அத்தியாயம் 51
ஹாய் ஃபிரண்ட்ஸ்..
உங்க எல்லாருக்கும் ஒரு ஹாப்பி நியூஸ். “சாபமாய் வந்த என் உயிரே” ஆடியோ நாவல் நம்முடைய தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல ஆடியோ புக்கா அப்லோட் பண்ணிட்டு இருக்கேன். அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க. உங்களுக்கு புடிச்ச எல்லா புத்தகங்களும் விரைவில் ஆடியோவாக கிடைக்கும். அதை தவறாமல் கேக்குறதுக்கு நீங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க.
நன்றி 🙏
அத்தியாயம் 51 💕
அமுதா வெற்றியின் தூய்மையான அன்பை கண்டு கண்டு நெகிழ்ந்து கண்கள் கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இப்போது எதற்கு அழுகிறாள்? ஒருவேளை தனக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்பதை நினைத்து அழுகிறாளா? என்று நினைத்து கனத்த இதயத்துடன் அவள் அருகில் சென்ற வெற்றி “ஹே அம்மு.. ஏண்டி அழுகிற? நெஜமாவே உனக்கு என்ன புடிக்கலையா? அதான் என்ன மாதிரி ஒருத்தனையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கணும்னு உனக்கு தலையெழுத்து நினைச்சு அழுகிறாயா?” என்று உடைந்த குரலில் கேட்டான்.
பிறந்ததில் இருந்து தன்னுடனே வளர்ந்த அமுதாவிற்கு தன்னையே ஏன் பிடிக்கவில்லை? என்று நினைக்கும் போதே வெற்றிக்கு தன் இதயத்தில் யாரோ பெரிய ஈட்டியை வைத்து இறக்குவதைப் போல நெஞ்சில் அப்படி ஒரு கூர்மையான வலி ஏற்பட்டது. அவன் கேட்டதற்கு இல்லை என்று தலையாட்டிய அமுதா சட்டென்று தன் அருகில் இருந்த வெற்றியை அனைத்து கொண்டு “சாரி, வெற்றி ஐ அம் சோ சாரி. நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு இதுவரைக்கும் புரிஞ்சிக்கிட்டதே இல்ல. உன் கிட்டயும் மனசு விட்டு பேசி அதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணதும் இல்ல. நான் இப்படி இருந்தது உன்னை எவ்வளவு ஹர்ட் பண்ணி இருக்கோம்னு நினைச்சாலே எனக்கு கில்ட்டியா இருக்கு. நான் உனக்கு முறைப் பெண்ணுன்ற பாசத்துல நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. பட் நான் உன்ன இதுவரைக்கும் உன் மாமானு கூட கூப்பிட்டதில்ல. சாரி வெற்றி மாமா!” என்று சொல்லிவிட்டு கதறி அழுதாள்.
முதல் முறையாக அமுதா தன்னை கட்டி பிடித்ததில் சகலமும் மறந்த நிலையில் அப்படியே சிலையாய் சமைந்து நின்ற வெற்றி அவள் அழுது கொண்டே இருப்பதால் நிதானம் பெற்று சட்டென தானும் அவளை இறுக்கி அனைத்து “அட அமுதா.. இப்ப எதுக்கு நீ அழுகிற? நான் உன் மேல தப்புன்னு எப்பயுமே உன்னை குறை சொன்னதே இல்லையே! அன்பு, பாசம், காதல் எல்லாம் யாரும் யார் கிட்டயும் வேணுமா கேட்டு வாங்க முடியாது அமுதா.
இதுவரைக்கும் என் மனசுல என்ன இருக்குன்னு நான் உன் கிட்ட கூட வெளிப்படையா சொன்னது இல்ல. அதுக்காக நான் உன்ன லவ் பண்ணலைன்னு ஆயிடுமா? அப்போ நீ வெறும் எட்டாவது தான் படிச்சிட்டு இருந்த. நான் 11வது படிச்சிட்டு இருந்தேன். அப்ப தான் எனக்கு நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு புரிஞ்சுது. அதுக்கு முன்னாடியும் கூட எனக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும்.
உன்ன தவிர என் வாழ்க்கையில நான் இன்னொரு பொண்ண சும்மா கூட பார்த்ததில்லை. உனக்கு அந்த மாதிரி என் மேல ஆசை வரலைனா அதுக்கு என்ன பண்ண முடியும்? அதான் நமக்கு இப்ப மேரேஜ் ஆக போகுதே.. நீயும் நானும் தான் இனிமே சேர்ந்து வாழணும். நம்ம புருஷன் பொண்டாட்டி என்ற எண்ணம் உன் மனசுக்குள்ள வந்துருச்சுனாலே, எல்லாமே தானா சரியாயிடும். இதுக்காக எல்லாம் நீ கில்டியா ஃபீல் பண்ணனும்னு அவசியம் இல்ல.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
தனது மனைவியுடன் தங்களுடைய அறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் அமுதா வெற்றியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதை பார்த்துவிட்டு அப்படியே தன் மனைவியின் கையைப் பிடித்து தடுத்து “இப்ப அங்க போகாத. அப்புறமா வெளிய போய்க்கலாம். உன்ன ஜவுளி கடைக்காரர்களுக்கு கால் பண்ணி நம்ம வரோம்னு சொல்ல சொன்னேன் இல்ல.. முதல்ல போய் அந்த வேலையை பாரு.” என்று சொல்லி அன்னபூரணியை உள்ளே அனுப்பி வைத்துவிட்டார்.
என்ன தான் வெற்றிக்கு அமுதாவை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றது அவருடைய முடிவாக இருந்தாலும், வெற்றிக்கு அமுதாவின் மீது இருக்கும் அளவிற்கு அமுதாவிற்கு வெற்றியின் மீது இன்ட்ரஸ்ட் இல்லை என்பது மணிகண்டன் நன்றாக அறிந்திருந்த உண்மை. அதனால் இந்த திருமணத்தை நாம் நம்முடைய சொந்த முடிவில் துணிந்து செய்கிறோமே.. இதனால் அபுதாவின் வாழ்க்கையோடு சேர்ந்து வெற்றியின் வாழ்க்கையும் நல்லபடியாக இருக்குமா இருக்காதா என்ற பயம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் இப்போது கண்களில் கண்ணீருடன் தங்களின் காதலை பரிமாறிக் கொள்ளும் விதமாக அமுதாவும், வெற்றியும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு இருப்பதை பார்த்த உடனேயே தன் மனதில் இருந்த பாரமெல்லாம் இறங்கியதை போல நிம்மதியாக உணர்ந்தார் மணிகண்டன்.
வெற்றியிடம் பேசிவிட்டு குளிப்பதற்காக சென்று விட்டாள் அமுதா. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அமுதா இப்போது தான் தன் மீது கொஞ்சம் இன்ட்ரஸ்ட் காட்டுகிறாள் என்று நினைத்து சந்தோஷப்பட்ட வெற்றியின் முகத்தில் இப்போது தான் புது மாப்பிள்ளைக்கான கலையே வந்தது.
கோர்ட்டுக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தான் விஜய். அவனைப் போலவே தானும் கோர்ட்டுக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்த அனாமிகா தன் அப்பா ராஜேந்திரனிடம் “என்ன டாடி நம்ம இவ்வளவு தூரம் கஷ்டப்படும் கடைசியில நான் விஜய கல்யாணம் பணியும் அவன டிவர்ஸ் பண்ற நிலைமை வந்துருச்சு! எங்களுக்கு மேரேஜ் ஆகுறதுக்கு வனிதா ஆன்ட்டி தான் நிறைய ஹெல்ப் பண்ணாங்க.
அவங்க கிட்ட உங்கள பேச சொன்னேனே.. இன்னிக்கி விஜய் கோர்ட்டுக்கு வராம போயிட்டா, நான் கோர்ட்ல எனக்கு அவன் கூட சேர்ந்து வாழ்றதுக்கு இன்ட்ரஸ்ட் இருக்குன்னு சொல்லலாம்னு இருக்கேன். விஜய் அன்னைக்கி என்னை மிரட்டிட்டு போனது நினைச்சா இப்ப கூட எனக்கு பயத்துல உடம்பெல்லாம் நடுங்குற மாதிரி தான் இருக்கு. பட் என இருந்தாலும் விஜய் மாதிரி இன்னொருத்தனை இந்த இந்தியாவிலேயே தேடிப் பிடிக்கிறது கஷ்டம். இப்பயும் கொஞ்சம் டைம் இருக்கு. நான் அவன லூஸ் பண்ண ரெடியா இல்ல டாடி.. ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.
“நான் ஏற்கனவே வனிதா கிட்ட பேசி பாத்துட்டேன். ஆனா அவர் இந்த டிவர்ஸ்ல விஜய் ஸ்டராங்கா இருக்கறதுனால எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்றா. அவளே அப்படி சொன்னதுக்கு அப்புறமா மறுபடியும் மறுபடியும் நம்ம போய் அவகிட்ட என்ன மா கேக்க முடியும்?” என்று ராஜேந்திரன் சலிப்புடன் கேட்க, “நீங்க என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ எனக்கு அதெல்லாம் தெரியாது டாடி.
நீங்க தானே எனக்கு ஆசை காட்டி விஜய்க்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.. கடைசில நான் அவனோட லீகல் வைஃபா இருந்தும் என்னால எதுவுமே பண்ண முடியாம போயிடுச்சு. கிட்டத்தட்ட நானும் அவனும் ஒரு வருஷம் கூட சேர்ந்து வாழல. அதுக்குள்ள டிவோர்ஸ் வாங்கி நான் அவனை விட்டு பிரியணும்னா எப்படி? அட்லீஸ்ட் அவனோட ப்ராப்பரிட்டில பாதியாவது கிடச்சா கூட போனா போகுதுன்னு நான் விட்டுருப்பேன். டிவர்ஸ்க்கு காம்பன்ஷேசன் கேட்க கூடாதுன்னு விஜய் என் கிட்ட சொல்லிட்டு போய்ட்டான்.
நான் அன்னைக்கு உங்க பேச்சைக் கேட்டு எதுவும் ப்ராப்ளம் பண்ணாம இருந்திருந்தால் கூட அவன் கண்டிப்பா எனக்காக ஏதாவது கொடுத்திருப்பான். இப்ப அதுவும் போச்சு.. நான் ஏதாவது காம்பன்ஷேசன் வேணும்னு வாயை திறந்தாலே என்ன போட்டு தள்ளிடுவேன்னு அவன் பிஸ்டலை என் நெத்தியில வச்சு சொன்னான் தெரியுமா? என்னால எதுவுமே பண்ண முடியாத சுச்சுவேஷன்ல இப்ப நான் இருக்கேன். At the end, அவனை கல்யாணம் பண்ணதுக்கு நான் அவனோட எக்ஸ் ஒய்ஃப் என்ற பெயர் மட்டும்தான் எனக்கு இப்ப மிச்சமா இருக்க போகுது.” என்று எரிச்சலுடன் சொன்னாள் அனாமிகா.
அவள் சொல்வதும் நியாயம் தான் என்று ராஜேந்திரனுக்கு தோன்றியது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பிசினஸ்மேனை தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து கடைசியில் அவனால் எந்த பிரயோசனமும் இல்லாமல் போவதை அவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால் எதற்கும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து வனிதாவிற்கு கால் செய்து “ப்ளீஸ் வனிதா.. எங்களுக்கு இந்த விஷயத்துல ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க. நாளைக்கு எங்க அனாமிகா இடத்தில வேற பொண்ணு விஜய்க்கு பொண்டாட்டியா வந்தா உங்களுக்கு அது பிடிக்குமா சொல்லுங்க?
அவ எங்க அனாமிகா மாதிரி உங்களுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குவாளா? அவ அந்த வீட்ல இருக்கும்போது உங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கா! அதை எல்லாம் நினைச்சு பாருங்க. ஏதாவது பண்ணி விஜயை இன்னைக்கு மட்டும் கோர்ட்டுக்கு வரவிடாம பண்ணிருங்க. அதையே சாக்கா வச்சு அப்புறமா ஏதாவது பண்ணி விஜய் கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி அனாமிகா கூட சேர்த்து வைக்கிறதுக்கு நம்ம ஏதாவது பண்ணலாம். எதுவா இருந்தாலும் எங்களால உங்க சப்போர்ட் இல்லாமல் பண்ண முடியாது மேடம்.” என்று சொல்ல,
“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ராஜேந்திரன். நான் இல்லைன்னு சொல்லவே இல்ல.. ஆனா நாங்க போட்டு கொடுத்த பிளான கரெக்டா பண்ண தெரியாம பெருசா சொதப்பி உங்க பொண்ணு அனாமிகா கையும் களவுமா விஜய் கிட்டயே போய் மாட்டிக்கிட்டா.. அதுக்கு அப்புறமா விஜய் எல்லாத்தையும் நோண்ட ஆரம்பிச்சிட்டான். உங்களோட சேர்ந்து நாங்களும் மாட்டிருப்போம். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாங்க எவ்ளோ கஷ்டப்பட வேண்டியது இருந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா?
அதனால தான் என் கூட சேர்ந்து இங்கே இருந்து எல்லாத்தையும் சமாளிக்கிறதுக்கு உங்க அனாமிகாவுக்கு திறமை பத்தாதுன்னு நான் அவளை கண்டுக்காம விட்டுட்டேன். எப்படியோ பிரச்சனை நடந்து இரண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. அவன் வேணும்னு நினைச்சிருந்தா உங்க பொண்ணு அவனுக்கு புடிச்ச மாதிரியாவது நடந்துட்டு இருந்திருக்கணும். அத விட்டுட்டு அவன் கொன்னுடுவேன், சத்தம் இல்லாம என்ன டிவர்ஸ் பண்ணிட்டு போயிரு.. காம்பன்ஷேசன் கூட என்னால உனக்கு கொடுக்க முடியாது அது தான் நான் உனக்கு குடுக்குற பனிஷ்மென்ட்ன்னு துப்பாக்கிய வச்சு மிரட்டுற அளவுக்கு அவனை கோவப்படுத்தி வச்சிருக்கா..!!
இதுக்கு அப்புறமும் அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை எல்லாம் தீர்ந்து அவங்க சேர்ந்து வாழ்வாங்கன்னு நீங்க எப்படி எதிர்பார்க்கிறிங்க? நான் சொல்லி கேட்கிற ஸ்டேஜை எல்லாம் இந்த பிரச்சனை எப்பயோ தாண்டி போயிருச்சு. இப்ப அனாமிகா விஷயத்துல என்னால எதுவும் பண்ண முடியாது.” என்று உறுதியாக சொல்லி விட்டாள் வனிதா.
ஆனால் அப்போதும் விடாமல் தொடர்ந்து அனாமிகாவின் அப்பா அவளிடம் கெஞ்சிக் கொண்டே இருக்க, அனாமிகாவை போன்று தனக்கு சாதகமாக நடந்து கொள்ளும் ஒருத்தி கண்டுபிடிப்பது கஷ்டம் என்று நினைத்த வனிதா “இப்ப ஏதாவது பண்ணனும்னா ரொம்ப கஷ்டம் தான். இருந்தாலும் நீங்க இவ்ளோ தூரம் கேக்குறதுக்காக நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன். இருந்தாலும் என்னை நம்பிட்டு இருக்காம நீங்களும் ஏதாவது பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.
ஒரு பக்கம் வெற்றியின் மனைவியாக போகும் அமுதா. இன்னொரு பக்கம் அனாமிகாவை விட்டு விலக துடிக்கும் விஜய். இந்த நிலையில் அமுதாவையும் விஜையையும் எப்படி விதி இணைக்கப்போகிறது?
– காதல் மலரும்