Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 164

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 164

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 164

அனிதாவை மிரட்டி கிளாராவுடன் அனுப்பிவிட்டு அவள் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையா என பிரிட்டோவும், மைக்கிலும் விசாரிக்க தொடங்கினார்கள். அன்றைய நாள் இரவு அவர்கள் அனைவருக்கும் தூங்காத இரவாக அமைந்து விட்டது. 

தனது ரூமை விட்டு மற்றவர்கள் கிளம்பிய பிறகு டாக்டர் கொடுத்த மயக்க மருந்தின் வீரியத்தால் அயந்து உறங்கிக் கொண்டு இருந்த அர்ஜுனை சோகமாக பார்த்தபடி அவன் அருகில் சென்ற தேன்மொழி அவனது சிவந்த முகத்தை பார்த்தாள். அவள் ஆத்திரம் கொண்டு அர்ஜுனை அறைந்து இருந்ததால் அவன் கன்னத்தில் அதன் தடையும் தெரிய, அவன் அருகில் சென்று படுத்துக் கொண்டு அவன் கன்னத்தை தனது விரல்களால் மெதுவாக வருடிய தேன்மொழி  “சாரி அர்ஜுன், ஏதோ கோவத்துல அவசரப்பட்டுட்டேன். சுச்சுவேஷன் எதுவா இருந்தாலும் நீ தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு நான் நம்பி இருக்கணும். மார்னிங் நீ நார்மலானதுக்கு அப்புறமா உனக்கு நடந்தது எல்லாம் ஞாபகம் வரும் போது, நான் உன்னை அடிச்சதும் உனக்கு தெரியும் தானே..

அப்போ நான் உன்ன தப்பா புரிஞ்சுகிட்டேன் நீ என்ன தப்பா நினைப்பியா? எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லாம இல்ல அர்ஜுன். உன்ன மாதிரி ஒருத்தன் வேணும்னு எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுவாங்க. அதுக்காக அவங்க எந்த எக்ஸ்ட்ரீம் வேணாலும் போக ரெடியா இருப்பாங்க. அந்த மாதிரி அனிதா போட்ட ஏதோ ஒரு பிளான்ல நீ மாட்டிகிட்டியோன்னு தான் எனக்கு கோபமே.. நீ கேர்ஃபுல்லா இருந்திருந்தா இப்படி நடந்திருக்காதுன்னு ஒரு ஆதங்கம்.

நான் என்ன சொன்னாலும், நான் அவசரப்பட்டு உன்னை அடிச்சது தப்பு தான். எப்படியோ நடந்ததை மத்தவங்க யாருக்கும் தெரியாம மறைச்சுட்டேன். அம்மாவுக்கும் அத்தைக்கும் தெரிஞ்சிருந்தா ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாங்க. அந்த கடவுள் ஏன் தான் நமக்கு மட்டும் பிரச்சனைக்கு மேல் பிரச்சினையாக கொடுக்கிறார்னு தெரியல. நமக்கு குழந்தை பிறக்கும் போது நம்ம வீட்ல இருக்குற எல்லா பிரச்சனையும் சால்வு ஆகி நம்ம ஹாப்பியா இருக்கணும் அர்ஜுன். ஐ லவ் யூ சோ மச்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

அங்கே கிளாரா அனிதாவை அழைத்து சென்று ஒரு ரூமிற்குள் விட்டு டோரை லாக் செய்தாள். உள்ளே இருந்து தொடர்ந்து கதவை தட்டிய அனிதா “என் பொண்ணு எங்க கிளாரா? அவளுக்கு நைட் டைம்ல ரொம்ப பயமா இருக்கும். நான் இல்லாம தூங்க மாட்டா. ப்ளீஸ் அவள கொண்டு வந்து என் கிட்ட விட்ருங்க.” என்று உள்ளே இருந்து கத்தினாள்.

“உங்க பொண்ணை உங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சு நாங்க என்ன பண்ண போறோம்? ரியா சர்வன்ட்ஸ் கூட இருக்கா. நான் அவளையும் கூட்டிட்டு வந்து இங்க விடுறேன். உங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது வேணும்னா இன்டர்காம்ல கிச்சனுக்கு கால் பண்ணி கேட்டு வாங்கிக்கோங்க.

உங்களுக்கு தேவையானது எல்லாமே இந்த ரூமுக்கு டைமுக்கு வந்துடும். பட் நாங்க சொல்ற வரைக்கும் இந்த ரூமை விட்டு நீங்களும் ரியாவும் வெளிய வரக்‌ கூடாது.” என்று அவளை மிரட்டி விட்டு தனது ரூமிற்கு சென்றாள் கிளாரா.

ரியா அந்த ரூமிற்கு வந்தவுடன் தான் அனிதாவிற்கு போன உயிர் திரும்பி வந்ததைப் போல இருந்தது. அர்ஜுன் என்ன தான் பயங்கரமானவனாக இருந்தாலும், தான் அவனுக்கு நேரடி எதிரி இல்லை என்பதால் அவனால் தனக்கு எந்த பாதிப்பும் இருக்காது என நம்பிய அனிதா “எனக்கு என்ன நானும் என் பொண்ணும் உயிரோட பத்திரமா இருந்தா மட்டும் போதும். இந்த வீட்ல இருக்கிறவங்க எப்படியும் எங்களை பட்டினி போட்டு சாகடிக்க போறது இல்ல.

ஆல்ரெடி என்ன பிளாக்மெயில் பண்ணவன் மறுபடியும் ரியாவ வச்சு என்ன டார்கெட் பண்ணி வேற ஏதாவது செய்றதுக்கு சான்ஸ் இருக்கு. அதுக்கு இந்த பிராப்ளம் எல்லாத்தையும் அர்ஜுன் சால்வ் பண்ணி அவன் யாருன்னு கண்டு பிடிக்கிற வரைக்கும் safe -ஆ நானும் என் பொண்ணும் இங்கயே இருக்கலாம்.” என நினைத்தாள்.

கையில் சிகரெட் மற்றும் லைட்டருடன் தனது ரூமில் இருந்து வெளியே வந்த சந்தோஷ் தன்னைச் சுற்றி நடப்பதை கவனித்தவாறு டெரஸ் பக்கம் சென்றான்.  பிரிட்டோ உடன் அப்போது தான் மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்த மைக்கேல் “டேய் வெளிய இருக்க சிசிடிவி ஃபுட்ஏஜ் எல்லாத்தையும் செக் பண்ணியாச்சுல்ல.. நமக்கு கால் பண்றேன்னு சொன்னவங்க கிட்ட மட்டும் என்ன ஏதுன்னு நீ கேட்டு விசாரிச்சு ‌வை. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. விட்டா தூங்கிடுவேன் போல இருக்கு.

ஹாட் வாட்டர் போட்டு நான் குளிச்சிட்டு வந்தறேன். நான் ஒரு இடத்துக்கு போகணும்னு சொன்னேன்ல‌… நான் வந்த உடனே நம்ப போகலாம்.” என்று பிரிட்டோவிடம் சொல்லிவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள தனது ரூமை நோக்கி நடக்க தொடங்கினான். அவன் லிப்டில் ஏறி செல்லும்போது யாரோ ஒருவர் மொட்டை மாடிக்கு செல்வதை கவனித்தான்.

“இந்த டைம்ல யாரு டெரஸ்க்கு போறது?” என்று நினைத்து ஏதோ ஒரு சந்தேக உணர்வுடன் அவனும் டெரஸ் பக்கம் லிப்டில் இருந்து இறங்கி ஸ்டெப்ஸ் மூலமாக சென்றான்.

அவன் மேலே சென்று பார்க்கும் போது விசாலமான அந்த டெரஸ் ஏரியாவில் யாரும் இருப்பதாகவே மைக்கேலுக்கு  தோன்றவில்லை. அதனால் குழப்பமாக சுற்றி முற்றி பார்த்தவன், “யாரோ மேல வந்த மாதிரி இருந்துச்சே! பட் ஏன் இங்க யாரையுமே காணோம்! ஒருவேளை சர்வென்ட்ஸ் யாராவது வந்திருக்காங்களா?  ‌ யார் வந்திருந்தாலும் வந்தவங்க இங்க தானே இருக்கணும்.. பட் இங்க யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே!” என யோசித்து தான் தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்கிறோம் என்ற எண்ணத்தில் கீழே செல்ல முடிவெடுத்தான்.

அந்த நேரம் அவனுக்கு எங்கேயோ இருந்து சிகரெட் ஸ்மெல் வருவதைப் போல இருந்தது. அதனால் நடப்பதை நிறுத்திவிட்டு அந்த ஸ்மெல் வந்த திசையை கூர்ந்து கவனித்து அந்த பக்கமாக மெதுவாக சென்ற மைக்கேல் இருட்டிற்குள் நின்று யாரோ ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருப்பதை கவனித்தான்.

முதலில் அது யார் என அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே நின்று கொண்டு இருந்த சந்தோஷ் தனது மொபைல் ஃபோனில் இருந்து யாருக்கோ கால் செய்து பேசத் தொடங்கினான். அவனது குரல் மட்டும் மைக்கேலுக்கு கேட்டதால் “சந்தோஷா இது! இந்த டைம்ல இவன் எதுக்கு இங்க வந்து சிகரெட் புடிச்சிட்டு யார் கிட்டயோ ஃபோன்ல பேசிட்டு இருக்கான்!

இந்த வயசுல ஒரு ஆம்பள இப்படி வந்து நிற்கிறானா, ஒன்னு அவன் சோகமா இருக்கணும். இல்லைனா அவன் மைண்ட் டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஏதோ ஒன்னு அவனை சுத்தி நடக்கணும். இந்த பொண்ணு ஜனனி வேற அடிக்கடி சந்தோஷ் என்ன கண்டுக்கிறதே இல்லைன்னு சொல்லிக்கிட்டே இருந்தாளே..

இவன் அவ பிரக்னண்டா இருக்குற டைம்ல அவள விட்டுட்டு வேற யாரையாவது கரெக்ட் பண்ணிட்டானா? சைடு பிட்டு ஓட்டிட்டு இருக்கிறதுனால தான் நம்ம ஜனனியை கண்டுக்க மாட்டிக்கிறானா? பட் அந்த டைம்ல எல்லாம் இவன் ரஷ்யால தான இருந்தான்..

இங்க வந்து அங்க இருக்கிற ரஷ்யன் லவ்வர் கிட்ட தனியா வந்து ஃபோன்ல பேசுவானோ? அவன் பேசுறது மட்டும் தான் தெரியுது ஆனா என்ன பேசுறான்னு புரிய மாட்டேங்குதே! இன்னும் கொஞ்சம் பக்கத்துல போய் அவன் பேசுவதை கேட்டு பாக்கலாமா? பட் அவனும் நம்ம டீம்ல ஒர்க் பண்ணவன் ஆச்சே..

நம்ம இன்னும் கொஞ்சம் அவன் பக்கத்துல போனாலும் நம்ம இங்க இருக்கிறதை அவன் ஈசியா கண்டுபிடிச்சிடுவான். அப்புறம் அலர்ட் ஆகி அவன் பண்ற தப்பை மறைக்கிறதுக்கு ஏதாவது பண்ணா என்ன பண்றது? டைரக்டா இல்லனாலும் இவனை பத்தி யோசிச்சாலே எனக்கு என்னமோ இவன் மேல சந்தேகம் படுற மாதிரி தான் இருக்கு. எதுக்கும் இவனை கொஞ்ச நாள் ஃபாலோ பண்ணி பாக்கணும். இவன பத்தி முதல்ல பிரிட்டோ கிட்ட பேசணும்.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் அவனுக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக சத்தம் எழுப்பாமல் வந்த வழியாகவே கீழே சென்று விட்டான்.

காலைப்பொழுது அழகாக விடிந்தது..

தூங்கி கொண்டு இருந்த அர்ஜூன் ஜன்னல் வழியாக வந்த சூரிய கதிர்களால் டிஸ்டர்ப் ஆகி தன் கண்களை திறந்து பார்த்தான். தேன்மொழி அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருக்க, அவளை ஆசையுடன் பார்த்த அர்ஜுன் “என்ன இவ சாரிய கூட சேஞ்ச் பண்ணாம அப்படியே வந்து படுத்திருக்கா! இவளுக்கு இப்படி தூங்கவே பிடிக்காதே!” என்று குழப்பத்துடன் யோசித்தான்.

அப்போது நேற்று இரவு நடந்த அனைத்தும் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வரத் தொடங்கியது. அதை நினைத்து பார்த்தவுடன் அவனது முகம் கோபத்தில் இறுகி சிவந்தது.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured