அத்தியாயம் 179: ரித்திகாவை அடித்த வருண் (பார்ட் 2)
வருணின் அலுவலகத்தில்…
வெகு நேரமாக கம்ப்யூட்டரில் எதையோ செய்து கொண்டு இருந்த க்ரிஷா, அவ்வப்போது பிராங்க்ளினையும் சந்தோஷையும் பார்த்து அவர்களுக்கான இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டு இருந்தாள். வருண் அமைதியாக எதையோ சிந்தித்த படி அவர்களை பார்த்து அமர்ந்து இருந்தான். சில நிமிடங்களில் வருனை பார்த்த க்ரிஷா, “டன் ப்ரோ. இது வரைக்கும் வந்த எல்லா போஸ்டையும் டெலிட் பண்ணிட்டேன். இதுக்கு மேலயும் எதுவும் வராது. அந்த மாதிரி ப்ரோக்ராம் பண்ணிட்டேன். பட் ப்ரோ ஐ ஹவ் டூ சே சம்திங்.” என்று தயக்கமான குரலில் சொன்னாள்.
வருண்: “ம்ம்ம்… சொல்லு மா.” என்று சலிப்பான குரலில் கேட்டான்.
க்ரிஷா: “நான் அந்த வீடியோ அண்ட் போட்டோவ ஃபுல்லா இன்னும் அனலைஸ் பண்ணல. அதுக்கு டைம் இல்ல. பட் அந்த வீடியோல ஏதோ தப்பு இருக்கு. அது உண்மையா இருக்கும்னு எனக்கு தோணல. ஃப்பேக் ஆ இருக்கும்னு எனக்கு தோணல. எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கிடைச்சா, நான் கிளியரா உங்களுக்கு என்னனு சொல்லிடுவேன். அதுவரைக்கும் நீங்க எந்த டிசிஷனுக்கும் வராதீங்க.” என்று தங்கி தயங்கி சொன்னாள்.
இதை க்ரிஷாவைத் தவிர வேறு யாராவது சொல்லி இருந்தால், அவர்கள் மீது வருண் கண்டிப்பாக கோபப்பட்டு இருப்பான். ஆனால் இதை சொல்லியது அவள் என்பதால் அவள் மீது இருந்த மரியாதையில் அமைதியான குரலில், “ஓகே மா.” என்று சொன்னவன் அவர்களுடைய அலுவலக அறையில் இருந்து கிளம்பி தன்னுடைய கேபினுக்கு சென்று விட்டான். இந்த விஷயத்தில் ரித்திகாவை சம்பந்தப்பட்டு இருப்பதால், அவளை குற்றமற்றவள் என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு மூச்சாக கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ்.
அவன் ரித்திகாவை காதலித்து இருத்ததால் அவனுக்கு அவள் மீது மரியாதை இருக்கிறது என்பதை தாண்டி அவன் அவளை அருகில் இருந்து பார்த்திருக்கிறான் என்பதால் அவள் மீது அவனுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் இருந்தது. அதனால் அவளை எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவன், முழுமூச்சாக வேலை செய்து கொண்டு இருந்தான்.
சில நிமிடங்களுக்கு பின்…
தன்னுடைய காரில் ரித்திகா மற்றும் ஷாலினியை கூட்டி கொண்டு நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்திற்கு வந்தான் விஷ்ணு. விஷ்ணுவுடன் ரித்திகா , ஷாலினியும், வந்திருந்ததால் எந்த கேள்வியும் கேட்காமல் ரிசப்ஷனில் இருந்தவர்கள் அவர்களை வருனை பார்ப்பதற்காக அனுமதித்தனர்.
வருணின் அறையில்…
ரித்திகாவால் வந்த இந்த புதிய பிரச்சனை வருணிற்கு ஒரே தலைவலியாக இருந்தது. அதனால் தன்னுடைய தலையில் கையை வைத்து கொண்டு அதைப்பற்றி யோசித்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய அறைக்குள் வந்த சிவா, ”சார் உங்கள பாக்குறதுக்கு ரித்திகாவையும் , ஷாலினியையும், விஷ்ணு சார் கூட்டிட்டு வந்திருக்காரு. அவங்க உங்கள பாக்கணும்னு சொல்றாங்க. உள்ள அலோ பண்ணட்டுமா..???” என்று அமைதியான குரலில் கேட்டான்.
எப்படியும் விஷ்ணுவும் ஷாலினியும் ரித்திகாவிக்கு சப்போர்ட் செய்து தன்னிடம் பேசுவதற்காக தான் வந்து இருக்கிறார்கள் என்று நினைத்த வருண், அவர்கள் தன்னிடம் பேசும் சமாதானங்களை எல்லாம் அவன் கேட்க விரும்பவில்லை. இருப்பினும் தனக்கு ஏன் ரித்திகா இப்படி ஒரு துரோகத்தை செய்து இருக்கிறாள் என்று அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த வருண், “ஷாலினியும் விஷ்ணுவும் வெளியவே இருக்கட்டும். நான் ரித்திகா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். அவளை மட்டும் உள்ள அனுப்பு.” என்று கடுமையான குரலில் சொன்னான். 😒 😡
சிவா: “சார் நான் இப்படி சொல்றேன்னு கோச்சிக்காதீங்க.. க்ரிஷா மேடம் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு சொன்னாங்கல்ல அதுக்குள்ள நீங்க இப்ப அந்த பொண்ணு கூட பேசியே ஆகணுமா..??” என்று தயங்கி தயங்கி கேட்டான்.
வருண்: அவனைப் பார்த்து முறைத்தவன், “போய் நான் சொன்னத மட்டும் செய். எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நீ இன்னும் வளரல.” என்று கடுமையான குரலில் சொன்னான். 😒 🤨
சிவா: “ஓகே சார்.” என்று வருத்தமான குரலில் சொன்னவன் அங்கு இருந்து வெளியே சென்று ரித்திகாவை மட்டும் உள்ளே அனுப்பினான்.
உள்ளே வந்த ரித்திகாவின் கண்களில் முதலில் விழுந்தது வருணின் கோபமான முகமும், சுட்டெரிக்கும் பார்வையும் தான். அதனைக் கண்டு பயத்தில் நடுங்கிப் போன ரித்திகா தயங்கி தயங்கி வருணின் அருகே வந்து நின்றாள். அவளுக்குள்ளே பயம் தயக்கம் என எத்தனை இருந்தாலும் தன்னை வருண் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது அதனால் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வருனை பார்த்த ரித்திகா, “ஐ கேன் எக்ஸ்பிளைன் எவ்ரிதிங். ப்ளீஸ் டிரஸ்ட் மீ.” என்று அமைதியான குரலில் தித்.. திக்.. இதயத்துடன் அவனைப் பார்த்து சொன்னாள். ❤️
கோபமாக ரித்திகாவின் அருகே வந்த வருண் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட முழுமையாக கேட்காமல், பளார் என்று அவளுடைய கன்னத்தில் அறைந்தான். பெரிய இடியாக தன்னுடைய கன்னத்தில் வந்து இறங்கிய அடியால் கலங்கிப்போன ரித்திகா, நிலை தடுமாறி விட்டு பின் சரியாக நின்றவள் கலங்கிய கண்களுடன் வருனை கோபமாக பார்த்தாள். 😒 😤
வருண்: அவளை எரித்து விடும் பார்வை பார்த்தவன், “நான் உன்கிட்ட என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..??? நீ உனக்கு புடிச்ச மாதிரி எப்படி வேணாலும் இரு. உன்னோட லைஃப்ல என்ன நீ டெசிஷன் எடுத்தாலும், புதுசா எதையாவது பண்ணாலும், அதனால நாராயணன் குடும்பத்தோட பெயருக்கு எந்த பிரச்சனையும் வராத வரைக்கும் நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்று உன்கிட்ட சொன்னனா இல்லையா..??? அப்புறம் ஏன் டி இப்படி பண்ண..???
நீ சின்னதா எதாவது ஒரு மிஸ்டேக் பண்ணினாலும் அதோட இம்பாக்ட் எப்படி இருக்கும்ன்னு உனக்கு தெரியுமா…??? அந்த நியூஸ் வந்ததில இருந்து அத சரி பண்றதுக்கு எத்தனை பேர் மண்டையை பிச்சுக்கிட்டு வேலை பார்த்தாங்கன்னு உனக்கு தெரியுமா..??? உனக்கு அப்படி அவன் தான் வேணும்னு நீ போனாலும் அதை இந்த மாதிரி யாருக்கும் ப்ரூப் கிடைக்கிற மாதிரி இல்லாம சேஃபா பண்ணி இருக்கலாம்ல்ல….!!! இப்ப உன்னால எனக்கு எவ்ளோ ப்ராப்ளம் வந்திருக்குன்னு உனக்கு தெரியுமா..???” என்று அவன் பாட்டிற்கு தன்னுடைய வாய்க்கு வந்தபடி அவளை பார்த்து பேசிக் கொண்டு இருந்தான். 😒 😕 😡 🔥
அவன் சொல்வதை எல்லாம் கேட்க முடியாமல் பொங்கி எழுந்த ரித்திகா தன்னுடைய ஒரு கையை அவன் முன்னே போதும் என்பது போல் வேகமாக நீட்டியவள், “இனாஃப். வாய் இருக்கின்றதுக்காக உங்க இஷ்டத்துக்கு எதை வேணாலும் பேசாதீங்க மிஸ்டர் வருண். ஒரு வேளை என் மேல தப்பு இருந்தா நான் ஓடி ஒளிஞ்சிருப்பேனே தவிர இப்படி உங்கள் முன்னாடி தைரியமா வந்து நிக்க மாட்டேன்.
நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் சீப்பான ஆள் கிடையாது. அந்த மாதிரியான ஒரு காரியத்தை செத்தாலும் என்னால செய்ய முடியாது. அந்த கௌத்தம் தான் என்ன லவ் பண்றேன்னு என் பின்னாடி சுத்திட்டு இருந்தானே தவிர, ஒரு நாளும் நான் அவனை அந்த மாதிரி நினைச்சு கூட பாத்ததில்லை. அதுல இருக்கிற வீடியோல வர்ற சீன்ஸ் பாதி உண்மை பாதி பொய்.
ஒரு கப்புல் டான்ஸ் காம்பெடிஷன் -காக நாங்க செலக்சனுக்கு அனுப்புவதற்காக எடுத்த வீடியோ தான் அது. அதுவும் நாங்க அந்த வீடியோவை ஷூட் பண்ணும்போது கூட நானும், கௌத்தமும் ஒன்னு தனியா அந்த ஸ்டூடியோவில இல்ல. அன்னைக்கு ஷாலினியும் எங்க கூட தான் இருந்தா. அண்ட் மோர் ஓவர் அந்த வீடியோவ ரெக்கார்ட் பண்ணதே ஷாலினி தான்.
அதுல இருக்கிற போட்டோவை பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் தெரியும் அதுல இருக்கிறது நான் இல்ல. என் பேர கெடுக்கனும்னே யாரோ இந்த மாதிரி வேணும்னே செஞ்சிருக்காங்க. நீங்க தான் ரொம்ப பெரிய ஆள் ஆச்சே… நீங்க நினைச்சா எதை வேணாலும் உங்களால செய்ய முடியும்ல்ல.. அப்போ அத யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சு அவங்களுக்கு போய் பனிஷ்மென்ட் கொடுங்க. அத விட்டுட்டு உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணாம என்ன வந்து அடிக்கிற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க.” என்று கோபமாக சொன்னவள், தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்த அவளுடைய மொபைல் போனை எடுத்து வருணின் முன்னே நீட்டியவள், “இதுல கூட அந்த ஒரிஜினல் வீடியோ இருக்கு. முடிஞ்சா இத வச்சு அது ஃபேக்ன்னு கண்டுபிடிங்க. இத சொல்றதுக்கு தான் நான் இங்கே வந்தேன். நீங்க என்ன நம்புவீங்கன்னு நினைச்சேன். அது என்னோட தப்பு தான். தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்.” என்றவள், வருனை திரும்பியும் பார்க்காமல் அங்கு இருந்து சென்று விட்டாள்.
வருணின் அறையில் இருந்து கோபமாக வெளியே வந்து கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்த விஷ்ணுவும் ஷாலினியும், அதிர்ச்சியான குரலில் “என்ன அக்கா ஆச்சு..??” என்று கேட்டனர். அவர்களை தீர்க்கமான பார்வை பார்த்த ரித்திகா, “இதுக்கு மேல நம்ப இங்க இருக்கிறது வேஸ்ட். வாங்க போலாம்.” என்றவள், அவர்களையும் திரும்பி பார்க்காமல் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள். “அக்கா நில்லுங்க.. தனியா போகாதீங்க நானும் வரேன்.” என்று சொன்ன ஷாலினி ரித்திகாவின் பின்னே ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டு இருந்தாள்.
வருண் அப்படி ரித்திகா விடம் என்ன சொல்லி அவளை கோபப்படுத்தி இருப்பான் என்று நினைத்து குழம்பிய விஷ்ணு, அதை நேரடியாக தன்னுடைய அண்ணனிடமே கேட்டு விடலாம் என்று நினைத்து அவனுடைய அறைக்குள் சென்றான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)