Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 161

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 161

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 161: என்னால அவளை அசிங்கப்படுத்த முடியாது (பாகம் 2)


ஆடை வடிவமைப்பாளரிடம் தன்னுடைய அளவுகளைக் கொடுத்துவிட்டு வந்து செண்பகத்துடன் சோபாவில் அமர்ந்தாள் ரித்திகா.

பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் தங்களுடைய திருமணம் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருக்கும். ஆனால், இதுவரை திருமணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றி கனவிலும் கூட யோசித்துப் பார்த்திராத ரித்திகாவுக்கு அப்படி எந்த ஆசையும் இருக்கவில்லை. இருந்தாலும் அவளும் பெண் தானே…!!!
அதனால் தன் முன் இருக்கும் அனைத்தையும் ஒரு கணம் பார்த்தவள், தலை முதல் கால் வரை தங்க வைர ஆபரணங்களை அணிந்து திருமணக் கோலத்தில் தான் வருணோடு மணமேடையில் நின்றால் அது எப்படி இருக்கும் என்று அவள் ஒரு நொடி கற்பனை செய்து பார்த்தாள். 😍

அந்தக் கற்பனை அவளுக்கு மிகவும் பிடித்திருக்க, சில நொடிகள் அவள் வருணைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்க;

“ஓய்..!!! என்ன பண்ற நீ..?? உனக்குத்தான் கல்யாணம்னாலே பிடிக்காது இல்ல..??? அப்புறம் எதுக்கு உனக்கு இப்படி எல்லாம் ட்ரீம்ஸ் வருது..??? கண்டதை யோசிச்சுக் கற்பனை பண்ணாத ரித்திகா. இது சித்தார்த்துக்காகவும், செண்பகம் அம்மாவுக்காகவும், சும்மா ஃபார்மாலிட்டிக்கு நடக்கிற கல்யாணம்.

இதை இப்போ நீ உண்மைன்னு நினைச்சுட்டா, அப்புறம் அம்மா சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம் வருண் சாரை உனக்கு அவர் உன்னோட ஹஸ்பண்டுன்னு தோணும். அப்புறம் அவர் கூட வாழ்ந்து பார்த்தா என்னான்னு தோணும். ஆனா நீ அதுக்காகவா கல்யாணம் பண்ணிக்கிற..?? உன்னோட டெசிஷன்ல நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். இந்தக் கல்யாணத்துல அவருக்கு எப்படி விருப்பம் இல்லையோ, உனக்கும் விருப்பம் இருக்கக் கூடாது. அதான் எல்லாருக்கும் நல்லது.” என்று அவளுடைய மனசாட்சி அவளிடம் சொல்ல,

“அதுவும் சரிதான். நான் வருண் நாராயணனோட பொண்டாட்டி இல்ல. அப்படி இருக்கணும்னு நான் ஆசைப்படல. நான் சித்தார்த்தோட அம்மா. அவனுக்கு அம்மாவா மட்டும் கடைசி வரைக்கும் இருந்துக்கிறேன்.” என்று தனக்குள் தன்னுடைய முடிவை இன்னும் உரக்க, ஸ்ட்ராங்காகச் சொல்லிக் கொண்டாள்.


நாராயணன் பேலஸில் இருந்து வெளியே வந்த ஆராதனா, தான் வழக்கமாகச் செல்லும் ஒரு சிவன் கோயிலுக்கு கேப் பிடித்துச் சென்றாள். சில நிமிடப் பயணத்திற்குப் பின் அந்த கோயிலுக்கு வந்தடைந்த ஆராதனா, அந்தக்கோயிலின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு கோயிலின் உட்பிரகாரத்திற்குச் சாமி கும்பிடுவதற்காக வந்தாள். அவள் சாமியின் கருவறையின் அருகே செல்லும்போது, அங்கே அவளுடைய அம்மா தேவி கையில் பூசைத் தட்டுடன் நின்றுகொண்டு இருந்தாள். அதை கவனித்த ஆராதனா, இப்போது தன்னுடைய அம்மா தன்னைக் கண்டுகொண்டால் கண்டிப்பாக அவள் தன்னுடன் வந்து பேசுவாள் என்று நினைத்துப் பயந்தவள், அங்கிருந்த ஒரு தூணிற்குப் பின்னே மறைந்து கொண்டு தூரத்தில் இருந்து தன்னுடைய அம்மாவைப் பார்த்தாள்.

அப்போது அவளுடைய அம்மா ஆராதனாவின் பெயரையும் நட்சத்திரத்தையும் அங்கிருந்த அர்ச்சகரிடம் சொல்லி, “சாமி இன்னைக்கு என்னோட பொண்ணுக்குப் பிறந்த நாள். அவ நல்லா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணி சாமிக்கு அர்ச்சனை பண்ணுங்க.” என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள் தேவி. 😢 “கண் கலங்காதீங்க அம்மா? உங்க பொண்ணு நூறு வருஷத்துக்குச் சந்தோஷமா வாழ்வா. அந்த ஈஸ்வரரோட அருள் எப்பவும் அவளுக்கு இருக்கும்.” என்று சொல்லி தேவியின் கையில் இருந்த அர்ச்சனைக் கூடையை வாங்கிக்கொண்டு போய் சுவாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, மீண்டும் அந்த கூடையைத் தேவியிடம் ஒப்படைத்தார்.

அந்தக் காட்சியைத் தூரத்தில் இருந்து பார்த்த ஆராதனா, “நான் உன்கிட்ட முன்ன மாதிரி பேசாம இருந்தாலும், உனக்கு என் மேல இருந்த பாசம் குறையவே இல்ல இல்ல அம்மா..!!!! அப்பாவும் பிரவீணும் பண்ண வேலையால தான் இப்ப நான் உன்னை விட்டுப் பிரிஞ்சு இருக்கேன். பாரு இன்னைக்கு என்னோட பிறந்த நாள். ஆனா, நான் யாரும் இல்லாத அனாதை மாதிரி எல்லாரும் இருந்தும், தனியா இந்தக் கோயிலுக்கு வந்து இருக்கேன். எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு மா. என்னால இந்த நிலைமையில உன்கிட்ட வந்து பேசக் கூட முடியல. ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..???” என்று நினைத்த ஆராதனா தண்ணீர் நிறைந்த கண்களுடன் தூரத்தில் இருந்து தன்னுடைய அம்மாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 😭 😭 😭

இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து சோபியாவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். சிறிது நேரம் தன்னுடைய அம்மா அங்கிருந்து செல்லும் வரை தூரத்தில் இருந்தே காத்திருந்த ஆராதனா, தேவி கோவிலில் இருந்து வெளியே சென்றுவிட்டாள் என்று உறுதி செய்த பின் சாமி கும்பிடுவதற்காக ஈசனின் கருவறைக்குள் சென்றாள். ஈசனின் முன்னே நின்று தன்னுடைய மனக்குமுறல்கள் அனைத்தையும் ஈசனிடம் கொட்டித் தீர்த்தவள்,

“சத்தியமா இதுக்கு மேல எந்தக் கஷ்டத்தையும் தாங்கிற சக்தி எனக்கு இல்ல சாமி. என்கிட்ட எல்லாமே இருந்தும், எனக்கு எதுவுமே இல்லாத மாதிரி இருக்கு. இந்த நிமிஷம் எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் என் ஹரி மட்டும்தான். ப்ளீஸ் அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்சுராதீங்க. வாழவும் முடியாம, சாகவும் முடியாம, வாழும் போதே நான் இங்க நரக வேதனையை அனுபவிச்சிட்டு இருக்கேன். போதும் இது எல்லாத்தையும் நிப்பாட்டி என்னைக் காப்பாத்துங்க. இதுக்கு மேலயும் இது எல்லாத்தையும் என்னால தாங்க முடியாது.
ஒன்னு இந்தப் பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணி நீங்க என்னை என் ஹரி கூட சேர்த்து வைங்க.

இல்ல எனக்கு அந்தச் சந்தோஷத்தைத் தருவதற்கு உங்களுக்கு மனசு வரலைன்னா, நீங்க கொடுத்த இந்த வாழ்க்கையை நீங்களே முடிச்சு வச்சிருங்க. என்னால சத்தியமாக ஹரி இல்லாத வாழ்க்கையை யோசிச்சுக்கூடப் பார்க்க முடியாது சாமி. ப்ளீஸ் ஏதாவது ஒரு மேஜிக் பண்ணுங்க.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் கடவுளுடன் தனக்குள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருந்தாள் ஆராதனா. 🙏 😭 😭 😭

– நேசம் தொடரும் ❤️

You may also like

Leave a Comment

About Me

Featured