Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 177

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 177

by Thenaruvi Tamil Novels
6 views

அத்தியாயம் 177

தேன்மொழியை தனது கண்காணிப்பில் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அர்ஜுன் ஒரு நொடி கூட அவளை விட்டு விலகாமல் அவளுடனே இருந்தான். அவளுக்கு டவல் பாத் கொடுப்பது, ஆடைகளை மாற்றுவது, நேரத்திற்கு மாத்திரை மருந்துகளை கொடுப்பது சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற பர்சனல் வேலைகளை சலிக்காமல்  செய்தான் அர்ஜுன்.

விஜயாவோ, ஜானகியோ தன் தேன்மொழிக்காக அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த நர்சுகள் அவனுக்கு உதவிக்கு வந்தால் கூட அனைவரையும் புறக்கணித்துவிட்டு “என் பொண்டாட்டிய நான் தான் பக்கத்தில இருந்து பாத்துக்குறேன்.” என்று பிடிவாதமாக இருந்த அர்ஜுன் தேன்மொழியை கவனிப்பதை தனது முழு நேர வேலையாக செய்தபடி பார்ட் டைமில் தனது ஆட்களின் உதவியுடன் வீட்டில் இருந்தே அனைத்து ஆபீஸ் தொடர்பான வேலைகளையும்  பார்த்துக் கொண்டு இருந்தான்.

முதலில் அர்ஜூன் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? என்று புரியாமல் குழப்பத்தில் இருந்த தேன்மொழி ஒரே இடத்தில் அசையாமல் கிடப்பது அவளுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக உணர்ந்தாள். ஆனால் இடையிடையில் வந்து அவளது உடல் நிலையை மருத்துவர்களும் செவிலியர்களும் சோதித்து பார்ப்பதில் இருந்தும், அவர்களிடம் அவள் கேட்டு தெரிந்து கொண்டதை வைத்தும் அவளது குழந்தைக்காக அவள் இரண்டு மாதங்கள் இப்படி கட்டிலில் படுத்து படியே இருக்க வேண்டியது இருக்கிறது என்று புரிந்து கொண்ட தேன்மொழி அர்ஜுன் அவள் அருகிலேயே இருந்ததால் ஒருவழியாக அதை ஏற்றுக்கொள்ள பழகி இருந்தாள்.

அவளைக் காப்பாற்ற போய் இப்போது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த சோனியா கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு சரியாகி வீடு திரும்பினாள். அவனும் நார்மலான பிறகு சென்று தேன் மொழியை சந்தித்தாள். தான் இவளைக் காப்பாற்ற இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் கூட, இத்தனை நாட்களாக இவள் படித்த படுக்கையில் கிடக்கிறாளே என நினைத்து வருத்தப்பட்ட சோனியா முன்பு போல இப்போதும் அவளது தலையில் கை வைத்து “God bless you my child. நீ கவலைப்படாத. உனக்கும் உன் குழந்தைக்கும் எதுவும் ஆகாது.” என்று ஆசீர்வதித்தாள்.

தன்னைக் காப்பாற்றும் போது சோனியா சியா என்று தன்னை பார்த்து கத்தியது இன்னும் தேன்மொழியின் ஞாபகங்களில் அப்படியே மறையாமல் இருந்தது. அன்றில் இருந்து சோனியாவையும் விஜயாவிற்கு இணையாக பார்க்கத் தொடங்கி இருந்த தேன்மொழி “தேங்க்ஸ் அம்மா! உங்க ஆசீர்வாதம் இருந்தா கண்டிப்பா எனக்கு எதுவும் ஆகாது. என்னால தான் உங்களுக்கு அவ்ளோ பெரிய கஷ்டம் வந்துருச்சு. நான் இன்னும் கேர்ஃபுல்லா இருந்திருக்கணும். என்ன மன்னிச்சிடுங்க.” என்று சொல்லிவிட்டு சோனியாவின் கைகளைப் பிடித்து கண்ணீர் சிந்தினாள்.

“அழாத டியர். அப்போ நான் உன்ன பார்க்கும்போது நீ என் கண்ணுக்கு என் பொண்ணா தான் தெரிஞ்சா.  சியா அர்ஜுனை காப்பாத்த போய் செத்துப் போய்ட்டான்னு தெரிஞ்சப்ப அவளை காப்பாத்துறதுக்கு நாங்க ஏன் அவ கூட இல்லாம போயிட்டோனு எங்க எல்லாருக்குமே ரொம்ப கில்ட்டியா இருந்துச்சு.

உன்ன காப்பாத்தினதுக்கு அப்புறமா என் மனசுல இருந்து அந்த பாரம் இறங்கின மாதிரி இருக்கு. என்னோட அந்த பொண்ணு காப்பாத்த முடியாம போனாலும் இந்த பொண்ண காப்பாத்திட்ட திருப்தி இருக்கு. நீயாவது கடைசி வரைக்கும் அர்ஜுன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும். அர்ஜுன் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்கிறதுக்கு நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.” என்று உருக்கமாக சொன்னாள் சோனியா.

இதற்கிடையில் அர்ஜுனின் தாத்தாவின் உடல்நிலை சீரியஸ் ஆகிக்கொண்டே இருந்தது. தனது இறுதி காலத்தை தான் வாழ்ந்த ரஷ்யா வீட்டில் கழிக்க வேண்டும் என்று தாத்தா விரும்பியதால் பாட்டி தாத்தாவுடன் தனி விமானத்தில் ரஷ்யா கிளம்பி சென்று விட்டார். அர்ஜுன் ஆபீஸ் பக்கம் வராததால் அவனது வேலையையும் சேர்த்து தன் தோள்களில் போட்டுக் கொண்டு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி விமானத்தில் பறந்து கொண்டே இருந்தான் ஆகாஷ்.

இத்தனை வருடங்களாக வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த பிரதாப் தனது அப்பாவுடன் அவரது இறுதி நொடிகளிலாவது இருக்கலாம் என நினைத்து ரஷ்யா கிளம்பி சென்று இருந்தார்.  அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவசர அவசரமாக அவர்களது வீட்டில் வேலை செய்யும் சாரதாவின் மகன் மகேஷுக்கும், அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த மகாலட்சுமிக்கும் சிம்பிளாக ரிஜிஸ்டர் ஆபீஸில் வைத்து திருமணம் செய்து பாஸ்போர்ட் விசா எல்லாம் தயாராக இருந்ததால் அவர்கள் ரஷ்யா செல்ல புறப்பட்டார்கள்.

ஜானகியின் தலைமையில் அந்த திருமணம் நடந்து முடிய, தன் மனதிற்கு நெருக்கமான தேன்மொழியிடம் ‌ எப்படியாவது வாழ்த்துக்கள் பெற வேண்டும் என்று நினைத்த மகேஷ் அவன் மனைவி மகாலட்சுமியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அர்ஜுனின்  ரூமிற்கு சென்றான். அங்கேயே ஒரு டெம்ப்ரவரி ஆபீஸ் செட்டப்பை ‌ சிறியதாக அமைத்திருந்த அர்ஜுன் ஓரமாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.‌

வந்தவர்களை பார்த்தவுடன் எழுந்து சென்ற அர்ஜூன் மகேசு உடன் கைக்கூலுக்கி அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பிரிட்டோ மூலமாக அவனுடைய திருமண பரிசுகளை கொடுப்பதாக தெரிவித்தான்.‌ மகேஷ், மகா இருவரும் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த தேன்மொழி “கங்கிராஜுலேஷன்ஸ் மகேஷ்! உன் மேரேஜ்க்கு நானே எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் பண்ணனும்னு நெனச்சேன். பட் சுச்சுவேஷன் சரியா அமையாம போயிடுச்சு.

கிளாரா கிட்ட சொல்லி பர்சனலா நான் உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் கிப்ட்ஸ் ரெடி பண்ணி இருக்கேன். நீங்க ரஷ்யா கிளம்பும்போது அதை உன் கிட்ட கொடுக்க சொல்லி இருக்கேன். நீங்க அங்க போய் ரீச் ஆனதுக்கு அப்புறமா அதை எல்லாம் பார்த்துட்டு உங்களுக்கு புடிச்சிருக்கான்னு எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு அன்புடன் புன்னகைத்தாள்.

அவள் தன்னிடம் நட்புடன் சாதாரணமாக பேசி பழகினாலும் அர்ஜுனனின் முன்னிலையில் தன்னால் அவளிடம் சாதாரணமாக பேச முடியாது என்பதால் மரியாதையுடன் அவளை பார்த்த மகேஷ் “கண்டிப்பா மேடம்! தேங்க்யூ சோ மச். நீங்க இந்த அளவுக்கு எங்களுக்காக யோசிச்சதே பெரிய விஷயம். Take care of your health. இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க கிளம்பிடுவோம். நைட் 9:00 மணிக்கு பிளைட். உங்களையும் அர்ஜுன் சரையும் பாத்து சொல்லிட்டு போலாம்னு தான் வந்தோம்.” என்றான்.

இது மாதிரியான பணக்காரர்களுடன் இதற்கு முன் பேசி பழகிய அனுபவம் இல்லாததால் அனைவரையும் பார்த்து திருத்துறைவென்று விழித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி மகேஷின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள். “ஓகே ஓகே பத்திரமா போயிட்டு வாங்க. எனக்கும் பேசாம ரஷ்யா போயிடலாமான்னு தோணுது. இந்தியாவுக்கு நாங்க எப்ப வந்தமோ அப்பயே எங்களுக்கு நிம்மதி இல்லாம போன மாதிரி ஆயிடுச்சு. இன்னும் ஒரு மாசம் தான்.

டாக்டர் எனக்கு பர்மிஷன் குடுத்தா அர்ஜுன் வந்தாலும் சரி இல்லைனாலும் சரி நானும் இந்தியாவுல இருந்து கிளம்பிடுவேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் தேன்மொழி.

“நீ மட்டும் இங்க இல்லனா எனக்கு இந்தியால என்ன வேலை ஹனி? நானும் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு கிளம்பி ரஷ்யா வந்துருவேன்.” என்ற அர்ஜூன் திடீரென்று  இந்த நேரத்திற்கு தேன்மொழிக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்ததால் அதை எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்தான்.‌

அவர்கள் இருவரின் அன்பைக் கண்டு நிகழ்ந்து போன மகாலட்சுமி “நிஜமாவே இவருக்கு அவர் பொண்டாட்டி மேல ரொம்ப பாசம். இதே மாதிரி என் மகேஷ் மாமாவும் என் மேல அன்பா இருந்தா நல்லா இருக்கும். இத்தனை வருஷமா சென்னையிலயே இருந்துட்டு  எனக்கு ஏதோ ஒரு தெரியாத ஊருக்கு போறதுக்கு பயமா இருக்கு.

இந்த பொண்ணுக்கு முதல் தடவை அங்க போகும்போது அப்படித் தானே இருந்திருக்கும்.. ஆனா இப்ப பிறந்த ஊர்ல இருக்கறத விட வெளிநாட்டில இருக்கிறதே பரவால்லன்னு பேசுறாங்க. அப்படின்னா இவங்களுக்கு அந்த அளவுக்கு அந்த ஊரைப் பிடிச்சதுக்கு காரணம் அர்ஜுன் சார் அவங்க மேல காட்டுற லவ் தான்.

காதல் ஒரு மனுசன  எப்படி வேணாலும் மாத்திடுது. எனக்கு என் மாமா மேல இருக்கிற காதல் தான் கடல் கடந்து போறதுக்கு கூட பயப்படாம சரின்னு சொல்ல வைக்குது.” என நினைத்து சந்தோஷமாக தன் அருகில் நின்று கொண்டிருந்த மகேசை பார்த்தாள்.

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்து பார்த்துவிட்டு அந்த அறைக்குள் வந்த சாரதாவும் தேன்மொழியிடம் சொல்லிவிட்டு தன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு பிளைட் பிடிப்பதற்காக கிளம்பி சென்று விட்டாள்.

சில நாட்களுக்கு பிறகு..

இரவு நேரத்தில் அர்ஜூனின் அறை இருட்டாக இருந்தது. தேன்மொழி தூங்கிக் கொண்டு இருப்பதால் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்த அர்ஜுன் லைட்டை ஆஃப் செய்துவிட்டு அந்த அறைக்குள் இருந்த மினி ரூமிற்குள் சென்று கையில் லேப்டாப்புடன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்கினான்.

சில நிமிடங்களுக்கு பிறகு திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக அவன் வெளியில் வர, திடீரென்று அந்த அறையில் இருந்த விளக்குகள் எல்லாம் ஒளிர்விக்கப்பட்டது. அலங்காரத்திற்காக ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொம்மைகள் எல்லாம் “ஹாப்பி பர்த்டே டூ யூ! ஹாப்பி பர்த்டே டூ யூ ஹனி பேபி!” என்று பாடியபடி அங்கும் இங்கும் நடக்க தொடங்கியது.

‌ நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேன்மொழி அந்த சத்தத்தை கேட்டு கண் விழித்தாள். இது இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் கூட அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை அபாயகரமான நிலையில் இருக்கும்போது எந்த அதிர்ச்சியையும் அவளால் தாங்க முடியாது என்பதால் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்ட அர்ஜுன் அவள் பதட்டப்படுவதற்குள் அவளது கையை பிடித்து அவளது நெற்றியில் முத்தமிட்டு “ஹாப்பி பர்த்டே மை ஸ்வீட் ஹனி பேபி!” என்று ஹஸ்கியில் சொன்னான்.

அவனது அந்த இனிமையான முத்தத்தில் ஒரு நொடி கரைந்த தேன்மொழி ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் சுற்றி முற்றைப் பார்த்தாள். இன்று அவளுடைய பிறந்தநாள் என்று அவளுக்கும் தெரியும். ஆனால் அதை கொண்டாடும் நிலையில் அவள் இருக்காதால், அர்ஜுனும் அதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தன் பிறந்தநாளை அவனுடன் சேர்ந்து கொண்டாட முடியாது என்று சோகத்தில் அதைப் பற்றி யோசித்தவாறு அப்படியே தூங்கிப் போயிருந்தாள் அவள்.

ஆனால் இப்போது அவள் நினைத்ததற்கு நேர் மாறாக அனைத்தும் நடந்ததால் அவள் முகத்தில் இன்ஸ்டன்டாக சந்தோஷம் பிறந்தது. அவனை இறுக்கமாக தன்னுடன் சேர்த்து கட்டிக் கொண்ட தேன்மொழி “தேங்க்யூ, லவ் யூ புருஷனா!” என்றாள்.

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured