத்து விட்டு திவ்யாவயும் அழைத்து கொண்டு நேராக அவர்களுடைய குடும்ப மருத்துவமனைக்கு சென்றான்.
சில நிமிடங்களில் வேகமாக ஹாஸ்பிடல் ஐ வந்தடைந்தவன், அவளை தூக்கி தன் கையில் ஏந்திய படி உள்ளே எடுத்து சென்று எமர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்தான்.
பொதுவாக இந்த மாதிரி சூசைட் கேஸ் வந்தால் போலீசாரிடம் தெரிவிப்பது தான் ஹாஸ்பிடலில் வழக்கமாக நடக்கும். ஆனால் இது அவர்களுடைய மருத்துவமனை என்பதால்… சீஃப் டாக்டர் போலீசாரிடம் சொல்லவில்லை.
ஆனால் இதை பற்றி வருணிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தவர், ஒரு நர்ஸிடம் இதை வருணிடம் தெரிவிக்கும்படி சொல்லி அனுப்பினார்.
நர்ஸ் இல் மூலம் நடந்தவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட வருண் சிறிதும் தாமதிக்காமல் ஹாஸ்பிடலுக்கு விரைந்தான். அங்கே ஐ.சி.யூவில் நினைவின்றி படுத்து இருந்தாள் ஆராதனா. அங்கு இருந்த நர்ஸ் எல்லாரும் அவளுடைய உடம்பில் இருந்த ரத்தத்தை எல்லாம் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.
அதை எல்லாம் வெளியே இருந்து பார்த்து கொண்டு இருந்த ஹரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சில நிமிடங்களுக்கு மேல் அதை பார்க்க சகிக்காதவன் ஓரமாக வந்து அங்கு இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
ஆராதனா இருந்த ரூமையே பார்த்த படி ஓரமாக நின்று கொண்டு சத்தமின்றி அழுது கொண்டு இருந்தாள் திவ்யா. சில நிமிடங்களுக்கு பின் அங்கே வந்த வருண், ஓரமாக தன் தலையை குவிந்து பெஞ்சில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த ஹரியை தான் முதலில் பார்த்தான்.
அவன் முன்னே இருப்பது அவனுடைய தம்பி தானா என்று அவனுக்கே ஒரு நொடி ஆச்சரியமாக தான் இருந்தது. அவன் கூட எப்பயாவது உணர்ச்சிவச பட்டு உடைந்து விடுவான். ஆனால் ஹரி எப்போதும் பிராக்டிக்கலாக யோசிப்பவன். இப்படி எல்லாம் அவனுடைய உணர்ச்சிகள் அவனை அடிமை படுத்த விட மாட்டான்.
அவனே இப்படி ஒரு குழந்தையை போல் அழுது கொண்டு இருப்பதை வருண் -வால் ஒரு அண்ணனாக தாங்கி கொள்ள முடியவில்லை. ஹரியின் அருகே சென்ற வருண், அவனுடைய தோளில் ஆதரவாக தன் கையை வைத்தான். அந்த தொடுகையிலேயே அது யார் என்று உணர்ந்து கொண்ட ஹரி, வேகமாக எழுந்து வருணை கட்டி பிடித்து கொண்டான்.
ஆதரவாக வருணும் ஹரியை அணைத்து கொண்டான். ஹரி எதுவும் பேசவில்லை. ஆனால் அவனுடைய கண்களில் இருந்து வழியும் கண்ணீர் வருணின் சட்டையை நினைத்து கொண்டு இருந்தது.
அப்போது டாக்டர் அந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்த வருண், ஹரியை தன்னிடம் இருந்து விளக்கி விட்டு அவர் அருகில் சென்றான். அவன் என்ன கேட்க போகிறான் என்று புரிந்து கொண்ட டாக்டர், அவராகவே பேச தொடங்கினார்.
டாக்டர்: “மிஸ்டர் வருண்… ஆராதனா ஓட கண்டிஷன் கொஞ்சம் மோசமா தாண் இருக்கு. அவங்களோட உடம்புல இருந்து பிளட் ரொம்ப லாஸ் ஆயிருக்கு. பல்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு. அவங்க ரொம்ப நாளா டிப்ரஷன் ல இருந்து இருக்காங்க போல. அதிகமா அண்டி டிபிரசான் பில்ஷ் வேற சாப்பிட்டு இருக்காங்க. அதோட எஃபெக்ட் வேற அவங்க பிளட்ல இருக்கு. முதல்ல இப்ப அவங்களுக்கு தேவை படுறது பிளட் தான். அதுக்கு அரேஞ்ச் பண்ணுங்க. அவங்களோட பிளட் குரூப் என்னான்னு டெஸ்ட் பண்ண சொல்லி இருக்கோம். ரிப்போர்ட் சீக்கிரம் வந்துடும். வந்தவுடனே என்னன்னு கேட்டுட்டு உங்க சைட்ல ட்ரை பண்ணுங்க.” என்றார்.
வருண்: “ஒகே டாக்டர்.” என்றான்.
ஹரி: “ஓ நெகட்டிவ், அதான் அவ பிளட் குரூப்.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
டாக்டர்: “பிளட் பேங்க்ல அந்த பிளட் குரூப் available-ல இருக்கான்னு நானும் விசாரிச்சு பாக்க சொல்றேன்.” என்றார்.
அப்போது ஒரு நர்ஸ் ஆராதனாவின் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் உடன் வந்தாள்.
அங்கு இருந்த டாக்டர் அந்த ரிப்போர்ட்டை வாங்கி படித்து பார்த்தார். ஹரி சொன்னபடியே அவளுடைய பிளட் குரூப் “ஓ நெகட்டிவ்” ஆக தான் இருந்தது. அதை அவர்கள் இருவரிடமும் சொன்ன டாக்டர், அங்கு வந்த நர்சிடம் அந்த வகை பிளட் ஸ்டாக் இருக்கிறதா என்று செக் செய்ய சொன்னார்.
வருண்: “தேவை இல்லை” என்று கணீர் குரலில் சொன்னான்.
ஏன் இவன் இப்படி சொல்கிறான் என்று அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக அவனை பார்த்தனர்.
வருண்: “பயப்படாதீங்க.. எனக்கும் சேம் பிளட் குரூப் தான். நானே ஆராதனாக்கு பிளட் தரேன்” என்றான்.
டாக்டர்: “ஓகே சார் சீக்கிரம் ஆ பிளட் கிடைச்சுட்டாலே அந்த பொண்ணு 90% சரி ஆயிடுவாங்க.” என்றவர், அங்கு இருந்த நர்ஸை பார்த்து வருணை கூடடி சென்று ரத்தம் எடுக்க சொன்னார்.
வருண் அங்கே வந்த நர்ஸ் உடன் சென்று ஆராதனாவிற்கு இரத்தம் கொடுத்து விட்டு வந்தான். வருணின் ரத்தம் ஆராதனாவின் உடலில் ஏற்றப்பட்டது. ரத்தம் கொடுத்து விட்டு சோர்வாக வந்து ஹரியின் அருகே அமர்ந்தான் வருண்.
ஹரி: “தேங்க்ஸ் வருண்” என்று மனதார சொன்னான்.
வருண்: “இத நான் உனக்காக மட்டும் இல்ல ஆராதனாகாகவும் தான் பண்ணேன். எனக்கு பிராத்தனா வேற ஆராதனா வேற இல்ல.” என்று அழுத்தி சொன்னான்.
ஹரி: “நான் அவள இங்க அட்மிட் பண்ணும்போதே உனக்கு விஷயம் தெரிஞ்சு கண்டிப்பா நீ இங்க வருவன்னு எனக்கு தெரியும். ஆனா அவ மேல கோவப்படுவன்னு நினைச்சேன். ஆனா நீயே அவளுக்கு பிளட் குடுப்பன்னு நான் எதிர்பாக்கல.” என்று நம்ப முடியாமல் சொல்ல,
வருண்: “அவ மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. அவ அந்த குடும்பத்தில பிறந்தது அவளோட தப்பு கிடையாது. அவ தப்பானவ இல்லை -ன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஆராதனாவுக்கு பனிஷ்மென்ட் கொடுத்துட்டு இருக்க. ஒரு வேளை உன் லைஃப்ல ஆராதனா உனக்கு வேணும்ன்னு நீ முடிவு எடுத்தா நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். உனக்கு அவ எவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு தெரியும். நீ உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு அவளையும் கஷ்டப்படுத்துற. யோசிச்சு முடிவெடு.” என்று ஒரு அண்ணனாக மட்டும் இல்லாமல் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தன் தம்பியிடம் பேசினான்.
ஹரி “புரியுது. இப்ப முதல்ல அவளுக்கு சரி ஆகட்டும். அப்புறம் நான் இதை பத்தி யோசிச்சு பாக்கிறேன்.” என்று சொல்ல,
வருண்: “ம்ம். டோன்ட் வரி அவளுக்கு ஒன்னும் ஆகாது.” என்று ஆறுதலாக சொல்ல, “ம்ம்ம்.” என்றான் ஹரி.
-நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)