Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 8

சாபமாய் வந்த என் உயிரே CH 8

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 8: அமுதாவுக்கு கல்யாணம்

அமுதாவின் குடும்பத்தினர்கள் அவள் pass ஆகி விட்டதால் தங்களது சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்து உணவு சமைத்து அவர்களுக்கு விருந்து பரிமாறிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது அந்த கூட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஒரு கிழவி தன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் “ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி சொந்த பந்தங்க எல்லாரையும் ஒரே இடத்துல பாக்குறதுக்கு மனசுக்கு ரொம்ப ‌சந்தோசமா இருக்குப்பா மணி. அடுத்து நம்ம வீட்ல என்ன விசேஷம்?” என்று கேட்க,

“அடுத்து வேற என்ன விசேஷம் கிழவி! நம்ம அமுதாவுக்கும், வெற்றிக்கும் சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணி முடிச்சிட வேண்டியது தான்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அமுதாவின் மூத்த அண்ணன் மணிகண்டன். 

அதைக் கேட்டவுடன் சாப்பிட்டுக் கொண்டு இருந்த அமுதாவிற்கு பொறை ஏறிவிட, அவள் தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு சத்தமாக இரும்பினாள்.

அதனால் அவளுக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த வெற்றி தன் முன்னே இருந்த ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அவள் முன்னே நீட்டி “பொறுமையா சாப்பிடு அமுதா‌. கல்யாண பேச்சை ஆரம்பிச்ச உடனே என்ன உனக்கு வெட்கம் வந்துருச்சா?” என்று கிண்டலாக கேட்க,

தன் வாயில் இருந்த தண்ணீரை துப்பி விட்டு இன்னும் சத்தமாக இரும்பிய அமுதா,

“அடப்பாவி வெற்றி.. நான் ஷாக் ஆகி பொறை ஏறி இரும்பிக்கிட்டு இருந்தா, உனக்கு நான் வெட்கப்படுற மாதிரி தெரியுதா? உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா டா?” என்று நினைத்து அவனை பாவமாக பார்த்தாள். 

அவர்களது பார்வை பரிமாற்றத்தை தவறாக புரிந்து கொண்ட அமுதாவின் அண்ணன் மணிகண்டன் “நல்லவேளை.. அமுதா படிச்ச புள்ள. அவளுக்கு ஒழுங்கா படிக்காத நம்ம வெற்றிய கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இருக்குமோ இல்லையோன்னு நினைச்சு நான் இத்தன நாளா பயந்துகிட்டு இருந்தேன்.

இப்ப இவங்க ரெண்டு பேரும் கண்ணாலயே பேசிக்கிறதை பார்த்தா, இவங்களுக ஒருத்தர ஒருத்தர பிடிச்சிருக்கிற மாதிரி தான் தெரியுது.” என்று நினைத்து சந்தோஷப்பட்டவர், தன் மனைவி அன்னபூரணியிடம் “நம்ம ஜோசியரை வர சொல்லி எப்ப நல்ல நாள் இருக்குன்னு பாரு அன்னபூரணி. சீக்கிரம் இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் பண்ணிடலாம். நம்ம கடமையை எல்லாம் செஞ்சுபுட்டா தான் நமக்கு நிம்மதியா இருக்கும்.” என்றார்.

அமுதாவை அப்படியே தன் பார்வையால் விழுங்கி விடுபவனை போல பார்த்த வெற்றி வெட்கத்துடன் அவளைப் பார்த்து “நமக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல அமுதா. ஐயோ.. அத நினைச்சாலே அப்படியே ரெக்க கட்டி வானத்துல பறக்கிற மாதிரியே இருக்கே! நான் உன் மேல எவ்ளோ ஆசை வச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமா டி?

 அதே மாதிரி உனக்கும் என்ன பிடிக்கும் தானே!” என்று தன் மனதில் கேட்டக் கொண்டு, என்னவோ அவள் அதற்கு ‌பதில் சொல்ல போவதைப்போல அவளையே இமைக்க மறந்து ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

இப்போது தான் திருமணத்தைப் பற்றி பேச தொடங்கினார்கள். அதற்குள் தன் குடும்பத்தினர்கள் உடனே நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கும் அளவிற்கு வேகமாக இருக்கிறார்களே என்று நினைத்து பதறிய அமுதா,

“அண்ணா‌‌.. ஒரு நிமிஷம் அண்ணா.” என்று தயக்கத்துடன் சொல்ல, அவள் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று நினைத்த மணிகண்டன் அவள் இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று மட்டும் சொல்லி விடக்கூடாது என்று நினைத்து தங்களது குலதெய்வத்தை மனதிற்குள் வேண்டிக் கொண்டு “என்ன மா? உனக்கு எதாவது வேணுமா?” என்று கேட்க, வேண்டாம் என்று தலையாட்டினாள் அமுதா. 

அதனால் பெருமூச்சு விட்ட மணி மீண்டும் அன்னபூரணியிடம் “நீ ஜோசியர் கிட்ட பேசிட்டு அவர் என்ன சொன்னாருன்னு என் கிட்ட சொல்லு. நல்ல நாள் எப்ப இருக்குனு பாத்துட்டு மத்ததெல்லாம் ‌ அப்புறம் பேசிக்கலாம்.” என்று சொல்ல,

மீண்டும் அண்ணா! என்று ஆரம்பித்தாள் அமுதா. அதனால் கடுப்பான அவளின் இரண்டாவது அண்ணன் பாஸ்கரன் “என்ன நீ இப்படி தான் ஒரு நல்ல விஷயம் பேசும் போது குறுக்க குறுக்க பேசிட்டு இருப்பியா? சாப்பிடும்போது தேவை இல்லாம எதுக்கு பேசுற?” என்று சத்தமாக கேட்க, “ஒன்னும் இல்ல அண்ணா.” என்ற அமுதா சோகமாக தன் தலையை கீழே குனிந்து கொண்டாள். 

அதனால் “டேய் பாஸ்கரா ஏன் டா புள்ளை கிட்ட இப்படி கத்தி சத்தமா பேசுற? அங்க பாரு அமுதா முகமே வாடி போச்சு.

நீ என்னன்னு சொல்லு ஆத்தா..” என்ற மணிகண்டன் கேள்வியாக அமுதாவை பார்க்க, “இப்ப தான் நான் காலேஜ் படிச்சு முடிச்சு இருக்கேன். அதுக்குள்ள எதுக்கு அண்ணா எனக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு யோசிக்கணும்? கொஞ்ச நாள் போகட்டுமே! நான் அடுத்து PG படிக்கலாம்.. இல்லனா வேலைக்கு எங்கயாவது போலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். 

நீங்க உடனே இப்படி கல்யாண பேச்ச ஆரம்பிப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. இப்ப இதெல்லாம் வேண்டாமே! ப்ளீஸ் அண்ணா!” என்று கெஞ்சும் குரலில் தன் பயத்தை மறைத்துக் கொண்டு சொன்னாள் அமுதா.

அவள் சொன்னதைக் கேட்டவுடன் வெற்றியின் முகம் மாறிவிட்டது. அவனையும் அமுதாவையும் மாறி மாறி பார்த்த மணிகண்டன் “இல்ல மா இதெல்லாம் காலக்காலத்துல பண்ணிடனும்.

 உன்னை என்ன கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்கா நாங்க அனுப்ப போறோம்? நீ எப்பவும் எங்க கண்ணுக்கு முன்னாடியே இருக்கணும்னு தான் நம்ம வெற்றிக்கு உன்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு நான் முடிவு எடுத்தேன். முதல்ல கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு பேறவு பாத்துக்கலாம். வெற்றி நம்ம பையன் மா. நீ ஏதாவது பண்றேன்னு சொன்னா அவன் என்ன வேண்டாம்னா சொல்ல போறான்?” என்று கேட்டார்.

அமுதாவிற்கு வெற்றியைப் பிடிக்காது என்றெல்லாம் ஒன்றுமில்லை. அவனை தனது முறை மாமனாக அவளால் பார்க்க முடிந்ததே தவிர, வெற்றியை தன் கணவன் என்ற இடத்தில் அவளால் வைத்து பார்க்கவே முடியவில்லை. அதை எப்படி அவளால் அனைவரின் முன்னிலையிலும் உடைத்து பேசி விட முடியும்? அதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் தயக்கத்துடன் அனைவரையும் அவள் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அவள் அமைதியாக இருந்ததால் மீண்டும் மணிகண்டன் ஏதோ சொல்ல வர, அமுதாவின் சோகமான முகத்தை பார்த்த வெற்றி “வேணாம் மாமா. நீங்க எதுவும் சொல்லாதீங்க. அவளுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும். இப்ப என்ன.. அமுதா என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னா சொல்லிடுச்சு! மேற்கொண்டு படிக்கணும், இல்லனா வேலைக்கு போகணும்னு ஆசைப்படுது.

நம்ம வீட்டிலேயே நல்லா படிச்ச ஒரே ஆளு அமுதா மட்டும் தான். நான் காலேஜ் போனேன்னு தான் பேரு. இன்னும் அதனை அரியர் கிளியர் பண்ணாம இருக்கு எனக்கு. அவ படிக்கணும்னு நினைச்சா படிக்கட்டும் மாமா விடுங்க. அவ எனக்கு தான்னு எங்க சின்ன வயசுலயே முடிவு பண்ணது தானே! அது எப்பவும் மாறாது. கல்யாணம் தானே.. அத எப்ப வேணாலும் பண்ணிக்கலாம். இப்ப படிக்கிற வயசுல அவ படிக்கட்டும்.” என்று நிதானமான குரலில் சொன்னான்.

இதுவரை அமுதா வெற்றியை ஒரு முரட்டு பையனாகவும், முட்டாள் பையனாகவும் தான் பார்த்திருக்கிறாள்.

 முதல்முறையாக அவன் தெளிவாக யோசித்து அதுவும் தனக்காக பேசுவதை பார்க்க அவளுக்கே ஒரு மாதிரி feel ஆகிவிட,

 “நம்ம நினைச்ச அளவுக்கு வெற்றி மாமா ஒன்னும் மோசம் இல்லை தான் போல.” என்று நினைத்தவள், உடனே தன்னை தானே மானசிகமாக தன் தலையில் கொட்டிக் கொண்டு, “ஐயையோ நீ இப்படி எல்லாம் யோசிக்கவே யோசிக்காத அமுதா. அவன் நல்லவனாவே இருந்துட்டு போகட்டும்.

 அதுக்காக அவன் எனக்கு செட் ஆகணும்ல்ல? இவனை எப்படி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என்று நினைத்து ஒரு நொடி அவன் பக்கம் சென்ற தன் மனதை இழுத்து பிடித்து தன்னைத்தானே நிதானப்படுத்தினாள்.

இப்போது இருந்தே அமுதாவிற்காக வெற்றி இவ்வளவு தூரம் யோசிப்பதை கண்டு சந்தோஷப்பட்ட மணிகண்டன்,

 “அதான் உன்னை கட்டிக்க போற வெற்றியே நீ என்ன செஞ்சாலும் உனக்கு துணையா இருக்க தயாரா இருக்கான்! இதுக்கு மேல நாங்க எல்லாம் என்ன சொல்றது? நீங்க ரெண்டு பேருமா பேசி அடுத்து என்ன பண்றதுன்னு முடிவெடுங்க. உங்களுக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ அப்ப பண்ணிக்கோங்க.” என்று சொல்லிவிட,

 “பாத்தியா.. இதெல்லாம் உனக்காக தான் பண்றேன்.” என்று தன் கண்களாலேயே பெருமையாக அமுதாவிடம் சொன்னான் வெற்றி.

அதனால் தானும் தன் கண்களாலேயே “தேங்க்ஸ் வெற்றி” என்றாள் அமுதா.

விஜயை எப்படி எழுப்புவது என்று நினைத்து அவனது அசிஸ்டன்ட் தினேஷ் திரு திருவென விழித்துக் கொண்டு இருக்க, அவனுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் தானாக கண் விழித்து எழுந்து அமர்ந்தான் விஜய். ஆனால் அடித்த போதை அவனுக்கு இன்னும் இறங்காமல் இருக்க, தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த விஜய் “டேய் யாராவது இருக்கீங்களா டா? எனக்கு தலை வலிக்குது. எவனாவது வந்து தொலைங்க டா.” என்று கத்த, வேகமாக எழுந்து அவன் அருகில் ஓடி சென்ற தினேஷ்

 “பாஸ்.. ஆர் யூ ஓகே?” என்று அக்கறையுடன் கேட்க, “அட அறிவு கெட்டவனே! இங்க தலை வலிக்குது தலை வலிக்குதுன்னு ஒருத்தன் கத்துக்கிட்டு இருக்கேன்! ஆர் யூ ஓகே-ன்னு கேக்குறியா நீ? என்ன நக்கலா? போய் லெமன் ஜூஸ் கொண்டு வாடா இடியட்.” என்று சத்தமாக கத்தினான் விஜய்.

“ஒரே ஒரு நிமிஷம் இருங்க பாஸ்.. நான் போய் ஜூஸ் போட்டுட்டு வரேன்.” என்ற தினேஷ் வேகமாக ஓடி சென்று ஜூஸ் போட்டு கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான். அதை குடித்து அரை மணி நேரம் ஆகியும் விஜயின் தலைவலி குறையாததால், மீண்டும் தினேஷை பார்த்து “டேய் போய் காஃபி போட்டுட்டு வாடா.” என்று சொல்ல, அவனும் உடனே சென்று காஃபி போட்டு கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான். அதை குடித்தும் விஜயின் தலைவலி தீரவிஜயின்

அதுவே அவனுக்கு பெரிய டென்ஷனாக மாற, அவன் குடித்ததோடு சேர்ந்து அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனது தலை வெடித்து விடும் அளவிற்கு அவனுக்கு தலை வின் வின் என்று வலிக்க தொடங்கியது. 

அதனால் வேறு வழியில்லாமல் தலைவலி மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு குப்புற அடித்து படுத்து விட்டான் விஜய். அவன் தூங்கிய பின் அவனது நம்பருக்கு ஒரு டைரக்டர் கால் செய்ய, “பாஸ் இப்ப பிஸியா இருக்காரு சார். ஏதாவது இம்போர்ட்டண்ட் ஆன விஷயம்னா என் கிட்ட ‌சொல்லுங்க. அவர் ஃப்ரீ ஆனதுக்கப்புறம் நான் அவர் கிட்ட இன்பார்ம் பண்றேன்.” என்றான் தினேஷ்.

 “புதுசா ஒன்னும் இல்ல தினேஷ். ஆல்ரெடி நம்ம டிசைட் பண்ண மாதிரி என்னோட அசிஸ்டன்ட் போய் லோகேஷன் பார்த்துட்டு வந்துட்டாங்க. மதுரை பக்கம் shooting பண்ணலாம்னு இருக்கேன். அதான் அத பத்தி சார் கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன். அவர் ஃப்ரீயா இருக்கும்போது ஒரு மீட்டிங் எனக்கு அரேஞ்ச் பண்ணு.” என்று டைரக்டர் சொல்ல, “ஓகே சார்.” என்ற தினேஷ் அந்த அழைப்பை துண்டித்தான்.

– காதல் மலரும் 🌹

You may also like

Leave a Comment

About Me

Featured