அத்தியாயம் 180: ரித்திகா குற்றமற்றவள் (பார்ட் 1)
வருணின் அறையில் இருந்து கோபமாக வெளியே வந்து கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்த விஷ்ணுவும் ஷாலினியும், அதிர்ச்சியான குரலில் “என்ன அக்கா ஆச்சு..??” என்று கேட்டனர். அவர்களை தீர்க்கமான பார்வை பார்த்த ரித்திகா, “இதுக்கு மேல நம்ப இங்க இருக்கிறது வேஸ்ட். வாங்க போலாம்.” என்றவள், அவர்களையும் திரும்பி பார்க்காமல் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள். “அக்கா நில்லுங்க.. தனியா போகாதீங்க நானும் வரேன்.” என்று சொன்ன ஷாலினி ரித்திகாவின் பின்னே ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டு இருந்தாள்.
வருண் அப்படி ரித்திகாவிடம் என்ன சொல்லி அவளை கோபப்படுத்தி இருப்பான் என்று நினைத்து குழம்பிய விஷ்ணு, அதை நேரடியாக தன்னுடைய அண்ணனிடமே கேட்டு விடலாம் என்று நினைத்து அவனுடைய அறைக்குள் சென்றான். முதல்முறையாக தன்னுடைய அண்ணன் வருணை கோபமாக பார்த்த விஷ்ணு, “என்ன அண்ணா ஆச்சு.. நீங்க அவங்க கிட்ட எதுவும் கோவமா பேசிட்டிங்களா..??? அப்போ நீங்க அந்த நியூஸ உண்மைன்னு நம்புறீங்களாளா..??? உங்களுக்கு கொஞ்சம் கூட உங்க வைஃபா வர்றவங்க மேல நம்பிக்கையே இல்லையா..???” என்று எரிச்சலான குரலில் கேட்டான்.
வருண் “நீ யார்கிட்ட இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா விஷ்ணு..?? நீ அவ்ளோ வளந்துட்டியா..??? எப்ப இருந்து என்கிட்டயே இப்படி எல்லாம் பேச உனக்கு தைரியம் வந்துச்சு…???” என்று கோபமாக கேட்டான். 😕
இதே வேறொரு நாளாக இருந்தால் கண்டிப்பாக வருண் தன்னிடம் இப்படி கோபமாக பேசுவதற்கு அவன் பயந்து வருணை தவிர்த்து விட்டு வேறு எங்கேயாவது சென்றிருப்பான். ஆனால் இப்போது அவனால் அப்படி செல்ல முடியவில்லை. தன்னுடைய அக்காவிற்காக தான்தான் பேச வேண்டும் என்று அவனுடைய மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. அதனால் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வருனிடம் பேச தொடங்கினான் விஷ்ணு.
விஷ்ணு: “சாரி அண்ணா உங்கள எதிர்த்து பேசணும்ன்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல. எனக்கு ரித்திகா அக்காவை இப்படி பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்கள நம்புங்க அண்ணா ப்ளீஸ். அவங்க அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்ல. அவங்களுக்காக தான் நான் உங்ககிட்ட கொஞ்சம் கோவமா பேசிட்டேன் சாரி.” என்று தன்னுடைய முகத்தை கீழே தொங்க போட்டு கொண்டு சொன்னான்.
வருண்: ஏற்கனவே எரிச்சலில் இருந்தவனுக்கு இப்போது விஷ்ணு பேசுவதை கேட்டு இன்னும் கடுப்பாகி, “இனாஃப் விஷ்ணு. நான் உன்கிட்ட அவளை பத்தி பேசுறதுக்கு ரெடியா இல்ல. இங்க இருந்து வெளியில போ.” என்றவன், அவனுடைய முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் வேறு புறமாக திரும்பிக் நின்று கொண்டான்.
இதற்கு மேல் தான் என்ன பேசியும் தன்னுடைய அண்ணனின் மனதை மாற்றி விட முடியாது என்று அறிந்து வைத்து இருந்த விஷ்ணு, குறைந்தபட்சம் அவனுடைய மன நிலையையாவது இன்னும் கெடுக்காமல் இருக்கலாம் என்று நினைத்து அங்கு இருந்து சென்று விட்டான். விஷ்ணு அங்கு இருந்து சென்ற பின் வருண் ரித்திகாவை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தான். இப்போது விஷ்ணுவும் அவளுக்கு சப்போர்ட் செய்வதாலும், ரித்திகா அவனிடம் பேசிவிட்டு சென்றதை அவன் நினைத்துப் பார்த்ததாலும், ஒரு வேளை ரித்திகா வின் மீது உண்மையாகவே தவறு இருக்காது போல என்று அவன் யோசிக்க தொடங்கி இருந்தான்.
அதனால் க்ரிஷாவின் அறைக்கு சென்ற வருண், ரித்திகாவின் மொபைல் போனை அவளிடம் கொடுத்து; “இதுல ஒரிஜினல் வீடியோ இருக்குன்னு சொல்லி அவ குடுத்துட்டு போனா. இதுல எது உண்மைன்னு நீயே செக் பண்ணி சொல்லு.” என்றான். ரித்திகாவின் மொபைல் போன் ஐ பெற்றுக் கொண்ட க்ரிஷா, தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள். அதில் இருந்த வீடியோவையும் இணையத்தில் வெளியாகி இருந்த வீடியோவையும் ஒப்பிட்டு பார்த்த க்ரிஷாவிற்கு, இணையத்தில் வெளியான வீடியோ போலியானது என்று கண்டுபிடிப்பதற்கு வெகு நேரம் தேவைப்படவில்லை. அது மட்டும் இன்றி ரித்திகாவின் போன் தன்னிடம் இருந்ததால், அதை ஈசியாக ஹேக் செய்தவள், சில நிமிடங்களிலேயே ரித்திகாவின் மொத்த ஜாதகத்தையும் எடுத்து அதை வருனிடம் கொடுத்து விட்டாள். அதில் எங்கும் ரித்திகாவும் கௌத்தமிக்கும் இடையே ஏதோ ஒரு உறவு இருப்பதைப் போன்ற தடயமே இல்லை.
இதற்கிடையில் இணைய தளத்தில் வெளிவந்த போட்டோக்களை ஆய்வு செய்து கொண்டு இருந்த சந்தோஷ், “இந்த போட்டோஸ்சும் ஃப்பேக் தான் சார். யாரோ ரித்திகா விற்கும் உங்களுக்கும் கல்யாணம் நடக்க கூடாதுன்றத்துகாக தான் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு நினைக்கிறேன். அந்த போட்டோல இருக்கிறது ரித்திகா இல்ல. இந்த போட்டோல நிறைய லேயர்ஸ் இருக்கு.” என்றவன், அதில் இருந்தவற்றை வருணிற்கு புரியும்படி தெளிவாக தன் முன்னே இருந்த சிஸ்டத்தை வருணின் பக்கம் திருப்பி, அவனிடம் தெளிவாக சொன்னான்.
அவை அனைத்தையும் பார்த்த வருண் இது அனைத்தும் உண்மை தானா என்று தெரிந்து கொள்வதற்காக க்ரிஷாவை திரும்பிப் பார்த்தான். அதை புரிந்து கொண்ட க்ரிஷா, ஆமாம் உண்மை தான் என்பது போல தன்னுடைய தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள். இப்போது தான் ரித்திகா பேசி விட்டு சென்ற ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு உண்மை என்று வருணின் மூளைக்கு உரைக்க, இப்போது அவனை நினைத்தால் அவனுக்கே அசிங்கமாக இருந்தது. அதனால் அவசரப்பட்டு விட்டோமே என்று நினைத்து வருத்தப்பட்ட வருண், க்ரிஷாவிடம் அந்த பிரச்சனையை சால்வ் செய்யும் பொறுப்பை ஒப்படைத்தவன், ரித்திகாவை குற்றமற்றவள் என்று இந்த உலகத்திற்கே தெரிய படுத்திடுமாறு அவளிடம் சொல்லிவிட்டு அவளுடைய அறையில் இருந்து வெளியே சென்றான்.
அவனுடைய மனசாட்சி இப்போதே சென்று நீ ரித்திகாவிடம் மன்னிப்பு கேள் என்று சொன்னாலும் அதை அவனுடைய ஈகோ செய்யவிடவில்லை. இதற்கு இடையில் செண்பகத்திற்கும் மிக நெருக்கமாக இருந்தவர்களிடம் இருந்து இந்த விஷயத்தை பற்றி கேட்பதற்காக கால் வந்த வண்ணம் இருந்தது. செண்பகத்திற்கு ரித்திகாவின் மீது பரிபூரணமான நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் அனைவரிடத்திலும், “என் மருமக ஒண்ணும் தப்பான ஆள் இல்லைங்க. எங்களுக்கு எதிரிக்கு ஒன்னும் பஞ்சமில்ல. அதனால எவனோ இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு தான் இந்த வேலையை பாத்து இருக்கான். இதுல என்ன தப்பு நடந்து இருக்குன்றத என் பையன் வருண் கண்டுபிடிச்சு சரி பண்ணுவான். அதையும் நீங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க.” என்று சலிக்காமல் அனைவரிடமும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
வருணின் அலுவலகத்தில்…
இந்த பிரச்சனையில் கௌத்தம் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவனை அழைத்து முதலில் விசாரிக்க வேண்டும் என்று நினைத்த வருண் சிவாவை அழைத்து, “போய் உன் பிரண்டா இங்க கூட்டிட்டு வா.” என்று கடுமையான குரலில் சொன்னான். வருணிற்கு இருக்கும் கோவத்தில் அவன் கௌதமை எதையாவது செய்து விடுவானோ என்று நினைத்து பயந்தாலும், சிவாவிற்கு அவனை இங்கே அழைத்து வருவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. அதனால் “ஓகே சார்” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்த கிளம்பிய சிவா, சில நிமிடங்களிலேயே கௌத்தமை அழைத்து கொண்டு வருணின் ஆபீசுக்கு வந்தான்.
வரும் வழியில் எத்தனையோ முறை கௌத்தமிடம் சிவா, “டேய் உண்மைய சொல்லு… இந்த பிரச்சினையில நீ எதையாவது வேலைய பாத்து வச்சிருக்கியா…??? அட்லீஸ்ட் என்கிட்டயாவது உண்மைய சொல்லு டா.. நீ இப்ப பொய் சொல்லிட்டு அப்புறமா அதை அவர் கண்டுபிடிச்சா, நீ உயிரோடவே இருக்க மாட்ட.
நீ அந்த பொண்ணு மேல இருக்கிற ஆசையில தெரியாம ஏதாவது தப்பு பண்ணி இருந்தா கூட அவர் கைல.. கால்ல.. விழுந்து சாரி கேட்டுரு. நீயா உண்மைய ஒத்துக்கிட்டு அவர்கிட்ட சாரி கேட்டா, அவர் உன்ன மன்னிக்க ஒரு சான்ஸ் இருக்கு.” என்று சொல்லி கொண்டே இருந்தான் சிவா. ஆனால் சிவாவை அலட்சியமாக பார்த்த கௌத்தம், “நீ எத்தனை தடவை எப்படி கேட்டாலும் சரி. இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. நான் அந்த வீடியோவை அந்த காம்பெடிஷன கண்டக்ட் பண்ணவங்களுக்கு கூட தான் நான் சென்ட் பண்ணிி இருந்தேன். அவங்க சைடுல இருந்து கூட அது லீக் ஆகி இருக்கலாம்ல்ல…!! இப்ப நீங்க என்ன வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது..???” என்று திமிராக கேட்டான்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)