அத்தியாயம் 175: அழகிய குடும்ப புகைப்படம் (பார்ட் 2)
ரித்திகாவின் தயக்கத்தை புரிந்து கொண்ட செண்பகம், “என்ன மா பார்த்துட்டு நிக்கிற போய்் உட்காரு. என் பையன் பாரு ஆல்ரெடி ரெடியா போய் பின்னாடி நிக்கிறான்.” என்று சொல்ல, சிறு வெட்கத்துடன் அந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள் ரித்திகா. அந்த போட்டோ கிராபர் சொன்னது போல் தனக்கு பின்பு நின்று கொண்டு இருந்த வருணை ரித்திகா அண்ணாந்து பார்க்க, அவளை அசால்ட் ஆக பார்த்த வருண், “என்ன இவளுக்கு ஊஞ்சல் ஆட்டி விட தானே சொன்னீங்க… இப்ப எப்படி ஆட்டி விடறேன்னு மட்டும்ம பாருங்க.” என்று தன் மனதிற்குள் நினைத்தவன், ஊஞ்சலின் கயிற்றை பிடித்து வேகமாக ஆட்டத் தொடங்கினான். அதனால் காதலுடன் அவனைப் பார்க்க வேண்டிய ரித்திகா பயத்துடன் அவனைப் பார்த்தவள், வேகமாக தன் அருகே இருந்த கயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அதை உணராத அங்கு இருந்த அனைவரும் அவள் அந்த தருணத்தை என்ஜாய் செய்கிறாள் போல என்று நினைத்துக் கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே ஓடி வந்த சித்தார்த், “ராகா அம்மா என்ன விட்டுட்டு நீ மட்டும் ஊஞ்சல்ல ஆடுற..??? நானும் தான் ஆடுவேன். என்ன ஏத்தி விடுங்க.” என்றான். அவனையும் சேர்த்து வைத்து எடுத்தால் இது ஒரு நல்ல குடும்ப புகைப்படமாக இருக்கும் என்று நினைத்த ஒரு போட்டோ கிராபர் வருணை பார்த்து, “சார் நீங்க சொன்னீங்கன்னா உடனே நம்ப லிட்டில் மாஸ்டரையும் ரெடி பண்ணி உங்க கூட சேர்த்து நிக்க வச்சு போட்டோ ஷூட் பண்ணிடலாம்.” என்று சொல்ல, தானும் தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று நினைத்த வருண் சித்தார்த்தை பார்த்து, “நீ போய் வேற டிரஸ் போட்டுட்டு ரெடி ஆயிட்டு வா சித்து. நீ வந்ததுக்கப்புறம் நம்ம எல்லாரும் ஒன்னா சேந்து இந்த ஊஞ்சல்ல உக்காந்து போட்டோ எடுக்கலாம்.” என்று சொன்னான்.
சித்தார்த்: “ஓகே அப்பா நான் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வரேன். எனக்காக நீங்க வெயிட் பண்ணுங்க. நான் வர்ற வரைக்கும் நீங்க யாரும் ஊஞ்சல்ல விளையாட கூடாது சரியா..??” என்று சொல்லி அன்பு கட்டளை போட்டான்.
அவன் சொன்னதை கேட்டவுடன் சிரித்து கொண்டே அந்த ஊஞ்சலில் இருந்து எழுந்த ரித்திகா, “அம்மா நீ வர்ற வரைக்கும் வெயிட் பண்றேன். நீ சீக்கிரம் போய் ரெடி ஆயிட்டு வா.” என்று உற்சாகமான குரலில் சொல்ல மகிழ்ச்சியாக அங்கு இருந்து துள்ளி குதித்து தன்னுடைய அறைக்கு ஓடி சென்ற சித்தார்த், அங்கு வந்திருந்த ஆர்டிஸ்டிகளின் உதவியுடன் வெகுவிரைவாக கிளம்பி அங்கே வந்தான்.
பின் ரித்திகா வையும் சித்தார்த்தையும் அந்த ஊஞ்சலில் அமர்த்திய வருண் இம்முறை மெதுவாக அந்த ஊஞ்சலை பாசத்துடன் ஆட்டினான். சித்தார்த் என்ன:தான் தன் அருகே இருந்த கயிற்றை பிடித்து இருந்தாலும், அவனை தன்னுடைய ஒரு கையால் கீழே விழாமல் கீழே இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் ரித்திகா. அவர்களை அப்படி குடும்பமாக பார்ப்பதற்கு அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது. அந்த காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டன.
இறுதியாக செண்பகம் தான் நினைத்தது போல் தன்னுடைய மகனின் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் ஐ நல்லபடியாக நடத்தி முடித்து விட்டாள். அந்த நாள் முழுவதும் அவர்களுக்கு வேலை பலு நிறைந்ததாகவும், உற்சாகம் நிறைந்ததாகவும் இருந்தது. அதனால் சில மணி நேரத்திற்கு பின்பு அனைவரும் சோர்வாக உணர்ந்ததால், நாராயணன் குடும்பத்தினர் தங்களிடம் வேலை செய்ய வந்தவர்களுக்கான செட்டில்மெண்டை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் மட்டும் இன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு நாளை தங்களுடை ஊருக்கு சென்று கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர்.
மாலை 7:00 மணி…
பிரவீன் மண்டபத்தில்…
லக்ஷனாவின் அருகே அரை போதையில் அவளை நிச்சயதார்த்தம் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தான் பிரவீன். லக்ஷனா தன்னுடைய தலை முதல் கால் வரை அழகு பதுமையாக தயாராகி இருந்தாள். ஆனால் அவளுடைய முகத்தில் சந்தோஷத்தின் சாயல் துளி கூட தெரியவில்லை. ஐயரை வைத்து முறைப்படி திருமண தேதியை அறிவித்தவுடன் லக்ஷனாவின் பெற்றோர்களும் தேவியும் நிச்சயதார்த்த தாம்பூலத்தை மாற்றிக் கொண்ட பின், விலை உயர்ந்த வைர மோதிரங்களை லக்ஷனாவும் பிரவீனும் மாற்றிக் கொண்டனர்.
அந்த காட்சியை படம் பிடித்த சில பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய செய்தி தொலைக்காட்சிகளில் அதை வெளியிட்டு, ஹாட் நியூஸ் ஆக அதை மாற்றிக் கொண்டு இருந்தனர்.
நாராயணன் பேலஸில்….
கார்டனின் இருந்த ஒரு பென்சில் தனியாக அமர்ந்து இருந்தாள் தர்ஷினி. அவளுடைய முகத்தில் சோகம் அப்பிக் கொண்டு இருந்தது. இந்த செடிகளைத் தவிர தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை என்பது போல அங்கு இருந்த செடிகளை பார்த்து தன்னுடைய மனதிற்குள் அவைகளிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள் தர்ஷினி.
அப்போது அவள் அருகே வந்த தர்ஷன் “மேடம்” என்று அவளை மெல்லிய குரலில் அழைத்தான். அவனுடைய குரலை வைத்து அது தர்ஷன் தான் என்று புரிந்து கொண்ட தர்ஷினி அவனை திரும்பி கூட பார்க்காமல், “வாங்க தர்ஷன்.” என்று சலிப்பான குரலில் சொன்னாள்.
தர்ஷன்: “பரவால்ல.. மேடம்க்கு என்னோட வாய்ஸ் கூட நல்லா தெரிஞ்சிருக்கு போல. அதான் என்ன யாருன்னு திரும்பி பாக்காம கூட உடனே கண்டுபிடிச்சீங்க.” என்று அவன் விரக்தியான குரலில் சொன்னான்.
தர்ஷினி: “நீங்க தான் முன்னாடி எல்லாம் என் கூட ரொம்ப நேரம் போன்ல பேசிட்டு இருப்பீங்களே அப்புறம் உங்க வாய்ஸ் கூட எனக்கு தெரியாதா…??” என்று கேட்டவள், “ஆனா நீங்க இப்பதான் என்கிட்ட முன்ன மாதிரி பேசுறது இல்லையே…!!!” என்று ஒரு விரக்தி புன்னகையுடன் சொன்னாள்.
தர்ஷன்: “என்னோட பாஷ கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க எனக்கு லேடி பாஸ் ஆ வரப் போறீங்க. உங்ககிட்ட நான் எப்படி மேடம் ஃப்ரெண்ட்லியா பேசுறது..?? அதான் நான் பேசல.” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான்.
தர்ஷினி: ஓ அதுக்கு பேர் எல்லாம் கல்யாணம்ல்ல…!!!
தர்ஷன்: எப்படி நடந்தாலும் கல்யாணம் கல்யாணம் தானே மேடம்.. உங்களுக்கு இந்த கல்யாணத்துல அப்ப விருப்பம் இல்லையா..???
தர்ஷினி: எழுந்து நின்று அவனுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்தவள், “இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமா இல்லையான்னு உனக்கு தெரியாதா தர்ஷன்..??” என்று கேட்டாள்.
தர்ஷன்: “சாரி எனக்கு தெரியாது மேடம்.” என்று தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டு சொன்னான்.
தர்ஷினி: “அப்புறம் எதுக்காக நீ இப்ப என்கிட்ட பேச வந்த…???” என்று சற்று கோபமான குரலில் கேட்டாள். 🙁
தர்ஷன்: நீங்க சேடா ஆ இருக்கீங்கன்னு தோணுச்சு அதான் உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்.
தர்ஷினி: ஒரு வேளை நான் ஏன் கவலையா இருக்கேன்னு உனக்கு தெரிஞ்சுச்சுன்னா அதை நீ உடனே சரி பண்ணிடுவியா..???
தர்ஷன்: என்னால சரி பண்ண முடிகிற அளவுக்கு ஏதாவது பிரச்சனைனா கண்டிப்பா அத சரி பண்ணுவேன் மேடம்.
தர்ஷினி: “உன்னால அது முடியலைனாலும் எனக்காக அதை செய்வியா..???” என்று கேட்டவள் உணர்ச்சி பொங்கும் கண்களுடன் அவனை கேள்வியாக பார்த்தாள்.
தர்ஷன்: “நீங்க ஏதாச்சு கேட்டா என்னால உங்க கிட்ட நோ சொல்ல முடியாது. பட் என்னால செய்ய முடியாத எதையும் என்ன செய்ய சொல்லி கேட்டுடாதீங்க மேடம் ப்ளீஸ்.” என்றவன் மீண்டும் தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டான்.
தர்ஷினி: “அப்ப நீ என் கிட்ட இங்க நின்னு பேசறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. இங்க இருந்து போ.” என்று அவனைப் பார்த்து கோபமாக சொன்னவள் வேறு புறமாக திரும்பி நின்று கொண்டாள்.
இதற்குமேல் அங்கே நிற்பதற்கு தர்ஷனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது அதனால் அங்கு இருந்து கனத்த இதயத்துடன் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். செல்பவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்த தர்ஷினி, சோகமாக மீண்டும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அங்கிருந்த சாரில் அமர்ந்து கொண்டாள். 😔 🥺
நேரம் இரவு 10:00 மணி…
வருண் ரெசார்டில்..
சுகந்தியின் மூலம் சித்தார்த்திற்க்கு காய்ச்சல் இருந்தது பற்றியும் இப்போது அவன் சரியாகி விட்டதையும் பற்றி தெரிந்து கொண்ட வருண் அவனை பார்ப்பதற்காக தேடிக் கொண்டு இருந்தான். அப்போது செண்பகம் சித்தார்த் ரித்திகாவின் அறையில் அவளுடன் இருப்பதாக சொல்ல, அவளுடைய அறையை நோக்கி சென்றான் வருண்.
ரித்திகாவின் அறையின் கதவிற்கு அருகே வரை வந்துவிட்ட வருண், உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் கதவிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தான். இருப்பினும் தன்னுடைய மகனுக்கு காய்ச்சல் என்று தெரிந்தவுடன் அவனை ஒரு முறையாவது பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அதனால் அவன் கதவின் மீது கை வைக்க அந்த கதவு தாலிடப்படாமல் இருந்ததால், தானாக திறந்து கொண்டது.
ரித்திகா உள்ளே என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக தன்னுடைய தலையை மட்டும் நீட்டி உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தான் வருண். உள்ளே வெறும் நைட் லேம்ப் மட்டும்தான் எரிந்து கொண்டு இருந்தது. அங்கு இருந்த பெரிய உயர்தர மெத்தையின் மீது ரித்திகா நைட் பேண்ட் மற்றும் ஷர்ட்டுடன் படுத்து தூங்கிக் கொண்டு இருக்க, நைட் டிரஸ் அணிந்து இருந்த சித்தார்த், அவளை கட்டிப்பிடித்த படி நிம்மதியாக படுத்து உறங்கி கொண்டு இருந்தான்.
அவர்களை கவனித்த வருணுக்கு அவர்கள் தான் ஒரு அழகிய குடும்பம் போலவும் அந்த குடும்பத்தில் இருந்து தான் தனித்து விடப்பட்டது போலவும் தோன்றியது. அதனால் தன்னுடைய மகனின் பாசம் தனக்கு கிடைக்கவில்லை என்று நினைத்து மனம் உடைந்த வருண், இவை அனைத்தும் ரித்திகா தான் என்று நினைத்து அவள் மீது அதீத கோபத்துடன் அங்கு இருந்து கிளம்பி சென்று விட்டான்.
ஆனால் அன்பே ஆனால் அன்பே…
அவளுக்கு கொடுத்த இதயத்திலே…
உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்
ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவள் விட்டுப் பறந்த உயரத்திலே
உன்னோடு பறக்க முயலுகிறேன்
என வானிலே ஓர் முகிலாய்
நீ தோன்றினாய்
மெதுவாக நீ வானமாய்
விரிந்தாயடி என் நெஞ்சிலே
என பூமியில் ஓர் செடியாய்
பூ நீட்டினாய்
மெதுவாக நீ காடென
படர்ந்தாயடி என் நெஞ்சிலே
உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று
உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே
இருளோடு நேற்றை நான் தேடினேன்
எதிர்கால தீபம் காட்டினாய்…
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)