அத்தியாயம் 161
தேன்மொழி யார் என்ன சமாதானம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை. இன்னொரு பக்கம் அங்கே அர்ஜுன் ஏறிய போதையில் பினாத்திக் கொண்டு இருக்க, இதற்கு மேலும் பொறுமையாக இருப்பது சரியாக வராது என நினைத்த மைக்கேல் உடனே கால் செய்து பிரிட்டோ மற்றும் கிளாராவை அர்ஜுனின் ரூமிற்கு வரச் சொன்னான்.
கிளாராவை பார்த்தவுடன் ஓடி சென்று அவளை கட்டி அணைத்துக் கொண்ட தேன்மொழி நடந்ததை அவளிடம் சொல்லி அழுதாள். “chief இன்னைக்கு குடிக்கவே இல்ல மா! இந்த மாதிரி எல்லாம் கேவலமா தப்பு பண்ற ஆளா அவரு? அவரைப் பத்தி நாங்க சொல்லி தான் உனக்கு தெரியும்னு அவசியம் இல்ல. சில சமயத்துல நம்ம கண்ணால பாக்குறது கூட உண்மையா இல்லாம இருக்கலாம். நான் டாக்டருக்கு கால் பண்ணி இப்பவே வர சொல்றேன்.” என்று பிரிட்டோ சொல்ல,
“இங்க இவ்ளோ பெரிய ப்ராப்ளம் கிரியேட் பண்ணிட்டு அந்த பொண்ணு அனிதா எங்க போனா? இங்க chief குடிச்சிட்டு மடையாக்கி கூட கிடந்திருக்கட்டும். இந்த டைம்ல அந்த பொண்ணு எதுக்காக இங்க வரணும்? நீங்க இங்க வந்து பார்க்கும்போது, அவங்க ரெண்டு பேருமே கிளோஸ் ஆகி இருந்ததா சொல்றீங்க!
chief தான் போதையில இருந்து இருக்காரு. அதுவும் இந்த இடம் இருந்ததுனால தன் கூட இருக்கிறது யாருன்னு ஒருவேளை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரு கூட இருந்தது நீங்கன்னு நினைச்சி இருக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு. ஏன்னா இது உங்க ரூம். பட் அந்த பொண்ணுக்கு அறிவு இல்லையா?
அவ நார்மலா தானே இருந்திருப்பா! அந்த பொண்ணுக்கு குடிக்கிற ஹாபிட் இருக்கா என்ன? அவன் சீஃப் ரூம்ல அவர் கூட என்ன பண்ணிட்டு இருந்தான்னு நம்ம அவளை புடிச்சு தான் விசாரிக்கணும் தேன்மொழி. நீங்க கண்ணால பார்த்ததை மட்டும் வச்சு சீஃப் மேல சந்தேகப்படாதீங்க.” என்றாள் கிளாரா.
அவர்கள் பேசியதை கேட்ட பிறகு தான் இதில் ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்று தேன்மொழிக்கு புரிந்தது. அதனால் கண்ணீரை துடைத்துவிட்டு போதையில் கட்டிலில் படுத்து தன்னை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உருண்டு கொண்டு இருந்த அர்ஜூனை பார்க்கவும் அவளுக்கு பாவமாக இருந்ததால், “நான் அவர் மேல சந்தேகப்படல கிளாரா. என் ஹஸ்பண்ட் அந்த மாதிரியான ஆள் இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனா என் கண்ணு முன்னாடி திடீர்னு அப்படி ஒரு விஷயத்தை பார்க்கும்போது எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல.
நிஜமாவே அவர் மேல தப்பில்லாம கூட இருந்திருக்கலாம். ஆனா மத்தவங்க அவரை அவருக்கே தெரியாம யூஸ் பண்ணிக்கிற அளவுக்கு இவர் careless-ஆ இருந்திருக்காரு இல்ல.. எனக்கு அது தான் கோபமா வருது. நான் அனிதா கிட்ட என்ன ஏதுன்னு கேக்குறதுக்குள்ள அவ இங்க இருந்து ஓடிப்போயிட்டா.
போகும்போது கூட அவ என் கிட்ட சாரி சொல்லிட்டு போனா.. அப்படின்னா அவ மேல தான் ஏதோ தப்பு இருக்கு. பட் அவ எதுக்காக இப்படி எல்லாம் பண்ணான்னு தான் எனக்கு புரியல. அர்ஜுனை பத்தி முழுசா தெரியலைன்னாலும், ஓரளவுக்கு அர்ஜுனை பகச்சிக்கிறது நல்லது இல்லைன்னு அவளுக்கு தெரியும் தானே.. அப்படி இருந்தும் அவ எதுக்காக இப்படி பண்ணனும்?
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அனிதா அவ்வளவு மோசமான பொண்ணு எல்லாம் இல்ல. அதுவும் அவ ஃபிரெண்டு ஹஸ்பண்ட் கூட.. ச்சே.. அதை என்னால சொல்லக் கூட முடியல. இங்க ஏதோ ஒன்னு தப்பா இருக்கு. நம்ம எல்லாரையும் வச்சு பின்னாடி இருந்து யாரோ கேம் விளையாடுற மாதிரி இருக்கு. கொஞ்ச நாள் கொஞ்ச நேரம் கூட நம்ம யாருமே நிம்மதியா இருந்திட கூடாதுன்னு தெளிவா பிளான் பண்றாங்க.
ஒருவேளை அந்த பிளானை அனிதா பண்ணி இருந்தா, கண்டிப்பா டைரக்டா என் ரூமுக்கே வர அளவுக்கு யோசிச்சு இருக்க மாட்டா.. ஏன்னா எப்ப வேணா நான் இங்க வருவேன்னு அவளுக்கே தெரியும் இல்ல! இதுல என்னமோ ஒன்னு இருக்கு. ஆனா அது என்னன்னு எப்படி யோசிச்சாலும் எனக்கு புரிய மாட்டேங்குது கிளாரா.” என்று உடைந்த குரலில் சொன்னாள் தேன்மொழி.
நல்லவேளையாக அவள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அர்ஜுனனின் மீது சந்தேகப்படவில்லை என நினைத்து பெருமூச்சு விட்ட பிரிட்டோ “இந்த கொஸ்டின் எல்லாத்துக்கும் அனிதாவை பிடிச்சா ஆன்சர் கிடைச்சிடும். விடியறதுக்குள்ள அந்த பொண்ணை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து நாங்க உன் முன்னாடி நிறுத்துறோம் மா. நான் டாக்டருக்கு கால் பண்ணிட்டேன்.
அவர் வந்த உடனே chief-க்கு என்ன ஆச்சுன்னு பார்த்து ட்ரீட்மென்ட் கொடுக்கணும். நீ அவர் கூட இருந்து அவரை பத்திரமா பாத்துக்கோ. இப்போதைக்கு நடந்ததை பத்தி யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். அதான் எதுவும் பெருசா தப்பு நடக்கிறதுக்கு முன்னாடி நீ ரூம்குள்ள வந்துட்டியே.. பிரக்னண்டா இருக்கிற டைம்ல இத பத்தி யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாத. கிளாரா உங்க கூட இங்க இருக்கட்டும்.
டாக்டர் வந்தவுடனே நீங்க என்ன ஏதுன்னு பாருங்க. அவரை ட்ரீட்மென்ட் முடிஞ்ச
உடனே பின் வாசல் வழியா அனுப்பி விட்டுருங்க. அந்த பொண்ணு எங்க இருக்கானு நானும், மைக்கிலும் போய் பார்க்கிறோம்.” என்று சொல்லிவிட்டு மைகேலை தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினான்.
பதட்டமான முகத்துடன் அமர்ந்து இருந்த தேன்மொழிக்கு அருகில் சென்ற கிளாரா அவளிடம் ஒரு கிளாஸ் தண்ணீரை கொடுத்து “மைக்கேல் கூட நமக்கு ரொம்ப பக்கத்திலயே இருக்கிற யாரோ தான் சுத்தி சுத்தி நம்ம எல்லாரையும் டார்கெட் பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னான். எனக்கு என்னமோ நம்ம கொஞ்சம் கொஞ்சமா அவங்களை நெருங்கிட்டு இருக்கும்னு தோணுது.
நம்ம என்ன பண்ணாலும் மாட்டிக்க மாட்டோம்னு அவன் ரொம்ப தைரியமா இருக்கான். அதான் அடுத்தடுத்து ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கான். அவனோட இந்த அவசர புத்தியே கண்டிப்பா அவன் யாருன்னு நம்ம கிட்ட போட்டு கொடுத்துரும். இது எல்லாத்தையும் ஹேண்டில் பண்றதுக்கு தான் நாங்க உங்க கூடவே இருக்கோம்.
எதுவா இருந்தாலும் அது சின்ன விஷயம்னு இக்னோர் பண்ணாம தயவு செஞ்சு எங்களை கூப்பிட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க தேன்மொழி. க்ளூ சின்னதா கிடைச்சாலும் கூட நம்ம அதை மிஸ் பண்ண கூடாது. ஆல்ரெடி அவங்க உங்களையும் chief-ஐயும் பிரிக்க பிளான் பண்றாங்கன்னு இந்த இன்சிடென்ட் மூலமா நமக்கு தெரிஞ்சிருச்சு.
கண்டிப்பா இது இதோட நிக்க போறது இல்ல. இதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நீங்க கண் மூடித்தனமாக அவரை நம்பி கடைசி வரைக்கும் அவர் கூடவே இருக்கணும். நீங்க தான் அவரோட ஸ்ட்ரென்த். அவர் மேல சந்தேகப்பட்டு அவரை கஷ்டப்படுத்தி அவரை விட்டு விலகி போய் அவரோஞ வீக்னஸ் ஆகிடாதீங்க. அவருக்கு நீங்க ரொம்ப இம்போர்ட்டண்ட். அதை மறந்துடாதீங்க.” என்று நிதானமாக சொன்னாள். அதற்கு புரிகிறது என்று தலையாட்டினாள் தேன்மொழி.
அர்ஜுனின் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா எந்த பக்கம் போனாள் என்று தெரிந்து கொள்வதற்காக முதலில் பிரிட்டோ மைக்கேல் இருவரும் சிசிடிவி ஃபுடேஜ்களை ஆராய்ந்தார்கள். அதில் கிடைத்த களுவை வைத்து “அந்த பொண்ணு எப்படியும் ரொம்ப தூரம் போயிருக்கிறதுக்கு சான்ஸ் இல்ல. நம்ம கெஸ்ட் லிஸ்ட்ல அவளோட ஃபோன் நம்பர் இருக்கும். அதை வச்சு ஈசியா அவளோட லொகேஷனை டிராக் பண்ணிடலாம்.” என்ற பிரிட்டோ மைக்கேல் உடன் அதை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினான்.
அடுத்த இருபதாவது நிமிடத்தில் சென்னையின் புறநகர் பகுதியில் அவசரமாக தனது காரை ஓட்டிக் கொண்டு அனிதா எங்கேயோ சென்று கொண்டிருந்தாள். ஏற்கனவே பயத்தில் அழுது கொண்டு இருந்த அவள் மகள் ரியா “எனக்கு ரொம்ப பயமா இருக்குமா. இப்ப நம்ம எங்க போயிட்டு இருக்கோம்? நானும் ரொம்ப நேரமா இதையே தான் திரும்பத் திரும்ப கேட்டுகிட்டே இருக்கேன். ஆனா நீங்க ஏன் ஆன்சர் பண்ணவே மாட்டேங்கறீங்க? அந்த அங்கிள் யாரு?
இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. நீங்க எதுக்காக என்னை அங்க தனியா விட்டுட்டு வந்தீங்க? இவ்வளவு நேரமா நீங்க எங்க போனீங்க?” என்று அடுக்கடுக்காக அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)