Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 166

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 166

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 166

“இவளை இப்படி பண்ண வச்சவங்கள நீங்க கொன்னு கூட போடுங்க. இந்த தடவை நான் உங்களை தடுக்க மாட்டேன் அர்ஜுன். நம்ம யாருக்கும் எந்த பிரச்சனையும் குடுக்கிறது இல்ல. நம்மள தேடி வந்து பிரச்சனை பண்றவங்கள அப்படியே விட்டுட்டு அவங்களால எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கனும்னு நமக்கு என்ன தலையெழுத்தா? இனிமே யாரையும் நம்ம சும்மா விடக் கூடாது.” என்று தேன்மொழி ஆக்ரோஷமாக கண்கள் கலங்க சொல்ல,

இதுவரை பிரச்சனை வேண்டாம். யாருடனும் சண்டை போடாதே என்று சொல்லிக் கொண்டு இருந்த அவளையே இப்படி பேச வைக்கும் அளவிற்கு இந்த விஷயம் அவளை பாதித்திருக்கிறது என நினைத்து வருத்தப்பட்ட அர்ஜுன் அனிதாவை விட்டு விட்டான்.

அவன் தன் கழுத்தை பிடித்து நெறித்து இருந்ததால் பலமாக இரும்பிய அனிதா அர்ஜுனிடமும், தேன் மொழியிடமும் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.  அவளிடம் பேசுவதற்கு கூட தேன்மொழி தயாராக இல்லை. இன்னொரு பக்கம் அர்ஜுன் கோபத்திலும், வருத்தத்திலும், இயலாமையிலும் பைத்தியம் பிடித்தவனை போல ஒருவித முக பாவனையுடன் அந்த அறையின் ஒரு ஓரமாக சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்ற தேன்மொழி ஆதரவாக அவனது தோள்களில் கை போட்டு “நான் உன்னை   நம்புகிறேன் அர்ஜுன். எப்பயுமே நான் உன் கூட இருப்பேன். என்ன நடந்தாலும், சுச்சுவேஷன் எவ்ளோ மோசமானாலும் நான் எப்பவுமே உன்ன விட்டுட்டு போக மாட்டேன்.

நடந்ததை நினைச்சு ஃபீல் பண்றத விட்டுட்டு இனிமே இப்படி நடக்காம இருக்கிறதுக்கு என்ன பண்றதுன்னு யோசி. அதுவும் கோபத்துல அவங்கள இல்லாம பண்ணனும் கொல்லனும்னு யோசிக்காம, நம்மள எப்படி நம்மளோட எனிமீஸ் கிட்ட இருந்து ப்ரொடெக்ட் பண்றதுன்னு மட்டும் யோசி.

கோபம் ஒரு மனுசன ஆத்திரத்தில வேகமா செயல்பட வைக்கலாம். ஆனா அதே அளவுக்கு இன்னொரு பக்கம் அவனை வீக் ஆக்கிட்டு இருக்கும். நீதான் எங்களோட strength. சோ நீ எப்பயும் confidentஆ  Braveஆ தான் இருக்கணுமே தவிர confusedஆ traumatisedஆ‌ இருக்கக் கூடாது. உனக்கு என்ன நடந்தாலும் அது எங்க எல்லாரையுமே அஃபெக்ட் பண்ணும். Relax Arjun! Everything will be okay.” என்று சொல்லிவிட்டு அவனது தோள்களில் ஏதோ ஒரு குழந்தைக்கு தட்டிக் கொடுத்து சமாதானம் செய்வதைப் போல செய்தாள்.

அவள் பேசப்பேச அர்ஜுன் தன் மனதில் இருந்த பாரம் எல்லாம் கரைந்து காற்றில் களைப்பதை போல உணர்ந்தான். உடனே அவன் அவள் பக்கம் திரும்பி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு “நோ ஹனி, நீ தான் என் ஸ்ட்ரென்த் என் வீக்னஸ் எல்லாமே.. அதை இன்னைக்கு தான் நான் டோட்டலா ஃபீல் பண்றேன். எப்பயும் எனக்காக இருப்பேன்னு சொன்னில டி..

எனக்கு அது ஒன்னு போதும். நான் எல்லாத்தையும் ஈசியா கடந்து வந்துடுவேன். எனக்கு வேற என்ன வேணும் தேன்மொழி? என் லைஃப்ல இதுவரைக்கும் எத்தனையோ தடவை நான் ரொம்ப மோசமான சிட்டுவேஷன்ல இருந்து இருக்கேன்.

கடவுள் நினைச்சிருந்தா அப்பயே என்னை ஒரேடியா அவர் கூட கூட்டிட்டு போய் இருந்திருக்கலாம்.  உன் கூட வாழம நான் சாகக் கூடாதுன்னு தான் இத்தனை வருஷமா என் உயிரை இழுத்து பிடிச்சு வச்சிருக்காரு போல இருக்கு. எனக்கு கிடைச்சிருக்கிற இந்த கோல்டன் ஆப்பர்சுன்னுட்டைய நான் மிஸ் பண்ண மாட்டேன். At any cost I will make you happy. I will be with you till the rest of my life.” என்று மேஜிக்கல் பொங்க அர்ஜுன் பேச பேச துக்கம் அவன் தொண்டையை அடைத்து கண்கள் ஓரமாக கண்ணீர் கசிக்க தொடங்கியது.

அவர்களது அந்த உணர்ச்சிமிகு காதல் தருணத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அனிதா “என் கிட்ட அப்படி எல்லாம் செய்ய சொன்னது யாருன்னு எனக்கு தெரியல. ஆனா அவனுக்கு உங்களை பத்தி முழுசா தெரியலன்னு மட்டும் நல்லா தெரியுது.

இத்தனை நாளா நானும் அர்ஜுன் பணக்காரரா இருக்கறதுனால ஏதோ ஒரு விதத்துல தேன்மொழி அவரை ஏத்துக்கிட்டு அவர் வயசானவரா இருந்தாலும் பரவாயில்லைன்னு அவ அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கான்னு தான் நினைச்சேன். பட் உண்மை டோட்டலி டிஃபரண்ட்டா இருக்கு. ‌

இவங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் சின்சியரா உண்மையா லவ் பண்றாங்க. அந்த லவ் தான் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிருக்கு. நான் மட்டும் இல்ல வேற யார் இவங்க லைஃப்ல குறுக்க வந்தாலும், யாராலையும் இவங்க ரெண்டு பேரையும் பிரிக்கவே முடியாது.

வேற வழி இல்லாம நான் இவங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அதுக்கு எப்படி பிராய்ச்சத்தம் தேடுறதுன்னு தெரியல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரும் எப்பயும் சந்தோஷமா இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறத தவிர என்னால வேற எதையும் பண்ண முடியாது.” என நினைத்து தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.

அர்ஜுனை தன்னை விட்டு பிரித்த தேன்மொழி கண்ணீரில் நனைந்து இருந்த அவனது கன்னங்களை தன் கையால் துடைத்து விட்டு “உனக்கு இன்னும் முழுசா உடம்பு சரியாகல. அதுக்குள்ள ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம்.  முதல்ல வந்து சாப்பிட்டு வா. நான் இங்க வரும்போது கூட அத்தை உன்னை கேட்டாங்க.” என்று சொல்ல,

அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட அர்ஜுன் “நீ சாப்டியா?” என்று கேட்க, இல்லை என்று தலையாட்டினாள் அவள். கர்ப்பமாக இருக்கும் அவளை இதற்கு மேலாவது அவள் அருகில் இருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைத்த அர்ஜுன் தனது மண்டை கோள் ஓடிக் கொண்டிருந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒரு ஓரமாக தள்ளிவிட்டு அவளுடன் சாப்பிடுவதற்காக சென்றான்.

அவர்கள் சென்ற பிறகு கிளாரா ரியாவை அழைத்து வந்து அனிதாவிடம் விட்டு விட்டு சென்றாள். அழுது கொண்டு ஓடிச் சென்று தன் அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்ட ரியா “அர்ஜுன் அங்கிள் உங்கள அடிச்சாரா அம்மா? ஏன் அவரு இப்படி எல்லாம் பண்றாரு? அவர் ஆருத்ராவோட அப்பா தானே..

நம்மள எதுக்காக அவர் டார்ச்சர் பண்ணனும்? அப்ப அவர் குட் அங்கிள் இல்லையா? எதுக்காக அவங்க நம்ம மேல கோவமா இருக்காங்க?” என்று அழுது கொண்டே கேட்க, அவள் கண்ணீரைத் துடைத்த அனிதா,

“இல்லை இல்லை ரியா.. அர்ஜுன் அங்கிள் ரொம்ப நல்லவர். உங்க தேன்மொழி ஆண்டியும் தான். நீ அவர் பொண்ணோட ஃப்ரெண்ட். அவர் உன்னை என்ன பண்ணிட போறாரு சொல்லு?

ஆக்சுவலி அம்மா தான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அதனால தான் அவர் கோபப்பட்டாரு. அப்ப கூட அவருக்கு நல்ல மனசு இருந்ததுனால அம்மாவுக்கு பனிஷ்மென்ட் கொடுக்காம போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுட்டு போயிட்டாரு. இந்த ஃபேமிலில இருக்கிற எல்லாருமே நல்லவங்க தான்.

நீ அவங்க யாரையுமே தப்பா நினைக்க கூடாது. ஆருத்ரா உன் கிட்ட நல்லா பேசினா முன்னாடி மாதிரி நீ அவ கிட்ட ஃப்ரெண்ட்லியா பேசு. பட் நடந்தது எதையும் நீ அவ கிட்ட சொல்லக் கூடாது. சொல்ல மாட்டேன்னு அம்மாவுக்கு ப்ராமிஸ் பண்ணி குடு.” என்று சொல்லிவிட்டு தன் மகளின் முன்னே சத்தியம் செய்யச் சொல்லி கையை நீட்டினாள்.

பதிலுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் சத்தியம் செய்து கொடுத்தாள் ரியா. அவளுக்கு அனிதாவை பற்றி நன்றாக தெரியும். தன் அம்மா மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கும் ஆள் இல்லை அப்படி இருந்தும் அர்ஜுன் விஷயத்தில் அவள் ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு அதை தன்னிடமும் மறைக்கிறாள் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என நினைத்து புரிந்து கொண்ட ரியா அவளாக சொல்லும் வரை தானாக எதையும் கேட்கக் கூடாது என்று இருந்தாள்.

வீட்டில் உள்ள அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்போது செக்யூரிட்டி டீமில் உள்ளவர்கள் நேராக உள்ளே வந்து பிரிட்டோவிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்ல,

“அவங்களா.. இப்ப எதுக்கு அவங்க இங்க வந்திருக்காங்க?” என்று ஷாக் ஆகி கேட்டான் அவன்.

“தெரியல சார், அவங்கள உள்ள விடாம இருக்க முடியாதுல.. இருந்தாலும் ஒரு வார்த்தை உங்க கிட்டயாவது சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன். அவங்க வெளியில செக்யூரிட்டி ப்ராசஸ்ல இருக்காங்க. இன்னும் 5 மினிட்ஸ்ல உள்ள வந்துருவாங்க.” என்று செக்யூரிட்டி டீம் ஹெட் சொல்ல,

“ஓகே அவங்க வரட்டும். மத்தவங்க கிட்ட பண்ற மாதிரி ஓவரா அவங்கள செக் பண்ணிட்டு இருக்க வேண்டாம். அப்புறம் கோச்சுப்பாங்க.‌ நான் சீஃப் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிக்கிறேன். நீங்க போங்க.” என்று சொல்லிவிட்டு டைனிங் ஏரியா பக்கம் சென்றான் பிரிட்டோ.

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured