அத்தியாயம் 74
சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அபிநயா இன்று அமுதாவை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தன் வீட்டில் வேலை செய்யும் போட்டிக்கு கால் செய்து ஏதோ ஒரு ரகசிய திட்டத்தை போடுகிறாள். அதைப் பற்றி அறிந்திருக்காத அமுதா விஜயை தேடிக் கொண்டு அனாமிகா வந்திருப்பதால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அடுத்த சீன் ரெடி ஆவதற்கு நேரம் இருப்பதால் தனது கேரவனுக்கு சென்று விட்டாள்.
தானும் அவள் பின்னையே அவளுடைய கேரவனுக்கு சென்ற வெற்றி “அமுதா.. நீ விஜய் சாரோட வைஃபை பார்த்தியா? இதுக்கு முன்னாடி நம்ம டிவில பாத்தத விட அவங்க நேர்ல ரொம்ப அழகா இருக்காங்க இல்ல! விஜய் சாருக்கு கரெக்டான ஜோடி அவங்க தான். அந்தப் பொண்ணையே எதுக்காக புடிக்கலைன்னு அவர் டிவர்ஸ் பண்ண நினைச்சாரே தெரியல! கடைசியில அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணிக்கிட்டு இப்ப அவங்க சேர்ந்து வாழ்றத பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் தான் பெஸ்ட் பேர்!” என்று உற்சாகமான குரலில் சொன்னான்.
உடனே அவனை அலட்சியமாக திரும்பிப் பார்த்த அமுதா “அவங்க ரெண்டு பேரும் ஹேப்பியா வாழ்றேனு உன் கிட்ட சொன்னாங்களா? அனாமிகா மேடம் அழகாய் இருக்கிறது எல்லாம் உண்மை தான். அதுக்காக விஜய் சாருக்கு அவங்களை பிடிக்கணும்னு எந்த அர்த்தமும் இல்லையே! அவங்க மேல அந்த அளவுக்கு லவ் இருந்தா அவர் எதுக்காக அனாமிகா மேடம் டைவர்ஸ் பண்ணனும்னு நினைக்க போறாரு? எனக்கு என்னமோ இன்னும் அவர் மனசுல பிரியா மேடம் தான் இருக்காங்கன்னு தோணுது.” என்று உறுதியாகச் சொன்னாள்.
“அதை நீ எப்படி சொல்ற? அவர் எனக்கு அனாமிகா மேடம் பிடிக்காதுன்னு உன் கிட்ட சொன்னாரா என்ன?” என்று கேட்ட வெற்றி தன் புருவங்களை உயர்த்தி அவளை பார்க்க, பதில் சொல்ல ஒரு நொடி தயங்கிய அமுதா “அவர் அப்படி சொல்லல தான். இருந்தாலும் எனக்கு தெரியும்.” என்றாள். “அதான் உனக்கு எப்படி அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரியும்னு கேட்கிறேன்!” என்று வெற்றி ஆற்றாமையுடன் அழுத்தி கேட்க, “ச்ச்… என்ன நீ இண்டஸ்டிகேசன் ஆபிசர் மாதிரி நோண்டி நோண்டி கொஸ்டின் கேட்டுட்டு இருக்க? சில விஷயத்தை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது வெற்றி. கண்ணால பாக்கும்போது மனசுக்கு தானா புரியும். அத உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்றதுக்கு எனக்கு தெரியல வெற்றி.” என்று சலிப்புடன் சொன்னாள் அமுதா.
மீண்டும் அப்போது வெற்றி அவளிடம் ஏதோ கேட்க வர, அந்த கேரவனுக்குள் நுழைந்த மேக்கப் ஆர்டிஸ்ட் “மேடம் அடுத்த சீனுக்கு நீங்க ரெடி ஆகணும். காஸ்ட்யூம் எல்லாம் ரெடியா இருக்கு. மேனேஜர் சாரை கொஞ்சம் வெளிய சொல்றீங்களா!” என்று கேட்க, அமுதா சொல்வதற்குள் “நான் வெளிய வெயிட் பண்றேன்.” என்ற வெற்றி தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
சரியாக இன்னும் இரண்டு நாட்களில் அவனுக்கும் அமுதாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறது. விஜய் மற்றும் அமுதாவிற்கு நடுவில் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத பாண்டு இருப்பதாக அவனுக்கு ஏன் தோன்றியது என அவனுக்கே தெரியவில்லை. அதனால் “சம்பந்தமே இல்லாம இப்படியெல்லாம் நம்ம யோசிக்கிறது ரொம்ப தப்பு. நம்மளே இப்படி யோசிச்சா அமுதாவுக்கு அந்த மாதிரி என்னமெல்லாம் வராதா? எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகப்போகுது. விஜய் சாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. அவருக்கும் அமுதாவுக்கும் நடுவுல எதுவும் இல்ல. இனியும் இருக்காது.” என்று தன் புத்தியில் உரைக்கும் அளவிற்கு தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
அனாமிகாவுடன் கோபமாக தனது கேரவனுக்கு சென்ற விஜய் “இப்ப இங்க எதுக்கு டி வந்து சீன கிரியேட் பண்ணிட்டு இருக்க? கோர்ட்ல நீயும் நானும் ஒரு வருஷத்துக்கு சேர்ந்து வாழணும்னு மட்டும் தான் சொல்லி இருக்காங்க. அதுக்காக நான் எங்க போனாலும் நீ பின்னாடியே வந்து என்ன டார்ச்சர் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல, புரிஞ்சுதா?” என்று கேட்க, “அவசியம் இருக்கு விஜய். நான் உன் கூட இருக்கும்போதே என்ன பத்தி யோசிக்காம நீயே மதுர வரைக்கும் விடிய விடிய கார் ஓட்டிக்கிட்டு வந்து அந்த அமுதாவை ஏர்லி மார்னிங் மீட் பண்ற.. அவ கூட நின்னு அப்படியே ஃபீல் பண்ணி ஜாலியா பேசிட்டு இருக்க!
அவ வேற சின்ன பொண்ணு.. பார்க்கவும் கொஞ்சம் அழகா தான் இருக்கா. உனக்காக இங்க ஒருத்தி நான் வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல அவ பூந்து உன்னை என் கிட்ட இருந்து அவ கொத்திகிட்டு போயிட்டா நான் என்ன பண்றது?” என்று கேட்டபடி அவன் அருகில் சென்ற அனாமிகா அவனது தோள்களில் தன் கைகளை மேய விட்டாள்.
உடனே அவளை தன்னைவிட்டு விலக்கித் தள்ளிய விஜய் “இப்படி எல்லாம் உன் கிட்ட யார் சொன்னது? சும்மா நீயா லூசுத் தனமா எதையாவது உளறிட்டு இருக்காத. இங்க நான் இல்லாம ஷூட்டிங் ப்ராப்பரா நடக்கவே மாட்டேங்குது. கோடி கோடியா இன்வெஸ்ட் பண்ணிட்டு எதையும் கண்டுக்காம எப்படி இருக்க முடியும்? அதான் இங்க வந்தேன். உடனே அத வச்சு நீயா ஒரு ஸ்டோரி கிரியேட் பண்ணாத.” என்று கோபமாக சொல்ல, “எது நான் ஸ்டோரி கிரியேட் பண்றனா? உன்னோட லவ் ஸ்டோரி தான் டிராக் மாறி போயிட்டு இருக்கு விஜய். அதை கரெக்ட் பண்றது உன் வைஃபா என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. 24/7 நீ எங்க இருக்க, என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உன்ன பாத்துக்கிட்டே இருக்கிறது தான் என் வேலை. உனக்கும், எனக்கும் நடுவுல யார் வந்தாலும் கண்டிப்பா நான் உங்களை விட்டு வைக்க மாட்டேன். உனக்கு அந்த அமுதா மேல கொஞ்சமாவது சாஃப்ட் கார்னர் இருந்துச்சுன்னா, நீ அவளை விட்டு விலகியே இரு. அதான் அவளுக்கு நல்லது.” என்று அவனை மிரட்டும் தோரணையில் சொன்னாள்.
வந்த கோபத்தில் உடனே அவளுடைய குரல் வலையை இறுக்கிப்பிடித்த விஜய் “என்ன டி என்ன என்ன மிரட்ட அளவுக்கு வந்துட்டியா நீ? என் கிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுக்காத. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே உன்னை இங்கயே கொன்னு புதச்சிடுவேன். உன்னால அவளுக்கு எந்த பிராப்ளமும் வரக்கூடாது. வந்துச்சுன்னா, நீ இருக்க மாட்ட.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.
மூச்சு விடுவதற்காக சிரமப்பட்டு கொண்டு இருந்த அனாமிகா அவன் கையை தனது கழுத்தில் இருந்து எடுக்க போராடியபடி “நீ கேமரா முன்னாடி நடிக்கலாம் விஜய். ரியல் லைஃப்ல என் கிட்ட நடிக்கணும்னு நினைக்காத. இந்த ஜென்மத்துல உனக்கு நான் தான் எனக்கு நீதான். நான் சின்சியரா உன்ன லவ் பண்றேன். நீ பண்றது ரொம்ப தப்பு. கண்டிப்பா அமுதா மாதிரி பொண்ணுக்கு உன்னை சுத்தமா பிடிக்காது. அவங்க வீட்லயும் உனக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுக்க மாட்டாங்க. நீ தேவை இல்லாம அவள பாத்து டிஸ்ட்ராக்ட் ஆகி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க!” என்று அப்போதும் கூட அவனுக்கு எதிராகவே பேசினாள்.
அமுதாவிற்கு தன்னை பிடிக்காது என்று அவள் சொன்னதைக் கேட்கும்போது விஜயின் இதயம் அவனுக்கே தெரியாமல் ஒரு கூர்மையான வலியை உணர்ந்தது. அதன் தாக்கத்தில் அனாமிகாவை விடுவித்த விஜய் “என் லைஃப்ல யார் இருக்கணும் போகணும்னு நான் மட்டும் தான் டிசைட் பண்ணுவேன். ஒருவேளை அவ எனக்கு வேணும்னு நான் நினைச்சா, அவளே என்னை விட்டு போகணும்னு நினைச்சாலும் நான் அவளை விடமாட்டேன். என்ன கண்ட்ரோல் பண்ற பவர் உங்க யாருக்கும் இல்ல. பட் அவள மாதிரி ஒரு லோ கிளாஸ் பொண்ணுக்காக அப்படியெல்லாம் இறங்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.
அதுக்கு முன்னாடி உன்ன மாதிரி ஒரு பிசாசு என் பின்னாடியே வச்சுட்டு என்னால நிம்மதியா வாழவே முடியாது. நாளைக்கே என் லாயரை வச்சு மறுபடியும் ஹைகோர்ட்ல நம்ம டிவைஸ் கேஸ அப்பீல் பண்றேன். உன் கூட இருந்து என்னால நீ கொடுக்கிற டார்ச்சர் எல்லாம் அனுபவிக்க முடியாதுன்னு இந்த தடவை நானே நேர்ல வந்து கோர்ட்ல சொல்றேன் டி. அப்புறம் அந்த ஜட்ஜ் எப்படி நமக்கு டிவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்றான்னு பாக்கிறேன்.” என்று ஆத்திரம் பொங்க சொன்னான்.
அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட அனாமிகா “ஏன் விஜய் இப்படி எல்லாம் பேசுற? நான் உன்னோட வைஃப். நீ எனக்கு மட்டும் தான்னு நினைக்கிறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா? நீ என்று கண்கள ஆசைக்காக எத்தனையோ பொண்ணுங்க கூட இருந்திருக்க. அது எல்லாமே தெரிஞ்சிருந்தும் ஒரு நாள் கூட நான் அதை பத்தி எல்லாம் உன் கிட்ட கொஸ்டின் பண்ணதே இல்ல. நீ சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கிறதுக்காக அது எல்லாத்தையும் நான் பொறுத்துக்கிட்டேன்.
பட் என்ன தாண்டி உனக்கு இன்னொரு பொண்ணு மேல ஃபீலிங்ஸ் வர்றது எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. அதனால தான் உன் மேல கோவப்படுற மாதிரி பேசிட்டேன். அதுக்காக எல்லாம் அவசரப்பட்டு நீ இப்படி ஒரு முடிவுக்கு வராத. நீ எனக்கு ஒன் இயர் டைம் கொடுத்து இருக்க. அத நெனச்சு பாரு விஜய்! அண்ட் மோஸ்ட் இம்பார்ட்டெண்ட்ly நீ நம்ம சஞ்சனாவுக்கு என் கூட சேர்ந்து வாழ ட்ரை பண்றதா ப்ராமிஸ் பண்ணி குடுத்து இருக்க! வனிதா ஆன்ட்டி கூட அதுக்கு சாட்சியா இருக்காங்க. அப்படி நீ நெனச்சா உடனே என்ன விட்டு போயிட முடியாது விஜய். ப்ளீஸ்.. எனக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் குடு!” என்று கண்களில் நீர் பொங்க அவனிடம் கெஞ்சினாள்.
“உன் நடிப்பை எல்லாம் வேற யார் கிட்டயாவது போய் காட்டு. ஒருவேளை எனக்கு நிஜமாகவே அந்த அமுதா மேல ஃபீலிங்ஸ் வந்தா, அவ லோ கிளாஸ் பொண்ணா இருந்தா கூட பரவாயில்லைன்னு அவ கூட சேர்ந்து வாழ்றத பத்தி கூட நான் கன்சிடர் பண்ணி பார்த்தேன். பட் உன்ன மாதிரி ஒரு பொண்ண எப்பயும் என்னால என் பக்கத்துல வச்சுக்கவே முடியாது.
சும்மா என் ஃபேமிலில இருக்கிறவங்களை பத்தி சொல்லி எனக்கு பூச்சாண்டி காட்ட ட்ரை பண்ணாத. நான் சொன்னா அவங்க மட்டும் இல்ல யாரா இருந்தாலும் அத கேட்டு தான் ஆகணும். சீக்கிரம் என் வீட்ல இருந்து பேக்கப் பண்ணிட்டு போக ரெடியா இரு.” என்று அவளிடம் உச்ச ஸ்ருதியில் கத்தி சொன்ன விஜய் அந்த கேரவனை விட்டு வெளியேறினான்.
– காதல் மலரும் 🌹