Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 57

சாபமாய் வந்த என் உயிரே CH 57

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 57 

விஜய் கோர்ட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் சென்ற சஞ்சனா “என்ன அண்ணா அம்மாவுக்கு சீக்கிரம் சரியாயிடும்னு சொன்னீங்க.. பட் இன்னும் டாக்டர் ஐ.சி.வுல இருந்து வெளிய கூட வரலையே.. இப்ப என்ன அண்ணா பண்ணுது? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நம்ம என்ன பண்ணுவோம்? நீங்க இன்னொரு தடவை டாக்டர் கிட்ட போய் அம்மா எப்படி இருக்காங்கன்னு கேட்டுட்டு வரீங்களா? நான் உள்ள போனா என்ன விட மாட்டேங்குறாங்க.” என்று சொல்லிவிட்டு அழுதாள். 

உடனே அவளது தோள்களைப் பற்றிக் கொண்ட விஜய் “இங்க பாரு சஞ்சனா.. நான் சொல்றத கேளு. மம்மிக்கு எதுவும் ஆகாது. Trust me. நான் டாக்டர் கிட்ட கிளியரா பேசிட்டு வந்துட்டேன். மம்மிக்கு கான்ஷியஸ் வாரத்துக்கு கொஞ்சம் டைம் ஆகும். பட் அவங்க சீக்கிரமாவே நார்மல் ஆயிடுவாங்கன்னு டாக்டர் சொல்லி இருக்காரு. இப்ப எனக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு. நான் கோர்ட்டுக்கு போய் ஆகணும். உனக்கே தெரியும் இல்ல.. இன்னைக்கு என் டிவர்ஸ் கேஸ் ஃபைனல் ஹியரிங். நான் போயிட்டு கேஸ் முடிஞ்ச உடனே ஒரு ஒன் ஹர்ல இங்க வந்துடறேன்.

அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருந்து மம்மியை பார்த்துக்கோங்க. நான் உங்க கூட என் ஆளுங்களை விட்டுட்டு போறேன். ஏதாவது எமர்ஜென்சின்னா எனக்கு கால் பண்ணு. நான் உடனே கிளம்பி வரேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து செல்ல முயற்சி செய்தான். 

அவன் கையைப் பிடித்து தடுத்த சஞ்சனா அவனை கட்டி பிடித்துக் கொண்டு “இல்ல அண்ணா.. நீங்க எங்கயும் போகக் கூடாது. அம்மா எங்க கிட்ட நீங்க அனாமிகா அண்ணணியை டிவர்ஸ்  பண்ண கூடாதுன்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க.. அத பத்தி நாங்க பேசிட்டு இருக்கும் போது தான் அவங்களுக்கு இப்படி ஆயிடுச்சு. சோ ப்ளீஸ் அண்ணா.. எங்களுக்காகவாவது நீங்க கோர்ட்டுக்கு போகாதீங்க. 

உங்களுக்கும் அண்ணிக்கும் நடுவுல என்ன பிராப்ளம்ன்னு ப்ராமிஸா எங்களுக்கு தெரியாது. பட், இதுக்கு அப்புறமா உங்க லைஃப்ல இன்னொரு சேஞ்ச் வர்றத்துக்கு மட்டும் சான்ஸ் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். அனாமிகா அண்ணியை நீங்க பிடிக்காமையே கல்யாணம் பண்ணி இருந்தாலும் பரவால்ல அண்ணா. ப்ளீஸ் நான் கேக்குறதுக்காக, மம்மிக்காக அவங்களுக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் கொடுங்களேன்.. 

இன்னும் ஒரு வருஷம் மட்டும் நீங்க எங்களுக்காக அவங்க கூட சேர்ந்து வாழ ட்ரை பண்ணுங்க. அப்பயும் உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகலைன்னா நீங்க தாராளமா அவங்கள டிவர்ஸ் பண்ணிக்கோங்க. நாங்க யாருமே உங்கள ஸ்டாப் பண்ண மாட்டோம். ப்ளீஸ் அண்ணா, நோ சொல்லாதீங்க. எனக்காக கோர்ட்டுக்கு போகாம இருங்களேன் ப்ளீஸ்!”  என்று அழுது கெஞ்சினாள்.

அவளைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட சஞ்சய் “இந்த சஞ்சனா சரியான லூசா இருந்தாலும், தெரிஞ்சோ தெரியாமலோ எங்க பிளானுக்கு கரெக்டா இவ cooperate பண்றா.. கண்டிப்பா இவ  சொன்னா கேட்பான் விஜய். இவளே இவ்வளவு பேசும்போது, நம்ம சைலன்டா இருந்தா நல்லா இருக்காது. நம்மளும் போய் ஏதாவது பர்பாமன்ஸ் பண்ணலாம்.” என்று நினைத்து விஜயின் அருகில் சென்று தன் பங்கிற்கு அனாமிக்காவை டிவர்ஸ் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினான். 

இதற்கிடையில் சைலண்டில் இருந்த விஜயின் ஃபோன் தொடர்ந்து தினேஷ் கோர்ட்டுக்கு வரச் சொல்லி அவனை அழைப்பதற்காக கால் செய்து கொண்டே இருந்ததால் வைப்ரேட் ஆகிக் கொண்டே இருந்தது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த விஜய் இறுதியில் சஞ்சனா கதறி அழுவதை தாங்க முடியாமல் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “ஓகே ஓகே சஞ்சு.. ரிலாக்ஸ் நீ அழுகாத. என் தங்கச்சியும், தம்பியும் இவ்வளவு தூரம் சொல்லும்போது உங்க பேச்சை மீறிட்டு நான் எப்படி கோர்ட்டுக்கு போவேன்? நான் அம்மாவுக்கு சரியாக வர வரைக்கும் இங்க ஹாஸ்பிடல்லயே இருக்கேன். ஓகேவா?” என்று அன்புடன் சொன்னான். 

யார் என்ன சொன்னாலும் அதை கேட்காமல் தான் நினைப்பது தான் சரி என்று இருக்கும் தனது பிடிவாதக்கார அண்ணன் இப்போது தன் பேச்சுக்கு செவி சாய்த்து இருப்பதை நினைத்து மகிழ்ந்த சஞ்சனா உடனே விஜய் யை கட்டி அணைத்துக் கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. I am sure, உங்களோட இந்த டெசிஷன் நெனச்சு கண்டிப்பா நீங்க எப்பயும் ஃபீல் பண்ண மாட்டீங்க. அனாமிகா அண்ணி  உங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு நல்ல வைஃபா இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அம்மாவுக்கு சரி ஆனதுக்கு அப்புறம் அவங்களும் அண்ணக்கு அட்வைஸ் பண்ணி அவங்கள சரி பண்ண ட்ரை பண்ணுவாங்க. You don’t worry.”  என்று உறுதியாகச் சொன்னாள். 

அப்படி நடந்தால் நல்லது தான். தன்னுடைய குடும்பத்திற்காகவாது அவளுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி ஒரு முறை யோசித்துப் பார்க்கலாம் என்று நினைத்த விஜய் முக்கியமாக சஞ்சனா கேட்டதற்காக அனாமிகாவிற்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் கொடுக்க முடிவெடுத்தான். 

அப்போது அவனுக்கு தினேஷிடம் இருந்து கால் வர, சஞ்சனாவிடம் சொல்லிவிட்டு ஒரு ஓரமாக சென்று அவனது காலை அட்டென்ட் செய்த விஜய் “என்னால இப்போதைக்கு கோர்ட்டுக்கு வர முடியாது தினேஷ். நான் அனாமிக்காவிற்கு லாஸ்ட்டா ஒரு சான்ஸ் கொடுக்கப் போறேன்னு சஞ்சனாவுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன். சோ கோர்ட்ல நான் ஏன் வரலைன்னு கேட்டாங்கன்னா, மம்மிக்கு உடம்பு சரி இல்லன்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம்னு சொல்லிரு. அனாமிகா சைடுல இருந்து அவங்க ஃபேமிலி என்ன பண்றாங்களோ பண்ணட்டும் பாத்துக்கலாம். நீ கோர்ட்டுல ஹியரிங் முடிஞ்ச உடனே எனக்கு கால் பண்ணி அங்க என்ன நடந்துச்சுன்னு அப்டேட் பண்ணு.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். 

“என்ன இது கடைசியில பாஸ் இப்படி சொல்லிட்டாரு! அவ்வளவு தான் போச்சு.. இதுக்கு மேல இந்த டிவர்ஸ் கேஸ் கண்டிப்பா நிக்காது. இத்தனை நாள் கஷ்டப்பட்டு அனாமிகா மேடமை சமாளிச்சு ஃபைனல் ஹியரிங் வரைக்கும் கொண்டு வந்தது எல்லாம் வேஸ்டா போச்சு. லாஸ்ட் மினிட்ல பாஸ் இப்படி மனசு மாறுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.  அது எப்படி மிஸ்ஸஸ் குருமூர்த்திக்கு கரெக்டா இந்த டைம்ல உடம்பு சரி இல்லாமல் போகும்?  Something strange! கண்டிப்பா பாஸ் கிட்ட இத பத்தி எல்லாம் ஒரு நாள் டிஸ்கஸ் பண்ணனும்.” என்று நினைத்த தினேஷ் விஜய் வராமலேயே அவனுக்கும் அனாமிக்காவிற்கும் இன்று டிவர்ஸ் வாங்க ஏதாவது சாத்திய கூறுகள் இருக்கிறதா என்று லாயருடன் டிஸ்கஸ் செய்ய சென்று விட்டான். 

வெற்றியுடன் ஒரு பெரிய துணிக் கடையின் முன்னே சென்று காரில் இறங்கினாள் அமுதா. காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவள் அருகில் சென்ற வெற்றி “கால் வலி இப்ப எப்படி இருக்கு? நான் வேணா உன்ன தூக்கிட்டு போகவா? இந்த புடவை செக்சன் மேல் மாடியில இருக்கேன்னு நினைக்கிறேன்.  நானே இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது. படி ஏறி போகணுமே எப்படி போவ?” என்று அக்கறையுடன் கேட்க, அவன் கையை ஆதரவாக பிடித்துக் கொண்ட அமுதா “இப்படி தான்.” என்று சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து சிரமப்பட்டு நொண்டி நொண்டி நடந்தாள். 

அவள் சிரமப்படுவதை பார்க்க முடியாமல் மீண்டும் வெற்றி “அதான் சொல்றேன்ல.. நான் சொன்னாலே அதைக் கேட்க கூடாதுன்னு இருக்கியா? இங்க வா டி.. நான் உன்னை தூக்கிட்டு போறேன்.” என்று சொல்லி அவளை தன் பக்கம் இழுக்க, “அட சும்மா இரு வெற்றி என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா?  இது என்ன நம்ம வீடுன்னு நெனச்சியா? நீ என்னை தூக்கிட்டு போறத பாத்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க? நான் தான் நடந்து வரேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன? இன்னொரு தடவை இப்படியே அடம் பிடிச்சுட்டு இருந்தினா நான் ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்.” என்று கோபமாக சொன்னாள். 

உடனே தன் வாயை மூடிக் கொண்ட வெற்றியை கைத்தங்கலாக அவளை அந்த கடைக்குள் அழைத்து சென்றான். அவன் நினைத்ததை போலவே இரண்டாம் தளத்தில் தான் திருமணத்திற்கான ஆடைகளை வாங்கும் செக்ஷன் இருந்தது. அமுதா வலியுடன் ஆஆ.. அம்மா என்று முனங்கிக் கொண்டே மடியில் ஏறி செல்ல, அவள் கையைப் பிடித்துக் கொண்டு பத்திரமாக அவளை படிகளில் ஏற்றி அழைத்து சென்றான் வெற்றி.

“ஏய் அன்னம்.. இன்னும் என்ன அவங்க ரெண்டு பேரையும் காணோம்! பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல்ல இருந்து இந்த கடைக்கு வர்றதுக்கு அவங்களுக்கு இவ்ளோ நேரம் தேவைப்படுதா?” என்று கோபமாக மணிகண்டன் தன் மனைவி அன்னபூரணி இடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, வெற்றி கை தாங்களாக அமுதாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். 

டாக்டர் கொடுத்த க்ரீமை அமுதா தன் முகத்தில் அப்ளை செய்திருந்ததால், அவள் முகத்தில் இருந்த காயம் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. கோவிலில் உள்ள அம்மன் சிலையை போல புடவையில் அத்தனை கலையாகவும், முகப்பொலிவுடன் இருந்த அமுதா இப்போது பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் மிகவும் சோர்வாக இருந்தாள்‌. இதில் அவள் நொண்டி நொண்டி வேறு நடந்து வருவதை பார்க்கவே மணிகண்டனுக்கு மனம் வலித்தது. 

அதுவும் இதற்கு தான் காரணம் என்று நினைத்தாலே அவர் மனம் குற்ற உணர்ச்சியில் வாட, அவை அனைத்தையும் தாண்டி இப்போது அமுதாவிற்கு வெற்றியுடன் திருமணம் நடப்பது தான் முக்கியம் என்று அவருக்கு தோன்றியதால் வழக்கம்போல தன் பாசத்தை உள்ளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு இறுக்கமாக தன் முகத்தை வெளியில் வைத்துக் கொண்டார் மணிகண்டன்.

அமுதா சிரமப்பட்டு நடந்து வருவதை பார்த்தவுடன் வேகமாக சுமதியும் அன்னபூரணியும் அவள் அருகில் சென்று “டாக்டரை பார்த்துட்டு வந்துட்டீங்களா? என்ன சொன்னாங்க? சீக்கிரம் எல்லாமே சரியாகிடும் தானே!” என்று கேட்க, தன் அண்ணனை பாவமாக பார்த்தபடி அமுதா “அப்படி தான் சொல்லி இருக்காங்க அண்ணி பார்க்கலாம். மறுபடியும் என்னை யாரும் அடிக்காம இருந்தா சீக்கிரம் சரியாயிடும்னு நினைக்கிறேன். இப்படியே போய் என்னால வெளியே எப்படி என் மூஞ்சிய காட்ட முடியும்? எனக்கே என்ன கண்ணாடில பார்க்க சுத்தமா பிடிக்கல. இதுல டிரஸ் எடுக்குறதுக்கு நானும் வந்தே ஆகணும்னு எல்லாரும் எதுக்கு தான் அடம் பிடிக்கிறீங்களோ தெரியல.” என சோகமாக தொடங்கி கோபமாக முடித்தாள். 

அவள் வேண்டுமென்றே குத்தலாக தன்னை சுட்டிக்காட்டி தான் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்த மணிகண்டனுக்கு “இத்தனை நாளா பாக்குறதுக்கு ஒன்னும் தெரியாத அப்பாவி புள்ளை மாதிரி இருந்தா இவ.. ஆனா இவளுக்கும் நம்ம ஆத்தா மாதிரியே நல்லா கூர்மையான நாக்கு தான். நேர்ல எதையும் சொல்ல முடியலேன்னு எப்படி ஜாட பேசுது பாரு இந்த புள்ள! எங்க ஆத்தாவே தான் மறுபடியும் அமுதா ரூபத்துல வந்து பிறந்து இருக்கா. இதை யார் நம்பராங்கலோ இல்லையோ கண்டிப்பா நான் நம்புறேன்.” என்று நினைத்துக் கொண்டே, “ரொம்ப நேரம் நிக்க வேண்டாம். அந்த புள்ளைய வந்து சேர்ல உக்கார சொல்லுங்க. இதுவரைக்கும் நம்ம பார்த்து வச்ச புடவையை எல்லாம் அது கிட்ட காட்டுங்க. அவளுக்கு எது பிடிக்குதோ அதையே எடுத்துக்கட்டும்.” என்றார்.  

உடனே தன் அண்ணனை முறைத்து பார்த்த அமுதா வெற்றியுடன் சென்று சேரில் அமர்ந்து அங்கே இருந்த புடவைகளை பார்க்க தொடங்கினாள். 

– காதல் மலரும்

You may also like

Leave a Comment

About Me

Featured