Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 159

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 159

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 159

அர்ஜுன் ஏதோ சரியில்லை என நினைத்து யாருக்காவது ஃபோன் செய்யலாம் என யோசிப்பதற்கு முன்பாகவே அவனது அறை திடீரென்று இருட்டானது. ஏற்கனவே ஒருவித கிரகத்தில் இருந்த அர்ஜூன் திடீரென்று அங்கே இருட்டானதால் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறியபடி அவனது மொபைல் ஃபோனை எங்கே வைத்தான் என தெரியாததால் அந்த மை இருட்டிலேயே தட்டு தடுமாறி நடந்து அதைத் தேட தொடங்கினான்.

அப்போது யாரோ ஒருவர் உள்ளே வருவதைப் போல இருந்ததால் சத்தம் வரும் திசை பக்கம் திரும்பிய அர்ஜூன் இந்த நேரத்தில் தேன்மொழியை தவிர தனது ரூமிற்குள் வேறு யாரும் வர வாய்ப்பு இல்லை என்பதால் “தேனு.. தேன்மொழி! நீதானே.. கூப்பிடுறேன்ல வாயை திறந்து பேசுனா என்ன டி?” என்று கேட்டபடி முன்னோக்கி நடந்தான்.

இன்று பங்க்ஷன் நடக்கும் போது ஜானகி தேன்மொழிக்கு ஒரு தங்க கொலுசை பரிசாக கொடுத்திருந்தாள். உள்ளே வந்த பெண் நடந்து வரும்போது ஜல் ஜல் என்று கொலுசு சத்தம் கேட்டதால் வந்திருப்பது தேன்மொழி தான் என்று முழுவதாக நம்பிய அர்ஜூன் அவளை தேடிக் கொண்டு செல்ல, அவன் அருகில் வந்த அந்த பெண் அவனை திடீரென்று அணைத்துக் கொண்டாள்.

இன்னும் அந்த இடம் முழுவதும் இருட்டாகத் தான் இருந்தது. அதனால் தன்னுடன் இருக்கும் அந்த பெண் யார் என்று அர்ஜுனுக்கு தெரியவில்லை. அதைப் பற்றி அவனை யோசிக்க விடாமல் அவனுக்குள் சென்று இருந்த ஏதோ ஒரு போதை மருந்து அதிக வீரியத்துடன் வேலை செய்து அவனை ஒரு பெண்ணின் அருகாமைக்காக ஏங்க வைத்து தூண்டியது.

அதில் நிலை தடுமாறிய அர்ஜுன் தன் அருகில் இருந்தவளை இறுக்கி பிடித்துக் கொள்ள, ஜன்னல் வழியாக அந்த ரூமிற்குள் வர தொடங்கி இரூமிற்குள்லிய வெளிச்சத்தை வைத்து அங்கே கட்டில் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து அவனுடன் இருந்த இளம் பெண் தனது மெல்லிய விரல்களை அவனது உடலை வருடியவாறு அவன் உடல் பசியை தூண்டிவிட்டு அவனை அப்படியே கட்டில் வரை அழைத்துச் சென்று அவனுடன் கட்டிலில் விழுந்தாள்.

தனது சுய நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருந்த அர்ஜுன் மொத்தமாக அந்த மருந்தின் வீரியத்தில் காமத்திற்காக ஏங்கி கையில் எவள் கிடைத்தாலும் அவளுடன் கட்டிலில் சரசமாட துடிக்கும் வேறு ஒரு ஆளாக மாறி கொண்டு இருந்தான்.

இருட்டாக இருந்தாலும் தனது உடலை மொத்தமாக அவன் மீது போட்டுக் கொண்டு தன் விரல்களால் செய்ய முடிந்த அத்தனை மாயாஜாலங்களையும் செய்து அவனை சூடேற்றிக் கொண்டு இருந்த அந்த பெண் அவனை கொஞ்சம் கொஞ்சமாக தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து கொண்டு இருந்தாள்.

அவர்கள் இருவரின் உடலும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து இருக்க, அவர்கள் இருவரும் உணர்ச்சிகள் பங்கு முத்தமிட்டபடி கட்டிலில் உருண்டு கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நொடியும் விரைவில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டும் என்ற வேட்கை அவர்கள் இருவரிடமும் இருந்தது.

தன் அம்மாவிடமும், ஜானகியிடமும் பேசிவிட்டு தனது ரூமை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்த தேன்மொழி “இன்னைக்கு அர்ஜுன் சரியாவே சாப்பிடல. அட்லீஸ்ட் கொஞ்சம் பாலாவது  அவருக்கு காய்சி கொண்டு போய் கொடுக்கலாம்.” என நினைத்து கிச்சனுக்கு சென்று பால் காய்ச்ச தொடங்கினாள்.

அவளை கவனித்த மீரா “ஃபங்ஷன்ல நீங்க ரொம்ப நேரமா நின்னுட்டு தானே இருந்தீங்க.. சோ உங்களுக்கும் டயர்டா தானே இருக்கும்.. நீங்க உங்க ரூமுக்கு போங்க மேடம். நான் பால் காஞ்சதுக்கு அப்புறமா யார் கிட்டயாவது கொடுத்து விடுகிறேன்.” என்று சொல்ல, “அதுவும் சரி தான், வந்த கெஸ்ட் எல்லார் கிட்டயும் நின்னு நின்னு பேசி கால் வலிக்கத் தான் செய்யுது.  இங்க வேலை செய்றதுக்கு இத்தனை பேர் இருக்கும் போது நமக்கு என்ன கவலை?” என்று நினைத்த தேன்மொழி மீராவிடம் சொல்லிவிட்டு தனது ரூமை நோக்கி நடக்க தொடங்கினாள்.

அவள் கேஷவளாக கதவை திறக்க, உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. “இவன் ரூமுக்கு போறேன்னு தானே வந்தான்.. லைட்டை கூட போடாம என்ன பண்ணிட்டு இருக்கான்?” என்று யோசித்த தேன்மொழி லைட் சிகிச்சை தேடி கண்டு பிடித்து ஆன் செய்வதற்குள் அவளது காதுகளில் வந்து விழுந்த விதவிதமான சத்தங்கள் அங்கே யாரோ கசமுசா செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அவளுக்கு உணர்த்தி விட்டது.  ‌
அதைக் கேட்டு ஆடிப்போன தேன்மொழி “இது நம்ம ரூம் தானே! ச்சீ.‌.. லைட்டை ஆஃப் பண்ணிட்டு இங்க யாரு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிறது? அதுவும் என் பெட்ல போய் இப்படி எல்லாம் பண்றாங்களே.‌.‌ இவங்களுக்கு வேற இடமா கிடைக்கல?” என்று நினைத்து கோபத்துடன் லைட் ஸ்விட்ச்சை டொக்கென்று தட்டி ஆன் செய்தாள்.

அவள் கண்ட காட்சி இப்போது அவளை கோபப்படுத்துவதற்கு பதிலாக அவளது இதயத்தை உடைத்து கண் கலங்க செய்தது. சட்டை இன்றி அர்ஜுன் கட்டிலில் படித்திருக்க, அவள் அருகில் தனது புடவை கலைந்து அரைகுறையாக கசக்கி எறியப்பட்ட காகிதம் போல அவன் பிடியில் சிக்கிக் கொண்டு இருந்தாள் ஒரு இளம் பெண்.

அவ்வளவு நேரம் இருட்டாக இருந்துவிட்டு இப்போது திடீரென்று வெளிச்சம் வந்ததால் அதற்கு பழக முடியாமல் அர்ஜுன் தன் கண்களை மூடியபடி “ச்ச்.. இவ்ளோ நேரம் நல்லாத் தானே போய்ட்டு இருந்துச்சு யார் வந்து லைட்டை போட்டது?” என்று போதை ஏறிய குரலில் கேட்க, அவன் பிடியில் இருந்த இளம்பெண் சட்டென்று அர்ஜுனை விட்டு விலகி அதிர்ச்சியுடன் தேன்மொழியை பார்த்தபடி தனது ஆடைகளை சரி செய்து கொண்டாள்.

“அனிதா!” என்று தனது கோபத்தை அடக்க முடியாமல் அடித் தொண்டையில் இருந்து கத்திக தேன்மொழி அவர்கள் இருவரையும் நோக்கி வேக எட்டுகள் வைத்து நடக்க, அர்ஜுனால் கிழிக்கப்பட்டு இருந்த தனது பிளவுசை தனது புடவை முந்தானை தலைப்பை கொண்டு இழுத்து போர்த்தி மூடிக் கொண்ட அனிதா அழுதபடி தேன்மொழியின் அருகில் சென்று “இது எதுக்கும் நான் காரணம் இல்ல. தயவு செஞ்சு என்னை தப்பா நினைக்காத தேன்மொழி. எனக்கு வேற வழி தெரியல.” என்று இன்னும் ஏதோ சொல்ல வர, அவளது கன்னத்தில் பலார் என்று ஒன்று விட்டாள் தேன்மொழி.

மீராவிடம் வம்பு இழுப்பதற்காகவே கிச்சனுக்கு சென்ற மைக்கேல் அவளிடம் சில வெளிநாட்டு உணவு வகைகளை எல்லாம் சொல்லி அது இருக்கிறதா இது இருக்கிறதா? என்று கேட்டு அவளை கடுப்பேற்றிக் கொண்டு இருந்தான். “அது எல்லாம் எதுவும் இல்ல சார். இப்போதைக்கு இது மட்டும் தான் இருக்கு.” என்று சொல்லி ஒரு கிளாஸ் பாலை அவன் கையில் கொடுத்து “அர்ஜுன் சாருக்காக இதை தேன்மொழி மேடம் கொண்டு வர சொன்னாங்க. நீங்க அவங்க ரூமை கிராஸ் பண்ணி தானே உங்க ரூமுக்கு போவீங்க.. இதை மட்டும் கொண்டு போய் அவர் கிட்ட கொடுத்துடுங்க ப்ளீஸ்!” என்றாள் மீரா.

“ஓய் நான் அர்ஜுனோட ஃபிரிண்ட் டி. எங்களுக்குள்ள எத்தனை வருஷ ஃபிரண்ட்ஷிப் இருக்க தெரியுமா? என்னை சர்வன்ட் மாதிரி ட்ரீட் பண்றதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? இந்த வீட்ல வேலை செய்றவங்கல்ல உனக்கு மட்டும் கொஞ்சம் திமிரு அதிகமா இருக்கு..” என்று மைக்கேல் செல்ல, “அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்.” என்று அவசரமாக சொல்லி வழக்கம் போல் சிரித்து சமாளித்த மீரா “நீங்க தானே அர்ஜுன் சாரோட ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க.. அப்ப உங்க ஃபிரண்டுகாக இந்த குட்டி ஹெல்ப் கூட பண்ண மாட்டீங்களா? இங்க ஆளுங்க கம்மியா தான் இருக்காங்க. எல்லாருக்கும் ஏதோ ஒரு வேலை இருக்கு. மத்தவங்க கூட சேர்ந்து நாளைக்கு என்ன சமைக்கிறதுன்னு நான் இப்ப டிஸ்கஸ் பண்ணனும். அதான் உங்கள கொண்டு போய் கொடுக்க சொல்றேன். ப்ளீஸ் சார் ஒரு பாலுக்கு இவ்வளவு அபக்கப்போறா? கொண்டு போய் குடுங்களேன்!” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

“எனக்கும் கொஞ்சம் அர்ஜுன் கிட்ட பேச வேண்டியது இருக்கு.  அதுக்காக தான் நாங்க போறேன். நீ சொன்ன உடனே உனக்காக அங்க போறேன்னு உடனே நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்க வேண்டாம்.” என்ற மைக்கேல் அவள் கொடுத்த பால் கிளாஸ் உடன் அர்ஜூனின் ரூமை நோக்கி நடக்க தொடங்கினான்.

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured