Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 71

சாபமாய் வந்த என் உயிரே CH 71

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 71 

ஹலோ ஃபிரண்ட்ஸ்.. 

“சாபமாய் வந்த என் உயிரே” நாவல் நம்மளோட தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கோம்.‌ இப்பவே அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க ❤️ அடுத்தடுத்த நாவல்களின் அப்டேட்களை பெறுவதற்கு சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க. உங்களுடைய கருத்துக்களை மறக்காம கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க ⚡

நன்றி 🙏

அத்தியாயம் 71 💕

“பேசணும்னு நினைச்சா நம்ம எவ்ளோ நேரம் வேணாலும் பேசிக்கிட்டே இருக்கலாம் சார். அதுக்கெல்லாம் ஒரு லிமிட்டே இல்ல. நீங்க திடீர்னு எதுக்காக சென்னையில இருந்து மதுரைக்கு வந்தீங்க? அதுவும் இந்த நேரத்துல.. என்ன பாக்குறதுக்கா?” என்று ஆர்வமான முகத்துடன் அவனைப் பார்த்து கேட்டாள் அமுதா. 

ஒரு நொடி அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய விஜய் “ஏன் இவ்ளோ பெரிய மதுரையில நீ மட்டும் தான் இருக்கியோ! நான் இங்க வந்தா உன்ன பாக்க வந்ததா அர்த்தமா? நான் வந்ததே நாளைக்கு ஷூட்டிங் இருக்குனு தான். எனக்கு எப்படியும் தூக்கம் வரலைன்னு தெரிஞ்சிருச்சு. மார்னிங் சீக்கிரமா எந்திரிச்சு கிளம்புறதுக்கு அப்படியே மெதுவா கார் ஓட்டிட்டு போனா இங்கே ரீச் ஆகும் போது டைம் கரெக்டா இருக்கும்னு நினைச்சேன்.” என்று சொல்ல, “நீங்க இவ்ளோ பெரிய எக்ஸ்பிளநேஷன் குடுக்கும்போதே இது பொய்ன்னு நல்லா தெரியுது  சார். யாராவது ஏதாவது கேட்டா மூஞ்சி நல்லா உர்ருன்னு வச்சுக்கிட்டு ஒன்னு ரெண்டு வார்த்தையில திமிரா பதில் சொல்றது தானே உங்க கேரக்டர்! எனக்காக இவ்வளவு தூரம் வந்துட்டு எதுக்காக பொய் சொல்றீங்க?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள் அமுதா. 

“ஓய் இப்ப நான் என்ன ஜோக்கா சொன்னேன்? எதுக்கு டி என்ன பார்த்து சிரிக்கிற?” என்று அவளை பார்த்து முறைத்தபடி விஜய் கேட்க, “நீங்க இன்னும் உங்களோட கால்ஷீட் குடுக்கல. சோ தனியா எனக்கும், அபிநயாவுக்கும் இருக்கிற சீன்ஸ் எல்லாத்தையும் ஷூட் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா மோனிஷா மேடம் காலேஜ்ல படிக்கிற மாதிரி இருக்கிற சீன் எல்லாம் இங்க மதுரையிலேயே எடுத்துக்கலாம்னு நேத்து தான் டைரக்டர் சொன்னாரு. இன்னிக்கி நீங்க ஷூட்டிங்க்கு வந்திருக்கிறதா சொல்றீங்க!” என்று பதிலுக்கு அவனிடம் கேள்வி கேட்டாள் அமுதா. 

“என்ன இவ இப்படி பாயிண்ட்டா கொஸ்டின் பண்றா?” என்று நினைத்த விஜய், “ஓஹோ என்னையே கொஸ்டின் பண்ற அளவுக்கு பெரிய ஆல் ஆயிட்டியா  நீ? இதுக்கு முன்னாடி என் கூட நடிச்ச ஹீரோயின் யாரும் இப்படி என் முன்னாடி உட்கார்ந்து பேசுனது கூட இல்லை. ஏதாவது என் கிட்ட கேட்கணும்னா பயந்து பயந்து தூரமா நின்னு கேட்டுட்டு அப்படியே ஓடிப் போயிடுவாங்க. இந்த மூவியோட ப்ரொடியூசரே நான் தான்.  அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? நான் நெனச்சா நடுராத்திரியில கூட ஷூட்டிங் வைப்பேன். பத்து நாளைக்கு ஷூட்டிங் வேணான்னு கேன்சல் கூட பண்ணுவேன். என்ன  கொஸ்டின் பண்றதுக்கு இங்க யாருக்கு?” என்று கோபமாக கேட்டான். 

அவன் இப்படி வெளியில் டெரராக முகத்தை வைத்துக் கொண்டு கத்தி பேசுவது, உள்ளுக்குள் தன் மீது அக்கறையுடன் இருப்பது என்று அவனுடைய இந்த இரட்டை வேடத்தை நன்றாக பார்த்து புரிந்து வைத்திருந்த அமுதா அவன் கோபத்தைக் கண்டெல்லாம் பயப்படாமல், “சாரி சாரி சார்.. நான் உங்களை டென்ஷன் பண்றதுக்காக அப்படி பேசல. உங்கள போய் யாராவது கொஸ்டின் பண்ண முடியுமா? நீங்க ஷூட்டிங்கு வந்தா எனக்கும் சந்தோஷம் தான்.” என்றாள்.

உடனே தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை பார்த்த விஜய் “சந்தோஷமா? நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து உன் கூட சேர்ந்து நடிக்கிறது இல்ல உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்?” என்று கேட்க, “பின்ன எனக்கு ஹாப்பியா இருக்காதா என்ன? நீங்க தான் என்னோட ஹீரோ விஜய் சார். இந்த cine field-ல எத்தனையோ ஆக்டர் இருக்கலாம். பட் எனக்கு நீங்க மட்டும் தான் ஹீரோ. இப்ப நீங்க என் முன்னாடி இருக்கறதுனாலயோ, நீங்களும் நானும் சேர்ந்து நடிக்கிறதுனாலையோ நான் இப்படி சொல்லல. 

எனக்கு உங்கள நிஜமாவே அவ்ளோ பிடிக்கும்.‌ உங்கள மட்டும் தான் பிடிக்கும். நீங்க என் பக்கத்துல இருக்கறத தவிர எனக்கு வேற என்ன சந்தோஷம் இருக்க போகுது?” என்று அமுதா மீண்டும் அவனுக்கு fan girl ஆக மாரி பேச தொடங்கி இருந்தாள். 

ஆனால் அவள் பொதுவாக ஒரு ரசிகையாக அவன் மீது இருக்கும் craze-ல் பிானாத்திக் கொண்டு இருக்க, அதை எல்லாம் சொல்வது அவளாக இருப்பதால் அனைத்தையும் அவன் மனம் என்னவோ பர்சனல் ஆகவே எடுத்துக் கொண்டது. இதுவரை நேரடியாக பிரியாவை தவிர அவனிடம் வேறு எந்த பெண்ணும் இப்படி எல்லாம் பேசுகிறதே இல்லை. பேசுவதற்கான வாய்ப்பையும் அவன் கொடுத்ததில்லை. அதனாலோ என்னவோ மனதார தான் தனது பிரியாவுடன் இருப்பதைப்போல உணர்ந்த விஜய், “என்னமோ தெரியல அமுதா. உன் கூட இருக்கும்போது எனக்கு என் பிரியா கூட இருக்கிற மாதிரியே இருக்கு. என்னாலயே இதை நம்ப முடியல. நாலு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் அவளை பார்க்கும்போது என்ன ஃபீல் பண்ணனோ அதே ஃபீல் எனக்கு உன் மேல வருது.” என்று உணர்ச்சிவசப்பட்டு நேரடியாக தன் மனதில் இருந்தவற்றை அவளிடம் சொன்னான். 

அவனது முதல் மனைவியின் பெயர் பிரியா என்று அறிந்து வைத்திருந்த அமுதா “இவர் என் கூட இருக்கும்போது அவரோட ஃபர்ஸ்ட் wife கூட இருக்கிற மாதிரி இருக்குன்னா நான் சொல்லிட்டு இருக்காரு? அதே ஃபீல் வருதுன்னா என்ன அர்த்தம்? அவங்கள இவர் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாரு. அப்ப இவருக்கு என் மேல ஃபீலிங்ஸ் இருக்கா? விஜய் சார் என்ன லவ் பண்றாரா? அப்படி கூட நடக்குமா என்ன?” என்று தனக்குள் ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டு அவனை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் விஜயின் கண்களுக்கு இப்போது அமுதாவிற்கு பதிலாக பிரியாவின் முகம் தான் தெரிந்தது. அவன் நேரம் செல்வது தெரியாமல் பார்த்து ரசித்த அதே பிரியாவின் முகம். இந்த நொடி வரை அவன் மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிக்கும் ஒரே முகம் அவளுடையது தான்.  

ஆனால் அதுவரை பிரியாவின் மீதி இருந்த காதலில் ஆசையுடன் கண் கலங்க அமுதாவை பார்த்த விஜய்க்கு சட்டெனம் அவள் தனக்கு செய்த துரோகம் பற்றி ஞாபகம் வந்தது‌. அவளை ஹோட்டல் ரூம் ஒன்றில் வேறொரு ஆணுடன் பார்த்தது, அவர்கள் இருவரும் பாம்பை போல ஒருவரை ஒருவர் பின்னிக் கொண்டு கட்டலில் உல்லாசமாக இருந்தது என்று அனைத்தும் அவனுக்கு அப்படியே படம் போல கண் முன்னே வந்து சென்றது. 

அப்படி ஒரு விஷயம் நடந்தது என்று யார் சொல்லி இருந்தாலும் சத்தியமாக அதை அவன் நம்பியிருக்க மாட்டான். ஆனால் நடந்த அனைத்தையும் அவன் தன் கண்களால் பார்த்தான். அந்த ஒரே ஒரு நாள் அவன் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி விட்டது. இன்றைய நாள் அவனுக்கு இனிமையானதாக தொடங்கி இருந்தாலும், இப்போது வந்த கடந்த கால நினைவுகளால் மீண்டும் இறுக்கமாக மாறிய விஜய் “எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான். அட்லீஸ்ட் அனாமிகா மாதிரி பொண்ணுங்க எல்லாம் இந்த அளவுக்கு cheap-ஆ இருக்க மாட்டாங்க. அவளுக்கு என்ன விட என் கிட்ட இருக்கிற பணம் தான் முக்கியம். ஆனாலும் இதுவரைக்கும் அவ என்ன தாண்டி இன்னொருத்தன் கிட்ட எப்பயும் போனதில்ல. ஆனா பிரியா மாதிரி பொண்ணுங்கள நம்பவே முடியாது. 

இந்த அமுதா ஒருவேள இப்ப நல்லவளா இருக்கலாம். ஆனா சான்ஸ் கிடைச்சா இவளும் பிரியா மாதிரி மாறிடுவா. இந்த லோ கிளாஸ் பொண்ணுக்காக எல்லாம் நீ இவ்ளோ ஃபீல் பண்ணனும்னு அவசியம் இல்ல விஜய். இந்த ஜென்மத்துல உனக்கு உண்மையான லவ் கிடைக்கப் போறது இல்ல. சோ தேவைக்கு யூஸ் பண்ணிட்டு  எவளா இருந்தாலும் தூக்கி போட்டுட்டு அடுத்த வேலைய பாக்க போயிடனும் அது தான் உனக்கு நல்லது.” என்று தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான்.

ஒரு நொடி தன் கண்களை மூடி திறந்தான். இப்போது அமுதா விற்காக அவன் கண்களில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு இருந்த அமுதாவாலும் அதை உணர முடிந்தது. “உனக்கு உங்க வீட்டுக்கு போகுற ஐடியா இருக்கா இல்லையா?” என்று அவன் முன்பு கேட்ட அதே கேள்வியை கணீர் குரலில் கேட்க, “போறேன்.. போறேன் சார். எனக்கு காலையில ஷூட்டிங் இருக்கு. 10 மணிக்கு எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கணும். இப்ப போய் படுத்த தான் ஒரு நாலு மணி நேரமாவது தூங்க முடியும். Bye,  நீங்களும் உங்களோட கெஸ்ட் ஹவுஸ்ல போய் கொஞ்ச நேரம் தூங்குங்க. ஆல்ரெடி தூங்காததுனாலயா‌ குடிச்சதுனாலயான்னு தெரியல உங்க கண்ணு ரெட்டா இருக்கு. கொஞ்சமாவது ரெஸ்ட் எடுங்க.” என்றபடி அவன் கார் கதவை திறந்து கீழே இறங்கினாள் அமுதா.

அவன் எதுவும் பேசாமல் அவளை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு இருக்க, “நீங்க எதுக்காக வேணாலும் இங்க வந்திருக்கலாம். பட் எனக்கு இந்த டே ரொம்ப ஸ்பெஷலா ஆயிடுச்சு உங்களால. இந்த நாளை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன். நான் இதுவரைக்கும் இவ்ளோ ஹேப்பியா இருந்ததே இல்ல. Thanks for coming sir! Bye.” என்று உணர்ச்சிகள் பொங்க அவன் கண்களை பார்த்து சொல்லிவிட்டு இதற்கும் ஏதாவது அவன் சொல்லி கத்துவான் என நினைத்து அதற்கு மேல் அங்கே நிற்காமல் தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள் அமுதா. 

அவள் ஒரு ப்ளூ நிற நைட்டி அணிந்திருந்தாள். வீட்டிற்கு வந்து போட்டிருந்த மேக்கப்பை எல்லாம் மேக்கப் ஆர்டிஸ்ட் சொன்ன மேக்கப் ‌ரிமுவல் கிரீமை வைத்து  ரிமூவ் செய்து இருந்த அமுதா தனது தலைமுடியை சீவி பின்னி வைத்திருந்தாள். விஜய் அவளை அழைத்ததால் வந்து இவ்வளவு நேரம் ஆனதில் அவள் தலை கலைந்து காற்றில் லேசாக அவளுடைய கூந்தல் பின்னலையும் தாண்டி பறந்து கொண்டிருக்க, இரவு மழை லேசாக பெய்ததால் தரையில் சேரும் சகதியும் அதிகமாக இருப்பதை கவனித்து விட்டு தன் நைட்டியை தூக்கி பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்த அமுதாவின் பின்ன அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்தான் விஜய். 

– காதல் மலரும் 🌹

You may also like

Leave a Comment

About Me

Featured