Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 58

சாபமாய் வந்த என் உயிரே CH 58

by Thenaruvi Tamil Novels
118 views

அத்தியாயம் 58 

அடிபட்டு இருந்த அமுதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற வெற்றி மணிகண்டன் அவர்களை புடவை எடுக்க வரச் சொன்னதாக சொல்லி அன்னபூரணி கால் செய்து அழைத்ததால் அவளுடன் சோரூமிற்கு சென்றான். அமுதாவை அடித்ததால் உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும், வெளியில் உர்ரென்று தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்த மணிகண்டன் “அவள வந்து இங்க உக்காந்து நம்ம எடுத்து வச்ச புடவை புடிச்சிருக்கா இல்லையான்னு பாத்து சொல்ல சொல்லு.” என்றார். தன் அண்ணனின் மீது இருந்த கோபம் தீராததால் அப்போதும் அவரை முறைத்து பார்த்தபடி சென்று சேரில் அமர்ந்த அமுதா அப்போதும் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்று ஆர்வம் துளியும் இல்லாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் முன்னே குவிந்து கிடந்த புடவைகளை பார்த்தாள்.

அவளது தோள்களில் கை வைத்த அன்னபூரணி “உங்க அண்ணன் உன்ன அடிச்சுப்புட்டாருன்னு வருத்தப்படாத கண்ணு. இங்க இருக்கிற எல்லாரையும் விட அவருக்கு உன் மேல தான் பாசம் அதிகம். அந்த உரிமையில் தான் உன்ன அடிச்சிட்டாரு. வேகத்துல அப்படி பண்ணிபுட்டாரே தவிர, மனசுல உன் மேல அந்த அளவுக்கு கோவம் இல்ல அமுதா. வெற்றி ஹாஸ்பிடலுக்கு உன்ன கூட்டிட்டு போனதுல இருந்து உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு நெனச்சு மனுஷன் யோசிச்சு தவியா தவிச்சுட்டாரு. நடந்ததை யோசிக்காம உன் கல்யாணத்தில எப்படி சந்தோஷமா இருக்கிறதுன்னு யோசி. இந்த நேரம் எல்லாம் வாழ்க்கையில ஒரு தடவை வரும். இப்ப கண்டதை எல்லாம் நினைச்சு கஷ்டப்பட்டு அப்புறம் ச்சே அன்னைக்கு இப்படி செஞ்சிருந்தா நல்லா இருக்குமே அப்படி செஞ்சிருந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சா மட்டும் இந்த நாள் திரும்ப வந்துருமா என்ன?” என்று அட்வைஸ் செய்தபடி கேட்க, 

திரும்பி தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அன்னியை தலை தூக்கி பார்த்த அமுதா “எனக்கு இந்த நாள் எதுக்கு வந்துச்சுன்னு தான் இருக்கு அண்ணி. நான் வளர்ந்து பெரிய பொண்ணாவே ஆகிருக்கக் கூடாதுன்னு தோணுது. என்னமோ மனசே சரியில்ல. நடக்கிறது எதுவும் என் கையில இல்லைன்னு நல்லா தெரியும். அதான் நான் எதுவும் பேசறது இல்ல. என்னமோ என் தலை விதிபடி நடக்கட்டும்.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னாள். 

அவளுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கலாம் என நினைத்து அவள் அருகில் சென்ற வெற்றி அவள் பேசியதை கேட்டு மனமுடைந்து அப்படியே ஒரு ஓரமாக சென்று அவளை தொந்தரவு செய்யாமல் இருந்து கொள்ளலாம் என நினைத்து நின்று கொண்டான். இந்த திருமணத்தில் அமுதா முன்பு இருந்தே பெரிதளவில் நாட்டம் காட்டவில்லை என்று அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் தான். 

ஆனால் இப்படி அவள் மனம் உடைந்து பேசுவதை பார்க்கும் போது அனைத்தையும் முன்னே இருந்து நடத்திக் கொண்டு இருக்கும் மணிகண்டனுக்கு கூட, “நம்ம தான் ஏதோ தப்பு பண்றமோ? சாமி சொன்ன மாதிரி கொஞ்ச நாள் இதை ஆறப்போட்டு செய்யலாமா? அம்மா மீனாட்சி.. எனக்கு இன்னும் என்ன பண்றதுன்னு ஒன்னும் புலப்படல ஆத்தா. என் புள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்கணும். எனக்கு அது மட்டும் தான் வேணும்.‌ நீதான் எல்லாரையும் பார்த்துக்கணும்.” என்று நினைத்து எல்லாம் வல்ல தெய்வத்தை வேண்டிக் கொண்டார். அதைத் தாண்டி இப்போது வேறு என்ன செய்ய வேண்டும் என்று அவரால் முடிவெடுக்க முடியவில்லை. 

தனக்கான ஆடைகளை தேர்வு செய்வதில் அமுதாவும் இன்ட்ரஸ்ட் காட்டவில்லை. அமுதா இப்போதும் கூட எதிலும் பிடி கொடுக்காமல் இருக்கிறாளே என்று நினைத்து சோகமாக இருந்த வெற்றி அவனும் எதிலும் தலைகிடாமல் ஒதுங்கியே நின்று கொண்டான். மொத்தத்தில் இன்று மணிகண்டன் நினைத்த எதுமே சரியாக நடக்கவில்லை. இருப்பினும் வந்த வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினால் போதும் என நினைத்து தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வெற்றி, அமுதாவின் திருமணத்திற்கான புத்தாடைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். 

கலைச்செல்வி தனது வீட்டில் குப்புறப் படுத்துக் கொண்டு பள்ளிக் காலத்தில் அனைவருடனும் சேர்ந்து அவள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை நெஞ்சின் மீது வைத்து அணைத்து பிடித்தபடி சத்தம் இல்லாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தாள். “நீ என் அமுதாவோட அத்த பையனா எதுக்கு டா பொறந்த?  அவளுக்கு உன்ன புடிச்சிருந்தா கூட பரவால்ல. என்னைக்குமே அவ உன்னை கண்டுக்கவே மாட்டா. ஆனா அவ தான் உசுருல்ல..  

நான் என்ன பண்ணுவேன் வெற்றி? இத்தனை வருஷமா மனசுக்குள்ள உன்னை வச்சுக்கிட்டு இருக்கேனே.. இந்த நெனப்ப நான் என்ன பண்ணுவேன்? எப்படி இருந்தாலும் அமுதாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. அவளே ஏதாவது சொல்லி எல்லாத்தையும் நிறுத்திடுவான்னு பாத்தேன். ஆனா இப்ப எல்லாமே கைய மிதி போய்கிட்டு இருக்கு. நடக்கிறது எல்லாத்தையும் பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடும் போல. 

ஒருவேளை நீ அவளை கட்டிக்கிட்டா, என்னால பண்ண முடியும் சொல்லு? அமுதாவும் நல்ல புள்ள தான். அவ நல்லா இருக்கணும்னு தான் நான் எப்பவுமே நினைப்பேன். என்னமோ நீங்க நல்லா இருந்தா சரின்னு நினைச்சு மனச தேத்திக்க வேண்டியது தான். எப்படி நினைச்சாலும் உன்ன விட்டுக் கொடுக்க முடியாம தான் நான் கெடந்து தவிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கு என் மனசு நான் செத்தாலும் புரியாதுல?” என்று தன் மனதிற்குள் அவன் ஃபோட்டோவை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த அவள் அம்மா மங்கலம் “ஏய் கலை..  என்ன டி பண்ணிட்டு இருக்கிறவ? படிச்சு கிழிச்சு என்னமோ கலெக்டர் ஆகப்போறவ மாதிரி அந்த அமுதா புள்ள படிக்கிற அதே காலேஜ்ல தான் நானும் படிப்பேன்னு அடம் பிடிச்சு காலேஜ் போனியே டி..  என்னத்த படிச்சு கிழிச்சியோ தெரியல.. காலேஜும் முடிஞ்சு போச்சு. 

சரி ஏதாவது வேலைக்கு போயாவது இந்த குடும்பத்தை நீ காப்பாத்தி தூக்கி நிறுத்திடுவேன்னு பார்த்தா.. இப்பயும் தின்னுட்டு தின்னுட்டு மாடு மாதிரி வீடே கதின்னு இப்படியே படுத்து கிடக்கிறவ? ஏய் எழுந்திருச்சு தின்ன சோறு சேரிக்குறதுக்காகவாவது என் கூட வந்து வயல்லையாவது வேலை செய்யு டி. அப்படியாவது உன்னால இந்த வீட்டுக்கு ஏதாவது பிரயோஜனமா இருக்கட்டும்.” என்று குரல் கொடுக்க, 

உடனே எழுந்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட கலைச்செல்வி வெற்றியின் போட்டோவை ஒழித்து வைத்துவிட்டு “நீ சொல்றது சரி தான் மா. நான் பொறந்ததுக்கு பிரயோஜனமா ஏதாவது வேலைக்காவது போறேன். உனக்காவது வீட்டு செலவுக்கு காசு இருக்கேனு நிம்மதி கிடைக்கும்.” என நினைத்து தன் அம்மாவுடன் கிளம்பி வயல்வெளிகளில் வேலை செய்வதற்காக சென்று விட்டாள். 

கோர்ட்டில் இருந்த தினேஷ் தங்களது லாயரை வைத்து எப்படியாவது இந்த டிவர்ஸ் கேஸில் வெற்றி பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தான். தனக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி ஐ.சி.யுவில் அட்மிட் ஆகி இருந்த வனிதா அங்கே இருந்தே அனாமிகாவிற்கு கால் செய்து கோர்ட்டில் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று instruction கொடுத்தாள்.

அதைப்போலவே அங்கே இருந்த ஒரு பெண் நீதிபதியின் முன்னே கலங்கிய கண்களுடன் பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்ணை போன்ற தோற்றத்துடன் நின்று கொண்டு இருந்த அனாமிகா “நானும் இங்க வர்ற வரைக்கும் மியூச்சுவல் டிவோர்ஸ் கொடுக்கிறதுக்கு ரெடியா தான் இருந்தேன் மேடம். ஆனா எப்ப விஜய் ஏதோ ஒரு சாக்கு சொல்லி கோர்ட்டுக்கு வர்றதை அவாய்ட் பண்றாருனு தெரிஞ்சதோ, அப்பவே எனக்கு புரிஞ்சிருச்சு.

அவர் மனசுல இன்னும் நான் தான் இருக்கேன்.  அவருக்கும் எனக்கும் நடுவுல ஒரு சின்ன சண்ட தான்‌‌. அதனால தான் நாங்க பிரிச்சி இருந்தோம். எப்பயாவது சுச்சுவேஷன் அமையும் போது எல்லாம் நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணி தனியா ரொம்ப நேரம் பேசி இருக்கோம். அப்படி இருந்தும் எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையை எங்களால பண்ண முடியல. 

ஏன்னா, எங்களுக்கு ஒரே வீட்ல முன்னாடி மாதிரி நார்மலா சேர்ந்து வாழ்றதுல நிறைய இஷ்யூஸ் இருந்துச்சு. இப்ப கூட எனக்கு என் ஹஸ்பண்ட் விஜய் கூட சேர்ந்து வாழ்றதுக்கு சான்ஸ் கிடைச்சுதுனா கண்டிப்பா நான் அதை மிஸ் பண்ண மாட்டேன். அவர் என் மேல எவ்வளவு கோபப்பட்டாலும், அந்த சண்டை மறுபடியும் கண்டினியூ ஆனாலும், அவருக்காக எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நான் அவர்கூட சேர்ந்து வாழ ரெடியா இருக்கேன் மேடம். 

அவரும் உள்ளுக்குள்ள என் மேல இருக்கிற லவ்ல ‌ என்ன விடவும் முடியாம, எங்களுக்கு நடுவுல இருக்கிற பிராப்ளம்ஸ்னால இந்த ரிலேஷன்ஷிப்பை கண்டினியூ பண்ணவும் முடியாம கஷ்டப்பட்டு தான் இருக்காரு எனக்கு தெரியும். நீங்க எங்களுக்கு மறுபடியும் சேர்ந்து வாழ்றதுக்கு ஒரே ஒரு சான்ஸ் குடுத்தீங்கன்னா, கண்டிப்பா எங்களுக்குள்ள எல்லாமே சரியாயிடும். 

அவர் மனச நான் மாத்திடுவேன்.‌ ஒரு வருஷம் மட்டும் நாங்க சேர்ந்து வாழ்றதுக்கு பர்மிஷன் கொடுங்க மேடம். அதுக்கு அப்புறமும் அவருக்கு என்ன விட்டு பிரிஞ்சு போகணும்னு தோணுச்சுன்னா கண்டிப்பா நானே அவருக்கு டிவர்ஸ் கொடுக்கிறேன்.‌ எது எப்படி இருந்தாலும், எனக்கு என் விஜயோட சந்தோசம் தான் ரொம்ப முக்கியம். I love him so much. I am ready to do anything for him.” என்று தழுதழுத்த குறளில் சொல்லிவிட்டு கோர்ட் எனக் கூட பார்க்காமல் ஓ என அழுது ஒப்பாரி வைத்தாள். 

அவளது பேச்சை நம்பிய நீதிபதி அவள் சொல்வதைப் போலவே இவ்வளவு நேரம் ஆகியும் வருவான் வருவான் என்று தினேஷால் சொல்லப்பட்ட விஜய் இப்போது வரையிலும் கோர்ட்டுக்கு வராததால் “என்ன தான் சட்டம் திருமண முறிவை அங்கீகரிக்க தயாரா இருந்தாலும், திருமணமானவர்களை முடிஞ்ச வரைக்கும் சேர்த்து வைக்கிறதுக்கு தான் இந்த கோர்ட் முயற்சி பண்ணும். அதன் அடிப்படையில, மிஸ்ஸஸ் அனாமிக்காவும், மிஸ்டர் விஜயும் மறுபடியும் சேர்ந்து வாழ்றதுக்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா நாங்க உணர்றோம்.  அதனால உங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ இந்த கோர்ட் ஒரு கடைசி வாய்ப்பை வழங்குது. 

நீங்க கேட்டுகிட்ட மாதிரி இந்த வருஷத்தோட முடிவுல உங்களோட முடிவு என்னவா இருக்கோ அது தான் கோர்ட்டோட முடிவாகவும் இருக்கும். ஆனா அப்பயும் உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் கோர்ட்டுக்கு வராம போயிட்டா, கோர்ட்டோட நேரத்தை வீணடிச்சதுக்காக உங்களுக்கு ஃபைன் போட்டுட்டு இந்த கேச நாங்க தள்ளுபடி பண்ணிடுவோம்.” என்று தீர்ப்பு கொடுத்து விட்டார். 

ஜட்ஜ் பேச பேச அப்படியே அனாமிக்காவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பல பல இருந்தது. இவை அனைத்திற்கும் காரணம் வனிதாவின் ராஜதந்திரம் தான் என்பதனால் “ஐயோ வனிதா ஆன்ட்டி நான் உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல. உங்கள மாதிரி ஒரு மதர் இன்லா தான் எனக்கு வேணும். Last minute-ல நீங்க இப்படி ஒரு twist குடுப்பீங்கன்னு நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. எனக்கு இருக்கிற சந்தோஷத்துல அப்படியே உங்களை கட்டிப்பிடிச்சு உங்க கன்னத்துல ஒரு கிஸ் குடுக்கணும் போல இருக்கு.” என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். 

சோகமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தினேஷ் “இந்த பிசாசு கிட்ட இருந்து நம்ம பாஷை எப்படி தான் காப்பாத்துறதோ தெரியல!” என்று நினைத்து பெருமூச்சு விட்டான். 

– காதல் மலரும்

You may also like

Leave a Comment

About Me

Featured