Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 152

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 152

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 152

தேன்மொழி ஊட்டி விட சாப்பிட்டு கொண்டு இருந்த அர்ஜுன் “நீ சாப்டியா?” என்று கேட்க, ம்ம்.. என்றாள் அவள்.‌ அவள் இடையோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்ட அர்ஜுன் அவள் வயிற்றில் முகம் பதித்து “என் பேபிய ஒழுங்கா பாத்துக்கிறியா?” என்று கேட்க, “ரொம்பத் தான் அக்கறை!” என்று முணுமுணுத்துவிட்டு தன் உதட்டை சுழி தாள் தேன்மொழி. 

“ஆமா எனக்கு உன் மேல ரொம்ப அக்கறை இருக்கு தான்.” என்ற அர்ஜுன் நிமிர்ந்து அவளை பார்க்க, இருந்த கடுப்பில் அவன் வாய் நிறைய உணவை ஸ்பூனில் அள்ளி திணித்த தேன்மொழி “உங்க அக்கறை எப்படி இருக்குன்னு நான் தான் தினமும் பாத்துட்டு இருக்கனே மிஸ்டர் அர்ஜுன்!

நான் ரொம்ப sensitive-வா இருக்கேன்.‌ அதான் உங்க கூட பேசாம இருக்க முடியாம நீங்க என்ன பண்ணி என்ன ஹர்ட் பண்ணாலும் மறுபடியும் மறுபடியும் இப்படி உங்க முன்னாடி வந்து நிக்கிறேன். அதான் நீங்களும் ஓவரா ஆடுறீங்க.

முன்னாடியாவது எனக்கு சித்தார்த்தும், ஆருத்ராவும் எனக்கு சப்போர்ட்டிவா இருந்தாங்க. இப்ப பொறக்க போற குழந்தையாவது எனக்காகன்னு யோசிக்குதான்னு பாக்கலாம்.” என்று  விராட்சியாகபேசினாள்.

“எது நான் ஆடுறனா? ஏண்டி இன்னும் அந்தப் பிரச்சினையை விடலையா? நான் தான் சொல்றேன்ல.. எனக்கு உன்ன எப்படி face பண்றதுனே தெரியல.

அதனால தான் மத்த வேலையில பிஸியா இருக்கும்போது உன் கிட்ட பேசணும்னு தோணுச்சுனாலும் பேசாம இருந்துட்டேன். அதை இன்னும் எத்தனை தடவை சொல்லிக் காமிப்ப?

அதுக்காக உன் மேலையும், நம்ம குழந்தை மேலயும் எனக்கு அக்கறை இல்லைன்னு ஆயிடுமா?”  என்று அர்ஜுன் பாவமாக கேட்க, மீண்டும் ஸ்பூன் நிறைய உணவை எடுத்து அவன் வாயில் திணித்த தேன்மொழி “சும்மா எதாவது ரீசன் சொல்லி என்னை சமாதானப்படுத்தற மாதிரி பேசிட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல!

அந்த நேரம் நான் பட்ட கஷ்டம், எனக்குன்னு இங்க யாரும் இல்லையான்னு நினைச்சு நான் லோன்லியா ஃபீல் பண்ணது எல்லாத்தையும் நான் மறந்துடனும்! சார் வந்து பேசும்போது அகைன் நார்மலாகி உங்க கிட்ட நான் சிரிச்சு சிரிச்சு நல்லா பேசணும் அப்படித் தானே!” என்று கோபமாக கேட்டாள்.

“சரி டி, நீ என் மேல கோவமா இருக்க. நான் தான் தப்பு பண்ணிட்டேன். இப்ப உன்ன எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.

நான் சாரி சொன்னாலும் நீ அதை அக்சப்ட் பண்ண மாட்டேங்குற.. நான் வேற என்ன பண்ணி தான் உன்னை சமாதானப்படுத்துறது? பேசாம அதையும் நீயே சொல்லிரு.

நான் உன் கால்ல விழுந்து கெஞ்சினா கூட உன் மனசு இறங்காது போல இருக்கே!

ஏற்கனவே தலை வலிக்குது. இதுல என்னால இதை எல்லாம் வேற யோசிச்சிட்டு இருக்க முடியல.” என்று அர்ஜுன் சலிப்புடன் சொல்ல,

“அதானே.. உனக்கு என் கிட்ட பேசணும்ன்னா மட்டும் எல்லாம் வந்துருமே!” என்று முணுமுணுத்த தேன்மொழி “ம்ம்.. வேற என்ன பண்றதுன்னு தெரியலன்னா வந்து கால்ல விழு.

புருஷன், பொண்டாட்டி இரண்டு பேரும் ஒன்னு தானே.. அதனால ஏதாவது தப்பு பண்ணா கால்ல விழுந்து சாரி கேட்கலாம் ஒன்னும் தப்பில்லை‌.” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த சேரில் சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

“என்ன டி நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா நீ நெசமாவே கால்ல விழுக சொல்ற!” என்று அர்ஜுன் ஷாக்காகி கேட்க, “ஷாக்கை கொற ஷாக்கை கொற.. இப்ப எதுக்கு பொங்கர நீ?

நான் உன்ன போனா போகுதுன்னு சும்மா சும்மா ஈஸியா மன்னிச்சு விடுறதால தான் என் விஷயத்துல நீ ஓவரா பண்ற. இந்த கால்ல விழுகிற மேட்டர் கூட என் ஐடியா இல்லை.

நீ தானே  உன் காலுல விரட்டுமான்னு கேட்ட.. அதான் சரி விழுன்னு சொல்றேன். இத பண்றதுக்கு உங்க ஈகோ உங்கள தடுக்குதா மிஸ்டர் அர்ஜுன் பிரதாப்?

அப்படி ஏதாவது இருந்தா டைரக்டா சொல்லிடுங்க.. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். எனக்கு தான் உங்கள பத்தி நல்லா தெரியுமே!” என்று சொல்லி விட்டு அவனைப் பார்த்து நக்கலாக புன்னகைத்தாள் தேன்மொழி.

அவள் சொல்லும் அளவிற்கு எல்லாம் அர்ஜுன் ஈகோ பார்ப்பவன் இல்லை என்பதால் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எழுந்து நின்றவன், “இப்ப என்ன உனக்கு? நான் உன் கால்ல விழுகணும்.. அவ்ளோ தானே!

இது எல்லாம் எனக்கு ஒன்னும் பெரிய விஷயமே இல்ல. உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணிவேண்டி.. உனக்குத் தான் அது இன்னும் புரியல.”  என்று சொல்லிவிட்டு ஏதோ மாஸ்டரிடம் மரியாதையுடன் ஆசிர்வாதம் வாங்குவதைப் போல அவளது கால்களை ஸ்டைலாக குனிந்து தொட்டு வணங்கினான்.

அதனால் இப்போது ஷாக் ஆகுவது தேன்மொழியின் முறையாகிவிட்டது. திடுக்கிட்டு அவசரமாக எழுந்து நின்ற தேன்மொழி “ஏய் என்ன டா.. நெஜமாவே கால்ல விழுகுற! நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.

எப்பயும் போல நான் இந்த மாதிரி ஏதாவது பேசினா நீ நடுவுல ரொமான்ஸ் பண்ணி அப்படியே டாப்பிக்கை சேஞ்ச் பண்ணிடுவேன்னு நினைச்சேன்.” என்று சொல்லிவிட்டு கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.

“அடிப்பாவி.. இது எல்லாம் என்னடி நியாயம்? நீயே என்னை கால்ல விழுக சொல்லிட்டு.. அப்புறம் ஏன் விழுந்துன்னு கேட்டு அழுகிற!

இங்க வா, சும்மா சும்மா எதுக்காவது அழுதுகிட்டே இருக்கிறதே உனக்கு வேலையா போச்சு. சரியான அழுமூஞ்சி பாப்பா!” என்ற அர்ஜுன் ஒரு கையால் அவளை அனைத்து அவளுடன் சென்று கட்டிலில் அமர்ந்தான்.

அவனது சட்டையில் தனது கண்ணீரையும், மூக்கையும் துடைத்துக் கொண்ட தேன்மொழி “நல்லவேளை யாரும் பாக்கல. பப்ளிக் பிளேஸ்ல இப்படித் தான் பண்ணுவியா? லூசு!

யாராவது பார்த்து இருந்தா உன்னை என்ன நினைப்பாங்க?” என்று கேட்டுவிட்டு விளையாட்டாக அவன் கன்னத்தில் அடித்தாள்.

“என்ன நினைப்பாங்க? அர்ஜுனுக்கு அவன் பொண்டாட்டி மேல இவ்ளோ லவ்வானு நெனச்சு உன்ன பார்த்து பொறாமை படுவாங்க.

எவ்ளோ வயசு ஆனாலும் உன் புருஷன் லவ்வர் பாய் டி.. என் அருமை இன்னும் உனக்கு தான் முழுசா தெரியல.” என்று அர்ஜுன் பெருமையாக சொல்ல, “யாருக்கு..?? எனக்கு உன் அருமை தெரியலையா?” என்று கேட்ட தேன்மொழி அவனை தன் புருவங்கள் உயர்த்தி முறைத்து பார்த்தாள்.

“இல்ல இல்ல மா.. நான் தப்பா சொல்லிட்டேன். எனக்கு தான்.. எனக்கு தான் உன் அருமை தெரியல.

நான் தான் சரியான முட்டா பையன். எப்ப பாத்தாலும் உன்னை அழ வைச்சிக்கிட்டே இருக்கேன். இனிமே அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் ஓகேவா? சாரி!” என்ற அர்ஜுன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அவள் முகத்தை தன் மார்பில் புதைத்தவாறு அணைத்துக் கொண்டான்.

முட்டையில் வழுக்கி கீழே விழுந்த தன் இடுப்பை பிடித்துக் கொண்டு “Oh.. mummy! It’s very painful!” என்று கத்தினான். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதால் கிச்சனில் இருந்து வெளியில் வந்து பார்த்த மீரா தன்னையும் மறந்து ஒரு நொடி அவனை பார்த்து சத்தமாக சிரித்து விட்டாள்.

அதை பார்த்து கோபப்பட்ட மைக்கேல் “ஹேய் என்ன பாத்து சிரிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டபடி வேகமாக எழுந்து கொள்ள முயற்சி செய்தான். அவன் ஆத்திரம் பொங்க அவளை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைக்க, மீண்டும் தலையில் ஊற்றி கிடந்த முட்டையின் மீது கால் வைத்து வழுக்கி தரையில் விழுந்தான். 

இம்முறை அவனைப் பார்க்க அவளுக்கு பாவமாக இருந்ததால் உடனே அவனை நோக்கி ஓடிச் சென்ற மீரா “ஐயோ சார்.. பார்த்து வர மாட்டீங்களா?  நான் ஃப்ளோரை கிளீன் பண்றதுக்கு மாப் எடுக்க தான் போயிருந்தேன். நான் வர்றதுக்குள்ள இப்படி விழுந்துட்டீங்களே!” என்று சொல்ல,

அவளை முறைத்துப் பார்த்த மைக்கேல் “நான் உன்னை வேலையை விட்டு துரத்திடுவேன்னு சொன்னதுக்கு அதுக்குள்ள சாபம் விட்டு என்ன கீழ விழுக வெச்சிட்டல்ல..

அது கூட பரவாயில்லை டி. கீழ விழுந்து கிடக்கிறவன கை கொடுத்து எழுப்பி கூட விடாம என்னை பார்த்து கேக்கை பொக்கைன்னு  சிரிக்கிறியா?

எந்திரிச்சு வந்தேன்னு வச்சுக்கோ.. உன்னை அப்படியே இதே ஃப்ளோர்ல போட்டு இந்த முட்டைக்கு மேல உருட்டி விட்ருவேன்.” என்று தன் கண்களை உருட்டி அவளை மிரட்டும் தோரணையில் சொன்னான்.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured