அத்தியாயம் 173: காற்றில் எங்கும் காதல் வாசம் (பார்ட் 2)
விஷ்வாவின் அமைப்பில் இருந்த ராகவியால் சரியாக மூச்சுக் கூட விட முடியவில்லை. அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ ராகவி விஷ்வாவின் இதயத்திற்கு அருகே இருந்ததால் அவளுடைய இதயத் துடிப்பின் வேகத்தை விஷ்வாவாலும் கூட உணர முடிந்தது. அதனால் அவளுடைய முகத்தை குழப்பமாக பார்த்துக் கொண்டு இருந்தான் விஷ்வா. 🙄
அந்த காட்சியை ஒரு அழகான ரொமான்டிக் சீன் என்று அங்கு இருந்த போட்டோ கிராபர்கள் நினைத்து அவற்றை தங்களுடைய கேமராவில் படம் பிடிக்க தொடங்கி விட்டனர். சில நொடிகளுக்கு பின், பிளே ஆக்கிக் கொண்டு இருந்த பாடல் நின்று விட… விஷ்வாவும் ராகவியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர். விஷ்வாவை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்த போட்டோ கிராபர்களில் ஒருவன், “சார் இப்போ எடுத்த போட்டோ வீடியோ எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணத விட ரொம்ப நல்லா வந்திருக்கு. தேங்க்ஸ் சார். உங்க டான்ஸ் கூட ரொம்ப ப்ரொபஷனலா இருந்துச்சு.” என்று ஆர்வமான குரலில் அவனை பாராட்டி தள்ளிக் கொண்டு இருந்தான்.
அவன் தன்னை பாராட்டியதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாத விஷ்வா, “அவ்ளோ தானா.. இல்ல இன்னும் ஷூட் பண்ண வேண்டியது இருக்கா..?? நீங்க முடிஞ்சிருச்சுன்னு சொன்னா, நான் கிளம்புவேன்.” என்று அலட்சியமான குரலில் சொன்னான். “ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு சார். உங்களோட இந்த ஒரு டான்ஸ் வீடியோவில இருந்தே நிறைய கேண்டிட் பிக்ஸ் கிராப் பண்ணலாம். பட் இந்த காஸ்டியூமர் போட்டுட்டு டிபிகலான சில போசஸ்ல போட்டோ எடுக்கலைன்னா எப்படி..?? சோ நீங்க கொஞ்சம் ஆப்ரேட் பண்ணீங்கன்னா, அத மட்டும் சீக்கிரமா எடுத்துடலாம்.” என்று தயங்கி தயங்கி சொல்ல.. “ஓகே பைன்.” என்ற விஷ்வா அடுத்த போட்டோக்களை எடுக்க தயாரானான்.
ராகவி இன்னும் தன்னுடைய சிண்டரெல்லா கனவுகளில் இருந்து மீண்டு வந்து இருக்கவில்லை அதனால் பேய் அறைந்தவளை போல பொம்மை போல் அவர்கள் சொல்வதை அனைத்தையும் அமைதியாக செய்து கொண்டு இருந்தாள். விஷ்வா ராகவியிடம் ஒரு மலர் செண்டை கொடுப்பது போலவும், ராகவி அதை வெட்கத்துடன் வாங்குவது போலவும், பட்டும் படாமல் ராகவி விஷ்வாவின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போலவும், விஷ்வா ராகவிக்கு முத்தம் கொடுப்பது போலவும், ராகவியின் கால்களில் விஷ்வா அந்த கண்ணாடி ஷுவை மாட்டி விடுவது போலவும், ஏராளமான போட்டோக்களை விதவிதமான கோணத்தில் எடுத்து குவித்தனர்.
வேண்டா வெறுப்பாக அனைத்தையும் தன்னுடைய அம்மாவின் சந்தோஷத்திற்காக செய்து கொண்டு இருந்தான் விஷ்வா. விஷ்வா இந்த சூழ்நிலையில் எப்படி இருந்தாலும், ராகவி இந்த தருணத்தை தன்னுடைய ஆழ்மனதில் இருந்து உற்சாகமாக கொண்டாடினாள். 😍 இது மாதிரியான உணர்வுகள் அனைத்தும் அவளுக்கு புதிதாகவும், புதிராகவும் இருந்தது. எது எப்படி இருந்தாலும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள் என்பதை அவளால் மறுக்க முடியவில்லை. மீண்டும் அவர்கள் மேக்கப் போட்டு முடித்துவிட்டு அடுத்த சூட்டிற்கு தயாராக லேட்டாகும் என்பதால் அடுத்த சூட்டை உணவு இடைவேளைக்கு பின் வைத்து கொள்ளலாம் என்றுு முடிவு எடுத்தனர்.
பிரவீனின் திருமண மண்டபத்தில்…
நிச்சயதார்த்த ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடந்து கொண்டு இருந்தது. ஒரு பக்கம் லக்ஷனா, இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல வேதனையில் தன்னுடைய அறைக்குள்ளையே முடங்கி கிடந்தாள். 💔 இன்னொரு புறம் பிரவினோ குடித்துவிட்டு மட்டையாகி தன்னுடைய சுய நினைவை இழந்து அவனுடைய அறையில் கட்டிலில் போதையில் விழுந்து கிடந்தான். இவற்றை எல்லாம் கவனித்த மங்கைக்கு தன்னுடைய மகள் தன்னிடம் சொன்னது போலவே தான் அவளுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டோம் தான் போல என்று தோன்றினாலும் அது தான் அவளுடைய தலை எழுத்து என்று நினைத்து எதையும் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டாள்.
தேவிக்கும் தன்னுடைய மகனை திருத்துவதற்கான எந்த வழியும் தெரியவில்லை. அதனால் வழக்கம் போல் திருமணத்திற்கு பின்பாவது அவன் சரியாகிவிடுவான் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டாள். அங்கு வந்து இருந்த சௌபர்ணிகா, சோகமாக தன்னுடைய அக்காவின் வாழ்க்கை தன்னுடைய கண்ணின் முன்னாலேயே இப்படி வீணாகிறது என்று நினைத்து வருத்தப்பட்டாள். மங்கையே எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருக்கும்போது பாவம் சௌபர்ணிக்காவால் மட்டும் என்ன செய்துு விட முடியும்..??
சில மணி நேரத்திற்கு பின்…
விஷ்வாவின் ரெசார்ட்டில்…
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு இருக்க, விஷ்வா விற்கும் ராகவிக்கும் ஸ்டைலிஸ்ட்கள் மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தனர். இப்போது அரசன் மற்றும் அரிசியைப் போல விஷ்வாவையும் ராகவியையும் அவர்கள் தயார் செய்து கொண்டு இருந்தனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வெள்ளை நிற ஆடையில் கம்பீரமாக தோன்றும் ஜெயம் ரவியை போல் விஷ்வாவையும், விரித்த கூந்தலுடன் அகநக முகநகையே பாடலில் வரும் திரிஷாவை போல ராகவியையும் அவர்கள் தயார் செய்து கொண்டு இருந்தனர்.
ராகவியின் முக அமைப்பிற்கும், அவளுடைய நீண்ட கூந்தலுக்கும், கச்சிதமான தேகத்திற்கும் அனைத்து வகையான கதாபாத்திரங்களும் அவளுக்கு சரியாகப் பொருந்தியது. போலியான ஆபரணங்களை தன்னுடைய மருமகள் ஏன் அணிய வேண்டும் என்று நினைத்த செண்பகம், உண்மையான வைரம் மற்றும் வைடூரிய, தங்க நகைகளை, ராகவிக்காக ஏற்பாடு செய்து வைத்து இருந்தாள். இது போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களில் மீது இதற்கு முன் ராகவிக்கு அதிக ஆசை எல்லாம் இருந்தது இல்லை. ஆனால் தன் கண்முன்னே இப்படி அனைத்தையும் பார்க்கும்போது அவளால் அவற்றின் மீது ஆசைப்படாமல் இருக்க முடியவில்லை.
அதனால் விருப்பத்துடன் அனைத்தையும் ஆசையாக அணிந்து கொண்டாள். சில நிமிடத்திற்கு பின் விஷ்வா மற்றும் ராகவி இருவருமே கிளம்பி முடித்து விட.. அவர்களுடைய போட்டோ சூட் -க்கான செட் தயாராக இருந்தது. மகாராணியை போல் கையில் வாழுடன் அங்கே வந்தாள் ராகவி. அந்த வாழ் ஐ அவள் தன் கையில் ஏந்தியதாலோ என்னவோ தெரியவில்லை, அவளுடைய முகத்தில் தானாக ஒரு கம்பீரமும் பொலிவும் வந்துவிட்டது. ராகவியின் கையில் இருப்பதைப் போல விஷ்வாவின் கையிலும் ஒரு வாழ் இருந்தது.
அந்த வாழ் ஐ கேஷுவலாக தன்னுடைய கையில் பிடித்து சுழற்றிய விஷ்வா, கம்பீரமாக நின்று போஸ் கொடுத்தான். அதனால் மகிழ்ந்த போட்டோ கிராபர்கள் தங்களுடைய கேமராக்களில் இஷ்டத்திற்கு அவனை நிறைய போட்டோக்கள் எடுத்து குவித்தனர். அதுவரை கம்பீரமாக நின்று கொண்டு இருந்த விஷ்வா தன் அருகே வந்த ராகவியை பார்த்தவுடன், குளுமையான காற்று தன்னை தீண்டியவுடன் அதன் இதமான குளிரில், நாம் நம்மை மறந்து அமைதியாகவும் நிம்மதியாகவும் உணர்வதைப் போல; ராகவி அங்கே வரும் வரை சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டு இருந்த விஷ்வா, அவளுடைய நிலவைப் போன்ற முகத்தை பார்த்தவுடன் சற்று குளுமை அடைந்து விட்டான். 😍
ராகவியின் வருகைக்கு பின்னே விஷ்வாவின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு சிறிய மாற்றங்களையும் செண்பகமும், விஷ்ணுவும், ரேவதியும், கவனிக்க தவறவில்லை. ராகவி அங்கே தயாராகி வந்தவுடன் அங்கு இருந்த சீப் போட்டோ கிராஃபரை பார்த்த விஷ்வா, “இப்பயும் எங்கள கையில வாழ் ஐ வச்சு டான்ஸ் ஆட சொல்ல போறீங்களா..??” என்று நக்கலாக கேட்டான். “நாங்க உங்களை ஆட சொன்னாலும் நீங்க அப்படியே ஜாலியா ஆடிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க போற மாதிரி ஏன் சார் இப்படி கேக்குறீங்க.???” என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த போட்டோ கிராபர், “உங்களுக்கு அந்த மாதிரி பண்ணாலும் நல்லா இருக்கும்னு தோணுச்சுன்னா உடனே பண்ணிடலாம் சார். பட் நாங்க இப்போதைக்கு போட்டோஸ் எடுக்கிறதுக்கு மட்டும்தான் பிளான் பண்ணி இருக்கோம்.” என்று சொல்ல, “ஓகே பைன். எதுவா இருந்தாலும் இன்னைக்குள்ள எனக்கு நீங்க முடிச்சு குடுத்துடுங்க. நாளைக்கும் என்னால இதே மாதிரி என்னால போட்டோ ஷூட் காக டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது.” என்று உறுதியான குரலில் சொன்னான். “ஓகே சார் ஐ வில் ட்ரை டு டு மை பெஸ்ட்.” என்று பயந்த குரலில் சொன்னான் அந்த போட்டோ கிராபர்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)