Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 172

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 172

by Thenaruvi Tamil Novels
11 views

அத்தியாயம் 172: காற்றில் எங்கும் காதல் வாசம் (பார்ட் 1)

செண்பகம்: “என் மருமக சினிமா ஹீரோயின் மாதிரி. அவளுக்கு எந்த மாதிரி டிரஸ் போட்டாலும் அவ ரொம்ப அழகா இருப்பா. எனக்கே அவள இப்போ அந்த டிரஸ்ல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.” என்று மகிழ்ச்சியுடன்  சொன்னாள். 😍

“இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல எதுக்கு அவளை இப்படி ரொம்ப பில்டப் பண்ணிட்டு இருக்காங்க..??? அவ என்ன இன்டர்நேஷனல் மாடலா அவளுக்கு எந்த டிரஸ் போட்டாலும் பர்ஃபெக்ட்டா செட் ஆக..??? அவளே ஒரு சாதாரண டீச்சர் அவளுக்கு இவ்ளோ பில்டப் தேவையா…??? அந்தப் பேரழகி வரட்டும். அவ எப்படி இருக்கான்னு நானும் பார்க்கிறேன்.”  என்று நினைத்த வருண், முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் ஆர்வமாக ரித்திகாவின் வருகைக்காக காத்திருந்தான். 

சில நிமிடங்களுக்கு பின்பு அந்த இடம் ஒரே சலசலப்பானது. ரித்திகா ஒரு ப்ளூ நிற சிண்டரெல்லா கவுன் ஐ அணிந்து கொண்டு உண்மையான பிரின்சஸ் ஐபோல் நடந்து வந்தாள். அவளுடைய நீண்ட கவுனை தங்களுடைய கைகளில் ஏந்தியவாறு அவள் நடப்பதற்காக உதவி செய்த படி சில அசிஸ்டன்டுகள் அவள் பின்னே நடந்து வந்து கொண்டு இருந்தனர். இவை அனைத்தையும் பார்ப்பதற்கு நிஜமாகவே ரேட் கார்பட்டில் ஒரு இளவரசி வரும்போது பணியாளர்கள் அவளுக்கு சேவை செய்வது போல வருணிற்கு தோன்றியது. 

அவளுடைய நீண்ட கூந்தலை, அதனுடைய உண்மை தன்மையை கெடுக்காமல் சற்று ஹீட் அயன் செய்து ஆங்காங்கே நேச்சுரலாக வேவி கர்ள் செய்து வைத்து இருந்தனர். அவள் வருணின் சிண்டரெல்லா என்பதை அவனுக்கு உணர்த்தும் வண்ணம் அவன் அவளுக்கு அணிவித்த அந்த பிளாட்டினம் பெண்டன்ட் செயின் மட்டும் அவளுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. அவளுடைய காலில் சிண்டரெல்லா திரைப்படத்தில் வரும் ஹீரோயின் அணிந்து இருப்பது போலவே ஹீல்ஸ் வைத்த கண்ணாடி ஷூ அணிந்து இருந்தாள் ரித்திகா .

அவை அனைத்தும் ரித்திகா விற்காக பிரத்தியோகமாக செய்யப்பட்டது என்பதால், அவை அனைத்தும் அவளுக்கு  கச்சிதமாக பொருந்தி இருந்தது. அளவான ஒப்பனைகளுடன் அழகு சிலையாய் அவள் நடந்து வந்து கொண்டு இருந்தாள். அப்போது அவளுடைய நீண்ட கூந்தல் காற்றில் பறந்து கொண்டு இருந்தது. இதுவரை அவள் ஹில்ஸ் அணிந்து நடந்து பழகியது இல்லை என்பதால், அவளால் சரியாக நடக்க முடியவில்லை. அது ஒன்று மட்டும் தான் அவளிடம் ஒரு சிறு குறையாக இருந்தது.

ரித்திகா ஸ்டேஜ் இன் அருகே வருவதை கவனித்த வருண், தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டான். 😍  அதுவரை தன்னுடைய ஹீல்ஸ் இல் தன்னுடைய மொத்த கவனத்தையும் வைத்து இருந்த ரித்திகா, அந்த ஸ்டேஜ் இன் அருகே வந்த உடன் தான் தன் முன்னே நிற்கும் வருணை கவனித்தாள்.வருண் ரித்திகாவின் கண்களுக்கு உண்மையான பிரின்ஸ் சார்மிங் ஐ விடவும்  பேரழகனாக தெரிந்தான். அதனால் அவனை ஆசையாக பார்த்த படி வந்து கொண்டு இருந்தாள் ரித்திகா. 😍 வருண்னி ஹேர் ஸ்டைல் முதல் அவன் அணிந்து இருந்த கோட் சூட் வரை சிறுவயதில் இருந்து அவள் பார்த்து விரும்பிய பிரின்ஸ் சார்மிங்கை அவளுக்கு மிகவும் ஞாபகப்படுத்தியது. 

இப்படியே வருனும் ராகவியும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுடைய கண்களால் கதை பேசிக் கொண்டு இருக்க, அவர்கள் இருவரையும் கவனித்த செண்பகம், விஷ்ணு மற்றும் ரேவதி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். 😁 😁 😁

விஷ்ணு: “பாருங்க அம்மா. அண்ணி எப்ப வருவாங்க எப்ப வருவாங்கன்னு கேட்டு அப்படி பறந்தாருல்ல… அண்ணா..!!! இப்ப அவங்க வந்த உடனே வச்ச கண்ணு வாங்காம அவங்களேயே பாத்துட்டு இருக்காரு பாருங்க.” என்று நக்கலாக சிரித்து கொண்டே செண்பகத்தின் காதுகளில் சொன்னான். 🤣 🤣🤣

அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த செண்பகம் வருணையும் ரித்திகாவையும் பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ஆசை தீர பார்த்து முடிச்சிட்டீங்கன்னா, நம்ப போட்டோ ஷூட்டை ஸ்டார்ட் பண்ணலாமா..???” என்று நக்கலாக அவளும் சிரித்துக் கொண்டே கேட்டாள். 😁 😁 😁

அல்போது தான் தாங்கள் அப்பட்டமாக அதுவரை என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று புரிந்து கொண்டவர்கள், தங்களுடைய பார்வைகளை வேறு புறமாக மாற்றிவிட்டனர். செட்டிங்  சரியாக இருக்கிறதா என்று செக் செய்த போட்டோ கிராபர்கள், வருனிடம் பேச தைரியம் இல்லாமல் செண்பகத்தை பார்த்து, “மேடம் இந்த லொகேஷன் ரொம்ப நல்லா இருக்கு. நம்ப ஆர்டிபிசியல் ஆ போட்டோ எடுக்காம சார் ஐயும் மேடமையும் ஸ்லோவா டான்ஸ் ஆட வச்சு அப்படியே ஒரு வீடியோவா ஷூட் பண்ணிட்டோம்னா, வீடியோ சூட் பண்ண மாதிரியும் இருக்கும். நமக்கு அதுல இருந்து நிறைய கேண்டிட் போட்டோஸ் கிடைக்கும். வீடியோவை ஃப்ரீஷ் பண்ணி எடுத்துக்கலாம்.” என்று சொல்ல, “எனக்கு அத பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது பா. எப்படி பண்ணா நல்லா வருமோ, அதே மாதிரி பண்ணுங்க.” என்று அந்த போட்டோ கிராபரிடம் சொன்ன செண்பகம் வருணை பார்த்து, “அந்த தம்பி என்ன மாதிரி எல்லாம் சொல்றாரோ, அத அப்படியே நீ பாலோ பண்ற. இந்த சூட் முடியுற வரைக்கும் நீ யாருன்றதயே மறந்துடு. சும்மா இந்த கண்ண உருட்டி எல்லாத்தையும் பயமுறுத்திட்டு எல்லாம் இருக்க கூடாது. அந்த தம்பி சொல்றத அப்படியே கேளு.” என்று மிரட்டும் தோணியில் சொல்ல, “ஓகே மா. நீங்க சொல்றது தானே நடக்குது. இதுவும் நடக்கட்டும்.” என்று சொன்னவன் சலிப்பான குரலில் அங்கு இருந்த போட்டோ கிராஃபரை பார்த்து, “இப்ப நான் என்ன பண்ணனும்..??” என்று கேட்டான்.

சிறிய பயத்துடன் வருனை பார்த்த அந்த போட்டோ கிராபர், “சார் நாங்க இப்போ ஒரு ஸ்லோ சாங் ப்ளே பண்றோம். நீங்களும் ரித்திகா மேடமோ சேர்ந்து ஸ்லோவா உங்களுக்கு வர்ற மாதிரி டான்ஸ் முவ்ஸ் பண்ணுங்க. அவங்க டான்ஸ் என்கிறதுனால நீங்க ரெண்டு பேரும் ஈசியா மேனேஜ் பண்ணி டான்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்.” என்று சொல்ல, “ஓகே பிளே தி சாங்.” என்றவன், சரியான பொசிஷனில் அந்த செட்டிங்கின் முன்னே போடப்பட்டு இருந்த ஸ்டேஜில் நின்று கொண்டான். அவனை பின் தொடர்ந்த ரித்திகாவும் தன்னுடைய பெரிய ஹில் ஸ்லிப்பருடன் போராடிய படி அந்த நீண்ட கவுனை இழுத்து கொண்டு மேடையின் மீது ஏறி நின்றாள். 

Oh darling, just dive right in and follow my lead

Well, I found a girl, beautiful and sweet..

Oh, I never knew you were the someone waiting for me..

‘Cause we were just kids when we fell in love… 
Not knowing what it was
I will not give you up this time..

But darling, just kiss me slow, your heart is all I own

And in your eyes, you’re holding mine
Baby, I’m dancing in the dark with you

between my arms
Barefoot on the grass, listening to our favourite song…

என்ற பாடல் பேக்ரவுண்டில் ஓட தொடங்கியது. அந்த பாடல் ஓட தொடங்கியவுடன் தன்னை ஒரு சிண்டரெல்லாவாகவே உணர்ந்த ரித்திகா, வருண்  தன்னுடைய பிரின்ஸ் சார்மிங் ஆக நினைத்தவள்; அவனுடைய கைகளுடன் தன்னுடைய கைகளை கோர்த்து ஆடத் தொடங்கினாள். அப்போது தன்னை அறியாமல் அவளுக்கு இதே பாடலுக்கு அவளும் கௌத்தமும் டான்ஸ் பிராக்டிஸ் செய்தது ஞாபகம் வர, அவனுடன் இணைந்து ப்ராக்டிஸ் செய்த அதே ஸ்டெப்பை வருனுடன் ஆடத் தொடங்கினாள் ரித்திகா. இதில் அவளை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடந்தது அவள் போடும் ஸ்டெப்சிற்கு ஏதுவாக வருனும் அவளுடன் இணைந்து ஆடியது தான். 🥰 💃

ரித்திகாவோ இன்னும் ப்ரொபஷனல் டான்ஸ்சர் இன் நிலை அளவிற்கு வந்து இருக்கவில்லை. ஆனால் வருனுடன் அவள் இணைந்து ஆடும் போது ஒரு ப்ரொபஷனல் டான்ஸ்ருடன் இணைந்து ஆடுவதை போல் ஒரு உணர்வையும், அவனுடைய சரியான நகர்வையும் கண்டு ஆச்சரியப்பட்டாள். அவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன் ஒரு தடவை கூட ப்ராக்டிஸ் செய்ததில்லை ஆனால் பல முறை பிராக்டிஸ் செய்து விட்டு ஸ்டேஜில் பெர்ஃபார்மன்ஸ் செய்வதை போல அவர்கள் இருவரும் நேர்த்தியாக ஆடிக் கொண்டு இருந்தனர். 💃
அங்கே ஆடி கொண்டு இருப்பது வருணா என்பது போல அந்த போட்டோ கிராபிர்கள் மற்றும் வீடியோ கிராப்பர்கள் அனைவரும் அவனை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த அழகிய காட்சிகளை தங்களுடைய கேமராவில் படம் பிடிக்க அவர்கள் யாரும் தவறவில்லை. இதுவரை வருணை பார்த்து பயந்து கொண்டு இருந்த ராகவி அவனோடு இணைந்து ஆடிய பின் அவளுக்கான உலகத்தில் தன்னுடன் அவனும் இணைந்து விட்டதை போல உணர்ந்தவள், சகஜமாக அவனுடன் ஆடிக் கொண்டு இருந்தாள். 💃 தன்னுடைய மருமகனையும் மகளையும் இப்படி ஒன்றாக பார்த்த ரேவதிக்கு அவளுடைய மனதில் இருந்த பாரம் அனைத்தும் சட்டென்று இறங்கிவிட்டதைப் போல் நிம்மதியாக இருந்தது. 😍 ❤️

அப்போது பி. ஜி. எம். வர, ரித்திகாவை தன்னுடைய ஒரு கையால் அவளுடைய இடுப்போடு சேர்த்து அனைத்து தன்னுடைய இன்னொரு கையால் ரித்திகாவின் கைகளை இறுக்கி பிடித்தவன், அவளை தூக்கி சுற்றினான். 🤗 🥰 அவனுடைய பார்வையில் தன்னை தொலைத்த ரித்திகா , காதல் வானில் இறக்கை இன்றி சிறகடித்துக் கொண்டு இருந்தாள். ❤️ பின் அவளை சில நொடிகளில் கீழே இறக்கிவிட்டட வருண், அவளுடன் இணைந்து சால்சா நடனம் ஆட, ரித்திகா தன்னுடைய காலில் அவள் அணிந்து இருந்த பெரிய ஹில்ஸ் ஸ்லீப்பர் தடுக்கி விட்டதால் கீழே விழப் போனாள். அதை உணர்ந்த வருண் அவளை வேகமாக தன் மார்போடு சேர்த்து அணைத்தான். 😍 🥰 👩‍❤️‍👨

 காதலே சாதல் என்று விலகி நிற்கிறேன்.

நீயாக என் வாசல் வருகிறாய்.

உன்னை பார்க்க வேண்டாம் என்று என் முகத்தை ஓராயிரம் முறை வேறு புறம் திருப்பிக் கொள்கிறேன். 

 ஆனல், பூந்தோட்டத்தின் உள்ளே இருந்துகொண்டு பூவின் வாசனையை தவிர்க்க முடியுமா என்ன..??? 🌸 🌸 🌸

அதுபோல தான் என்னுடைய தோட்டத்தில் புதிதாக மலர்ந்த நீ, என் வாழ்வெங்கும் காதல் வாசம் வீசிக் கொண்டு இருக்கிறாய். ❤️ 

என்னுள் நீ பல மாயம் செய்ய… உன்னுள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நான் தவிக்க, இந்த காதல் யுத்தத்தில் வெல்ல போவது நீயா, நானா..??

இந்த கேள்விக்கான பதிலை காலமே சொல்லட்டும் என் கண்மணியே….!!! 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured