அத்தியாயம் 160
தான் பேசிக் கொண்டு இருக்கும்போதே தேன்மொழி தன்னை அறைந்ததால் ஒருவித மிரட்சியுடன் அவளை பார்த்த அனிதா எதுவும் பேசாமல் கலங்கிய கண்களுடன் நிற்க, தேன்மொழியின் குரலைக் கேட்டு அவளை தேடிக் கொண்டு கட்டிலில் இருந்து கீழே இறங்கி வந்த அர்ஜுன் இப்போது லைட் வெளிச்சத்தில் அவளை கண்டு பிடித்து அவள் அருகில் சென்று அவளைப் பின்னே இருந்து கட்டி அணைத்து “ஹே ஹனி பேபி.. இப்ப எதுக்கு நீ பாதியில எந்திரிச்சு வந்த? ஏன் உனக்கு இன்னிக்கி நம்ம பண்றது பிடிக்கலையா? டயர்டா இருக்கியா என்ன? ஆனா எனக்கு புடிச்சிருக்கே! என்னால கண்ட்ரோல் பண்ண முடியல டி.” என்று போதை ஏறிய குரலில் சொன்னான்.
அவன் பேச பேச அவன் மீது இருந்து வந்த ஆல்கஹால் நாற்றம் தேன்மொழியின் நாசிகளுக்குள் நேரடியாக நுழைய, முகம் சுளித்த தேன்மொழிக்கு அங்கே என்ன நடந்திருக்கும் என்று தெளிவாக ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் தோழியுடன் இவ்வளவு நேரமாக அவன் என்ன செய்து கொண்டு இருந்தான் என நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்ததால் “பண்றதையும் பண்ணிட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி என் கிட்ட பேசி நடிக்கிறியா அர்ஜுன்?” என்று ஆத்திரம் பொங்க கேட்டவள், அவன் கைகளைப் பிடித்து அவனை இழுத்து தன் முன்னே கொண்டு வந்து அவனது கன்னத்திலும் பலார் என்று ஒன்று விட்டாள்.
“ஏய் இப்ப எதுக்குடி என்னை அடிச்ச?” என்று எதுவும் புரியாமல் அர்ஜுன் தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து கேட்க, அவன் அடி வாங்கும்போது சரியாக அந்த ரூமிற்குள் ஏதோ சத்தம் கேட்டதால் குழப்பமான முகத்துடன் “இப்ப நம்ம உள்ள போலாமா வேண்டாமா?” என்ற தயக்கத்துடன் கையில் பால் கிளாஸ்வுடன் உள்ளே வந்தான் மைக்கேல்.
அதை கவனித்த அனிதா “இன்னும் எத்தனை பேர் முன்னாடி தான் அசிங்கப்படுறது? முதல்ல நான் யாருக்கும் தெரியாம இங்க இருந்து போகணும்.” என்று நினைத்து அவசரமாக மைக்கேலை தாண்டி வெளியில் ஓடினாள். ஜல் ஜல் என்று அவளது கால்களில் இருந்து கொலுசு சத்தம் வேறு கேட்டதால் அவள் பக்கம் திரும்பி பார்த்த மைக்கேல் “இப்ப இந்த பொண்ணு எதுக்கு அர்ஜுன் ரூம்ல இருந்து வெளிய ஓடுது? அதுவும் அவ ஆளே பாக்குறதுக்கு ஒரு மாதிரி இருக்காளே! ஏதோ சரி இல்ல.” என்று நினைத்தான்.
அர்ஜுன் அவனது மனைவியுடன் இருக்கும்போது தான் இப்படி திடீரென்று உள்ளே நுழைந்ததும் சரியாக இருக்காது என்று நினைத்த மைக்கேல் “சாரி, இங்க ஏதோ பிரச்சனைன்னு எனக்கு தோணுச்சு. அதான் பர்மிஷன் கேட்காம உள்ள வந்துட்டேன். நான் கிச்சன் பக்கம் போனேன். மீரா இந்த பாலை உங்க கிட்ட கொடுக்க சொல்லி என் கிட்ட கொடுத்தா.” என்று சொல்லி தான் வந்திருப்பதை அவர்கள் இருவருக்கும் உணர்த்தினான்.
உடனே தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு தேன்மொழி அவனை திரும்பிப் பார்த்து அவன் கையில் இருந்த பால் டம்ளரை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு “ஓகே தேங்க்ஸ் ப்ரோ!” என்று உடைந்த குரலில் சொன்னாள். அவள் முகத்தை வைத்தும், அர்ஜுனை அவள் அடித்ததை பார்த்ததை வைத்தும் கண்டிப்பாக இங்கு ஏதோ சரி இல்லை என்று உறுதி செய்த மைக்கேல் அதை சரி செய்யும் கடமை தனக்கு இருப்பதாக நினைத்து “நான் உங்க ரூம்குள்ள திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்தது தப்பு தான். நான் காலிங் பெல் அடிக்க ட்ரை பண்ணும்போது நீங்க ரொம்ப சவுண்டா பேசிட்டு இருந்தது வெளிய கேட்டுச்சு. அதனால தான் ஏதோ பிரச்சனையோன்னு நினைச்சு பயந்து பதட்டத்துல பர்மிஷன் கேட்காம உள்ள வந்துட்டேன்.
இங்க ஏதோ ஒரு பிராப்ளம் இருக்குன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது. இந்த டைம்ல அந்த பொண்ணு எதுக்கு உங்க ரூம்ல இருந்து அழுதுகிட்டே ஓடுறா? நீங்க எதுவா இருந்தாலும் தாராளமா என் கிட்ட சொல்லலாம். ஒருவேளை என் கிட்ட சொல்றதுக்கு உங்களுக்கு தயக்கமா இருந்துச்சுன்னா, நான் வேணா போயிட்டு பிரிட்டோவையும், கிளாராவையும் வர சொல்றேன். நீங்க அவங்க கிட்டயாவது என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க சிஸ்டர்.” என்றான் நிதானமாக.
ஆனால் பொறுமை இல்லாமல் கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்த தேன்மொழி “எனக்கு இந்த ஆளு தான் பிராப்ளம். இவன என்ன பண்றதுன்னு தெரியல. எனக்கு இவனை பார்த்தாலே கோபம் கோபமா வருது. நான் இங்க வரும்போது குடிச்சிட்டு போதைல இவன் என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியுமா?” என்று அர்ஜுனை சுட்டிக்காட்டி தனது அடி தொண்டையில் இருந்து கேட்ட தேன்மொழி தான் சொல்ல வந்ததை முழுவதாக சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டு தன் முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.
அனிதா இங்கே இருந்து செல்லும்போது அவள் இருந்த கோலத்தை வைத்தும், தேன்மொழி பேசியதை வைத்தும் அவள் வரும்போது என்ன நடந்து இருக்கும் என்று ஓரளவிற்கு யூகித்த மைக்கேல் “எது அர்ஜுன் குடிச்சானா? கண்டிப்பா இல்ல சிஸ்டர். நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஈவினிங் அவனை ஹாஸ்பிடல்ல இருந்து நான் தானே கூட்டிட்டு வந்தேன்!
இன்னைக்கு பங்க்ஷன்ல ஆளுங்க நிறைய பேர் இருந்ததுனால உங்க கூட பாதுகாப்புக்கு யாராச்சும் இருக்கணும்னு நான் உங்க கூட தானே இருந்தேன்! அர்ஜுனை தனியாவே நாங்க விடலையே! தலையில அடிப்பட்டு நேத்து தான் தையல் போட்டு இருக்கு.. எங்களுக்கு தெரியாம அவன் எங்க போய் குடித்து இருக்க முடியும்?” என்று கேட்க,
“என்னை கேட்டா எனக்கு மட்டும் என்ன ப்ரோ தெரியும்? அத்தை கூப்டாங்கன்னு நான் போயிட்டு வந்து பார்க்கிறேன், இவன் இங்கே இந்த நிலைமையில் இருக்கான். என்னாலேயே நான் கண்ணால பார்த்ததை நம்பவே முடியல. இப்ப கூட பாருங்க.. நான் அடிச்சதை பத்தி கூட யோசிக்காம போதையில் அப்படி இப்படியும் ஆடிட்டு நிக்கிறான்! இவனை இப்படி பார்த்ததுக்கு அப்புறம் எப்படி உங்களால இவன் குடிக்கலைன்னு சொல்ல முடியுது?
அர்ஜுன் உங்களோட ஃபிரண்டா இருக்கலாம். அதுக்காக அவன் என்ன தப்பு பண்ணிட்டு வந்தாலும் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்களா? நீங்க பிரிட்டோ அண்ணாவையும் கிளாராவையும் வர சொல்லுங்க. நானே அவங்க கிட்ட கேட்கிறேன். இந்த விஷயம் மட்டும் என்ன தவிர வேற யாருக்காவது தெரிந்திருந்தா, வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி எவ்ளோ அசிங்கமா போயிருக்கும்! எனக்கு அதை நினைச்சாலே அவமானமா இருக்கு.” என்றாள் தேன்மொழி.
அர்ஜுனின் அருகில் சென்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு “டேய் குடிச்சியா நீ? நாங்க உன் கூடயே தானே இருந்தோம்.. எந்த கேப்ல எங்களுக்கு தெரியாம நீ போய் குடிச்ச?” என்று மைக்கேல் கேட்க, நிமிர்ந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்த அர்ஜூன் “டேய் நான் எங்க டா குடிச்சேன்? சத்தியமா நான் குடிக்கவே இல்ல டா.” என்று போதை ஏறிய குரலில் சொன்னான்.
அவன் மீது இருந்து வித்யாசமான ஸ்மெல் வருவதை உணர்ந்த மைக்கேல் “இது ஆல்கஹால் ஸ்மெல் இல்ல சிஸ்டர். லிண்டா சாப்பிடும்போது அவளுக்கே தெரியாம யாரோ அந்த சாப்பாட்டுல வேர்க்கடலையை கலந்து கொடுத்தார்களே.. அந்த மாதிரி இவனுக்கும் எதுலயோ seductive drugs கலந்து கொடுத்து இருக்காங்க.
பட் கண்டிப்பா இது அந்த பொண்ணோட வேலையா இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அந்த மாதிரியான காஸ்ட்லியான ட்ரக்ஸ் வாங்குற அளவுக்கு அவங்க கிட்ட காசு இருக்கும்னு எனக்கு தோணல. அண்ட் அப்படியே அவங்க வாங்கணும்னு நினைச்சாலும், இவங்களுக்கு அதை சப்ளை பண்ற அளவுக்கு ஆளுங்கள தெரியும்னு எனக்கு தோணல. இதுக்கு பின்னாடி வேற யாரோ இருந்து ப்ளே பண்றாங்கன்னு எனக்கு தோணுது.
அவங்க டார்கெட் அந்த பொண்ணை அர்ஜுன் கூட சேக்கறது இல்ல. கரெக்டான டைம்ல அந்த பொண்ணு இங்க இருக்கிற மாதிரி செட் பண்ணி உங்களையும் அர்ஜுனனையும் பிரிக்கிறது. நீங்க எப்படியும் நான் சொல்றத நம்ப மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். நான் பிரிட்டோவையும் கிளாராவையும் வர சொல்லி யாருக்கும் தெரியாம டாக்டரை அர்ஜுனை டெஸ்ட் பண்ண சொல்றேன்.
எப்படியும் அந்த ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டதுக்கு அவனால கண்ட்ரோல் பண்ண முடியாது. டாக்டர் வந்தா தான் ஏதாச்சும் பண்ண முடியும்.” என்று அனுமானத்திலேயே நடந்த அனைத்தையும் தன் கண்களால் பார்த்தபடி புட்டு புட்டு வைத்தான்.
அனிதா தன் கண் முன்னே நிற்கும்போது கூட அர்ஜுன் தன்னைப் பார்த்தவுடன் தனது அருகில் வந்து இதற்கு முன் தன்னுடன் இருந்ததைப் போல பேசியதையும், தான் வரும்போது இந்த அறை இருட்டாக இருந்ததையும் நினைத்து பார்த்த தேன்மொழி “ஒருவேளை இவர் சொல்றது உண்மையா இருக்குமா? ஆனா கண்ணால பார்த்ததை எப்படி என்னால பொய்ன்னு நினைக்க முடியும்?” என்று யோசித்து குழம்பினாள்.
அப்போது அவள் மனசாட்சி “என் டி உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா? இந்த ஊர்ல அனிதாவை தவிர வேற பொண்ணே அர்ஜுனுக்கு கிடைக்காதா என்ன? இந்த ஊர் என்ன.. அவன் நினைச்சா எந்த நாட்டுல இருந்து வேணாலும் அவனுக்கு புடிச்ச மாதிரி பொண்ணை வர வச்சு என்ஜாய் பண்ணலாம்.
இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கான். அதுவும் நம்ம பங்க்ஷன் நடந்து முடிஞ்சு கெஸ்ட் கூட முழுசா இன்னும் வீட்டுக்கு போகல. அதுக்குள்ள அதுவும் உன்னோட ரூம்லயே உன் ஃபிரண்டு கூட இப்படி இருந்தா திடீர்னு நீ வரும்போது மாட்டிக்குவோம்னு கூட யோசிக்கத் தெரியாத அளவுக்கு அவன் முட்டாளா?
யாரோ அவனை மாட்டி விட பாக்குறாங்க. அதை புரிஞ்சுக்காம நீ அவன தப்பா நினைக்கிறது ரொம்ப தப்பு.” என்று அவனுக்கு வக்காலத்து வாங்கி பேசியது.
இருப்பினும் எப்படி யோசித்துப் பார்த்தாலும் அர்ஜுன் அனிதாவுடன் நெருக்கமாக இருந்ததை தேன்மொழியால் நினைத்துப் பார்த்து கோபப்படாமல் இருக்கவே முடியவில்லை.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)