அத்தியாயம் 178: ரித்திகாவை அடித்த வருண் (பார்ட் 1)
ரித்திகா வீட்டில்…
ரித்திகாவை பற்றி ஊடகங்களில் பரவி வரும் தவறான செய்தியால், அவளுடைய குடும்பமே ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கி இருந்தது. ஷாலினியும் அங்கே தான் இருந்தாள். அதனால் ரித்திகாவையும் அவளுடைய குடும்பத்தையும் எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தவள், விஷ்ணுவிற்கு கால் செய்து அவனை அங்கே வர சொன்னாள். விஷ்ணு அங்கே வந்தவுடன் அவன் அருகே சென்ற ரித்திகா கண்ணீர் நிறைந்த கண்களுடன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவனுக்கு சொல்லி புரிய வைக்க முயன்றாள். 😭 😭 😭
ஷாலினியை போல் விஷ்ணுவிற்கும் ரித்திகா வின் மீது அதீத நம்பிக்கை இருந்தது. அதனால் இதை அனைத்தையும் தன்னுடைய அண்ணா வருண் நாராயணன் விரைவில் சரி செய்து விடுவார் என்று சொல்லி ரித்திகாவை தேற்ற முயன்றான் விஷ்ணு. இதற்கிடையில் ரித்திகா மற்றும் அவளுடைய பெற்றோர்களின் தொலைபேசிகள் தொடர்ந்து அழைப்புகளால் அலறிக் கொண்டே இருந்தது. அதனால் மனம் உடைந்து போனவர்கள், தங்கள் அனைவருடைய மொபைல் ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர்.
வருணின் அலுவலகத்தில்…
வருண் ஒரு ப்ராஜெக்ட் சம்பந்தமாக வெளியே சென்று ஒரு மீட்டிங்கை அட்டென்ட் செய்துவிட்டு இப்போது தான் தன்னுடைய ஆபீஸ்க்குள் நுழைந்தான். அவன் உள்ளே வந்த உடனேயே வேகமாக அவனுடைய அறைக்கு வந்த பி. ஆர். டீம் இன் ஹெட், இணையத்தில் ரித்திகாவை பற்றி பரவி வரும் செய்தியை பற்றி அவனிடம் சொன்னவன், “நாங்க இத பத்தி முதல்ல உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு தான் சார் நினைச்சோம். ஆனா எங்களால உங்கள ரீச் பண்ணவே முடியல. சிவா சாரோட மொபைல் கூட நாட் ரீச்சபிள் தான் இருந்துச்சு. எப்படி இருந்தாலும் இது நெகட்டிவ் நியூஸ் தானே நாங்க அதை இன்டர்நெட்ல இருந்து ரிமூவ் பண்ண ட்ரை பண்ணுனோம்.. ஆனா எங்களால பண்ண முடியல சார்.
தென் க்ரிஷா மேடம் இத அவங்களே ஹாண்டில் பண்றதா சொல்லிட்டு அவங்களோட அசிஸ்டன்ட் அண்ட் பிராங்கிளிங் சார் கூட சேர்ந்து ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க.” என்று அவசரமான குரலில் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு கடுப்பான வருண், “இவ்ளோ நடந்து இருக்கு சும்மா சைல்டிச் ஆ என்ன ரீச் பண்ண முடியலன்னு ரீசன் சொல்லிட்டு இருக்கீங்க..??? இப்படி சொல்றதுக்கு உங்களுக்கே கேவலமா இல்லையா..??? இந்த மாதிரி திங்ஸ் எல்லாத்தையும் சால்வ் பண்றதுக்கு தானே நீங்க இருக்கீங்க..!!! இத கூட உங்களால சால்வ் பண்ண முடியலன்னா பப்ளிக் ரிலேஷன் டீம் ஏதுக்கு..??” என்று சத்தமான குரலில் கேட்டவன் தன் முன்னே இருந்த டேபிளை தன்னுடைய இரு கைகளாலும் ஓங்கி அடித்தான். அவன் அடித்ததில் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தன. 😡 😡 🔥
அவனுடைய செய்கையால் பயந்து போன அந்த ஆபீஸ் அட்மின், “சாரி சார். எங்க மேலையும் மிஸ்டேக் இருக்கு. இதை எப்படியாவது சரி பண்ண ட்ரை பண்றோம்.” என்று சொன்னவன் விட்டால் போதும் என்று அங்கு இருந்து சென்று விட்டான். அந்த ஆபீஸ் அட்மின் அங்கு இருந்து சென்றவுடன் சிவாவை அழைத்த வருண், க்ரிஷாவை வைத்து அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் உண்மை தன்மையை பற்றி கண்டறிந்து வருமாறு சொல்லி அனுப்பினான்.
சிவாவும் இப்போது அங்கு இருந்து சென்றவுடன் வருண் மட்டும் தான் அங்கே தனியாக இருந்தான். அவனுக்கு இப்போது ரித்திகாவின் மீது கோபம் கோபமாக வந்தது. 😡 🔥 அவனால் இதை அவள் செய்து இருப்பாளா இல்லையா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் அவனுக்கு அவள் மீது இருந்த கோபம் அவள் கண்டிப்பாக அதை செய்து இருக்க கூடும் என்று அவனை நம்ப வைக்க போராடிக் கொண்டு இருந்தது.
அதனால் இறுதியில் வருண் கண்டிப்பாக ரித்திகா இந்த தவறை செய்து தான் இருப்பாள் என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இப்படியே ஒரு பக்கம் வருண் ரித்திகாவை பற்றி யோசித்துக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் க்ரிசாவின் குழு ரித்திகாவை பற்றிய செய்திகளை இணையத்தில் இருந்து நீக்குவதற்கான வேலையில் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர்.
ரித்திகாவின் வீட்டில்…
ரித்திகாவின் பெற்றோர்களும் ரித்திகா விஷ்ணுவுடன் இந்த செய்தியை நாராயணன் குடும்பத்தினர் உண்மை என்று நம்பிவிட்டால் என்ன செய்வது என்று விவாதித்து கொண்டு இருந்தனர். ரேவதிக்கும் சுதாகருக்கும் தன்னுடைய மகளின் வாழ்க்கை இந்த ஒரு செய்தியால் முழுமையாக அழிந்து போய்விடுமோ என்ற பயம் ஒரு பெற்றோர்களாக மிகவும் அதிகமாகவே இருந்தது. தன் மீது அபாண்டமாக இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்து விட்டதால் ரித்திகா, அதை ஏற்று கொள்ள முடியாமல் வேதனையில் தவித்து கொண்டு இருந்தாள். ஷாலினியும், விஷ்ணுவும், ரித்திகாவையும் அவளுடைய குடும்பத்தையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்தனர்.
அப்போது ஷாலினிக்கு நாம் இதைப்பற்றிி சொல்லி மற்றவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டு இருப்பதை விட, ரித்திகாவை குற்றமற்றவள் என்று அனைவருக்கும் நம்ம நிரூபித்து விட்டு ரித்திகாவை இந்த உலகில் மீண்டும் கம்பீரமாக நிற்க வைப்பது மட்டும் தான் இதற்கு ஒரே வழி என்று அவளுக்கு தோன்ற, ரித்திகாவை தீர்க்கமான பார்வை பார்த்த ஷாலினி, “அக்கா நீங்க ஒரு தப்பும் பண்ணாதப்ப, நீங்க இத நினைச்சு பயப்படனும்ற அவசியமும் இல்ல, அழுகணும்ன்ற அவசியமும் இல்ல. நம்ம கிட்ட தான் ஒரிஜினல் வீடியோ இருக்குல்ல..!!! அண்ட் அந்த வீடியோவை எடுத்ததே நான் தான். அதுல எக்ஸ்ட்ரா ஆட் பண்ணி இருக்கிறது எல்லாம் அங்க அப்படி நடக்கவே இல்லைன்றதுக்கு லைவ் ப்ரூப் நான் இருக்கேன்.
அண்ட் நம்ம ரெண்டு பேரும் 24 மணி நேரமும் ஒன்னா தான் இருக்கோம். அப்புறம் எனக்கு தெரியாம எப்படி இப்படி ஒன்னு நடந்து இருக்க முடியும்..??? உங்க மேல யார் சந்தேகப்பட்டாலும் சரி, எங்க அக்கா அப்படி இல்லைன்னு நான் உங்க பக்கம் நின்னு பேசுவேன் அக்கா. நம்ப யாருக்கும் எந்த பதிலும் சொல்லாம இப்படியே அமைதியா இருந்துட்டா, இது உண்மையின்னு எல்லாரும் முடிவே பண்ணிடுவாங்க.
நம்ப தான் எல்லாருக்கும் உண்மை என்னன்னு சொல்லணும். சொல்றதோட இல்லாம ப்ரூவ் பண்ணனும். நீங்க கிளம்புங்க. நாராயணன் குரூப்ஸ் ஆபீஸ்க்கு போவோம். அங்க போய் வருண் மாமாவ பாக்கலாம். நானும், விஷ்ணுவும், அவர்கிட்ட உங்களுக்காக பேசுறோம். நம்ம சொன்னா அவர் புரிஞ்சுபாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. எதா இருந்தாலும் பாத்துக்கலாம் வாங்க.. நாங்க உங்க கூட இருக்கோம்.” என்று உறுதியான குரலில் சொன்ன ஷாலினி, ரித்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
ஷாலினி சொன்னதை கேட்ட ரித்திகா, அவள் சொன்னதைப் போல் செய்யலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் யோசித்துக் கொண்டு இருந்தாள். இவள் இந்த பிரச்சனையை சரி செய்கிறேன் என்று எதையாவது செய்ய போய் இறுதியில் இந்த பிரச்சனை இன்னும் பெரியதாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் ரித்திகாவின் பெற்றோர்களுக்கு இருந்தது.
ஆனால் விஷ்ணுவிற்கு ஷாலினி சொல்வது தான் சரி என்று பட்டது. அதனால் அவர்களைப் பார்த்தவன், “ஷாலினி சொல்றது கரெக்ட் தான் அக்கா. நம்ப வருண் அண்ணா கிட்ட பேசுறதுக்கு நமக்கு என்ன பயம்..??? அவர் எவ்ளோ விஷயத்தை கடந்து வந்து இருப்பாரு… எதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு அவருக்கு நல்லா தெரியும். நீங்க வாங்க நம்ம பாத்துக்கலாம். நானும் ஷாலினியும் உங்க கூட வரோம்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
ஷாலினியும், விஷ்ணுவும் பேசியதை கேட்டு சற்று தெளிவானதை போல் உணர்ந்த ரித்திகா, “ஓகே போலாம். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். என்னால இந்த கெட்ட பேரோட எல்லாம் வாழ முடியாது.” என்று சொன்னவள், வருணை சென்று சந்திப்பதற்காக தயாரானாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)