Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 163

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 163

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 163

தேன்மொழி உண்மையை சொல்லச் சொல்லி அனிதாவை மிரட்டி கொண்டு இருந்தாள். அவளிடம் பயப்படுவதை விட, அனிதா குற்ற உணர்ச்சியில் தான் தலை குனிந்து நின்றாள்.

“நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ சைலன்டாவே இருந்தா என்ன அர்த்தம்? எங்களுக்கு ஆன்சர் பண்ணாம உன்னால இங்க இருந்து போக முடியாது. நான் ஆல்ரெடி உன்மேல செம கோவத்துல இருக்கேன். நீ அமைதியா இருந்து இன்னும் என்ன டென்ஷன் பண்ணிட்டு இருக்க.” என்று தேன்மொழியை பொறுமை இழந்து கத்த,

“சொல்றேன்.. நடந்ததை எல்லாத்தையும் உன் கிட்ட நான் மறைக்காம சொல்கிறேன். பட் எனக்கும், என் பொண்ணுக்கும் எதுவும் ஆகாதுன்னு நீ எனக்கு பிராமிஸ் பண்ணி கொடுக்கணும். அப்ப தான் என்னால மறக்காம எல்லா உண்மையையும் உன் கிட்ட சொல்ல முடியும்.  

என் பொண்ணுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு தேன்மொழி. நானே உயிரை கைல புடிச்சுகிட்டு ஓடிட்டு இருக்கேன். சத்தியமா உனக்கு துரோகம் பண்ணனும்னு நான் நினைக்கவே இல்ல.”  என்று சொல்லிவிட்டு அழுதாள் அனிதா. 

இந்த விஷயத்தில் தானாக முடிவெடுத்து ஏதேனும் பேசி தவறாக நடந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் தேன்மொழிக்குள் இருந்ததால் அவள் அனிதாவிடம் பதில் பேசுவதற்கு முன்பாக பிரிட்டோவையும், மைக்கேலையும் பார்த்தாள்.

“உன் மேல எந்த தப்பும் இல்லைன்னா, எங்களால உனக்கு உன் பொண்ணுக்கும் எதுவும் ஆகாது. என்ன நடந்துச்சு நீ எதுக்காக இப்படி பண்ணினேன்னு மறைக்காம உண்மையை சொல்லு. நீ சொன்னது பொய்யின்னு நாங்க கண்டுபிடிச்சா, எங்க சீஃப் லைஃப்ல விளையாட பார்த்ததுக்கு உனக்கு நாங்க எவ்ளோ கொடூரமா பனிஷ்மென்ட் கொடுப்போம்னு உன்னால இமேஜின் பண்ணி கூட பார்க்க முடியாது அனிதா.

அதை மைண்ட்ல வச்சுக்கிட்டு  உண்மையை மட்டும் மறைக்காம சொல்லு. நீயும், உன் பொண்ணும் இனிமே எப்பயும் எங்களோட கஸ்டடியில தான் இருப்பீங்க.”  என்றான் பிரிட்டோ.

அவன் வெளிநாட்டவன் என்பதால் தமிழில் அவன் பேசும் போது அவனது குரல் இனிமையாக இருந்தாலும், அதற்கு மாறாக அவனது வார்த்தைகள் அவளை அச்சுறுத்தும் விதமாக வந்து விழுந்தது.

யார் என்ன சொன்னாலும் தேன்மொழி சொல்வதைப்போல இருக்காது என நினைத்த அனிதா மீண்டும் அவளைப் பார்த்து “ப்ளீஸ் தேன்மொழி! என்னை நம்பு‌. நான் தான் உனக்கு துரோகம் பண்ண நினைக்கிறேன்ல சொல்றேன்ல! தயவு செஞ்சு என்னை நம்பி எனக்கு ப்ராமிஸ் பண்ணு.

இப்ப நீ பிரக்னண்டா இருக்க தானே! ஒரு அம்மாவா இப்ப நான் எப்படி யோசிக்கிறேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியும்னு நான் நம்புறேன். எனக்கும் என் பொண்ணுக்கும் எதுவும் ஆகாதுன்னு நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணு. கண்டிப்பா நான் எந்த உண்மையையும் மறைக்காம உன் கிட்ட சொல்றேன். ரியாவுக்கு என்ன விட்டா வேற யாரும் இல்ல. அவளுக்காக நான் உயிரோட இருந்து தான் ஆகனும்.” என்று அழுதபடி சொல்லிவிட்டு அவள் முன்னே சத்தியம் செய்ய சொல்லி தன் கையை நீட்டினாள்.

அனிதா கீழ்த்தனமாக தன்னிடம் நடந்து கொண்டாலும், பதிலுக்கு அவளையோ அவளது மகளையோ ஏதேனும் செய்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தேன்மொழிக்கு ஒரு பர்சன்ட் கூட வரவில்லை.

  அதனால் எதை பற்றியும் யோசிக்காமல் அவள் கையின் மீது தன் கையை வைத்து சத்தியம் செய்த தேன்மொழி “எனக்கு யாரையும் கஷ்டப்படுத்த பிடிக்காது அனிதா. ஆனா நீ தெரிஞ்சே என்னை கஷ்டப் படுத்தி பாக்கணும்னு நினைக்கிற. இருந்தாலும் நான் உனக்கு பிராமிஸ் பண்றேன். உனக்கும், ரியாவுக்கும் எதுவும் ஆகாது.

அர்ஜுன் நான் சொன்னா கேப்பாரு. நான் உனக்கு நீ கேட்ட மாதிரி ப்ராமிஸ் பண்ணி கொடுத்துட்டேன். இப்பயாவது உண்மையை சொல்லித் தொலை.” என்று சொல்லிவிட்டு அருவருப்புடன்  அவளைப் பார்த்தாள்.

தனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அவளை பாவமாக பார்த்த அனிதா “நீ பிரக்னண்டா இருக்கிறதுனால ஒரு ஃபங்ஷன் நடத்த போறதா திடீர்னு உங்க வீட்டு செக்யூரிட்டி டீம்ல இருந்து எனக்கு கால் பண்ணி இன்ஃபார்ம் பண்ணாங்க.

அர்ஜுன் சார் சர்ப்ரைஸா எல்லாரையும் இன்வைட் பண்ண சொல்லி இருக்கிறதா சொன்னாங்க. எனக்கும் தனியா இன்விடேஷன் வந்துச்சு. இங்க வந்து உன்ன பாக்குறதுனா ரியாவுக்கு ரொம்ப பிடிக்கும்.  ‌ அதான் உனக்கே தெரியுமே!

ஆருத்ரா டான்ஸ் கிளாஸ்க்கு வந்ததுனால ரியாவும் ஆருத்ராவும் நல்ல ஃபிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. அதனால ரியா இங்க வர்றதுக்கு ரொம்ப எக்சைட்டரா இருந்தா. நானும் அவளும் நீயூ ட்ரஸ் வாங்கினா நல்லா இருக்கும்னு நேத்து நைட் ஷாப்பிங் போயிருந்தோம்.

போயிட்டு நாங்க கார்ல ரிட்டன் வந்துட்டு இருக்கும்போது யாரோ நாலு பேர் என் காரை சுத்தி வளச்சு ஸ்டாப் பண்ணிட்டாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அவங்க எல்லாருமே மாஸ்க் போட்டு இருந்ததுனால அவங்க யாருன்னு எனக்கு தெரியல.

அவங்க என்ன கார்ல இருந்து கீழே இறங்கச் சொல்லி தனியா கூப்பிட்டு போய் ஏதோ ஒரு பவுடரை என் கிட்ட கொடுத்து அதை அர்ஜுன் சாரக்கு தெரியாம அவர் சாப்பிடுற எதுலையாவது கலந்து கொடுக்கும்படி சொன்னாங்க .‌ ஒருவேளை நான் அப்படி பண்ணலைனா என் பொண்ணு ரியாவை கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க.

அப்பயே அவங்க ரியாவை அவங்க கூட கூட்டிட்டு போய்ட்டாங்க. அதான் இன்னைக்கு ஈவினிங் ஃபங்ஷனுக்கு கூட நான் தனியா வந்தேன். மறுபடியும் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உங்க வீட்ல இருந்து வெளியே போகும் போது தான் அவங்க சொன்ன நம்பருக்கு நான் கால் பண்ணுனே  உடனே ரியாவை கூட்டிட்டு வந்து என் கிட்ட விட்டாங்க.

சத்தியமா இது தான் நடந்துச்சு தேன்மொழி. என் பொண்ணை காப்பாத்துறதுக்காக தான் இப்படி எல்லாம் பண்ணேன். மத்தபடி உனக்கும் அவருக்கும் நடுவுல வரணும்னு நான் எப்பவுமே நினைச்சது இல்ல. உன்ன பாத்து நான் பொறாமை பட்டு இருக்கேன். அதுக்காக உன் இடத்துக்கு நான் வரணும்னு நினைக்கிற அளவுக்கு நான் கேவலமானவ இல்லை.

நீ எப்படியும் அர்ஜுனை தேடிக்கிட்டு உங்க ரூமுக்கு வருவேன்னு எனக்கு தெரியும். அந்த தைரியத்துல தான் அவனுங்க சொன்னத நான் அப்படியே செஞ்சேன். அவன் கண் கொத்தி பாம்பு மாதிரி நான் உங்க வீட்ல இருக்கும்போது கூட என்ன நோட் பண்ணிக்கிட்டே இருந்தாங்க.

நான் எப்ப என்ன பண்ணனும்னு அவங்க எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. வேற வழி இல்லாம தான் நான் அப்படி செஞ்சேன். நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா நீயே உங்க ஆளுங்கள வச்சு கண்டுபிடிச்சுக்கோ.

ஆனா தயவு செஞ்சு என்னையும் என் பொன்னையும் விட்ருங்க. நாங்க இனிமே இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம். உங்க கண்ணிலேயே படாம எங்கேயாவது போய் நாங்க பொழச்சிக்கிறோம்! நான் என்ன காரணம் சொன்னாலும் உனக்கு நான் பண்ணது தப்பு தான்.  தயவு செஞ்சு அதுக்காக என்ன மன்னிச்சிடு தேன்மொழி.

ஒரு அம்மாவா யோசிக்கும்போது எல்லாரையும் விட எனக்கு என் பொண்ணோட உயிர் தான் பெருசா தெரிஞ்சது. அதான் நீ என் கிட்ட எதுக்காக இப்படி பண்ண்னேனு கேட்கும் போது கூட, நான் உண்மையை சொல்லாம ரியாவை முதல்ல காப்பாத்தணும்னு இங்க இருந்து தப்பிச்சு ஓடி போயிட்டேன்.” என்றாள்.

அவள் சொன்னது உண்மையா பொய்யா என தேன்மொழிக்கு தெரியவில்லை. ஆனால் அதை அவள் சொன்ன விதத்தில் அவளால் அனிதாவின் மீது சந்தேகப்பட முடியவில்லை. ஏற்கனவே தங்களை சுற்றி யாரோ ஒருவர் தங்கள் குடும்பத்தை அளிப்பதற்காக ஏதோ ஒன்று செய்து கொண்டே இருக்கிறார்கள் என்ற எண்ணமும் அவளுக்குள் இருப்பதால், குழப்பத்துடனே இருந்தாள் தேன்மொழி.

அவள் அமைதியாக இருந்ததால் “நான் பண்ண வேலையை கண்ணால பார்த்துட்டு இப்ப நான் சொல்றத நம்புறதுக்கு உனக்கு கஷ்டமா தான் இருக்கும்னு எனக்கு நல்லா புரியுது தேன்மொழி. ஆனா நடந்தது இது தான். நான் எல்லாத்தையுமே உங்க கிட்ட மறைக்காம சொல்லிட்டேன்.

இப்படி எல்லாம் என்ன பிளாக்மெயில் பண்ண சொன்னது யாருன்னு தயவு செஞ்சு நீங்களாவது கண்டுபிடிங்க. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன். அவன் என் கிட்ட ஃபோன்ல பேசும் போது கூட வாய்ஸ் சேஞ்சர் யூஸ் பண்ணி ஏதோ ஒரு கம்ப்யூட்டர் வாய்ஸ்ல பேசினான்.

அவன் எனக்கு கால் பண்ண ஃபோன் நம்பர், அவன் பேசின கால் ரெகார்ட் எல்லாமே என் கிட்ட இருக்கு.‌ இத வச்சு ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.” என்று சொல்லி அனிதா தனது மொபைல் ஃபோனை தேன்மொழியின் முன்னே நீட்டினாள்.

அதை நடுவில் புகுந்து வாங்கிக் கொண்ட பிரிட்டோ “நீ சொன்னது உண்மையா இருந்தா நீ தப்புச்சா. இல்லனா நீ சாகுறத அந்த கடவுளே நினைச்சாலும் மாற்ற முடியாது.  உன்ன பொறுத்த வரைக்கும் நடந்தது இது தானே.. நீ எல்லாம் உண்மையையும் சொல்லிட்ட..  இனிமே இதை நாங்க பார்த்துக்கிறோம். உன் மேல எங்களுக்கு இருக்கிற சந்தேகம் போகிற வரைக்கும் நீயும், உன் பொண்ணு இங்க தான் இருக்கணும்.

‌ வீட்டுக்கு வந்த கெஸ்ட் இன்னும் இங்க தான் ஸ்டே பண்ணி இருக்காங்க. சோ நீங்க இங்க இருக்கிறதுனால யாரும் சந்தேகப்பட மாட்டாங்க. மத்தவங்களுக்கு சந்தேகம் வர மாதிரி நீங்களும் நடந்து கொள்ள கூடாது. இங்க இருந்து வெளிய இருக்கிற யாரையும் நீ காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ண கூடாது. புரிஞ்சுதா?” என்று மிரட்டும் தோரணையில் கேட்டான்.

புரிந்தது என்பதைப் போல பயத்துடன் தலை ஆட்டினாள் அனிதா.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured