Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 156

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 156

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 156: என்னோடு நீ இருந்தால் (பார்ட் 2)

சித்தார்த்: முதலில் ஆமாம் என்று தன்னுடைய தலையை மேலேவும் கீழேயும் ஆட்டியவன், பின்பு பயத்தில் இல்லை என்று ஆடினான். 😔

விஷ்வா: அவனைப் பார்த்து ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவன், “சோ, நீ உன் அப்பாவை பார்த்து பயப்படுறல….??? ஆனா ஏன் சித்தார்த்..??? அப்பா உன்ன அடிச்சதில்ல, ஏன் ஒரு வார்த்தை கோவமா பேசி உன்ன திட்டினது கூட இல்ல. அப்புறம் ஏன் நீ அப்பாவை பாத்து பயப்படுற..??” என்ற சோகமான குரலில் கேட்டான். 😟

சித்தார்த்: “எனக்கு தெரியல. ஆனா உங்கள பாத்தா, எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.” என்றவன் அவனுடைய குட்டி விரலால் தன்னுடைய ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சிறியதாக சுருக்கி காட்டி சைகை செய்து அவனுடை மழலை குரலில் சொன்னான்.

விஷ்வா: ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன், “ஓகே பைன். உனக்கு என்னை பிடிக்குமா..??” என்று கேட்டான்.

சித்தார்த்: “ம்ம்…. பிடிக்குமே…!!!” என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னான்.

விஷ்வா: அதைக் கேட்டு மகிழ்ந்தவனின் மனதில் ஒரு விபரீத கேள்வி தோன்ற அதையும் தன் மகனிடமே கேட்டு விட்டான். “உனக்கு அப்பாவ அதிகமாக பிடிக்குமா..??? இல்ல ராகா அம்மாவ அதிகமா பிடிக்குமா..???” என்று தயங்கிய குரலில் அவனிடம் கேட்டான். ஒரு சராசரி தந்தையாக தன்னுடைய மகன் தன்னை தான் அதிகம் பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசை அவனுக்கும் இருந்தது.

சித்தார்த்: தன்னுடைய குட்டி ஆள் காட்டி விரலை அவனுடைய மென்மையான கன்னத்தில் தட்டிய படி விட்டத்தை பார்த்து சிறிது நேரம் யோசித்தவன், “எனக்கு உங்களையும் புடிக்கும் தான்… ஆனா, ராகா அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ உங்கள விட ரொம்ப ஸ்வீட். அவ எப்பையுமே என் கூட ஜாலியா பேசுவா, சிரிப்பா, விளையாடுவா. ஆனா நீங்க தான் என் கூட விளையாடவே மாட்டீங்களே…!!!” என்று தன் மனதில் இருந்தவற்றை உண்மையாக அப்படியே அப்பாவித்தனமாக அவனிடம் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு மனம் உடைந்த விஷ்வாவிற்கு தான் தன்னுடைய குழந்தையிடம் பழகி இருக்கும் விதத்தை நினைத்து வருத்தம் வருவதற்கு பதிலாக ராகவியின் மீது கோபம் தான் வந்தது. அதனால், “அந்த சூனியக்காரி இப்படி எல்லாம் பண்ணி தான் என் பையன மயக்கிட்ட போல.” என்று நினைத்தவன், “அப்பாவும் அப்படி எல்லாம் உன்கிட்ட இருந்தா, உனக்கு  அப்பாவையும் பிடிக்குமா…???” என்று சித்தார்த்திடம் அப்பாவியாக கேட்டான். 😟

சித்தார்த்: விஷ்வாவை பார்த்து லேசாக புன்னகைத்தவன், “ம்ம்ம்.. பிடிக்கும்.” என்றான். 😁 😁 😁

இறுதியாக தன் மகனின் அந்த வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்தான் விஷ்வா. 🥰

நள்ளிரவு ஒரு மணி…. 

சேலம் மாவட்டம் ஏற்காடு பதகுதியின் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு தன்னுடைய காரில் வந்து இருந்தான் சிவா. ஆராதனா கொடுத்த அட்ரஸ் செய்யும் அவள் சொன்ன விவரங்களையும் வைத்து அந்த ராத்திரி நேரத்தில் எப்படியோ ஒரு வீட்டை கண்டுபிடித்து அதன் வாசலுக்கு சற்று தொலைவில் வந்துச் காரை நிறுத்தினான் சிவா. அது ஒரு அந்த காலத்தை சேர்ந்த மன் சுவற்றால் கட்டப்பட்ட வீடு. அந்த வீட்டின் வாசல் வரை வந்துவிட்ட சிவா, போகலாமா வேண்டாமா என்று யோசித்து தயங்கி நின்று கொண்டு இருந்தான். 

அப்போது அவனுடைய மனதில், “டேய் இது நம்ம ஊரு மாதிரி இல்ல டா, இது கிராமம். இங்க பாடி கார்டு  துப்பாக்கிய வச்சுக்கிட்டு எல்லாம் நிக்க மாட்டானுங்க. வீட்டுக்கு நாலு நாட்டு நாய் தான் வளர்த்துட்டு இருப்பாங்க. நம்ம பாட்டுக்கு தில்லா உள்ள போயி… அந்த நாய் எல்லாம் புடிச்சு நம்மளைய கவ்வி இஷ்டத்துக்கு நாலு அஞ்சு கிலோவ உருவிட்டு போயிருச்சுன்னா, முதலுக்கே மோசமா போயிடுமே டா…!!! எனக்கு பிஸ்டல நினைச்சு கூட பயமா இருந்தது இல்லை. ஆனா இந்த நாயோட பல்ல நெனச்சு பாத்தாலே பயமா இருக்கே…!!! ஆண்டவா நீ தான் பா உன் புள்ளைய காப்பாத்தணும்.” என்று நினைத்தவன், நான் கேட்டை திறந்து உள்ளே சென்றால் சடத்தம் வந்து யாராவது கண் விழித்து வெளியே வந்து விடுவார்கள் என்று நினைத்து, கைப்பிடி சுவற்றின் மேலே ஏறி உள்ளே குதித்தான்.

அவனுடைய கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை நாய்க்கு சாப்பாடு வைக்கும் தட்டின் மீது வந்து குதித்தான் சிவா. அந்த சத்தத்தால், அருகே தூங்கிக் கொண்டு இருந்த இரண்டு நாய்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து சிவாவை பார்த்து குறைக்க தொடங்கி விட்டன. 🐶 🐶 அதனால் பயந்து போன சிவா எங்கே அவைகள் தன்னை கடித்துவிடப் போகிறது என்று நினைத்து பயந்து அங்கு இருந்து வேகமாக வேறு புறமாக ஓடினான். நல்ல வேலையாக அந்த நாய்களின் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததால், அவைகளால் இவனை துரத்திக் கொண்டு அவன் பின்னே வர முடியவில்லை. 

அதனால் இம்முறை அந்த நாய்கள் பலத்த சத்தத்துடன் குறைக்க தொடங்கின. 🐕 🐕‘வாழ்றதுக்கு உசுரு முக்கியம் டா சாமி’ என்று நினைத்து அந்த வீட்டின் பின் பக்கம் ஓடி சென்றுவிட்டான் சிவா. ஆனால் எதிர்பாராத வீதமாக அங்கே இரண்டு மூன்று காளை மாடுகள் கட்டப்பட்டு இருந்தன. இருட்டில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்த அதன் கொம்புகள் பல பலவென்று மின்ன… அவற்றைப் பார்த்து பயந்து போன சிவா, “ஐயையோ… இதெல்லாம் ஒரு வேளை ஜல்லிக்கட்டு காளையா இருக்குமோ..!!! இதுங்க முழிக்கிற முழியே சரியில்லையே…!!! இது எங்க ஏரியா உள்ள வராதன்னு குரூப்பா ஒன்னு சேந்து வந்து கொம்பால நம்மள அட்டாக் பண்ணிருச்சுன்னா.. என்ன பண்றது..???” என்று நினைத்தவன், அவைகள் அனைத்தும் கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு கொள்ளை புற வாசல் கதவின் அருகே சென்றான். 

அப்போது அவன் அந்த வீட்டின் கதவை திறப்பதற்காக தன்னுடைய கையை அதன் மீது வைக்க, அந்த கதவு தானாக திறந்து கொண்டது. அதனால்  அதிர்ந்து போன சிவா, “போச்சு போ… ஏதோ ஒரு பேய் வீட்டுல வந்து மாட்டிக்கிட்ட டா சிவா.” என்று மெல்லிய குரலில் முனகினான் சிவா. அப்போது அந்த வீட்டிற்குள் இருட்டில் இருந்து வெளியே வந்த திவ்யா, “ஆமா உனக்கெல்லாம் என்ன பாத்தா பேய் மாதிரி தான் இருக்கும். அதானே அன்னைக்கு நீ என்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு என்கிட்ட எதுவும் சொல்லாம தப்பிச்சு ஓடி போயிட்ட..!!! அப்புறம் எதுக்கு இங்க வந்த..??? நான் உயிரோட இருக்கனா இல்ல நெஜமாலுமே செத்து பேய் ஆயிட்டேன்னான்னு பாக்க வந்தியா..???” என்று எரிச்சலான குரலில் கேட்டாள். 😡

சிவா: “இந்த டிம் லைட்ல உன்ன இந்த கெட்டப்ல பாக்குறதுக்கு சத்தியமா கொஞ்சம் பயமா தான் இருக்கு டி. அருந்ததி படத்தில் வேலைக்காரி கெட்டப்ல ஒரு பேய் வரும்ல அதே மாதிரி இருக்க. அதான் உனக்கு நான் தான் வந்து இருக்கேன்னு தெரிஞ்சிருக்குல்ல.. அப்புறம் எதுக்கு இப்படி பேய் மாதிரி வந்து என்னை பயமுறுத்துற..???” என்று சற்று பயந்த குரலில் சொன்னான். 

திவ்யா: அங்கு ஓரமாக கிடந்த ஒரு விரகு கட்டையை தன் கையில் எடுத்தவள், “என்ன பாத்தா உனக்கு பேய் மாதிரி இருக்கா…?? அதுவும் என்ன வேலைக்காரி பேய்ன்னு வேற சொல்றியா…??? உன்னோட கார் வர சவுண்ட கேட்டவுடனே நீ என்ன நெனச்சு ஃபீல் பண்ணி என்ன பாக்குறதுக்கு ஆசையா வந்து இருக்கேன்னு நெனச்சு அவசர அவசரமா யாருக்கும் தெரியாம இங்க உன்ன பார்க்க வந்தேன் தெரியுமா..??? ஆனா உனக்கு எவ்ளோ வாய் கொழுப்பு இருந்தா, நீ இப்படி எல்லாம் பேசுவ..??? 

உன்ன களவாணி பையன்னு சொல்லி சத்தம் போட்டு ஊர்ல இருக்கிறவங்க கிட்ட பிடிச்சு குடுக்கட்டுமா…??? இனிமே திமிரா பேசுவியா..?? பேசுவியா..???” என்று கேட்டு அவளுடைய கால்களில் சரமாரியாக அடித்தாள். 

நிலாவட்டம் நெத்தியில பாடலில் அவர்கள் குச்சியை குறுக்கே வைத்து அதற்குள் தாவி… தாவி.. நடனம் ஆடுவதை திவ்யாவின் அடிகளில் இருந்து தப்பிப்பதற்காக, “ஹே ப்ளீஸ் சாரி.. அதிக்கத டி.” என்று சொல்லி கெஞ்சிய படி நடனமாடிக் கொண்டு இருந்தான் சிவா. பாவம் அவனுக்கு வலித்தாலும், இந்த ராத்திரி நேரத்தில் அவனால் சத்தமாக வலிக்கிறது என்று கூட சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனைப் பார்த்து இறக்கப்பட்ட திவ்யா தன் கையில் இருந்த விரகு கட்டையை தூக்கி போட்டவள், “அந்த பயம் இருக்கட்டும். இப்ப இங்க நீ எதுக்கு வந்த..??? அத முதல்ல சொல்லு.” என்று கோபமாக கேட்டாள்.. 😒 😡

சிவா: நான் சொல்றதெல்லாம் இருக்கட்டும் டி. முதல்ல நீ இங்க வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லு. அந்த பன்னாடைய கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே சொல்லி, அவன் கூட எங்கேஜ்மென்ட் பண்ணிட்டியா..???” இன்று பதட்டமான குரலில் கேட்டான்.

திவ்யா: “ஆமா எங்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சு. நான் அந்த  பன்னாடைய தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.” என்றவள், தன் கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை அவன் முன் தன்னுடைய கையை நீட்டி காண்பித்தாள். அங்கு இருந்த இருளில்.. அவள் கையில் இருந்த அந்த தங்க மோதிரம் பிரகாசமாக ஜொலித்தது. 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured