Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 177

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 177

by Thenaruvi Tamil Novels
15 views

அத்தியாயம் 177: நிச்சயதார்த்தம் நடக்குமா? (பார்ட் 2)

ஏனென்றால் அவர்கள் அனைவரும், “நீயும் த கிரேட் பிசினஸ்மேன் வருண் நாராயணனும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமா..!!!” என்று அவளிடம் கேட்டனர். முதலில் அந்த கேள்வியால் அதிர்ந்து போன ரித்திகா பின்பு இது வருண் ஜோடித்த கதையாக தான் இருக்கும் என்று புரிந்துகொண்டவள், “ஆமா ஆமா நாங்களே இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. எங்களுக்கே தெரியாம திடீர்னு எங்களுக்குள்ள லவ் வந்துருச்சு. அதான் இப்ப கல்யாணம் பண்ணிக்க போறோம்.” என்று அவளும் வருண் சொன்ன பொய் கதையை ஆமோதித்தாள். 

ரேவதியும் சுதாகரும் பள்ளியில் வேலை பார்த்ததால் அவர்கள் வேலை பார்த்த பள்ளியில் படித்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானவர்களை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். அதனால் அவர்கள் அனைவரும் மாறி மாறி ரித்திகாவின் பெற்றோர்களுக்கு கால் செய்து இந்த விஷயம் உண்மையா என்று கேட்டு தெரிந்து கொண்டனர். ரித்திகா சொன்னது போல்  வருண் சொன்ன கதையை உண்மை தான் என்று ரித்திகாவின்  பெற்றோர்களும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய மனதில் இதே போல் உண்மையாக நடந்தால் நன்றாக இருக்கும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டனர்.

திடீரென்று இந்த உலகமே தன்னை கவனிக்கும் ஒரு ஆளாக தான் மாறிவிட்டதால், தன்னையே வேறு ஒரு ஆளாக உணர்ந்தாள் ரித்திகா . வருண் வெளியிட்ட செய்தியின் தாக்கம், உண்மையில் ரித்திகா எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அந்தச் செய்தி வந்த சில நொடிகளிலேயே மிஸஸ் வருண் நாராயணன் இவர் தான் என்ற பெயரில் பல ஆர்டிகல் இணையதளத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதில் அவர்கள் வருண் இணைத்தில் இருந்த போட்டோக்களை பதிவிட மறக்கவில்லை. அந்த போட்டோக்கள் எடுக்கப்பட்ட பின் இன்னும் ரித்திகாவை அவை அனைத்தையும் பார்த்திருக்கவில்லை என்பதால் இணையத்தில் தங்களைப் பற்றி வலம் வந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு புதிய செய்தியையும் தேடித்தேடி படித்துப் பார்த்தவள், அதில் இருந்து தங்களுடைய போட்டோவை பார்த்து ரசித்தாள். 😍 🥰

இதற்கு இடையில் ரித்திகாவின்  தோழிகள் முதல் ஷாலினி வரை அனைவரும் அவளை கலாய்த்து தள்ளி விட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் அனைவரையும் எப்படி ஃபேஸ் செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அதனால் தன்னுடைய அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்ட ரித்திகா , தன்னுடைய மொபைல் போனை சைலண்டில் போட்டுவிட்டு; அவர்களுடைய திருமணம் தொடர்பான செய்திகளை மட்டும் தேடித்தேடி படிக்க தொடங்கினாள். 

பிரவீன் அலுவலகத்தில்…

வருண் ரித்திகாவை  தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துவிட்டதை கண்டு  வில்லத்தனமாக புன்னகைத்தான் பிரவீன். 😂 😂 😂 இந்த ஒரு தருணத்திற்காக தான் அவன் இத்தனை நேரமாக காத்திருந்தான். இப்போது அதன் சமயம் வந்துவிட்டதால் தான் ஏற்கனவே பிளான் செய்தது போல கௌத்தமிற்கு கால்் செய்தவன், “இட்ஸ் அவர் டைம் கெளத்தம். கேட் ரெடி. இப்போ வருண் ரித்திகா ஓட மேரேஜ் எவ்வளவு ட்ரெண்டிங் -ல வருதோ, அத விட  அதிகமா நாம போடுறடற நியூஸ் ஆன்லைன்ல ஸ்பிரட் ஆகும். 

இந்த நியூஸ் வந்ததுக்கு அப்புறமா உனக்கு எல்லா பக்கத்துல இருந்தும் நிறைய பிரஷர் வரும். இது உண்மையா பொய்யான்னு கேட்டு மீடியாக்காரன்ல இருந்து வருண் வரைக்கும் எல்லாரும் உன்னை கொடையுவாங்க. ஆனா நீ உன்னோட டெசிஷன்ல ஸ்ட்ராங்கா இருக்கணும். போதாத குறைக்கு வருண் ரித்திகாவ லவ் மேரேஜ் பண்றேன்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கான். இப்ப மட்டும் அது அப்படி இல்லைன்னு நம்ம ப்ருவ் பண்ணிட்டா, ரெண்டு நாள்ல நடக்க இருக்கிற வருனோட நிச்சயதார்த்தம் அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாத்தையும் நம்ப நிறுத்திடலாம்.” என்று சொன்னவன், சத்தமாக சிரித்தான். 😂 😂 😂 😂

கௌத்தம்: “நானும் அவர் இப்படி அன்னோன்ஸ் பண்ணுவாருன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல தான். ஆனா நீங்க சொன்ன மாதிரி இப்போ அதுவும் நமக்கு நல்லது தான் சார். இப்போ ரித்திகாவோட உண்மையான லவ்வர் யாருன்னு தான் அடுத்த டிபேட் ஆகப்போகுது. இதுல இருந்து அவங்க என்ன ட்ரை பண்ணாலும் அவங்களால வெளிய வர முடியாது.” என்று சொன்னவன் அவனும் பிரவினை போல் வில்லத்தனமாக சிரித்தான். 😂😂 😂

இருப்பினும் அவனுடைய மனதில் தான் தன்னுடைய ரித்திகாவிற்கு போய் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் அவனுக்கு ரித்திகாவின் மீது இருக்கும் காதல் அவனுடைய குற்ற உணர்ச்சியை பெரிதாக வளர விடாமல் பார்த்துக் கொண்டது. அதனால் தயக்கமின்றி இந்த காரியத்தை செய்ய துணிந்து விட்டான் கௌத்தம்.

சில நிமிடங்களுக்கு பின்…

மீண்டும் ரித்திகாவை பற்றி இணையத்தில் ஒரு செய்தி ட்ரெண்டிங் ஆனது. ஒரு அனோனமஸ் அக்கவுண்டில் இருந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம், facebook என அனைத்து செயலிகளிலும் அந்த செய்தி காட்டுத்தியாக பரவியது. அந்தச் செய்திகளின் பெரும்பாலான தலைப்பு, “பிரபல தொழிலதிபருக்கு மனைவியாக போகிறவள்” இவருடைய கள்ள காதலி.” என்று போடப்பட்டு இருந்தது. 

அந்தச் செய்தியில்…

ரித்திகா தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் சக ஆசிரியரை காதலித்து பின் வருணை போன்ற பெரிய ஆளின் பழக்கம் கிடைத்ததால், அவனை கைவிட்டுவிட்டு இப்போது வருனை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், ரித்திகா தன்னை ஏமாற்றி விட்டதால் மன வருத்தத்தில் இருந்த அந்த ஆசிரியர் தங்களுக்கு இந்த ஆதாரங்களை அனுப்பி வைத்து விட்டு, இப்போது அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்போது அந்த பாவப்பட்ட ஆசிரியரின் நிலை என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. என்ற கேப்சன் -க்கு கீழே…

ரித்திகாவும் கௌத்தமும் அந்த டான்ஸ் காம்பெடிஷன்க்காக ப்ராக்டிஸ் செய்த வீடியோ அதில் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வீடியோ சாதாரணமாக இருக்கவில்லை. அதில் கௌத்தமின் முகம் மறைக்கப்பட்டு ரித்திகாவின் முகம் மட்டும் தெளிவாக தெரியும் படி இருந்தது. அது மட்டுமின்றி அன்று இவர்கள் ஆட, ஷாலினி ரெக்கார்ட் செய்த வீடியோ மட்டும அல்லாமல், அதனுடன் கிட்டத்தட்ட ரித்திகா சாயலுடன் பொருந்தி  போகும் ஒரு பெண்ணுடன் இணைந்து ஆபாச நடனம் ஆடிய கௌத்தம், அதில் இருப்பது ரித்திகா தான் என்பது போல சித்தரித்தான். 

இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் அனைத்துமே பிரவீனின் திட்டம் தான். முதலில் கௌத்தமிற்கு இதை செய்ய விருப்பம் இல்லை தான். இருப்பினும் ரித்திகாவும் தன்னுடைய மனதை கல்லாக்கிக் கொண்டு அதை செய்து முடித்து விட்டான் கௌத்தம். அந்த வீடியோ மட்டும் இன்றி கௌத்தம் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதைப் போல சில போட்டோக்களும் அந்த பதிவில் இணைக்கப்பட்டு இருந்தது. 

அதில் இருந்த கௌத்தமின் முகம் மறைக்கப்பட்டு இருக்க, அந்த போட்டோவில் உண்மையாக கௌத்தமுடன் இருந்த பெண்ணின் முகத்தை மாற்றி அதை ரித்திகாவின் முகமாக சித்தரித்து இருந்தான் பிரவீன். இப்போது அதில் போடப்பட்டு இருந்த வார்த்தைகள் அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை பார்க்கும் யாராக இருந்தாலும், ரித்திகா ஏதோ ஒரு அப்பாவியான ஏழை பையனை காதலித்து ஏமாற்றிவிட்டு இப்போது காதல் என்ற பெயரில் தன்னைவிட அதிக வயது வயது வித்தியாசத்தில் இருக்கும் ஒரு பணக்காரனை திருமணம் செய்த கொள்ளப் போகிறாள் என்று தான் தோன்றும். 

பிரவீன் நினைத்ததை போல் அவனால் பரப்பப்பட்ட இந்த செய்தி, இதற்கு முன் வருண் பதிவிட்ட செய்தியை விட வேகமாக உலகமெங்கும் பரவியது. இந்தச் செய்தியும் ரித்திகா வையும் அவளுடைய பெற்றோர்களையும் வந்தடைய தவறவில்லை. அந்தச் செய்தியை பார்த்த உடனே ரித்திகா தன்னுடைய தலையில் இடி இறங்கியது போல் சித்த பிரம்மை பிடித்தவள் போல அமைதியாக கண்ணீர்  நிறைந்த கண்களுடன் தரையில் அமர்ந்து விட்டாள். 😭 😭 😭 தன்னுடைய மகளை இந்த நிலைமையில் பார்த்த ரித்திகாவின் பெற்றோர்களுக்கு தங்கள் உயிர் பிரிவதற்கு முன்பே உயிர் போகும் வேதனையை அவர்கள் உணர்வதை போல் இருந்தது. 

ஏற்கனவே ஷாலினி ரித்திகாவின் வீட்டில் தான் இருந்தாள். இதுவரை அவர்களுடைய திருமண செய்தியை வைத்து ரித்திகாவை கிண்டல் செய்து கொண்டு இருந்தவள், இப்போது புதிதாக வந்த  அந்த செய்தியை பார்த்து அவளும் வாயடைத்துப் போய்விட்டாள். யார் என்ன சொன்னாலும் ஷாலினிக்கு ரித்திகாவின் மீது பரிபூரணமான நம்பிக்கை இருந்தது. ஆனால் தன்னுடைய நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு ரித்திகாவை இந்த பிரச்சனையில் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று ஷாலினிக்கு தெரியவில்லை.

கண்டிப்பாக இதைப் பற்றி வருனிடம் பேசும் தைரியம் அவளுக்கு இல்லை. அதனால் உடனே விஷ்ணுவிற்கு கால் செய்து அவனை ரித்திகாவின்  வீட்டிற்கு வர சொன்னவள், ரித்திகாவை சற்று தேற்ற எண்ணினாள். விஷ்ணுவாலும் ரித்திகா இப்படி எல்லாம் செய்வாள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் குறையாத நம்பிக்கையுடன் ரித்திகாவை பார்ப்பதற்காக அவசர அவசரமாக அவளுடைய வீட்டிற்கு வந்தான். ரித்திகாவை பார்த்தவுடன் வலி நிறைந்த குரலில் விஷ்ணு “அக்கா” என்று அழைக்க, பதட்டமாக எழுந்து கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவன் அருகே ஓடிச் சென்ற ரித்திகா, “ப்ளீஸ் நீ என்னை நம்பு. சத்தியமா நான் அப்படியெல்லாம் எதுவும் பண்ணல விஷ்ணு. இது பேக் நியூஸ். நாங்க டான்ஸ் ஆடினது உண்மை தான். ஆனா அப்படி எல்லாம் ஆடல. அத எப்படி சொல்லி நான் உனக்கு புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல. நான் எந்த தப்பும் பண்ணல.” என்று வலி நிறைந்த குரலில் சொன்ன ரித்திகா, கதறி அழ தொடங்கினாள். 😭 😭 😭

விஷ்ணு: அவளைப் பாவமாக பார்த்தவன், “ஐயோ அக்கா ப்ளீஸ்.. நீங்க எனக்கு அண்ணி ஆகுறது எல்லம அப்புறம். அதுக்கு முன்னாடி நீங்க என்னோட அக்கா. எனக்கு உங்கள பத்தி தெரியாதா..??? நான் எப்படி அக்கா இத எல்லாம் நம்புவேன்..?? இதுல ஏதோ பெருசா தப்பு நடந்திருக்கு. 

இதெல்லாம் அந்த பிரவின் ஓட வேலையா தான் இருக்கும். ப்ளீஸ் நீங்க இதை நினைச்சு கவலைப்படாதீங்க. வருண் அண்ணா எல்லாத்தையும் சரி பண்ணுவாரு. நாங்க உங்கள நம்புறோம். நாங்க உங்க பக்கம் எப்பவுமே இருப்போம்.” என்று ரித்திகாவின் கையை பிடித்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured