Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 156

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 156

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 156

சாப்பிட்டு முடித்து தனது ரூமிற்கு சென்ற தேன்மொழி ஹேண்ட் பேக்கில் இருந்த அவளது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். விஜயாவிடம் இருந்து அவளுக்கு ஏராளமான அழைப்புகள் வந்திருந்தது. அதை அவள் எடுக்காததால் அனைத்தும் இப்போது மிஸ்டு கால்களாக இருக்க, உடனே தன் அம்மாவிற்கு கால் செய்தாள் தேன்மொழி.

“சாரி மா சாரி மா! ஹாஸ்பிடல்ல இருந்து இப்ப தான் கிளம்பி வீட்டுக்கு வந்தோம். அத்தை எனக்காக சூப்பரான விருந்து ரெடி பண்ணி வச்சிருந்தாங்க. அதை ரசித்து ருசித்து சாப்பிட்டுட்டு இருந்ததில டைம் போனதே தெரியல. இப்ப தான் நான் ஃபோனையே எடுத்து பார்க்கிறேன்.” என்று தேன்மொழி சொல்ல, “என்னது மறுபடியும் அந்த வீட்டுக்கு போயிட்டியா? என்ன டி நினைச்சுகிட்டு இருக்க நீ? இனிமே நான் அந்த வீட்ல இருக்க மாட்டேன். என் புருஷனுக்கு என் அருமை தெரியல. நான் கொஞ்ச நாள் எல்லாரையும் விட்டு பிரிந்து இருந்தா தான் அந்த மனுஷன் திரும்பி உன்ன தேடி இங்க வந்து கூட்டிட்டு போவாருன்னு என்னென்னமோ பேசி சும்மா இருந்த என்னையும் உன் தம்பியையும் அவசரமா கிளப்பி ராத்திரியோட ராத்திரியா இங்க நம்ம வீட்டுக்கு வர வெச்ச..

இப்ப எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம மறுபடியும் அங்க போய் ஒக்காந்துக்கிட்ட.. உன் பேச்சைக் கேட்டு அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் நாங்க அலைஞ்சுகிட்டு இருக்க முடியுமா? உன்ன பத்தி தெரிஞ்சதுனால தானே அங்கயே இருக்கலாம் அவசரப்படாதன்னு சொன்னேன்.. கேட்டியா நீ? இனிமே உன் பேச்சுக்கு எல்லாம் எங்களால ஆட முடியாது. உன்ன கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பியாச்சு. இனிமே அது தான் உன் வீடு. ஒழுங்கு மரியாதையா உன் புருஷன் கூட சந்தோசமா வாழ்ற வழியை பாரு. இனிமே நாங்க எங்க பொழப்ப பாத்துக்குறோம்.” என்று படபடவென்று பொரிந்தாள் விஜயா.

“அச்சோ அம்மா.. என்ன மூச்சு விடாம இப்படி பேசுறீங்க? நானும் மறுபடியும் இங்க வரக் கூடாது கொஞ்ச நாளாவது அர்ஜுனை காய விடனும்னு தான் நெனச்சேன். ஆனா அவருக்கு உடம்பு சரியில்லாத சமயத்துல எனக்கு அவர் கூட சண்டை போட மனசு  வர மாட்டேங்குது.
 
ஆருத்ராவும், சித்தார்த்தும் இப்ப இங்க தான் இருக்காங்க. எல்லாரும் இங்க இருக்கும்போது, நான் மட்டும் இவங்கள விட்டுட்டு எப்படி அங்கே இருக்க முடியும்? எனக்கு இந்த வீடும், இங்க இருக்கிறவங்களும் செட் ஆயிட்டாங்கமா. இது தான் என் குடும்பம்னு தோணுது.” என்று தேன்மொழி ஃபீல் செய்து சொல்ல, “என்னது குடும்பம்ன்னு தோணுதா? அடியேய்.. நீ சொன்னாலும் சொல்லலைனாலும் இனிமே அதுதான்டி உன் குடும்பம். ஒழுங்கா அந்த வீட்டு ஆளுங்கள அனுசரிச்சு அவங்க கூட சேர்ந்து பொழப்பு நடத்துற வழிய பாரு. இனிமே எங்கள பத்தி எல்லாம் யோசிக்காத. என் பையன நான் பாத்துக்குறேன். அவன் இன்னும் ரெண்டு வருஷமா மூணு வருஷமோ காலேஜ் முடிச்சுட்டு ஏதாவது நல்ல வேலைக்கு போய் செட்டில் ஆயிடுவான். அப்புறம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் கடமை முடிஞ்சிரும்.” என்றாள் விஜயா.

“என்னமா நான் இங்க வந்ததுனால உங்களை எல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சிட்டீங்களா? அத்தை நாங்க கார்ல வரும்போதே இன்னொரு கார் அனுப்பி உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லட்டான்னு கேட்டாங்க. நான் தான் அப்புறமா அம்மாவுக்கு கால் பண்ணி பேசிக்கிறேன்னு சொன்னேன்.

அர்ஜுன் இவ்வளவு பெரிய வீட்ட எனக்காக வாங்கி கொடுத்துருக்காரு.. இந்த  வீட்டில உங்களுக்கும்  உரிமை இருக்குமா எங்களை தவிர வேலை பார்க்கிறவங்க எத்தனை பேர் தங்கி இருக்காங்க! அவங்களுக்கு கூட வேலை பாக்குறதுனால இங்க தங்க உரிமை இருக்கு. என் குடும்பத்தில இருக்கிறவங்க இங்க தங்க கூடாதா?  இது என் வீடு மா. நாங்க இந்தியாவுல இருக்கும்போது மட்டும் தான் இங்க இருக்க போறோம்.  மத்தபடி நீங்க தான் இங்கிருந்து எல்லாத்தையும் பார்த்துக்கணும்.

என்னமோ எனக்கு கல்யாணம் ஆனதனால உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்ற மாதிரி பேசாதீங்க. நீங்க மட்டும் மறுபடியும் கிளம்பி இங்க வரலனா, அப்புறம் உங்க கிட்டயும் ஆதி கிட்டையும் நான் பேசவே மாட்டேன்.” என்று தேன்மொழி உறுதியாக சொல்ல, “நீ யோசிச்சு யோசிச்சு பேசுவ. உன் பேச்சை எல்லாம் என்னால நம்ப முடியாது போடி.” என்றாள் விஜயா.

“அப்ப அர்ஜுன் ஹாஸ்பிடல்ல இருந்து ஈவினிங் டிஸ்டார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துருவேன்னு சொன்னாரு. அவரை வேணா கூட்டிட்டு நான் அங்க வந்து மறுபடியும் எங்க வீட்டுக்கு வாங்கன்னு மன்னிப்பு கேட்டு உங்க ரெண்டு பேரையும் முறைப்படி அழைச்சிட்டு வரவா?” என்று தேன்மொழி கோபமாக கேட்க, “அட பைத்தியக்காரி.. உடம்பு சரியில்லாத மனுஷனை எதுக்கு அலைய வைக்கிற? ஆனாலும் உனக்கு ரொம்ப பிடிவாதம் தாண்டி.. நீ என்ன நினைக்கிறியோ அதுபடி தான் எல்லாரும் செய்யணும் எதிர்பார்க்கிற .  பொறுமையா இரு சாயங்காலம்  ஆதி காலேஜ்ல இருந்து வந்ததுக்கு அப்புறமா நாங்க அங்க கிளம்பி வரோம். நீயும் அலைய வேண்டாம். மாப்பிள்ளைையும் கஷ்டப்படுத்தாத.” என்றாள் விஜயா.

வெளியில் தெரியாதவாறு பல ஊமை குத்துகளை குத்தி அர்ஜுனுக்கு எதிராக சதி செய்தவனை அவன் இப்போது இருக்கும் ஹாஸ்பிடலின் மொட்டை மாடியில் வைத்து சிறப்பாக கவனித்த அர்ஜுனின் ஆட்கள் சட்டை கூட கசங்காமல் அவனை அழைத்துக் கொண்டு லிஃப்ட் மூலமாக கீழே வந்தார்கள்.

வெளியில் அப்பட்டமாக காயம் எதுவும் இல்லை என்றாலும், உள்ளுக்குள் மொத்தமும் டேமேஜ் ஆகி இருந்ததால் அவன் நடக்க முடியாமல் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அர்ஜுன் அட்மிட் ஆகி இருந்த ரூமிற்குள் நுழைந்தான். கையில் ஒரு ஆப்பிளை வைத்துக் கொண்டு அதை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் அவனைப் பார்த்தவுடன் நக்கலாக சிரித்து “என்ன தம்பிகளா  என் ஆளுங்க உன்னை நல்லா கவனிச்சாங்களா?” என்று கேட்க, தன் தலையை கீழே குனிந்து கொண்ட அந்த இளைஞன் “சாரி சார்! உங்கள பத்தி எதுவும் தெரியாம அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டேன். இனிமே தெரியாம கூட இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சு விட்ருங்க.” என்று பயந்த குரலில் சொன்னான்.

அவனை குறுகுறுவென்று பார்த்த அர்ஜூன் “ஆனா எனக்கு என்னமோ உன்னை மன்னிக்கணும்னு தோணவே மாட்டேங்குதே! இப்ப நான் என்ன பண்றது?” என்று கேட்டுவிட்டு வில்லத்தனமாக அவனை பார்த்து சிரிக்க, “இவன் என்ன சைக்கோவா? ஒவ்வொரு செகண்டுக்கும் மாடுலேஷனை மாத்தி வேற வேற எக்ஸ்பிரஷன்ல சிரிக்கிறான்! சரியான பைத்தியக்காரன் கிட்ட வந்து மாட்டிகிட்டேன்.” என்று நினைத்த அந்த இளைஞன் தரையில் மண்டியிட்டு அவனை நேருக்கு நேராக பார்த்து கைகளை கூப்பி “தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க சார். நான் பண்ணுது தப்பு தான். இனிமே எப்பயும் இப்படி ஒன்ன பண்ணனும்னு நான் யோசிச்சு கூட பாக்க மாட்டேன்.” என்றான்.

உடனே கால் மேல் கால் போட்டு அமர்ந்த அர்ஜூன் “ஏண்டா யாராவது சாரி கேட்க வரும்போது டேட்டிங் போற மாதிரி கோட் சூட்டெல்லாம் போட்டுட்டு டிப் டாப்பா ரெடி ஆகி வருவாங்களா? கொஞ்சம் கூட உனக்கு மேனர்ஸே தெரியலையே டா.. உன்னை எல்லாம் எப்படி நான் நம்பி மன்னிச்சு விடறது?

இப்ப என் கிட்ட சாரி கேட்டுட்டு அந்த பக்கமா போய் மறுபடியும் எனக்கு எதிரா ஏதாவது நீ பிளான் பண்ண மாட்டேன்னு நான் எப்படி உன்னை நம்புறது?” என்று கேட்க, உடனே தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி கீழே போட்டுவிட்டு மீண்டும் அவன் மன்னிப்பு கேட்டான்.

தன் மகன் இப்படி வந்து அர்ஜுனிடம் தனியாக சிக்கி இருக்கிறான் என்ற கேள்விப்பட்டவுடன் அவனது அப்பா ராகவேந்திர குமார் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தார். அவரும் அங்கே வந்து தன் மகனுக்காக அர்ஜுனிடம் மன்னிப்பு கேட்டு, “சார் சென்னையிலயே எங்களோட நைட் கிளப் தான் நம்பர் ஒன்னா இருந்துச்சு. எங்களோட 90% of revenue அதுல இருந்து தான் வந்துச்சு. என்ன தான் நீங்க ஒரு நல்ல விலைக்கு அந்த கிளப்பை எங்க‌ கிட்ட இருந்து வாங்கி இருந்தாலும், நாங்க அதை விக்கிற ஐடியாவுலயே இல்ல.

இருந்தாலும் நீங்க கேட்டதுனால நான் அதை கொடுத்துட்டேன். அந்த கிளப்பை வித்த காசுல நாங்க புதுசா ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சோம். ஆனா அது எதுவும் சரியா வரல. இது எல்லாத்துக்குமே நீங்க தான் காரணம்னு நெனச்சு அந்த ஆதங்கத்தில தான் என் பையன் ஏதோ புத்தி கெட்டு போய் இப்படி எல்லாம் பண்ணிட்டான். இந்த ஒரு தடவை அவனை மன்னிச்சிடுங்க சார். இனிமே இப்படி ஆகாம நான் பாத்துக்குறேன். அவன் பண்ண தப்புக்காக நானும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.” என்றார்.

பொதுவாக தன்னை எதிர்க்க துணியும் யாராக இருந்தாலும் அவர்களை உயிருடன் விட்டு வைக்கும் பழக்கம் அர்ஜுனுக்கு கிடையவே கிடையாது. இருப்பினும் இந்தியாவிற்கு வந்து தேவை இல்லாமல் இது மாதிரியான விஷயங்களில் இறங்கி தேன்மொழிக்கு தன் மீது சந்தேகம் வரும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்து தான் அவன் நேரடியாக அவரது மகன் ராகவிற்கு மரண தண்டனையை கொடுக்காமல் மன்னிப்பு கேட்க வைத்து தன்னால் முடிந்தவரை கொடுமை செய்தான்.. 

இறுதியில் ராகவும், அவனது அப்பாவும் வேறு வழியில்லாமல் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அர்ஜுனனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். இந்த விஷயத்தை இதற்கு மேல் வளர்க்க வேண்டாம் என்று நினைத்த அர்ஜூன் “இது தான் நான் உங்களுக்கு குடுக்கிற லாஸ்ட் வார்னிங். இன்னொரு தடவை நீங்க என் வழியில நடுவுல வர்றது இல்ல.. அப்படி வரணும்னு ஒரு செகண்ட் யோசிச்சா கூட.. அடுத்த செகண்ட் என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்கு நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. இப்ப கூட இங்கயே வச்சு நான் நினைச்சத  என்னால செய்ய முடியும். பட் இப்ப நான் கொஞ்சம் ஹாப்பியா இருக்கேன். சோ எனக்கு கொலை பண்ற மூடு வர மாட்டேங்குது. அதனால இந்த தடவை நீங்க தப்புச்சீங்க. இதுக்கு மேல கண்ணு முன்னாடி எப்பயும் வந்துறாதீங்க.” என்று சொல்லி மிரட்டி அவர்களை துரத்தி விட்டான்.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured