Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 67

சாபமாய் வந்த என் உயிரே CH 67

by Thenaruvi Tamil Novels

நாயகன் 67

விஜய் அனாமிகா சஞ்சனாவுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததால் வேறு வழி இல்லாமல் அவர்கள் இருவரையும் தன் காரிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழியெல்லாம் தொன தொனவென்று  ‌ பேசிக் கொண்டே வர, “ச்ச்.. நீ படிச்ச பொண்ணு தானே.. எதுக்கு இப்படி சில்லியா பிஹவ் பண்ணிட்டு இருக்க? டிரைவிங்ல இருக்கும்போது யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்ற அறிவு கூட இல்லையா? இப்ப உன்னால வாய மூடிட்டு வர முடியுமா முடியாதா?” என்று கத்தி கேட்டான் விஜய். 

உடனே அனாமிகா தன் வாயை மூடிக்கொள்ள, தன் அண்ணா கோபமாக இருப்பதை உணர்ந்து சஞ்சனாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாள். அவர்களுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்த விஜய் நேராக தங்கள் வீட்டில் உள்ள மினி பாருக்கு சென்றான். அப்போது அவனுக்கு கால் செய்த தினேஷ் “பாஸ் மூர்த்தி சார் எங்க இருக்காரு கண்டுபிடிச்சாச்சு. அவர் ஆஸ்திரேலியா பக்கத்துல இருக்கிற ஒரு ஐலேண்ட்ல இருக்காரு. நம்ம ஆளுங்க அவர ரீச் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. எவ்ளோ லேட் ஆனாலும் அவரை காண்டாக்ட் பண்ண முடிஞ்சதுனா நான் உங்களுக்கு கால் கனெக்ட் பண்ணவா இன்னைக்கு நைட்?” என்று கேட்டான். 

காலையில் இருந்து தன் அப்பாவிற்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் இருந்த விஜய் அவரிடம் பேசுவதற்காக துடித்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அனாமிகா படுத்திய பாட்டில் கடுப்பில் இருந்த விஜய் “எல்லாம் அந்த ஆளால தான் என் லைஃப்ல தப்பு தப்பா நடக்குது. அவர் பாட்டுக்கு எங்கயோ போய் உக்காந்துகிட்டு இப்பயும் என்ன டென்ஷன் பண்ணிட்டு இருக்காரு. அவர் கல்யாணம் பண்ணி வச்ச அனாமிகா இங்க இருந்து இன்னும் எக்ஸ்ட்ராவா ஷிஃப்ட் போட்டு என்னை டார்ச்சர் இருக்கா. 

அதான் அவர் எங்க இருக்காருன்னு தெரிஞ்சிடுச்சில்ல.. அவர் safe-ஆ இருக்காரான்னு நீயே செக் பண்ணு. அவரை காண்டாக்ட் பண்ண முடிஞ்சதுனா, அவருக்கு இந்தியா வர்றத்துக்கு எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி குடு. எனக்கு அப்டேட்ஸ் மட்டும் கொடுத்தா போதும். நான் அவர் கிட்ட பேசுற மூடுல இல்ல.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான். 

பின் வழக்கம்போல கண்முன் தெரியாமல் குடிக்க தொடங்கி இருந்த விஜய் ‌ பிரியாவை பற்றி பேசி புலம்ப தொடங்கினான். சூட்டிங் முடிந்து அவர்கள் அனுப்பிய காரில் ‌ வெற்றியுடன் ‌ தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள் அமுதா. அவள் அண்ணன் மணிகண்டன் வெற்றிக்கு கால் செய்து “டேய் மணி பத்துக்கு மேலே ஆகுது இன்னும் என்ன‌ டா சூட்டிங் வேண்டி கிடைக்குது? ஒரு பொம்பள புள்ளைய வச்சு வேலை வாங்கும்போது நேரம் காலத்துல அவள வீட்டுக்கு அனுப்பி விட மாட்டாங்களா அவனுங்க? இப்படியே பண்ணிட்டு இருந்தாங்கன்னா அப்புறம் இந்த படத்துல நடிக்க கூடாதுன்னு நான் சொல்லிப்புடுவேன் பாத்துக்கோ! நீ அவ கூட இருக்கிற நம்பிக்கையில தான் நான் சரி சரின்னு பொறுத்து போயிட்டு இருக்கேன். அதுக்காக எல்லா நேரமும் நான் அப்படியே இருக்க மாட்டேன் வெற்றி.” என்று கோபமாக சொன்னார்.

“கோச்சுக்காதீங்க மாமா! அமுதாவுக்கு ஃபிரண்ட் கேரக்டர்ல ‌ இப்ப நம்ம பிரசிடெண்ட் பொண்ணு அபிநயா தான் நடிக்கிறா. ரெண்டு பேருக்கும் இன்னிக்கி சீன் வச்சிருந்தாங்க.‌ எப்பயும் போல அந்த பொண்ணு ஒழுங்காவே நடிக்கல. அதனால ஒரே சீன மறுபடியும் மறுபடியும் எடுத்து நேரம் ஆயிடுச்சு. சும்மா சும்மா போட்ட செட்ட ‌ மறுபடியும் மறுபடியும் போட்டு முதல்ல இருந்து எல்லாத்தையும் ரெடி பண்ணனும்னா அவங்களால மட்டும் எப்படி முடியும் மாமா? 

அதனால திரும்பி கரெக்டா வர வரைக்கும் அவங்களும் எடுத்துகிட்டே இருக்காங்க! சினிமாவுல நடிக்கிறவங்க பொழப்பு இப்படித் தானே இருக்கும்! அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்? நீங்க அமுதாவை நினைச்சு கவலைப்படாதீங்க.‌ நான் காலையில இருந்து நைட்டு வரைக்குமே அவ கூடையே தான் இருந்தேன். இப்ப நாங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவோம்.” என்று சொல்லி அவரை சமாதானப் படுத்தினான்‌ வெற்றி. “சரி சரி.. சீக்கிரம் வந்து சேருங்க.” என்ற மணிகண்டன் தன் அழைப்பை துண்டித்து விட்டார்.

‌ “வீட்டுக்கு லேட்டா போறமே அண்ணா என்ன சொல்ல போறாருன்னு நினைச்சு பயந்துகிட்டே இருந்தேன். நல்லவேளை நம்ம வீட்டுக்கு போன உடனே ஆரம்பிக்காம உனக்கு கால் பண்ணி இப்பயே எல்லாத்தையும் பேசிட்டாரு.  நான் என்னமோ தப்பு பண்ற மாதிரி தினமும் ஒவ்வொருத்தர் கிட்டயும் அவங்க கேட்கிற கொஸ்டின் எல்லாம் பதில் சொல்லி எனக்கு புடிச்ச ஒரு விஷயத்தை பண்றதுக்கு இவ்ளோ கஷ்டப்படுறது எனக்கு எரிச்சலா இருக்கு வெற்றி. 

சூட்டிங் நடக்கிற இடத்துல எத்தனை பேர் இருக்காங்க.. அவங்க எல்லாரும் முன்னாடியும் ஸ்கிரிப்டுல இருக்கிற டயலாக்கை பேசி ‌ நடிக்கிறது அவ்ளோ பெரிய தப்பா என்ன? வெளியே இருந்து பார்த்துட்டு எல்லாரும் சினிமால நடிக்கிறதும்‌ தப்பு, இதுல நடிக்கிறவங்க எல்லாரும் தப்பானவங்கன்னு நினைச்சுக்கிறாங்க. உன் சப்போர்ட் மட்டும் எனக்கு இல்லனா கண்டிப்பா என்னால இந்த படத்துல நடிக்க முடியாம போயிருக்கும். தேங்க்ஸ் வெற்றி!” என்று சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்தாள் அமுதா.

அவள் கண்களில் நன்றி உணர்வு தெரிந்தது. “இதுக்காக எனக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லாத அமுதா. 

‌நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீ சினிமாவுல நடிக்க போறது இல்ல. அன்னைக்கு உன்னை நடிக்க கூடாதுன்னு சொல்றதுக்கு நான் யாருன்னு விஜய் சார் கேட்டாருல.. நமக்கு கல்யாணம் மட்டும் ஆகட்டும். அப்ப நான் போய் அவர் கிட்ட தைரியமா சொல்லுவேன். என் பொண்டாட்டியை என்னால உங்க படத்துல நடிக்க வைக்க முடியாதுன்னு! நான் அப்படி சொன்னா, அவரால மட்டும் இல்ல உன்னாலையும் எதுவும் பண்ண முடியாது.” என்று நினைத்த வெற்றி வழக்கம் போல் பதிலுக்கு அவளை பார்த்து அன்புடன் புன்னகைத்து “நான் உனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் அமுதா. நீ எனக்கு பொண்டாட்டியாக வரப் போறவ. உன்ன சந்தோஷமா வச்சுக்கிறது என் பொறுப்பு.” என்று பிட்டை போட்டான். 

அவன் இதை எப்போதும் சொல்வதால் அதை உண்மை என்று நம்பிய அமுதா மனதார “வெற்றி மாதிரி ஒரு சப்போர்ட்டிவ் ஹஸ்பண்ட் கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். இந்த காலத்துல சொந்தக்காரங்களாவே இருந்தாலும் யார் இப்படி எல்லாம் இருக்காங்க? சும்மா பொண்டாட்டி நம்மளை விட அதிகமா சம்பாதிச்சாலே அது தப்புன்னு நினைக்கிற ஆம்பளைங்களுக்கு நடுவுல, எனக்காக என் அசிஸ்டன்ட்டா வேலை பாக்குறதுக்கு இவன் ஓகே சொல்லி இருக்கான். முக்கியமா என்ன சினிமால நடிக்க வைத்ததை இவன் தான். எவ்வளவு விஷயங்கள் என்ன சுத்தி தப்பா நடந்தாலும் கடைசியில வெற்றி என் கூட இருக்கிறது எனக்கு நடந்த பெரிய நல்லது தான்.” என்று நினைத்தாள். 

சில நிமிட பயணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் வீடு போய் சேர்ந்தார்கள். அவர்களுக்காகவே ஹாலில் அமர்ந்து காத்திருந்த மணிகண்டன் அமுதா சோர்வாக வந்திருப்பதை பார்த்துவிட்டு அவளை மேலும் எந்த கேள்விகளும் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து “சீக்கிரம் போய் இரண்டு பேரும் சாப்பிட்டு படுங்க. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகுது.” என்று இருக்கமான முகத்துடன் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

‌“பார்றா.. அதிசயமா அண்ணா எதுவும் சொல்லாம அமைதியா போறாரு! எல்லாம் நம்ம வெற்றியோட மேஜிக் தான். அவன் என் கூட இருக்கிற வரைக்கும் வீட்ல இருக்கிற ‌யாரையும் பார்த்து நான் பயப்பட தேவையில்லை போல இருக்கு!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட அமுதா, “அண்ணி..‌ அண்ணி.. அண்ணி நம்பர் ஒன் அண்ணி நம்பர் 2 பேரும் என்ன பண்றீங்க? நான் வீட்டுக்கு வந்துட்டேன். சாப்பாடு ரெடியா? என்ன செஞ்சு இருக்கீங்க?” என்று கேட்டபடி நேராக கிச்சனுக்கு தான் சென்றாள். 

கிச்சனில் இருந்து ஒரு நல்ல நறுமணம் வந்து கொண்டிருக்க, “வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்தா முதல்ல கை கால் மூஞ்சியை கழுவிட்டு அப்பறமா சாப்பிடுன்னு உன் கிட்ட எத்தனை தடவை டி சொல்றது?” என்று அவளிடம் கேட்டாள் அன்னபூரணி.  “அட போங்க அண்ணி எனக்கு செமையா பசிக்குது. அங்க ஷூட்டிங்க்கு போன ப்ரொடக்ஷன்ல விதவிதமா சாப்பாடு போடுறாங்க. முதல்ல சாப்பிடும்போது எல்லாமே டேஸ்டாக இருக்கிற மாதிரி தான் இருந்துச்சு. ஆனா என்னமோ தெரியல அது வீட்டு சாப்பாடு மாதிரியே இல்ல.. என்னால ரொம்ப சாப்பிட முடியல. அதான் நாங்க அங்க இருந்து சாப்பிடாமயே கிளம்பி வந்துட்டோம். எனக்கு செமையா பசிக்குது.. நான் கைக் கழுவிட்டு வரேன். முதல்ல எனக்கு என்ன செஞ்சு வச்சிருக்கீங்களோ போடுங்க.. எதுவா இருந்தாலும் நான் சாப்பிடற அளவுக்கு பசியில இருக்கேன்.” என்ற அமுதா கை கழுவதற்காக சென்று விட்டாள். 

அவளுக்கும் வெற்றிக்கும் ‌ அவளுடைய அண்ணிமார்கள் இருவரும் மாறி மாறி பரிமாறினார்கள். இவர்களுக்காகவே சூடாக சிக்கன் 65 எல்லாம் பொரித்து கொடுத்து அவர்கள் இட்லி நாட்டுக்கோழி குழம்புடன் பரிமாற, அமுதா ஒவ்வொரு வாய்க்கும் அந்த உணவை பாராட்டியபடி சாப்பிட்டாள். “இந்த வீட்ல நாங்க எது செஞ்சாலும் அது நல்லா இருக்குன்னு மனசார பாராட்டுற ஒரே ஆள் நீ மட்டும் தாண்டி அமுதா. அதான் எனக்கு வேற எந்த வேலை இருந்தாலும் நீ சாப்பாடு போடுங்க அண்ணன்னு கேட்டா உடனே உனக்கு சோறு போடுறதுக்கு நான் ஓடோடி  வந்துருவேன்.  நீ சிரிச்ச முகமா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு சாப்பிடறத பார்த்தா தான் மறுநாள் சமைக்கும்போது எனக்கு உனக்காகவாது நல்லா சமைக்கணும்ன்ற எண்ணமே வரும். 

இந்த வீட்ல எத்தனை ஆம்பளைங்க இருக்காங்க.. அவங்களுக்கு நாங்களும் எத்தனை வருஷமா வடிச்சுக் கொட்டுறோம்! இதுவரைக்கும் வாய தொறந்து யாரும் நல்லா இருக்குன்னு சொன்னதே இல்ல. நம்ம ஏதோ தெரியாம அந்த பக்கம் திரும்பும் போது இந்த தோசை எதுவும் கொஞ்சமா தீஞ்சு போயிருச்சுனா, உடனே சுத்தமா நமக்கு சமைக்கவே தெரியலன்ற மாதிரி திட்ட மிட்டும் கிளம்பி வந்துடுவாங்க. ஆனா நம்ம செய்ற நல்லத இங்க பாராட்டுறதுக்கு மட்டும் ஆள் இல்ல!” என்றாள் தனம்.  

“கவலைப்படாதீங்க அண்ணி அதான் உங்களுக்கு நான் இருக்கேனே! கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட இந்த வீட்டை விட்டு நான் வேற எங்கேயும் போயிடக் கூடாதுன்னு தான் இவன் தலையில புடிச்சு என்ன கட்டி வைக்க போறீங்க.. அப்புறம் உங்களுக்கு என்ன கவலை?” என்று அமுதா கேட்டுவிட்டு சிரிக்க, “சரியா சொன்ன புள்ள.. மத்த ஆம்பளைங்க எல்லாரையும் விட நம்ம வெற்றி தங்கமான பையன். உன்னை இவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு நாங்க எல்லாருமே ஆசைப்பட்டது உண்மை தான்.” என்றாள் தனம். 

அமுதா சாதாரணமாக  தன்னை பற்றியும் தங்களுடைய திருமணத்தை பற்றியும் பேசுவதை கண்டு மகிழ்ந்தான் வெற்றி. 

– காதல் மலரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured