அத்தியாயம் 180
பாரிஸ் செல்லும் ஆர்வத்தில் அனைவரும் குஷியாக பேக்கிங் முடித்து அடுத்த ஒரு வாரத்தில் தங்களது பிரைவேட் ஜெட் விமானத்தில் புறப்பட்டு விட்டார்கள். எப்போதும் இந்த மாதிரி எங்கேயும் வெளியில் சென்றால் ஆருத்ரா புது இடத்திற்கு பழக கொஞ்சம் பயந்து தேன்மொழியின் முந்தானையைப் பிடித்தபடி சுற்றிக் கொண்டு இருப்பாள்.
ஆனால் இன்னும் அவளுக்கும் தேன்மொழிக்கும் நடுவில் இருந்த உறவில் முன்னேற்றம் ஏற்படாததால் அவள் அருகில் நெருங்கி செல்லவும் முடியாமல் தனது தாய் ஸ்தானத்தில் தன் அம்மாவைப் போலவே இருக்கும் அவளை விலகி நிற்கவும் முடியாமல் தூரத்தில் இருந்து தவித்துக் கொண்டு இருந்தாள். அவை அனைத்தும் கொஞ்சம் பெரியவனாக இருந்ததால் சித்தார்த்துக்கு புரிய தான் செய்தது.
அதனால் அவன் அவளை தடுக்காமல் விட்டுவிட, அவன் விலகி நிற்கும்போது தான் மட்டும் சென்று ஒட்டிக் கொண்டால் நன்றாக இருக்குமா? என்று நினைத்து ஆருத்ராவும் அப்படியே இருந்து விட்டாள். ஆனால் இவை எதுவும் தங்களது உறவை பாதிக்காமல் அர்ஜுன் தேன்மொழி இருவரும் கவனித்துக் கொண்டார்கள்.
தங்களுக்கான பிரைவேட் அறையில் தேன்மொழி பெட்டில் சாய்ந்தவாறு அமர்ந்து எதிரில் இருந்த டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டு இருக்க, “நீ என்ன சின்ன குழந்தையா? இத போய் இவ்வளவு நேரமா பாத்துட்டு இருக்க?” என்று கேட்ட அர்ஜுன் ஒரு பவுலில் ஃப்ரூட் சாலட் தயார் செய்து அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து அதை அவளுக்கு ஊட்டி விட தொடங்கினான்.
அதை சாப்பிட்டபடி “எனக்கு ஆருத்ரா கூட டெய்லியும் இதை பார்த்து பழகிருச்சு. இப்ப எனக்கும் புடிச்சுருச்சு. அதனால நான் பார்க்கிறேன். இதுல உனக்கு என்ன பிரச்சனை? நானே என் கூட ஆருத்ரா இப்ப இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?” என்று கேட்ட தேன்மொழி தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“நான் போய் அவளை கூட்டிட்டு வரட்டுமா?” என்று அர்ஜுன் கேட்க, “வேண்டாம் விடு அர்ஜுன். அவளுக்கு என் மேல இருக்க பாசம் அப்படியே தான் இருக்கு. அதை என்னால ஃபீல் பண்ண முடியுது. ஆனா என்ன.. அவளால சியா இறந்த இன்னும் ஏத்துக்க முடியல.
அதனால என்ன பாக்கும்போது அவ அம்மாவை மிஸ் பண்றா. நான் இங்க அம்மாவா இருந்தாலும் உள்ளுக்குள்ள அவளுக்கும் கஷ்டமா இருக்கும் தானே.. சித்தார்த்தும் அப்படித் தான் இருக்கான். என்ன அட்லீஸ்ட் அவன் அளவுக்கு ஆருத்ரா என்ன தப்பா நினைக்கலன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். அட்லீஸ்ட் இந்த ட்ரிப்ளையாவது நமக்குள்ள இருக்க எல்லா ப்ராப்ளமும் சரியாகி திரும்ப போகும்போது நம்ம ஹேப்பி ஃபேமிலியா இருந்தா நல்லா இருக்கும்.” என்றாள் தேன்மொழி.
தேன் மொழியின் பானை போன்ற பெரிய வயிற்றை அன்புடன் வருடிய அர்ஜுன் “இவ பொறக்கும் போது எல்லாமே சரியாயிடும் நீ வேணா பாரு! எல்லாரையும் இவ இம்ப்ரஸ் பண்ணிடுவா. சித்தார்த்துக்கும் ஆருத்ராவுக்கும் அம்மா விஷயத்துல தானே கன்ஃபியூஷன்.. அவங்களுக்கு அப்பன் நான் தான்னு தெரியும்ல..
சோ அவங்களுக்கு பொறக்க போற தங்கச்சி மேல இருக்கிற பாசம் கண்டிப்பா அவங்கள உன் கிட்டயும் கொண்டு வந்து சேர்க்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. முன்னாடி எல்லாம் சித்தார்த் அடிக்கடி எங்க கிட்ட வந்து எனக்கு தம்பி வேணும்னு கேட்பான். உடனே ஆருத்ராவும் எனக்கு தங்கச்சி வேணும்னு கேப்பா. அவங்களுக்கு குழந்தைங்கன்னா பிடிக்கும்.” என்றான்.
“அப்படின்னா கண்டிப்பா சித்தார்த்துக்கு என் பையன பிடிக்கும்.” என்று தேன்மொழி உற்சாகமான குரலில் சொல்ல, “உனக்கு பொண்ணு தான்டி பொறக்கும். நான் தான் ஆல்ரெடி சொன்னேனே உன்ன மாதிரி க்யூட்டா ஒரு பொண்ணு வேணும்ன்னு..!” என்றான் அர்ஜுன்.
“நீ என்ன வேணாலும் சொல்லுவ. அதுக்காக அதெல்லாம் நடக்குமா? நான் முருகன் கிட்ட; நமக்குள்ள எல்லாம் சரியாகணும்னு வேண்டிகிட்டேன். அம்மா என்னை கந்த சஷ்டி விரதம் இருக்க சொன்னாங்க. அதுக்கு அப்புறம் தான் நான் பிரக்னண்ட் ஆனேன்.
பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆனதில இருந்து நான் பையன் வேணும்னு தான் வேண்டிக்கிட்டு இருக்கேன். முருகன் அருளால கண்டிப்பா நமக்கு பையன் தான் பிறக்கும் . நீ வேணா பாரு.. அப்பாவோட ஆசையை விட அம்மாவோட வேண்டுதலுக்கு பவர் இருக்கு. என் பையன் பிறந்து வந்து நீங்க எதுக்கு பொண்ணு வேணும்னு கேட்டீங்கன்னு உன் கூட சண்டை போடுவான். அவனே சண்டை போடலைன்னாலும் நானே உங்களுக்குள்ள சண்டை மூட்டிவிடுவேன். அப்புறம் பாக்குறதுக்கு ஜாலியா இருக்கு இல்ல!” என்று கேட்டுவிட்டு சிரித்தாள் தேன்மொழி.
“எது நானும் என் பையனும் சண்டை போடுறது உனக்கு ஜாலியா இருக்குமா? சொல்லுவ சொல்லுவ.. குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் அம்மாவை பார்த்து இருக்கேன். ஆனா புருஷனுக்கும் பையனுக்கும் நடுவுல சண்டை வரணும்னு ஆசைப்படற அம்மாவை இப்ப தான் பாக்கிறேன்.
உனக்கு முன்னாடி நான் என் பையன கரெக்ட் பண்ணி அவன என் பேச்சை கேட்கிற மாதிரி நான் மாத்திரனா இல்லையான்னு பாரு.” என்றான் அர்ஜூன்.
உடனே சத்தமாக சிரித்த தேன்மொழி “ஒருவழியா நமக்கு இப்ப பையன் தான் பொறுக்க போகிறான்னு ஒத்துக்கிட்டியா? எப்படி உன் வாயாலேயே நான் சொல்ல வச்சேன் பாத்தியா?” என்று கேட்க, “அடிப்பாவி இது தான் போட்டு வாங்குறதா?” என்று ஆச்சரியமாக கேட்டான் அர்ஜுன். எங்கும் எதிலும் தோல்வியையே சந்தித்து இருக்காத அர்ஜுனுக்கு இப்படி பொண்டாட்டியிடம் தோற்றுப் போவது பிடித்து இருந்தது.
அவனுக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும், இப்படி தேன்மொழியை குழந்தைத்தனமாக நடந்து கொள்ளும்போது அவளிடம் சேர்ந்து நானும் குழந்தையாகவே சில சமயங்களில் அவன் மாறி விடுகிறான். அது அவன் மனதில் புது சந்தோஷத்தையும் நிம்மதியையும் உண்டாக்கியது.
செல்லும் இடத்தில் சமையலுக்காக என்று புதிய நபர்கள் யாரையும் நம்பி வேலைக்கு வைக்க முடியாது என்பதால் ஏற்கனவே சென்னை வீட்டில் chiefஆக வேலை பார்த்தவர்களை தங்களுடன் கிளம்பி வரச் சொல்லி இருந்தான் அர்ஜுன். அதனால் கூட்டத்தோடு கூட்டமாக தானும் வேலை ஆட்களுடன் கிளம்பி வந்திருந்தாள் மீரா.
அவள் பயணிகள் அமரும் சாதாரண இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த காட்சிகளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். இதுவரை அவள் சாதாரணமாக இந்தியாவிற்குள் கூட ஃபிலைட்டில் எங்கேயும் சென்றதில்லை.
ஆனால் முதன்முறையாக எனக்கு இப்படி ஒரு விலை உயர்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இருந்த தனி விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்ததால் உள்ளுக்குள் ஆர்வமாக அனைத்தையும் பார்த்தாலும், வெளியில் அவள் முகம் வாட்டமாகவே இருந்தது.
அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று அந்த விமானம் முழுவதும் சென்று செக் செய்துவிட்டு வந்த மைக்கேல் சோகமே உருவாக அமர்ந்திருந்த மீராவை கண்டான். என்னவோ அவனுக்கு அவளை அப்படி பார்க்க ஏதோ போல் இருந்தது. அதனால் அவள் அருகில் சென்று “எனக்கு இப்பவே தோசை வேணும் வந்து ஊத்தி கொடு.” என்றான்.
அவனது குரலைக் கேட்டு ஆச்சரியமாக அவன் பக்கம் திரும்பிய மீரா அவன் ஏதோ தன்னுடன் விளையாடுவதாக நினைத்து “அட போங்க சார் இங்க வந்து கூட நீங்க சுமார்க்க மாட்டீங்களா? இப்ப நம்ம பிளைட்ல போயிட்டு இருக்கோம்.. இப்ப போய் தோசை வேணும்னு கேக்குறீங்க! நான் chef தான் magician இல்ல.” என்றாள்.
உடனே நக்கலாக அவளைப் பார்த்து சிரித்த மைக்கேல் “இது என்ன லோக்கல் ஃப்லைட்ன்னு நினைச்சியா? பிரைவேட் ஜெட் மா. இங்க எவ்வளவு பெரிய கிச்சன் இருக்கு தெரியுமா? அங்க எல்லாமே அவைலபிலா இருக்கும். தோசை என்ன பிரியாணி கூட பண்ணலாம். நீ வா நான் உன்னை கிச்சனுக்கு கூட்டிட்டு போய் காமிக்கிறேன்.” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றான்.
“ஐயோ என்ன பண்றீங்க? நம்ம இப்ப ஃபிளைட்ல போயிட்டு இருக்கோம். நான் கீழ விழுந்திர போறேன் விடுங்க.” என்று மீரா பயந்த குரலில் சொல்ல, “நீ விழுந்தா உன்ன நான் புடிச்சிக்கிறேன். கம்முனு வா!” என்ற மைக்கேல் அவளுடன் அங்கே இருந்து நடக்க தொடங்கினான். அவர்கள் இருவரும் நேராக கிச்சனுக்கு சென்றார்கள்.
ஆனால் அவளை சமைக்க விடாமல் தனக்கும் அவளுக்கும் சேர்த்து சாக்லேட் மில்க் ஷேக் தயாரித்த மைக்கேல் அதை அவள் கையில் கொடுத்தான். ஸ்டார் ஹோட்டலில் இருப்பதைப் போல பிரம்மாண்டமாக இருந்த அந்த கிச்சனை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மீராவிற்கு அவனது செயல் இன்னும் வியப்பை கொடுத்தது.
“தோசை கேட்டீங்க! வேணாம்மா உங்களுக்கு? நான் கூட இங்க மாவு இருக்குமோ இல்லையோன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று அப்பாவியாக மீரா சொல்ல, “லூசு.. யார் என்ன சொன்னாலும் அத அப்படியே நம்புவியா? இங்க ஏதாவது எமர்ஜென்சிக்கு தேவைப்பட்டா குக் பண்ணிக்கலாம். மத்தபடி பேசஞ்சர்க்கு தேவையான எல்லாத்தையும் டேக் ஆஃப் ஆகுறதுக்கு முன்னாடியே ரெடி பண்ணிடுவாங்க. இது என்ன லோக்கல் பஸ்ஸா.. போற வழியில food truckஆ அப்படியே சமைக்கிறதுக்கு?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
“அட போங்க சார்! எப்ப பாத்தாலும் நான் வகையா வந்து உங்க கிட்ட மாட்டிக்கிறேன். இப்படி ஏதாவது பண்ணி என்கூட விளையாடுறதே நீங்க வேலையா வச்சிருக்கீங்க.” என்ற மீரா அவன் கொடுத்த சாக்லேட் மில்க் சேர்க்கை குடித்துவிட்டு “ஆனாலும் நீங்க போட்ட இந்த மில்க் ஷேக் சூப்பர். தேங்க்ஸ்!” என்றாள். அவளது முகத்தில் இப்போது தான் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்தது. அதைக் கண்ட மைக்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
வழக்கம்போல இன்றும் கருப்பு நிற யூனிஃபார்ம் அணிந்து இருந்த கிளாரா பைலட்டிடம் எதையோ பேசுவதற்காக அவரது கேபினை நோக்கி சென்று கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக தோன்ற அப்படியே திரும்பி வாஷிங் ஏரியாவை நோக்கி நடக்க தொடங்கினாள்.
மூச்சு வாங்க அவள் அங்கே சென்று அதன் டோரை லாக் செய்துவிட்டு வாஷ்பேஷன் முன்னே நின்று வாந்தி எடுத்தாள். ஆனால் அவள் வாயில் இருந்து ரத்தம் வந்தது. அதை அவள் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருக்க, லேசாக தலை சுற்றுவது போல இருந்ததால் அவசரமாக தன் முகத்தை கழுவினாள் கிளாரா.
பின் ஒரு டவலால் தன் முகத்தை துடைத்துவிட்டு அவள் கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க, இப்போது அவள் மூக்கில் இருந்தும் இரத்தம் வந்தது. அதை நினைத்து இப்போது அவள் பயந்தாலும் எதையும் அவளால் மாற்ற முடியாது என்பதால் ஒரு நிமிடம் தன் கண்களை மூடி பெருமூச்சு விட்ட கிளாரா “நான் உன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா தூரமா போயிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன் பிரிட்டோ.” என்று தனக்குள் பேசினாள். அவள் கண்களின் ஓரம் கசிந்தது கண்ணீர்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)