அத்தியாயம் 162: ஐ லவ் யூ ரித்திகா (பார்ட் 1)
ஈஸ்வரன் கோவிலில்…
சாமி கும்பிட்டுவிட்டு சோகமாக ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த ஆராதனாவின் அருகே வந்து அமர்ந்த பிரவீன், அவளிடம் பேச முயற்சித்தான். அவன் இன்று எப்படியாவது ஆராதனாவை தன்னுடைய வழிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.
ஆராதனா: “நீயா..!! நீ எதுக்கு இங்க வந்த..??” என்று கோபமான குரலில் கேட்டாள். பிரவீனை பார்க்க பார்க்க.. இவனால் தானே தான் இந்த நிலையில் இன்று இருக்கிறோம் என்ற எண்ணம் அவளுள் எழும்ப, அது பிரவீனின் மீது அவளுக்கு வெறுப்பாக மாறியது. 😡 🔥
பிரவீன்: “என்ன ஆரு இப்படி பேசுற..??? நான் உன்னோட அண்ணன் டி. ஏன் நான் உன் மேல வச்சிருக்கிற பாசத்தை நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற..??? உனக்கே தெரியும்ல்ல.. ஆராதனா..!!! சின்ன வயசுல இருந்தே அபர்ணா நான் என்ன சொன்னாலும், அத அப்படியே கேட்பாள். ஆனா, நீ மட்டும் தான் எப்பவுமே என் கூட எதையாவது பேசி சண்டை போட்டுக்கிட்டே இருப்ப.
இப்பயும் அப்படி தான் பண்ற. ஆனா நான் மட்டும் அப்பயும், இப்பயும், உன் மேல ஒரே மாதிரியான பாசத்தை தானே வச்சிருக்கேன். எனக்கு அபர்ணாவ விட உன்ன தான் டி ரொம்ப பிடிக்கும். நான் மத்தவங்க கிட்ட எப்படி பிஹேவ் பண்றேன்னுலாம் எனக்கு தெரியல ஆராதனா. ஆனா நான் உன்ன எப்பவுமே என்னோட லிட்டில் பிரின்சஸ் ஆ தான் பாக்கிறேன். நீதான் என்ன வில்லனாவே பாக்குற.” என்றவன் ஆராதனாவின் முகத்தை பாசமாக பார்த்தான். 😍
ஏற்கனவே வருத்தத்தில் இருந்த ஆராதனா பிரவீன் பேசியதை கேட்டு மேலும் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தவள், அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் அவளுடைய கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. 😭 😭 😭 அவள் அழுவதை கண்டு வருத்தப்பட்ட பிரவீன், அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு; தன்னுடைய கையை அவள் முன்னே நீட்டி அவனுடைய கையில் இருந்த பிரேஸ்லெட்டை ஆராதனாவிடம் காட்டியவன்,
“உனக்கு இந்த பிரேஸ்லெட் ஞாபகம் இருக்க ஆராதனா..?? நீ நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ணும்போது, உன்னோட சேலரியில வந்த அமௌன்ட் ஐ சேத்து வச்சு இந்த பிளாட்டினம் பிரேஸ்லெட்ட நீ என்னோட பர்த்டேக்கு கிப்ட் பண்ண. அன்னைக்கு நீ இத என் கையில போட்டதுக்கு அப்புறமா, இன்னைக்கு வரைக்கும் நான் இத கழட்டவே இல்ல. நீ என்கிட்ட எவ்ளோ கோவமா பேசினாலும், நான் உன்கிட்ட திரும்பி திரும்பி வந்து பேசுறேன்ல்ல…!!! ஆனா, நீ மட்டும் ஏன் டி மனசு இறங்கவே மாட்டேங்குற..??? ப்ளீஸ் ஆராதனா ஃபார்கிவ் மீ. நான் இப்படி எல்லாம் போய் யார்கிட்டயும் சாரி சொல்ற ஆள் இல்லைன்னு உனக்கே தெரியும்ல… ஒரு வேளை நான் இப்படி உன்கிட்ட வந்து கெஞ்சறது உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா என்னன்னு எனக்கு தெரியல. அதான் நான் எத்தனை தடவை உன்கிட்ட வந்து சாரி சொன்னாலும் நீ அதை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேங்குற. என்னமோ போ.. டி. இதுக்கு மேல உன்கிட்ட என்ன சொல்லி உன்ன சமாதான படுத்துறதுன்னு எனக்கு தெரியல.” என்று சொன்னவன் தன்னுடைய கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு கிப்ட் பாக்ஸ் ஐ எடுத்து அவள் முன்னே நீட்டி, “ஹாப்பி பர்த்டே மை டியர் லிட்டில் பிரின்சஸ்.” என்று சிரித்த முகத்துடன் சொன்னான். 😁 😁 😁
ஆராதனா: பிரவீனை பார்த்து முறைத்தவள், “என்னது இது..??” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 😒
பிரவீன்: “உன்னோட பர்த்டே கிப்ட் என்னான்னு ஓபன் பண்ணி பாரு.” என்றவன், இம்முறை அந்த கிப்ட் பாக்ஸை ஆராதனாவின் மடியில் வைத்து விட்டான்.
ஆராதனா: “எனக்கு வேண்டாம். முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு. நானே கொஞ்ச நேரம் ஆவது நிம்மதியா இருக்கலாம்னு தான் இங்க வந்தேன். நீ ஏன் இங்க வந்து என்னோட கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்கிற..??” என்றவள், தன் மீது இருந்த அந்த பாக்ஸை எடுத்து தரையில் வைத்து விட்டாள். 😒
பிரவீன்: ஆராதனா என்ன சொன்னாலும் இன்று அவன் அவளை விடுவதாக இல்லை. அதனால் ஒரு மர்மமான புன்னகையுடன் அவளை பார்த்தவன், “உனக்கு இந்த பாக்ஸ ஓபன் பண்ண பிடிக்கலைன்னா பரவால்ல. நானே ஓபன் பண்றேன். இந்த கிப்ட் கண்டிப்பாக உனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்றவன் அவனே அந்த கிப்ட் பாக்ஸை எடுத்து அதில் இருந்த ராப்பரை பிரித்து, அதற்குள்ளே இருந்த சிறு பெட்டியை திறந்து ஆராதனாவிடம் அதை காண்பித்தான்.
ஆராதனா அவனுக்கு வாங்கி கொடுத்த பிரேஸ்லெட் போலவே அதில் ஒரு பிளாட்டினம் பிரேஸ்லெட் இருந்தது. அதை வலி நிறைந்த கண்களுடன் பார்த்த ஆராதனாவிற்கு தான் தன்னுடைய அண்ணனுக்காக ஆசை ஆசையாக இது போன்ற பிரேஸ்லெட்டை அவனுடைய பிறந்தநாள் பரிசாக கஷ்டப்பட்டு வாங்கிய அந்த நாட்களின் ஞாபகங்கள் அவளுடைய நினைவலைகளில் வந்து சென்றது.
அதை நினைத்து பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்திய ஆராதனா, “போதும் பிரவீன். உன்னோட டிராமாவ எல்லாத்தையும் முடிச்சிட்டேனா இங்க இருந்து கிளம்பு. ஒரு வேளை உனக்கு போக இஷ்டம் இல்லனா, பரவால்ல. நீ இங்கயே இரு. நான் கிளம்புறேன்.” என்றவள் எழுந்து வெளியே செல்வதற்காக நடக்க தொடங்கி விட்டாள். 🏃♀🏃♀🏃♀
வேகமாக அவள் பின்னே சென்று அவளை தடுத்து நிறுத்திய பிரவீன், தன் கையில் இருந்த பிரேஸ்லெட்டை அவளுடைய கையில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு, “இத நான் உனக்காக தான் வாங்கினேன். இத வச்சுக்கிறதும், தூக்கி குப்பையில போடுறதும், உன்னோட இஷ்டம். நீ உனக்கு என்ன தோணுதோ, அத பண்ணிக்கோ.” என்றவன், திரும்பி பார்க்காமல் அந்த கோயிலில் இருந்து சென்று விட்டான்.
தன் கையில் இருந்த அந்த விலை உயர்ந்த பிரேஸ்லெட்டையும் சென்று கொண்டு இருக்கும் பிரவினையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆராதனா. இப்போது தான் அந்த பிரேஸ்லெட்டை வைத்து கொண்டு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அங்கு ஓரமாக பூக்களை கொட்டுவதற்காக இருந்த குப்பை தொட்டியில் இதை தூக்கி எறிந்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்து பார்த்தாள் ஆராதனா.
ஆனால் இன்னும் அவளுடைய ஆழ் மனதில் தன்னுடைய அண்ணனின் மீது அவளுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கும் சிறிய பாசம் அதை அவளை செய்ய விடவில்லை. அதனால், “எப்ப பாத்தாலும் இவனுக்கு நம்மள டென்ஷன் பண்றதே வேலையா போச்சு.” என்று முணுமுணுத்தவள், தன்னுடைய ஹேண்ட் பேக்கில் அந்த பிரேஸ்லெட்டை போட்டுவிட்டு அந்த கோயிலில் இருந்து கிளம்பினாள்.
அங்கு நடந்தவற்றை அனைத்தையும் தூரத்தில் இருந்து தன்னுடைய போனில் ரெக்கார்ட் செய்த சோபியா, தன்னுடைய வேலை சரியாக நடந்து முடிந்து விட்டதால் அவளும் அங்கு இருந்து கிளம்பி விட்டாள்.
நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்…
பிராங்கிளின் மற்றும் க்ரிஷாவும், தங்களுடைய அலுவலகத்தின் உள்ளே நுழைந்து விட்டனர் என்ற தகவலை செக்யூரிட்டி வாயிலாக அறிந்து கொண்ட சிவா, வேகமாக சந்தோஷை தன்னுடன் அழைத்துக் கொண்டு கையில் பூங்கொத்துடன் ஆபீசின் வாசலுக்கு சென்றான். அவர்களுடன் அந்த ஆபீஸின் முக்கியமான சில ஸ்டாப்புகளும் இருந்தனர். அவர்கள் வந்த கார் தரை தளத்தில் வந்து நின்றவுடன், அங்கே இருந்த செக்யூரிட்டிகள் அந்தக் காரின் கதவை திறந்து விட, முதலில் அந்த காரின் உள்ளே இருந்து இறங்கி வந்தான் பிராங்கிளின்.
அவன் கேஷுவலாக ஒரு டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும், ஸ்போர்ட்ஸ் ஷுவும் அணிந்து இருந்தான். அவனுடைய முகத்தில் ஒரு விரிந்த புன்னகை இருந்தது. 😁 😁 😁 சந்தோஷிற்கு முன்பே சிவா நின்று கொண்டு இருந்ததால் முதலில் வந்த பிராங்க்ளினிடம் தன் கையில் இருந்த பூங்கொத்தை கொடுத்த சிவா, “வி வெல்கம் யூ சார்.” என்றான். அதை புன்னகை முகத்துடன் பெற்று கொண்ட பிராங்கிளின், “நன்றி ரொம்ப நன்றி.” என்று வெளிநாட்டவர்களுக்கு உரிய பாணியில் கொஞ்சம் தமிழில் அழகாக பேசினான். 😁 😁 😁
பிராங்க்ளினை பார்த்த பெண்கள் அனைவரும், “அமெரிக்கனா இருந்தாலும், சூப்பரா தமிழ் பேசுறாரு இல்ல..!!! ஆளு சும்மா மொழு மொழுன்னு கியூட்டா இருக்காரு. இனிமே வருண் சார், ஹரி சாருக்கு அப்புறம், எல்லா பொண்ணுங்களும் இவர தான் சைட் அடிக்க போறாங்க.” என்று தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு இருந்தனர். 😍 😁 😁 😁
பிராங்கிளின் தமிழில் பேசுவதை கண்டு ஆச்சரியப்பட்ட சிவா, “உங்களுக்கு தமிழ் தெரியுமா சார்..??” என்று உற்சாகமான குரலில் கேட்டான். “கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இந்த தமிழ் மொழியும், தமிழ் மக்களையும், இந்தியாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால என்னோட டியர் ஃப்ரெண்ட் கிட்ட இருந்து நான் தமிழ் பேச கத்துக்கிட்டேன்.” என்று சிரித்துக் கொண்டே அழகாக சொன்னான். 😁 😁 😁
இப்போது சிவாவிடம் அவன் க்ரிஷாவை பற்றி பேசிய பின்பு தான் இன்னும் க்ரிஷா காரில் இருந்து இறங்கவில்லை என்று உணர்ந்த பிராங்கிளின் தாங்கள் வந்த காரின் அருகே சென்று, “இன்னும் என்ன பண்ற க்ரிஷா..?? எவ்ரி ஒன் இஸ் வெயிட்டிங் ஃபார் யூ.” என்று சொல்ல, “ஐ அம் கம்மிங். ஒரு இம்பார்டன்ட் ஆன கால், அதான் பேசிட்டு இருந்தேன்.” என்று சொன்னபடியே அந்த காரில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தாள் க்ரிஷா.
அவள் ஒரு டிபிக்கல் பிசினஸ் உமன் என்பதன் அடையாளமாக, ஒரு வெள்ளை நிற பிளேசர் அணிந்து இருந்த க்ரிஷா அதற்கு மேட்ச் ஆக ஷூவும், பேண்டும், அணிந்து இருந்தாள். கான்ட்ராஸ்ட் ஆக அவளுடைய கண்களில் ஒரு விலை உயர்ந்த கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தாள். வெறும் தோல் வரை இருந்த அவளுடைய கூந்தல், காற்றில் பறந்து கொண்டு இருந்தது. இப்படி ஒரு பக்காவான என்ட்றியில் மிடுக்கான தோரணையுடன், தன்னுடைய கோட்டை அட்ஜஸ்ட் செய்தபடியே, அந்த காரில் இருந்து இறங்கினாள் க்ரிஷா. அவளுடைய கையில் ஒரு லேப்டாப் பேக்கும், ஹேண்ட் பேக்கும், இருந்தது.
க்ரிஷாவின் கையைப் பிடித்து அவளை தனக்கு முன்னே நிறுத்திய பிராங்கிளின், “ஷீ இஸ் க்ரிஷா.” என்றான். அவன் தன்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதால் பார்மாலிட்டிக்காக அனைவரையும் பார்த்து புன்னகைத்தாள் க்ரிஷா. 😁 😁 😁 க்ரிஷாவின் ஆடை முதல் அவளுடைய ஒவ்வொரு செய்கைகள் வரை அனைத்தும் அவளுடைய ஆளுமை தன்மையை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. அதனால் அங்கு இருந்த அனைவரும் அவளை வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தனர். 😱
இதுவரை இவ்வளவு நேர்த்தியான ஒரு பிசினஸ் உமனை அவர்கள் யாரும் கண்டதில்லை என்பதால், இவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த கூட்டத்தில் சந்தோஷும் ஒருவன். அதனால் தான் செய்ய வேண்டிய வேலையை அவன் மறந்து விட்டான். சந்தோஷின் அருகே நின்று கொண்டு இருந்த சிவா, “என்ன சந்தோஷ் வந்த முதல் நாளே வேலையை விட்டு போறதுக்கு ஆசையா உனக்கு..?? அவங்க உன்னோட பாஸ். அவங்கள போய் இப்படி வாய பொளந்துட்டு பாத்துட்டு இருக்க..!!! போய் முதல்ல அவங்க கிட்ட அந்த பொக்கேவ குடுத்து அவங்கள வெல்கம் பண்ணுடா. அவங்க கோவிச்சுக்க போறாங்க.” என்று அவசரமான குரலில் மெதுவாக சந்தோஷின் காதுகளில் சொல்ல, அப்போது தன் வந்த வேலையை விட்டுவிட்டு இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று உணர்ந்து கொண்ட சந்தோஷ், தன் கையில் இருந்த ஃபிளவர் பொக்கேவை கிரிஷாவின் முன் நீட்டி, “வெல்கம் மேம்.” என்றான்.
அவனை சிறிதும் கண்டு கொள்ளாத க்ரிஷா, “எனக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் சுத்தமா பிடிக்காது.” என்றவள், பிராங்க்ளினை அழைத்துக் கொண்டு நேராக வருணின் கேபினை நோக்கி சென்றாள். என்ன டா இவ்ளோ ஏற்பாடு பண்ணி கடைசியில எல்லாமே புஸ்ஸுன்னு போயிருச்சே..!!! என்று நினைத்த சந்தோஷ், வேறு வழியின்றி சிவாவுடன் செல்பவர்களை பின் தொடர்ந்தான்.
க்ரிஷாவின் வருகையை பற்றி கேள்விப்பட்ட ஹரி, அவளை பார்ப்பதற்காக முக்கியமானவர்கள் மட்டும் பயன்படுத்தும் லிப்டில் கிரவுண்ட் ஃபுளோரை நோக்கி வந்து கொண்டு இருந்தான். வருணின் கேபினுக்கு செல்வதற்காக லிப்ட்டின் அருகே வந்து நின்ற க்ரிஷாவின் பார்வைகளில் லிப்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஹரி பட்டான். க்ரிஷாவை பார்த்த ஹரி நட்பாக புன்னகைக்க, பார்மாலிட்டிக்காக அவனைப் பார்த்து புன்னகைத்த க்ரிஷா, பின் அவனை கண்டு கொள்ளாமல் பிராங்க்ளினுடன் அந்த லிப்டின் உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் வேண்டும் என்றே தான் தன்னை நிராகரிக்கிறாள் என்று புரிந்து கொண்டான் ஹரி. க்ரிஷாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் இது மாதிரியான நிராகரிப்புக்கெல்லாம் ஏற்கனவே அவன் நன்கு பழகி இருந்தான். அது மட்டும் இன்றி ஏற்கனவே அவன் ஆராதனாவை பற்றி நினைத்து கவலையில் இருந்ததால், அவன் கிரிஷாவை பற்றி யோசிக்கும் மன நிலையில் இருக்கவில்லை. அதனால், தான் எப்படியும் இங்கே இருந்தால் அவளுடன் ஆன மீட்டிங்கில் தானும் கலந்து கொள்ள வேண்டியது இருக்கும் என்று நினைத்தவன், ஆபீஸில் இருந்து கிளம்பி வெளியே சென்று விட்டான்.
நேசம் தொடரும் ❤️